Followers

Friday, October 12, 2012

சூரத்துல் பகரா.


அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும்

அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

 சூரத்துல் பகரா.
 
அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.


யார் அல்லாஹ்வுடைய வேதத்திருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்துமடங்குவரை உண்டு. ”அஃப் லாம் மீம்” என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்துமீம் ