Followers

Thursday, October 11, 2012

நான்கு இமாம்களின் எச்சரிக்கை...

நான்கு இமாம்களின் 
எச்சரிக்கை...
******************************************************

1 – இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) கூறுகிறார்கள்:
                                                                               


ஹதீஸ் சஹீஹாக (அதாரப்பூர்வமாக)
கிடைக்கும் போது அதை பின்பற்றுவதே
எனது வழியாகும்.

(ஆதாரம்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன்,
பாகம் 1, பக்கம் 63, ரஸமுல் முப்தீ
பாகம் 1, பக்கம் 4, ஈகாழுல் ஹிமம்
பக்கம் 62 )

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம்
முடிவு செய்தோம் என்பதை அறியாமல்
எனது சொல்லை நடைமுறைப்படுத்துவது
எவருக்கும் ஹலால்அன்று.

(ஆதாரம்: அல்இன்திகா பக்கம்
145, ஹாஷியா இப்னுல் ஆபிதீன்,
பாகம் 6, பக்கம் 293, ரஸமுல் முப்தீ
பாகம் பக்கம் 29, 32 )

என்னுடைய ஆதாரத்தை அறியாதவன்,
என் சொல்லைக் கொண்டு ஃபத்வா
கொடுப்பது ஹராமாகும்.

(ஆதாரம்: மீஸான் ஷஃரானி பாகம் 1
பக்கம் 55 )

நாங்கள் இன்று ஒரு சொல்லைச்
சொல்லி விட்டு, நாளை அதைத்
திரும்பப் பெற்றுக் கொள்கின்ற
மனிதர்கள்தாம்.

(ஆதாரம்: மீஸான்
ஷஃரானி பாகம் 1 பக்கம் 55 )

அபூ யூசுபே! என்னிடமிருந்து கேட்டவற்றை
எல்லாம் எழுதி வைத்துவிடாதே, ஏனெனில்
இன்று ஒரு அபிப்பிராயத்தைக்
கொண்டு (ஒரு தீர்ப்பை அளிப்பேன்)
நாளை அதை விட்டுவிடுவேன், நாளை
ஒரு அபிப்பிராயம் கொண்டு (தீர்ப்பு அளிப்பேன்)
நாளை மறுநாள் அதை (தீர்ப்பு அளித்ததை)
விட்டு விடுவேன்.

(ஆதாரம்: இமாம்இப்னுல் மூயினுடைய
‘தாரிக்‘ பாகம்,பக்கம் 77 )

அல்லாஹ்வுடைய நெறி காட்டும் நூலுக்கும்
நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான
ஒன்றை நான் சொன்னால், என் சொல்லைவிட்டு
விடுங்கள்.

(ஆதாரம்:ஈகாழுல் ஹிமம் பக்கம் 50 )

 
2 – இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:


1.நான் (சில நேரங்களில்) சரியாகவும்,
(சில நேரங்களில்) தவறாகவும்
முடிவெடுக்கக் கூடிய சராசரி மனிதன்தான்.
எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்,
குர்ஆனுக்கும், நபி வழிக்கும்
பொருத்தமானவற்றை எடுத்துக்
கொள்ளுங்கள், குர்ஆனுக்கும்,
நபி வழிக்கும் பொருத்தமில்லாதவற்றை
விட்டு விடுங்கள்.

(ஆதாரம்: ஜாமிவு இப்னி அப்தில்பர்-
பாகம் 2 பக்கம் 42, உஸூனுல்
அஹ்காம்-பாகம் 6 பக்கம் 149,
ஈகாழுல் ஹிமம்-பக்கம் 62 )

2.நபி (ஸல்) அவர்களின் சொல்லைத்
தவிர வேறு எவரது சொற்களிலும்,
எடுக்கத்தக்கவையும் உண்டு,
விடப்படக்கூடியவையும் உண்டு.
நபி (ஸல்) அவர்களின் சொல்
மட்டுமே முற்றாக பின்பற்றப் பட
வேண்டியவை.

