Followers

Friday, October 19, 2012

அல்குர்ஆனைப் பற்றி அல்குர்ஆன்.

அல்குர்ஆனைப் பற்றி அல்குர்ஆன்.

அல்குஆன் பற்றி பல்வேறுபட்ட வர்ணனைகளை
அல்குர்ஆனே கூறியுள்ளது.
அல்குர்ஆனின் வர்ணனைகளில் சில வற்றை
இங்கு நோக்குவோம்.

1- ஒளி.
     மனிதர்களே!  உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு சாண்று  உங்களுக்கு
       வந்திருக்கிறது. (குர்ஆன் எனும்) தெளிவான ஒளியை உங்கலுக்கு
       நாங்கள்  இறக்கிவைத்துள்ளோம்.
                                                                                            (அல்குர்ஆன்.4:174)
 
2- நேர்வழி,நிவாரணம்,அருள்.
     மனிதர்களே. உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்க     நல்லுபதேச
       -மும் , உங்களில் உள்ளவர்களுக்கு  நிவாரணியும், நம்பிக்கை 
        உள்ளவர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயம் வந்து விட்டது.
                                                                                          (அல்குர்ஆன். 10:57)  
3- அருள்வளம் பொதிந்தது.
    உம்முல் குரா (எனும் நகரங்களின் தாயாகிய மக்கா)வையும்  
       அதனைச் சூழ உள்ளவர்களையும். நீர் எச்சரிக்கை செய்வதற்காக 
       நாம் இறக்கிய இவ்வேதம், அருள்பொதிந்ததும்,தனக்கு     முன்னுள்ள
       -வற்றையும்,  உண்மைப்படுத்துவதற்காகவும் இருக்கிறது .எவர்கள்
       நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்கள் இதையும் நம்பிக்கை 
      கொள்வார்கள். மேலும அவர்கள் தமது தொழுகையிலும் பேணுதலாக
        இருப்பார்கள்.  
                                                                                                 (அல்குர்ஆன் .6:92)
4- தெளிவானது.
   
    வேதத்தையுடையோரே  வேதத்தில் நீங்கள  மறைத்துக் 
   கொண்டிருந்தவற்றில் அதிகமானவற்றை உங்களுக்கு 
   தெளிவுபடுத்தும் எமது தூதர் உங்களிடம் வந்தார். எனினும்,பலவற்றை
   அவர் விட்டு விடுவார்.அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான 
   வேதமும் நிச்சயமாக வந்து விட்டது.
                                                                                                     (அல்குர்ஆன். 5:15)
  
5- நற்செய்தி.

    யார் ஜிப்ரீலுக்கு விரோதமாக இருக்கிறானோ  அவர்களுக்கு (நபியே!)
    நீர் கூறும். நிச்சயமாக அவர் தான் அல்லாஹ்வின் அனுமதிப்படி
    உம் இதயத்தில்  (குர்ஆனை) இறக்கி வைக்கிறார். அது தனக்கு 
    முன்னிருந்தவற்றை உண்மைப்படுத்துவதற்காகவும்,நேர்வழியாகவும்,
    நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
                                                                                                   (அல்குர்ஆன். 2: 97)
      
6- மகத்துவமானது.
    
எனினும் , அது மேன்மைமிக்க குர்ஆனாகும்.
                                                                                                    (அல்குர்ஆன்.85:21)   

7- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பயபக்தியாள 
-ளர்களுக்கு நேர்வழிகாட்டக்கூடியதாகும்.
                                                                                                    (அல்குர்ஆன். 2:2)

8- முரண்பாடற்றது.
      நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்கலில் கடும் பகைவர்களாக                    யூதர்களையும்,இணைவைத்தோரையும் நிச்சயமாக நீர் கண்டு
     கொள்வீர்.மேலும் அவர்களில் நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்
     என்று கூறுவாகள் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருங்கிய
     நேசத்துக்குரியவர்களாக நீர் கண்டுகொள்வீர். பாதிரிகளும்,
     துரவிகளும் அவர்களில் இருப்பதே இதற்குக் காரணமாகும்.
     இன்னும் அவர்கள் பெருமையடிக்கமாட்டார்கள்.
                                                                                                    (அல்குர்ஆன். 5:82) 

9- பொய் கலக்காதது.
      இதற்கு முன்பும், இதற்குப் பின்பும்  பொய் இதனிடமிருந்து வராது.
      (இது) புகழுக்குரியவானான ஞானமிக்கவனிடமிருந்து இறக்கப்பட்ட
      -தாகும்.
                                                                                                     (அல்குர்ஆன்.41:42)   

இவ்வாறு பல்வேறு பட்ட விதத்தில் 
அல்குர்ஆனைக் குர்ஆன் வர்ணிக்கின்றது.
இந்த வர்ணனைகளும், அதற்குரிய பெயர்களும்
அல்குர்ஆனின் உள்ளடக்கத்தையும்,
உயர்வையும் தெளிவுபடுத்துபவையாக
அமைந்துள்ளன.  
     
 அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான,அனுராதபுரம், SRI LANKA
__________________________________*************___________________________________