Followers

Saturday, October 20, 2012

அல்குர்ஆனில் பெயர் கூறப்பட்ட கெட்டவர்கள்..



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அல்லாஹவின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன் .
அல்ஹம்துலில்லாஹ்,
  

அல்குர்ஆனில் பெயர் கூறப்பட்ட
கெட்டவர்கள்..

1- அபூலஹப்..

நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளில் இவனது 
பெயரே அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி இவனையும்,இவனது மனைவியையும் அல்குர்ஆன் சபிக்கவும் 
செய்கிறது.இவ்விருவரும் மரணிக்கும் வரை இஸ்லாத்தில் இணையாது 
இருந்தமை,அல்குர்ஆன்  இறை வேதம் என்பதற்கு ஒரு சான்றாகும். இவன் 
நபியவர்களின்தந்தை அப்துல்லாஹ்வின் கூடப்பிறந்த சகோதரனாவான். 
1- அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும். மேலும் அவனும்
  நாசமாகட்டும்
2- அவனது செல்வமோ,அவன் சம்பாதித்தவையோ அவனுக்கு
  எந்த பயனையும் அளிக்கவில்லை.
3-4 தீச் சுவாலையுடைய நரகத்தில் அவனும்,விறகு சுமக்கும் 
  அவனது மனைவியும் நுழைவார்கள்.
5- அவளது கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு இருக்கும்.  (111:1-5)

2- ஆஸர்.

இவர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தந்தை இவர் சிலை வணக்கத்தில்
மிகவும் ஈடுபாடு உடையவராக இருந்தார். இப்றாஹீம்(அலை)தந்தையையும்,
நாட்டையும் பிரிந்து சென்ற போது தந்தைக்காக மன்னிப்புக் கோரினார்.
அவர் அல்லாஹ்வின் விரோதி எனத் தெரிந்தவுடன் அதிலிருந்து 
இப்றாஹீம் (அலை) அவர்கள் விலகிக் கொண்டார்.
இப்றாஹீம் தனது தந்தைக்காகப் பாவமன்னிப்புக் கோரியமை, தான்
அவருக்களித்த வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை. நிச்சயமாக
தந்தையாகிய அவர் அல்லாஹ்வின் விரோதி என்பது தனக்குத் தெளி
வாகியதும் அவர் அதிலிருந்து விலகி விட்டார். நிச்சயமாக இப்றாஹீம்
இளகிய மனம் படைத்தவரும், சகிப்புத்தன்மையுடையவருமாவார்.(9:114)
என்ற  வசனமும் ...
"எனது இரட்சகனே! எனக்கு நீ ஞானத்தை வழங்கி, நல்லவர்களுடன்
என்னைச் சேர்ப்பாயாக!." (26:83)  

"பின்வருபவர்களிடம் எனக்கு நற்புகழை ஏற்படுத்துவாயாக.!" (26:84)

"அருள் நிறைந்த சுவர்க்கத்திற்கு உரித்துடையோரில் என்னையும்
ஆக்குவாயாக.!" (26:85)

"என் தந்தைக்கும் மன்னிப்பாயாக நிச்சயமாக அவர் வழி 
தவறியவர்களில் இருக்கிறார்." (26:86)
என்ற வசனங்கல் இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது தந்தைக்காகவும்
அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தார்கள். 

3- இப்லீஸ்.

ஷைத்தான்களின் தந்தையான இவன் ஜின் இனத்தைச் சார்ந்தவன்.
ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்ய மறுத்ததினால் அல்லாஹ்வின்
அருளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவன். இவனும் இவனது சந்ததிகளும்
ஷைத்தான்கள் என்று அவைக்கப்படுகின்றனர். மனித இனத்தை 
வழிகெடுப்பதே இவனது இலட்சியமாகும். இவனையும் இவனைப் பின்
பற்றும் மனு,ஜின் கூட்டத்தையும் அல்லாஹ் நரகில் இட்டு வேதனை
செய்வான்.
அல்லாஹ் அல்குர்ஆனில்.இப்படிச் சொல்கின்றான்.
 "நான் உனக்குக் கட்டளையிட்டபோது நீ சுஜூது செய்யாதிருக்க
உன்னைத் தடுத்தது எது?  'என (அல்லாஹ்) கேட்க  நான் அவரை
விடச் சிறந்தவன் நீ என்னை நெருப்பினால் படைத்துள்ளாய்.
அவரையோ களிமண்ணிலிருந்து படைத்துள்ளாய் என்று அவன்
கூறினான். "  (7:12)

"(அதற்கு) இதிலிருந்து நீ இறங்கி விடு; இதில் பெருமையடிக்க 
உனக்கு எந்த அதிகாரமும் இல்லை ஆனால் நீ வெளியேறு
நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் உள்ளவநாவாய்.
என்று (அல்லாஹ்) கூறினான்."  (7:13)

"அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் 
வழங்குவாயாக! என அவன் கேட்டான்."  (7:14)

"(அதற்கு அல்லாஹ்)  நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில்
ஒருவன் என்று கூறினான்."   (7:15)

"அ(தற்க)வன் என்னை நீ வழிகெடுத்த காரணத்தினால் உனது நேரான
வழியில் அவர்களுக்கு எதிராக நான் அமர்ந்திருப்பேன் என்றான்." (7:16)

"பின்னர் அவர்களுக்கு முன்னாலும்,பின்னாலும், அவர்களுக்கு
வலதாலும்,இடதாலும் நிச்சயமாக நான் அவர்களிடம் வருவேன்
அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ பெற்றுக்
கொள்ளமாட்டாய். என்றும் கூறுவான்."  (7:17)

"இதிலிருந்து  இழிவுபடுத்தப்பட்டவநாகவும்,சபிக்கப்பட்டவனாகவும்
நீ வெளியேறிவிடு அவர்களில் எவரேனும் உன்னைப்பின் பற்றினால்
உங்கள் அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்." (7:18)
என்று அல்லாஹ் அல்குர்ஆனில் ஷைத்தானுடைய வல்லமைகளையும்,
அவனைப்பின்பற்றுவோர்களை  நரகில் போட்டு நிரப்புவான் என்பதை
அல்குர்ஆன்  தெளிவாகக் கூறுகிறது.

4- ஹாமான்..

பிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனின் முக்கியஸ்தர்களில் 
ஒருவனாவான். இவன் மூஸா (அலை) அவர்களின்  அழைப்பிற்கு 
எதிராக செயல்பட்டான்.
"பிரமுகர்களே!. உங்களுக்கு என்னைத் தவிர வேறு  கடவுளை
நான் அறியவில்லை. ஹமானே! எனக்காக களிமண்ணின் மீது
நெருப்பை மூட்டி, மூஸாவின் இரட்சகனை நான்  எட்டிப்பார்ப்
பதற்காக ஒரு (உயர்ந்த) மாளிகையை எனக்கு அமைப்பாயாக!
 நிச்சயமாக நான் அவரைப் பொய்யர்களில் ஒருவராகவே
எண்ணுகின்றேன் என பிர்அவ்ன் கூறினான்."    (28:38)

"ஹாமானே!  எனக்கு ஒர் உயர்ந்த மாளிகையைக் கட்டு
(அதன் மூலம்) வழிகளை நான் அடைந்து கொள்ளலாம் என
பிர்அவ்ன் கூறினான்."  (40:36)
 இதிலிருந்து விளங்குவது ஹமான்  பிர்அவ்னின்  முக்கிஸ்தர்களில்
ஒருவன் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான்.

5- காரூன்.

இவன் மூஸா (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும்
செல்வந்தன். அல்லாஹ்வை நிராகரித்து தன்னிடமிருந்த செல்வத்
-தினால் ஆணவம் கொண்டு வாழ்ந்தமையால் அல்லாஹ் அவனைப்
பூமியால் விழுங்கச் செய்தான். அல்லாஹ் அல்குர்ஆனில் இது பற்றி...

"நிச்சயமாக காரூன் மூஸாவின் சமூகத்தைச் சார்ந்தவனாக
இருந்தான். அவன் அவர்கள் மீது வரம்பு மீினான். மேலும்
நாம் அவனுக்குப் பல பொக்கிஷங்களை வழங்கியிருந்தோம்.
நிச்சயமாக அவற்றின்  திறவுகோல்கள் பலமான ஒரு குழுவினருக்கும்
(சுமப்பதற்குப்) பளுவாக இருந்தன. நீ ஆணவம் கொள்ளாதே நிச்சயமாக
அல்லாஹ் ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான் என்று அவனது
சமூகம் அவனுக்குக் கூறியதை (நபியே நீர் எண்ணிப்பார்ப்பீராக!.")  (28:76)

"பின்னர் அவன்  தனது அலங்காரத்துடன் தன் சமூகத்தாரின் பக்கம்
புறப்பட்டான்.காரூனுக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் 
வழங்கப்பட்டிருக்கக்கூடாதா?  நிச்சயமாக அவன் பெரும் பாக்கிய
முடையவன். என்று இவ்வுலக வாழ்வை விரும்பியோர் கூறினர்."   (28:79)

"ஆகவே அவனையும்,அவனது மாளிகையையும் பூமிக்குள் 
விழுங்கச் செய்தோம்.அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி
செய்யும் எந்தக் கூட்டத்தாரும் அவனுக்கு இருக்கவில்லை.
அவன் தந்னைத்தற்காத்துக் கொள்வோரில் இருக்கவில்லை."  (28:81)

காரூன் எவ்வளவு பெரிய செல்வந்தன்  இவ்வுலக வாழ்க்கையை விரும்பு
-கின்ற மக்களுக்கும் இவனின் செல்வத்தின் மேல் பேரசை வந்ததையும்
அல்லாஹ் குர்ஆனில் சொல்லுகின்றான் .கடேசியில் இவனது செல்வத்தை
-யும்,அவனையும் பூமி விழுங்கியதை அல்லாஹ் உலக மக்களுக்கு ஒரு
ண்ணத பாடமாக  காட்டிருக்கிறான்  அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.!