(ஆதாரம்:
இர்ஷாதுஸ்ஸாலிக்-பாகம் 1 பக்கம்
227, ஜாமிவு இப்னி அப்தில்பர்-பாகம்
2 பக்கம் 91, உஸூலுல் அஹ்காம்-
பாகம் 6 பக்கம் 145 )
(இதே வார்த்தையை இப்னு அப்பாஸ்
(ரழி) அவர்கள் கூறியதாக இமாம்
தகியுத்தீன் சுபக்கீ அவர்கள்
தனது ‘ஃபதாவா‘வின் பாகம் 1 பக்கம்
148-ல் குறிப்பிடுகிறார்கள் )


3.”ஒளூ செய்யும்போது கால் விரல்களைக்
கோதிக் கழுவ வேண்டியதில்லை” என்ற
கருத்தை இமாம் மாலிக் அவர்கள்
கொண்டிருந்தார்கள். அப்போது நான்
”கால்களைக் கோதிக் கழுவ வேண்டும்”
என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறி
அவர்களிடம் ஸனதுடன் அறிவித்தேன்,
அதற்கு இமாம் மாலிக் அவர்கள்,
”இது சரியான ஹதீஸ்தான், நான்
இதுவரைக் கேள்விப்பட்டதில்லை”
என்று கூறி விட்டு, அதன் பின்னால்
விரல்களையும் கோதிக் கழுவிவிட
உத்தரவிட்டார்கள் என்று இப்னு வஹ்ப்(ரஹ்)
அவர்கள் குறிப்பிடுகிறார்கள்

(ஆதாரம்:
அல்ஜர்ஹு வத்தஃதீல்
முன்னுரை பக்கம் 31,32 )
 
3 – இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
கூறுகிறார்கள்


1.எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல் (ஸல்)
அவர்களின் வழிமுறைகளில் ஏதேனம் (சில) தவறி
விடத்தான் செய்யும், நான் ஏதேனம் ஒரு சொல்லைச்
சொல்லும் பொது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை
வகுத்துத்தரும்போது. அல்லாஹ்வின்திருத்தூதருடைய
கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால்,ரசூல் (ஸல்) அவர்கள்
கூற்றை ஏற்பதே எனது கொள்கையாகும்

( ஆதாரம்: தாரீகு திமிஷ்க்
(இப்னு அஸாகிர்) பாகம் 3 பக்கம் 15,
ஈகாழுல் ஹிமம் பக்கம் 100 )

2.ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத்
தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும்
விடுவது ஹலால் இல்லை என்று முஸ்லிம்கள்
அனைவரும் ஒருமித்து ஏற்றுள்ளனர்

(ஆதாரம்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 68 )

3.எனது நூலில் நபி (ஸல்) அவர்களின்
சுன்னத்துக்கு மாற்றமானதைக் கண்டால்
ரசூலுடைய சுன்னத்தையே (மக்களிடம்)
சொல்லுங்கள், என் கூற்றை விட்டு விடுங்கள்

(ஆதாரம்:
அல்மஜ்மூவு (நவவீ) பாகம் 1 பக்ககம்
63, இப்னு அஸாகிh 9,10,15,
ஈகாழுல்ஹிமம் பக்கம் 706, அல்
இஹ்திஜாஜ் பகாம் 2 )

4.ஆதரப்பூர்வமான ஹதீஸ் இருக்கும்போது
அதைப் பின்பற்றுவதே எனது வழி

(ஆதாரம்:
அல்மஜ்மூவு (நவவீ) பாகம் 1 பக்கம்
63, மீஸான் ஷஃரானி பாகம் 1 பக்கம்
57, ஈகாழுல் ஹிமம் பக்கம் 107 )
(இதை நான்கு இமாம்களும் கூறியதாக இமாம்
இப்னு ஹஸ்மு அவர்களின்கூற்றை இமாம்
ஷஃரானி பாகம் 1பக்கம் 57-ல் குறிப்பிடுகிறார்கள்)

5.இமாம்அஹ்மது இப்னு ஹன்பலை நோக்கி இமாம்
ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்,
ஹதீஸ்களையும், அதன்அறிவிப்பாளர்களையும் நீங்கள்
நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்
என்றால் உடனே அதை எனக்கு அறிவித்து விடுங்கள்.

