Followers

Thursday, October 25, 2012

இஸ்லாம் கேள்வி- பதில்.

  
இஸ்லாம் கேள்வி- பதில்.
 
1--மக்கி சூராக்கள் எத்தணை?
 பதில்.       86
 
2--மதனி சூராக்கள் எத்தணை? 
பதில்.        28
 
3--மக்கி சூராக்கள் எத்தணை வருடங்கள் அருளப்பட்டன? 
பதில்.         13
 
4--மதனி சூராக்கள் எத்தணை வருடங்கள் அருளப்பட்டன? 
பதில்.          10
 
5--முதல் வஹிக்கும் 2வது வஹிக்கும்இடைப்பட்டகாலங்கள் எவ்வளவு? 
பதில்.            சுமார் 2 வருடம் aa6 மாதங்கள்.

6--முதலில் இறக்கப்பட்ட சூரா எது? அலக்? 
பதில்.            96
 
7--இறுதியாக இறக்கப்பட்ட சூரா எது? நஸ்ர்? 
பதில்.            110

8--நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளின் பெயர் என்ன? 
பதில் : வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் (அல்குர்ஆன் 71 : 23)

9--நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை பெயர் என்ன? 
பதில் : ஆஸர் (அல்குர்ஆன் 6 : 74)

10--நபிகளாரின் மனைவியர்களில் அதிகம் தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தவர் யார்? 
பதில் : ஸைனப் (ரலி), நூல் : முஸ்லிம் (4490)

11--ஹூதைபிய்யா உடன்படிக்கை ஏற்க மறுத்த முக்கிய நபித்தோழர் யார்? 
பதில் :உமர் (ரலி), நூல் : புகாரீ (2734)
12--ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று எந்த போர்க்களத்தில் அல்லாஹ் கூறினான்? 
பதில் : பத்ர் (அல்குர்ஆன் 3 : 123-125)

13--நபிகளார் காலத்தில் யார் இறந்த போது சூரிய கிரகணம் நிகழ்ந்தது?  
பதில் : நபிகளாரின் மகன் இப்ராஹீம் (ரலி), நூல் : புகாரீ (1043)

14--கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்? 
பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)

15--மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?

பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)

16--போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?

பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)
17--பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?

பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)

18--யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?
பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)
19--நூஹ் நபி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் ? 
பதில் : 950 வருடங்கள் (அல்குர்ஆன் 29:14)

20--வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் யார்? 
பதில் : இப்ராஹீம் (அலை), ஸக்கரிய்யா (அலை) (அல்குர்ஆன் 11:72,19 : 8,9)

21--தொட்டில் குழந்தையாக இருந்த போதே பேசிய நபி யார்? 
பதில் : ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:29,30)

22--அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார்களின் பெயர் என்ன? 
பதில் : யஹ்யா (அலை), ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:7, 3:45)

23--ஷஹீதுடைய எந்த பாவம் மன்னிக்கப்படாது? 
பதில் : கடன் நூல் : முஸ்லிம் (3832)

24--மலைகளை குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள் யார்? 
பதில் : ஸமூத் கூட்டத்தினர் (அல்குர்ஆன் 89 : 9)

25--காரூன் எவ்வாறு அழிக்கப்பட்டான்? 
பதில் : இவனையும், இவனது வீட்டையும் பூமிக்குள் புதையுறச் செய்து அல்லாஹ் அழித்தான் (அல்குர்ஆன்28 : 81)
26--இஸ்ரா என்றால் என்ன? 
பதில் : ஒரு இரவில் மக்காவிலிருந்து ஜெருஸலத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபி (ஸல்) அவர்கள் செய்த பயணத்திற்கு சொல்லப்படும். (அல்குர்ஆன் 17 : 1)
 அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான,அனுராதபுரம்,  SRI LANKA
================================____________==============================
 

No comments:

Post a Comment