 6- பிர்அவ்ன்..

மூஸா (அலை) அவர்களிந் காலத்தில் எகிப்தை ஆட்சி செய்த கொடுங்கோல்
மன்னன். இவன் பனு இஸ்ராஈல்களை அடிமைப்படுத்தி அவர்களின் ஆண்
மக்களைக் கொலை செய்து வந்தான். தன்னைக் கடவுள் என்று பிரகடனப்
படுத்தியதுடன் மூஸா (அலை) அவர்களது பிரச்சாரத்தையும்  கடுமையாக
எதிர்த்து வந்தான். ஈற்றில் மூஸா (அலை) அவர்களும் அவர்களை ஏற்றுக்
கொண்டோரையும் அல்லாஹ்வின் உத்தரவினால் கடல் பிளந்து எகிப்து
நாட்டை விட்டும் வெளியேறினார்கள்.அப்போது அதேவழியில் அவர்களைப்
பிடிப்பதற்காகச் சென்ற பிர்அவ்ும், அவனது பட்டாலமும் கடல் 
ஒன்றிணைந்து  நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தனர். இந்நிகழ்வு  நடை
பெற்றது முஹர்ரம்  மாதம் 10 ம் நாள் என ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ் பிர்அவ்னின்  சம்பவங்களை அல்குர்ஆனில் பல இடங்களில்
கூறுகின்றான் .இங்கே சில வசனங்களைக் காண்போம்..
"உங்களைக் கடுமையாக வேதனைப் படுத்தி வந்த பிர்அவ்னின் 
கூட்டத்தாரிலிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை
(எண்ணிப்பாருங்கள்.) அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை
செய்து,உங்கள் பெண்(மக்)களை உயிர்வாழ விட்டார்கள். அதில்
உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு ஒரு பெரும் சோதனை
இருந்தது."    (2: 49)

"மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிர்அவ்னின் கூட்டத்தாரை
நாம் மூழ்கடித்ததையும் (எண்ணிப்பாருங்கள்.)"      (2:50)

மேலும் வசனங்கள்...(7:127, 141)--(10:90)--(14:6)-- (20:28)--(28:4, 38)--(43:51)
(44:24, 31)--(66:11)--(79:24)

7- ஜாலூத்..

தாவூத் (அலை) அவர்களின் காலத்தில் பனூ இஸ்ராஈல்களை எதிர்த்து
வந்த கொடியவன். பனூ இஸ்ராஈல்களை அகதிகளாக விரட்டிய    
இவனுக்கெதிராக தாலூத் என்ற அரசனின் தலைமையில் படை சென்றது.
ஈற்றில் தாவூத் (அலை) அவர்கள் மூலம் இவன் கொல்லப்பட்டான்.
அதனைத் தொடர்ந்து நபி தாவூத் (அலை) அவர்கள் ஆட்சி புரியும் வாய்ப்பைப்
பெற்றாகள்.   
"எனவே அல்லாஹவின் உதவியினால் இவர்கள் அவர்களைத்
தோற்கடித்தனர். தாவூத்  ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ்
அவருக்கு ஆட்சியையும்,ஞானத்தையும் வழங்கி ,தான் 
நாடுபவற்றிலிருந்து அவருக்கு கற்றும் கொடுத்தான். அல்லாஹ்
மனிதர்களில் சிலரைச் சிலர் மூலம் தடுக்காது இருந்தால் இந்தப்
பூமி சீர் கெட்டிருக்கும். எனினும் அல்லாஹ் அகிலத்தார் மீது
அருள் பாலிப்பவனாவான்."       (2:251)

8- யஃஜூஜ்,மஃஜூஜ்.

நல்லாட்சி நடத்திதுல் கர்னைன்  மன்னனின் காலத்தில் வாழ்நத 
குழப்பக்கார  கூட்டத்தினரே இவர்கள்.
மறுமை நாள் நெருங்கும் போது இவர்கள் அடைத்து வைக்கப்பட்ட சுவர்
உடைந்து, இவர்கள் நாலா திக்குகளிலும் பரந்து, மனித இனத்துக்குப்
பாரிய அழிவுகளை ஏற்படுத்துவார்கள். இவர்களது குழப்பம், அழிவு
குறித்து நபிமொழிகள் விபரமாகப் போதிக்கின்றன. அவைகள்..

    அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். இது போன்ற சில சம்பவங்களை நம் அறிவிற்கு விளங்குமளவு அறிவியல் ஆதாரங்களோடு அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது” என்று தம் கட்டைவிரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்.” என்றார்கள்.
புஹாரி : 3346 ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி).

நபி (ஸல்) அவர்கள், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்து விட்டான்” என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக் காட்டினார்கள்.”
புஹாரி : 3347 அபூஹூரைரா (ரலி).

“(நபியே!), இவர்கள்(யூதர்கள்) உங்க ளிடம் துல்கர்னைன் பற்றி கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: நான் அவரைப் பற்றிய சில விபரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்வேன்.

திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லாவிதமான சாதனங் களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந் தோம்.”

அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப்போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அம்மக்கள் கூறினார்கள்: துர்கர்னைனே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் (பரவலாக) அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீங்கள் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?. அதற்கு அவர் பதிலளித்தார்: என்னடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை மேலானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவரை எழுப்பித் தருகிறேன்; இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள். இறுதியில் இரு மலைகளுக் கிடையிலான பகுதியை நிரப்பி விட்ட அவர் (மக்களை நோக்கி) கூறினார்: இப்பொழுது (நெருப்பை மூட்டுவதற்காக) ஊதுங்கள்! கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்த போது அவர் கூறினார்: கொண்டு வாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத்திரவத்தை! அதனைச் சுவற்றின் மேல் ஊற்றுவேன். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரால் அதில் ஏறி வர முடியவில்லை. அவர்களால் அதில் துளையிடவும் இயலவில்லை. (அந்த அளவுக்கு அந்தச் சுவர் உயரமாகவும் வலுவாகவும் இருந்தது.) துல்கர்னைன் கூறினார்: இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்து விட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும். (18:83-98) 

எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்து விடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை. (21:96)

9-ஸாமிரி..

இவன் மூஸா (அலை) அவர்களின் காலத்தில் வாழ்நதவன். மூஸா(அலை)
ஹாரூன் (அலை) ஆகிய இரு நபிமார்களுடும் பழகியிருந்தாலும், காளைக்
கன்றை அச்சமூகத்தினர் வணங்குவதற்குக் காரணமாக இருந்தவன்.
மூஸா(அலை) "தூர்ஸினாய்" மலைக்குப் போன பின்னர் மக்களின் நகைகள்
அனைத்தையும் ஜிப்ரீல்(அலை) அவர்களது கால் பட்ட மண்ணையும், சேர்த்து
காளைக் கன்றொன்றைச் செய்தான்.மக்கள் இதுதான் கடவுள் என்று
அதனை வழிப்பட்டனர். ஹாரூன்(அலை) அவர்கள் மக்களைத் தடுத்த போதும்,
இவனால் வழி கெடுக்கப்பட்ட மக்கள் மனம் மாற வில்லை.
மூஸா(அலை) அவர்கள்  வந்து  காளைக் கன்றின் சிலையை எரித்து
இவர்களையும் சபித்தார்கள். இது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில்....
"நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (கடவுளாக) எடுத்துக்
கொண்டார்களோ அவர்களது இரட்சகனிடமிருந்து கோமும்,
இவ்வுலக வாழ்வில் இழிவும் அவர்களை வந்தடையும். இவ்வாறே
இட்டுக்கட்டுவோருக்கு நாம் கூலி வழங்குவோம்."  (7:152)

"மூஸாவின் சமூகத்தினர் அவர்களுக்குப் பின்னர் தமது 
ஆபரணங்கலால், சப்தமிடக்கூடிய காளைக் கன்றின் 
உருவத்தை(ச்செய்து கடவுளாக) எடுத்துக்கொண்டனர். 
நிச்சயமாக அது அவர்களுடன் பேசமாட்டாது,என்பதையும்,
அவர்களுக்கு  எந்த வழியையும் காண்பிக்காது என்பதையும்
அவர்கள் அறியவில்லையா? அவர்கள் அதை(க் கடவுளாக)
எடுத்து அநியாயக் காரர்களாகி விட்டனர்."      (7:148)        
 
 அல்லாஹ் அல்குர்ஆனில் இவர்கள் தான் கெட்டவர்கள்   இது உலக 
மக்களுக்கு ஒரு படிப்பினை  என்பதை இந்தக் கெட்டவர்களை வைத்து
நமக்கு அளப்பெரிய  படிப்பினைகளை அல்குர்ஆன் மூலம் தெளிவு
படுத்துகின்றான்.
எனவே அல்லாஹ் நம்மை இக்கெட்டவர்ளிலிருந்து பாதுகாப்பானாக
ஆமன்...

தொகுப்பு ..
அஹமட் யஹ்யா
ஹொரோவபதான.
அநுராதபுரம்,
__________________________________*************___________________________________