(ஆதாரம்: ஆதாபுஷ்ஷாஃபியி பக்கம்
94,95, அபூ நயீமின் ஹில்யா பாகம் 9
பக்கம் 106, இப்னுல் ஜவ்ஸியின்
மனாகிபுல் இமாம், அஹ்மத் பக்கம்
499, அல் இன்திகா பக்கம் 75 )

நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம்
வந்துள்ள சட்டங்களுக்கு மாற்றமாக நான் சொன்ன
அத்தனை சட்டங்களிலிருந்தும் நான் வாழும் போதும் விலகிக்
கொண்டேன். எனது மரணத்திற்குப் பின்னும் நான்விலகிவிட்டேன்
(நான் இதற்குப்பொறுப்பேற்க இயலாது)

(ஆதாரம்:
ஹில்யா (அபூ நயீம்) பாகம் 9 பக்கம்,
இஃலாமுல்மூகியீன் பாகம் 2 பக்கம்
363, ஈகாழுல் ஹிமம் பக்கம் 104 )
நான் எதையாவது சொல்லி அது நபி (ஸல்)
அவர்கள் கூற்றுக்கு மாற்றமாக இருப்பின், அது
என் அறிவுக்குறைவு எனப்புரிந்து கொள்ளுங்கள்

(ஆதாரம்:
இப்னு அஸாகிர் 1,10,15, அல்ஆதாப்
(இப்னு அபீஹாதம்) பக்கம் 93,
அபூ நயீம் பாகம் 9 பக்கம் 106 )

நான் சொன்ன சொற்கள் ஆதாரபூர்வமான
நபி மொழிக்கு முரண்படும்போது , நபியின்
ஹதீஸ்தான் ஏற்கத்தக்கது, என்னைப்
பின்பற்றாதீர்கள்

(ஆதாரம்: அல்ஆதாப்
(இப்னு அபிஹாதம்) பக்கம் 93,
அபூ நயீம் பாகம் 9, பக்கம் 106 )

நபி (ஸல்) அவர்கள் வாயிலாக வந்துள்ள
எல்லா ஹதீஸ்களும்தான் என் சொல்லாகும்.
என் மூலம் நீங்கள் அதைச் செவியுறாவிட்டாலும்
சரியே

(ஆதாரம்: அல் ஆதாப்
(இப்னு அபீஹாதம்) பக்கம் 93,94 )
 
4 – இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்.

என்னையோ, மாலிக், ஷாஃபியீ,அவ்ஸாயீ, ஸவ்ரீ (போன்ற
இமாம்களையோ) பின்பற்றாதே,அவர்கள் எதிலிருந்து எடுத்துக்
கொண்டார்களோ அதையே (அந்த குர்ஆன், ஹதீஸிலிருந்து) நீயும்
எடுத்துக்கொள்)

(ஆதாரம்: ஈகாழுல்
ஹிமம் பக்கம் 113 )

அபூ ஹனீஃபா, மாலிக், அவ்ஜாயீ ஆகியோரின்
கருத்துகள் அவர்களின் அபிப்பிராயமே, உண்மையான
ஆதாரம் நபி தோழர்களின் சரியான அறிவிப்பில்தான்
உண்டு

(ஆதாரம்:
ஜாமிவு இப்னி அப்தில்பர் பாகம் 2
பக்கம் 149 )

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை நிராகரிப்பவன் அழிவின்
விளிம்பிலே இருக்கிறான்

(ஆதாரம்:
இப்னுல் ஜவ்ஸி பக்கம் 182, 30-32 )
**************************************************************************************************
அஹமட் யஹ்யா,,
ஹொரோவபதான,அனுராதபுரம்.
SRI LANKA..
*******************************

குழந்தை வளர்ப்பு...



 
 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

குழந்தை வளர்ப்பு...

இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.
அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (பார்க்க புகாரி 1385)
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.


''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம் களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். (அல்குர்ஆன் 2:132)
இப்ராஹீம் நபியும் யஃகூப் நபியும் தன் குழந்தைகளிடம், ''வாழும் நாட்களில் நீங்கள் முஸ்லிம்களாக வாழ வேண்டும். உங்களுக்கு மரணம் வரும் போதும் முஸ்லிம்களாகவே இருக்க வேண்டும்'' என்பதைத் தெளிவாக, தம் குழந்தைகளுக்கு விளக்கியுள்ளார்கள்.
இதைப் போன்று லுக்மான் (அலை) அவர்களும் தம் குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் வல்லமை, இணை வைப்பின் பயங்கரம், தொழுகையின் முக்கியத்துவம், நன்மையை ஏவி, தீமையை தடுப்பதன் அவசியம், பொறுமையின் சிறப்பு, ஆணவத்தின் கடுமை என்று ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.


லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ' 'என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தி உள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப் பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்து வாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும் குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.

உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.

தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.

குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.

குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.

குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;

இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;

இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;

இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.

பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.

உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.


