Followers

Thursday, October 11, 2012

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்.


 அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

 
அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்.
அல்ஹம்துல்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்
يرحمك ال له
இதன் பொருள்:
அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்


يهديكم الله ويصلح بالكم .
இதன் பொருள்: அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக! (ஆதாரம்: புகாரி 6224)



தும்மல் வந்தால் (தும்மிய பின்)

الحمد لله அல்ஹம்து ல்லாஹ் எனக் கூற வேண்டும்.
இதன் பொருள்:. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். (ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390)

اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضني

இதன் பொருள்:
இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன். இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!



இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக. (ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390)


மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்



الله أكبر அல்லாஹு அக்ப (B) ர் அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்

பிராணிகளை அறுக்கும் போது

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது
بسم الله والله أكبر

இதன் பொருள்: அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற வேண்டும் (ஆதாரம்: புகாரி 5565, 7399).

வெளியூரில் தங்கும் போது
أعوذ بكلمات الله التامات من شر ما خلق
இதன் பொருள்:
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882)

பயணத்திருந்து திரும்பும் போது
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيبون تائبون عابدون لربنا حامدون

இதன் பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். (ஆதாரம்: முஸ்லிம் 2392)
மழை பொழியும் போது

اللهم صيبا نافعا
இதன் பொருள்: இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! (ஆதாரம்: புகாரி 1032)
அளவுக்கு மேல் மழை பெய்தால்

اللهم حوالينا ولا علينا

இதன் பொருள்:
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! (ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)

அல்லது
اللهم على الآكام والظراب والأودية ومنابت الشجر

இதன் பொருள்:
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக (ஆதாரம்: புகாரி 1013, 1016).

அல்லது
اللهم على رءوس الجبال والآكام وبطون الأودية ومنابت الشجر
(ஆதாரம்: புகாரி 1017)

மழை வேண்டும் போது
இரு கைகளையும் உயர்த்தி


اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا
இதன் பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. (ஆதாரம்: புகாரி 1013)
அல்லது
اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! (ஆதாரம்: புகாரி 1014)

இழப்புகள் ஏற்படும் போது

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் (ஆதாரம்: முஸ்லிம் 1525).

الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها

இதன் பொருள்: நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூ தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1525)
 
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي

இதன் பொருள்: இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 5671, 6351)
 
நோயாளியை விசாரிக்கச் சென்றால்

اللهم رب الناس مذهب الباس اشف أنت الشافي لا شافي إلا أنت شفاء لا يغادر سقما


இதன் பொருள்: இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 5742)
அல்லது
اللهم رب الناس أذهب الباس اشفه وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! (ஆதாரம்: புகாரி 5743)
அல்லது நோயாளியின் உடல் கையை வைத்து
بسم ال له பி (B) ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு
أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر - என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.
இதன் பொருள்: நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்ம் 4082)
அல்லது
لا بأس طهور إن شاء ال له - இதன் பொருள்: கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம். (ஆதாரம்: புகாரி 3616) கெட்ட கனவு கண்டால்

 
மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு

أ عوذ بالله من الشيطان الرجيم - அவூது பி (B) ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 6995)

கழுதை கணைக்கும் போது

أعوذ بالله من الشيطان الرجيم - அவூது பி (B) ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 3303)
 
கோபம் ஏற்படும்
போது أعوذ بالله من الشيطان - இதன் பொருள்: ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: புகாரி 3282) அல்லது أعوذ بالله من الشيطان الرجيم -. (ஆதாரம்: புகாரி 6115) எல்லா நிலையிலும் கூற வேண்டியவை பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும் بسم الله - பி (B) ஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 3280, 5623)
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் 

باسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا


இதன் பொருள்: அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக (ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396).
அல்லது
باسم الله اللهم جنبني الشيطان وجنب الشيطان ما رزقتنا

இதன் பொருள்: அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. (ஆதாரம்: புகாரி 5165, 3283)   
உணவளித்தவருக்காக
 
اللهم بارك لهم في ما رزقتهم واغفر لهم وارحمهم
இதன் பொருள்: இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 3805)

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

الحمد لله كثيرا طيبا مباركا فيه غير مكفي ولا مودع ولا مستغنى عنه ربنا


இதன் பொருள்: தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. (ஆதாரம்: புகாரி 5458)
அல்லது
الحمد لله - அல்ஹம்து ல்லாஹ் என்று கூறலாம். (ஆதாரம்: முஸ்லிம் 4915)

பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது

ا للهم إني أسألك من فضلك - இதன் பொருள்: இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1165) பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ا ل لهم افتح لي أبواب رحمتك - இதன் பொருள்: இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1165) சபையை முடிக்கும் போது ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் (ஆதாரம்: திர்மிதீ 3355). سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம். سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك இதன் பொருள் வருமாறு: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். (ஆதாரம்: நஸயீ 1327) வீட்டிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள் (ஆதாரம்: நஸயீ 5391, 5444). بسم الله رب أعوذ بك من أن أزل أو أضل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي இதன் பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
























 
கழிவறையிருந்து வெளியேறும் போது

غفرانك - (ஆதாரம்: திர்மிதீ 7)
இதன் பொருள்: உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.
தினமும் ஓத வேண்டிய துஆ பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
(ஆதாரம்: புகாரி 3293)
இதன் பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
 
இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்)
கூறினார்கள். لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال اللهم اغفر لي

(ஆதாரம்: புகாரி 1154)

இதன் பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.
 
தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.
اللهم لك الحمد أنت نور السموات والأرض ومن فيهن ولك الحمد أنت قيم السموات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك حق وقولك حق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق والنبيون حق ومحمد حق اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت

(ஆதாரம்: புகாரி 6317, 7429, 7442, 7499 நஸாயி 1601)
இதன் பொருள்:
இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.


காலையில் ஓதும் துஆ
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

أصبحنا وأصبح الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له قال أراه قال فيهن له الملك وله الحمد وهو على كل شيء قدير رب أسألك خير ما في هذه الليلة وخير ما بعدها وأعوذ بك من شر ما في هذه الليلة وشر ما بعدها رب أعوذ بك من الكسل وسوء الكبر رب أعوذ بك من عذاب في النار وعذاب في القبر
(ஆதாரம்: முஸ்லிம் 4901)


இதன் பொருள்:
நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழ னைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடு கிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறை யின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

 
மாலையில் ஓதும் துஆ
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை
ஓதுவார்கள். أمسينا وأمسى الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له قال أراه قال فيهن له الملك وله الحمد وهو على كل شيء قدير رب أسألك خير ما في هذه الليلة وخير ما بعدها وأعوذ بك من شر ما في هذه الليلة وشر ما بعدها رب أعوذ بك من الكسل وسوء الكبر رب أعوذ بك من عذاب في النار وعذاب في القبر

இதன் பொருள்:
நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ
 
காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ 5333)
அந்த அத்தியாயங்கள் வருமாறு:


قل هو الله أحد (1) الله الصمد (2) لم يلد ولم يولد (3) ولم يكن له كفوا أحد

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்

قل أعوذ برب الفلق (1) من شر ما خلق (2) ومن شر غاسق إذا وقب (3) ومن شر النفاثات في العقد (4) ومن شر حاسد إذا حسد

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!


113 வது அத்தியாயம்
قل أعوذ برب الناس (1) ملك الناس (2) إله الناس (3) من شر الوسواس الخناس (4) الذي يوسوس فيصدور الناس (5) من الجنة والناس

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور

இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395)
இதன் பொருள்:
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

 
தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ
 
1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்
قال اللهم خلقت نفسي وأنت توفاها لك مماتها ومحياها إن أحييتها فاحفظها وإن أمتها فاغفر لها اللهم إني أسألك العافية


இதன் பொருள்: இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 4887)
. 2, வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்
اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عنا الدين وأغننا من الفقر


இதன் பொருள்:
இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 4888)

3, படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
باسمك رب وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين


இதன் பொருள்:
என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! (ஆதாரம்: புகாரி 5845)

4, பி (B) ஸ்மில்லாஹ்
. எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்
سبحانك اللهم ربي بك وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فاغفر لها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين


இதன் பொருள்:
என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! (ஆதாரம்: முஸ்லிம் 4889)


5, தூங்குவதற்கு முன் ஆய (த்) துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 3275)
ஆய (த்) துல் குர்ஸீ வருமாறு: الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم



இதன் பொருள்:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன் (திருக்குர்ஆன் 2:255).

6, பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (ஆதாரம்: புகாரி 4008, 5010, 5040, 5051) இரவில் ஓதினால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் மஃரிப் முதல் சுப்ஹ் வரை இதை ஓதிக் கொள்ளலாம்.


அந்த வசனங்கள் வருமாறு:
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير


இதன் பொருள்:
இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர். (திருக்குர்ஆன் 2:285)

لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين

இதன் பொருள்: எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்). (திருக்குர்ஆன் 2:286)



7, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள் (ஆதாரம்: புகாரி 5018, 5748, 6319).
அந்த அத்தியாயங்கள் வருமாறு: قل هو الله أحد (1) الله الصمد (2) لم يلد ولم يولد (3) ولم يكن له كفوا أحد



இதன் பொருள்:
.!.... அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக அல்லாஹ் தேவையற்றவன் (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவுமில்லை அவனுக்கு நிகராக யாருமில்லை

112 வது அத்தியாயம் قل أعوذ برب الفلق (1) من شر ما خلق (2 ) ومن شر غاسق إذا وقب (3) ومن شر النفاثات في العقد (4) ومن شر حاسد إذا حسد



இதன் பொருள்:
. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113 வது அத்தியாயம்
قل أعوذ برب الناس (1) ملك الناس (2) إله الناس (3) من شر الوسواس الخناس (4) الذي يوسوس في صدور الناس (5) من الجنة والناس


இதன் பொருள்:
.!.. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான் ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்

114 வது அத்தியாயம்
8, நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு பின்னர் வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவை ஓது நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும் இதை ஓதி விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் (ஆதாரம்:.. புகாரி 247, 6313, 6315 , 7488, 6311, 7488)
அந்த துஆ இது தான். اللهم أسلمت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت فإن مت من ليلتك فأنت على الفطرة واجعلهن آخر ما تتكلم به قال فرددتها على النبي صلى الله عليه وسلم فلما بلغت اللهم آمنت

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான, அனுராதபுரம்.
இலங்கை .....
 
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #   

No comments:

Post a Comment