“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” (அல்-குர்ஆன் 66:6)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
***************************************************************************************************
 அஹமட் யஹ்யா,,
ஹொரோவபதான,அனுராதபுரம்.
SRI LANKA
**********************************************************************************  

கலந்தாலோசித்தல்



 

 

அத்தியாயம்  42 ஸுரத்துஷ் ஷுறா

(கலந்தாலோசித்தல்)


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
[42:1]
ஹா, மீம்.

[42:2]
ஐன், ஸீன், காஃப்.

[42:3]
(நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

[42:4]
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.

[42:5]
அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர் அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

[42:6]
அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.

[42:7]
அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும் அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி பொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும்.

[42:8]
அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.

[42:9]
(நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.

[42:10]
நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.

[42:11]
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அலன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

[42:12]
வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.

[42:13]
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.

[42:14]
அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே யன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டடிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.

[42:15]
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பன், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது" என்றும் கூறுவீராக.

[42:16]
எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.

[42:17]
அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?

[42:18]
அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர் ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

[42:19]
அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

[42:20]
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.

[42:21]
அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.

[42:22]
(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.

[42:23]
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.

[42:24]
அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்; "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.

[42:25]
அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.

[42:26]
அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.

[42:27]
அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.

[42:28]
அவர்கள் நிராசையான பின்னர் மறையை இறக்கி வைப்பவன் அவனே மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.

[42:29]
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் கால்நடைகள் (முதலியவற்றைப்) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.

[42:30]
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.

[42:31]
இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.

[42:32]
இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

[42:33]
அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

[42:34]
அல்லது அவர்கள் சம்பாதித்த காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.

[42:35]
அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.

[42:36]
ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.

[42:37]
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.

[42:38]
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

[42:39]
அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.

[42:40]
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.

[42:41]
எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.

[42:42]
ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.

[42:43]
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.

[42:44]
"இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?" என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.

[42:45]
மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவகாக்) கடைக்ககண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்; "எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்." அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.

[42:46]
(அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.

[42:47]
அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.

[42:48]
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.

[42:49]
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.

[42:50]
அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.

[42:51]
அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.

[42:52]
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்.

[42:53]
(அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.
அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,அனுராதபுரம்.
SRI LANKA.
***********************************
 **********************************
  ********************************
    *****************************
      **************************
        ***********************
           *******************
             ****************
               *************
                 **********
                   *******
                     ****
                       **
                        *
                          *
                             *
                                 *
                                    *
                                        *
                                           *
******************************************************************************** 

நன்றே செய்...




நன்றே செய்...
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். அல்குர்ஆன்: 2.148

நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிருத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான்.

ஒருவர் தொழாதவறாக இருப்பார் தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அதற்கடுத்த நேரத் தொழுகைக்கான அழைப்பொலியை எதிர்பார்த்து பள்ளிக்கு விரைந்திட வேண்டும்.

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.
1- மறதியில் ஆழ்த்தும் வறுமை,
2- அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,
3- உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,
4- சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,
5- விரைந்து வரும் மரணம்,
6- தஜ்ஜாலின் வருகை,
7- இறுதி தீர்ப்பு நாள்,
என்று இதைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
அஹமட் யஹ்யா....
ஹொரோவபதான.அனுராதபுரம்
SRI LANKA
*************************************************************************  

உன் வாழ்வு....



உன் வாழ்வு....

** அற்பமானது என்று எண்ணி எந்த
         தீமையையும் பின் பற்றாதே!
             அற்பமானது என்று எண்ணி எந்த
                    நன்மையையும் அலட்சியம் செய்யாதே!



** மென்மையான சொற்கள் 
        வன்மையான சொற்களால் 
            வெல்ல முடியாது,,,,
              மென்மையான சொற்களால் வெல்ல     
                    முடியும்...

                                        

** ஆடம்பரம் கலந்த வாழ்வுதான் அற்ப வாழ்வு...
      உயர்ந்த தன்மைக்கு முதல் அடையாளம் 
          எளிமை...

                                            

** இன்பத்தின் இரகசியம் ...நீ...
        விரும்புவதை செய்வதில் அல்ல,,,
           செய்வதை விரும்புவதில் தான் உள்ளது...

                               
ஆனால் அன்பு அருமையானது
     விலை மதிப்பற்றது...... 
**************************************** 

அஹமட் யஹ்யா
ஹொரோவபதான
அனுராதபுரம்
SRI LANKA

சகோதரத்துவம் ..


 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ..
அன்பின் சகோதர சகோதரிகளே .... புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


சகோதரத்துவம் ..
 சகோதரத்துவத்தை எவ்வாறு பேண வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாம் நமக்கு ஒரு பாடதிட்டத்தையே வழங்குகிறது. முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த விஷயங்களை கடைபிடித்தால் சகோதரத்துவம் மேலோங்கும், சகோதரத்துவம் பாதிப்படையாமல் இருக்க எந்த விடயத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மிக விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இஸ்லாம் உருவாக்க விரும்பும் சகோதரத்துவத்தின் உயரிய நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால் ... ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும்.

"எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்." (திருக்குர்ஆன் 61:4)
ஈயத்தால் வார்த்து உருவாக்கப்பட்ட சுவர் எப்படி உறுதியானதாக இருக்குமோ, எவ்வளவு பிணைப்பாக, வலிமையாக இருக்குமோ, அதைப்போன்று முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அந்த சுவரினுள் ஓட்டையோ, விரிசலோ விழாதவாறு பார்த்துக்கொள்வது ஈமான் கொண்ட ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.
"உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது போர்த்துவீராக" (திருக்குர்ஆன் - 15:88)
ஒருமுறை நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:. 'உன் சகோதரனுக்கு உதவி செய்திடு, அவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அநீதிக்குள்ளானவனாக இருந்தாலும் சரியே! அப்பொழுது ஒருவர் எழுந்து ஆட்சேபனை கிளப்பினார் ....
அல்லாஹ்வின் தூதரே! அவன் அநீதிக்கு உள்ளானால் நான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் தான். ஆனால் அவன் அநீதியாளனாக இருந்தால் அவனுக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்? இது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!
நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்: 'அநீதி இழைப்பதிலிருந்து அவனை நீ தடுத்திடவேண்டும். அது தான் அவனுக்கு நீ செய்யும் உதவி '(நூல்: புகாரி)

ஒருவன் சகோதரத்துவம் என்ற பெயரில் தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டு மேலே சொன்ன சகோதரத்துவப் பயன்பாடுகளை எதிர்பார்த்தான் எனில் கானலைப் பார்த்து தண்ணீர் என ஏமாறும் நிலைதான் ஏற்படும். சகோதரத்துவத்திற்கென சிலநெறிமுறைகள் - நிபந்தனைகள் உள்ளன. அவற்றைப் பேணினால் தான் அவற்றின் பயன்களை அடைய முடியும்.

*) அல்லாஹ்வின் உவப்புதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு மனிதர் வேறொரு கிராமத்தில் உள்ள தன் சகோதரனைச் சந்திப்பதற்காகச் சென்றார். அந்தப் பாதையில் அவனை எதிர்பார்த்திருக்குமாறு அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி வைத்தான். அங்கு அவர் வந்த போது மலக்கு கேட்டார்: நீ எங்கே செல்கிறாய்? அதற்கு அவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரைச் சந்திக்கச் செல்கிறேன் என்றார். நீ அவருக்கு ஏதேனும் உபகாரம் செய்து அதற்கு கைமாறு பெற நாடுகிறாயா? என்று மலக்கு கேட்டார். அதற்கு அவர், அப்படி ஒன்றுமில்லை. அல்லாஹ்வுக்காக அவரை நான் நேசிக்கிறேன் என்றார். அப்பொழுது வானவர் சொன்னார்: ஒரு விஷயத்தை அறிவிப்பதற்காக அல்லாஹ்தான் என்னை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளான்;: நீ அவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது போன்று அல்லாஹ் உம்மை நேசிக்கிறான் (நூல்: முஸ்லிம்)


*) இறையச்சத்துடன் சகோதரத்துவம் பேணிட வேண்டும். அதா வது, கடமைகளில் பொடுபோக்கும் தீமை நாடுவதும் தவிர்க்கப் படவேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர் '(49: 10). மேலும் இறையச்சத்தின் அடிப்படையில் அமையாத உறவுகள் அனைத்தும் பாழாகப் போய்விடும் என்பதை இவ்வாறு தெளிவுபடுத்துகிறது திருக்குர்ஆன்:
அந்த மறுமை நாளில் ஏனைய நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவர், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களைத் தவிர.! '(43: 67).

எனவே புகழாசை, அதிகார மோகம், பட்டம் பதவி போன்றவை குறுக்கிட்டால்; சண்டை சச்சரவு தான் வளரும்.
*) பிறர் நலன் நாடுதல் எனும் அடிப்படையில் அமைந்திட வேண்டும். ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்;: 'நான் நபியவர்களிடம், தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் கொடுத்தல், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுதல் ஆகியவற்றின் பேரில் விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தேன்' (புகாரி)

*) நன்மையான காரியத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தின் முதன்மை நோக்கமும் இதுவே. இந்நிலை இல்லையெனில் அது, சகோதரத்துவம் வலுவிழந்து வருவதன் அடையாளமாகும்.
*) வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது. அதாவது, இது போன்ற சூழ்நிலைகளில் தம் சகோதரர்களின் நலனுக்காக அர்ப்பணமாகும் நிலை இருக்க வேண்டும்!

'உங்களில் எவரும் தனக்கு விருப்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரையில் இறை நம்பிக்கையாளராக முடியாது' (நூல்: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். (வாங்குவதில்லை எனும் நோக்குடன்) பொருள்களின் விலையைக் கூட்டாதீர்கள். ஒருவருக்கொருவர் கோபப்படாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். பிறரின் வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு வியாபாரம் செய்யாதீர்கள். நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் நல்லடியாளர்களாக, சகோதரர்களாகத் திகழுங்கள்! ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். மோசடி செய்ய மாட்டான். அவனை இழிவாகக் கருத மாட்டான். இறையச்சம் இங்கு உள்ளது என்று நபியவர்கள் தம் நெஞ்சைச் சுட்டிக்காட்டி மூன்று முறை சொன்னார்கள்! ஒரு மனிதன் தீயவன் என்பதற்கு தன் முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருவதுவதே போதுமானதாகும். ஒரு முஸ்லிமின் உயிர், உடைமை, தன்மானம் ஆகியவற்றிற்கு பங்கம் விளைவிப்பது எல்லா முஸ்லிம்களுக்கும் ஹராம் - தடுக்கப்பட்டதாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (முஸ்லிம்)

நற்குணம்தான் அன்பையும் பாசத்தையும் விதைத்து உள்ளங்களை இணைக்கும் பாலம். இணங்கிப்போகும் பண்பு தான் சகோதரத்துவத்தின் யதார்த்த நிலையாகும். இதனால் தான் நற்குணம் வளர்க்கிறது. ஆனால் பிணங்குவதென்பது ஒருவருக்கொருவர் முரண்படுவதென்பது தீய குணத்தின் விளைவாகும். அது உள்ளங்களில் கோபத்தையும் குரோதத்தையும் புறம்பேசும் போக்கையும் தான் உருவாக்கும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நற்குணத்துடன் மக்களிடம் பழகிடு. எவர், நரகத்திலிருந்து தூரமாக்கப் படவும் சுவனத்தில் புகுத்தப்படவும் விரும்புகிறாரோ அவர், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட நிலையில் மரணத்தைச் சந்திக்கட்டும். மேலும் மக்கள் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோரோ அப்படியே மக்களிடம் அவர் நடந்துகொள்ளட்டும் (நூல்: அஹ்மத்)

பரஸ்பரம் உதவி செய்யாதிருப்பது, உரையாடும் பொழுது ஒழுங்கு முறை கடைப்பிடிக்காதிருப்பது, கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது, அளவின்றி விமர்சனம் செய்வது, வீணாகத் தர்க்கிப்பது, பொறுமையின்றி நடந்து கொள்வது, நான்கு பேருக்கு மத்தியில் புத்திமதி சொல்வது, கோள் மூட்டுபவர்கள் சொல்வதை உண்மையென நம்புவது, ரகசியத்தைப் பரப்புவது, தனிப்பட விவகாரத்தில் தலையிடுவது, சகோதரன் படும் துன்பத்தைக் கண்டு கொள்ளாதிருப்பது, சுய புகழ்பாடுவதுதில் அலாதி இன்பம் காண்பது, அதனூடாக தனது அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வது, தக்க காரணமின்றி வாக்களித்த நேரத்தில் சந்திக்காதிருப்பது, மனக் கவலையை, மனவருத்தத்தை அதிகப்படுத்தும் வகையில் பேசுவது ஆகியவை உறவைக் குலைத்து விடலாம் . நோக்கத்தைப் பாழாக்கி விடலாம்.
அல்லாஹ்வின் நல்லடியாளர்கள் பற்றி குர்ஆன் ஓரிடத்தில் இவ்வாறு புகழ்கிறது:
தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும் கூட தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். உண்மை யாதெனில் யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக் கூடியவர்கள் ஆவர் '(59: 9)

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: அல்லாஹ்வுக்காக பரஸ்பரம் நேசம் கொண்டு வாழும் இருவரில் மிகச் சிறந்தவர் யார் எனில் எவர் தன் சகோதரனை அதிகம் நேசிக்கிறாரோ அவர்தான் '(அல் அதபுல் முஃப்ரதில் இமாம் புகாரி)

"(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர் (கள் செய்யும் பிழை) களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்" (திருக்குர்ஆன் 3:134)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக ........
அஹமட் யஹ்யா ...
ஹொரோவபதான, அனுராதபுரம், இலங்கை.
************************************************** *
  

நல்லறம் செய்வோம் நமக்காக .....


◄ ▬ ▬ ▬ 11 ۩ ♣ ★ ♣ ۩ 11 ▬ ▬ ▬ ►
(¸. • * '¤ ° ♣ அஸ்ஸலாமு அலைக்கும் ♣ ° ¤ `* •. ¸,)
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
❤ ♫ ❤ ♫ ❤. • * ¨ `* • .. ¸ ♥ ☼ ♥ ¸. • * ¨ `* •. ♫ ❤ ♫ ❤ ♫ ❤.
அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும்
நம் எல்லோர் மீதும் ¸. • * ¨ `* •. ♫ ❤ ♫ ❤ ♫ ❤ ❤ ♫ ❤ ♫ ❤. • * ¨ `* • .. ¸ ♥ ☼ ♥ ¸. • * ¨` * •. ♫ ❤ ♫ ❤ ♫ ❤


 

நல்லறம் செய்வோம் நமக்காக .....

ஸலாம் கூறுதல்!

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி (யப் பண்புகளி) ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), ஆதாரம்:. ஸஹீஹூல் புகாரி


! நாவைப் பேணுதல்


' ! முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது 'எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே "என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), ஆதாரம்: புகாரி. 
வாக்குறுதியை நிறைவேற்றுதல்!



"(நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்" (அல் - குர்ஆன் 17:34)

கோபத்தை அடக்குதல்!

"(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர் (கள் செய்யும் பிழை) களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்" ( அல் - குர்ஆன் 3:134)
 
பொறுமையைக் கடைபிடித்தல்!

"முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல் - குர்ஆன் 3:200)

நயவஞ்சகத் தன்மைகளை விட்டும் விலகியிருத்தல்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முனாபிஃக்கின் அடையாளம் மூன்று. 1) பேசினால் பொய் பேசுவான், 2) வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், 3) நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம் புகாரி, முஸ்லிம்.

பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுதல்!

"(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன் "(அல் - குர்ஆன் 24:30)

வறியவர்களுக்கு உதவுதல்!

"மேலும், அ (வ்விறை) வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்" (அல் - குர்ஆன் 76:8)
! விருந்தினரைக் கண்ணியப்படுத்துல், மற்றும் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழுதல்

"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும் "என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

பிறர் வீடுகளில் நுழைவதற்கு முன் வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெறுதல்!

"ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ (வ்வீட்டிலுள்ள) வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது) "(அல் - குர்ஆன் 24:27)

பெற்றோர்களைப் பேணுதல்!

"அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை (ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக! ' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல் - குர்ஆன் 17:23-24)

மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுதல்!

குணத்தில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி.
 
குடும்பத்தினர்களுக்கு செலவு செய்தல்!
 
தனது பொறுப்பிலுள்ளவர்களை ஒருவன் கவனிக்காமலிருப்பது அவன் பாவி என்பதற்கு போதுமான சான்றாகும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம்:. அஹ்மத், அபூதாவுத்
! உறவினர்களைப் பேணுதல்

"நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான் "(அல் - குர்ஆன் 16:90)
உறவினர்களுடன் சேர்ந்திருத்தல்!

தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) மற்றும்அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: புகாரி
சகோதர முஸ்லிமுடன் நட்புறவு கொள்ளுதல்!

"அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று "என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.
முஸ்லிம்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துதல்!

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல் - குர்ஆன் 49:10)
அஹமட் யஹ்யா ....


ஹொரோவபதான.
அனுராதபுரம் ..
இலங்கை.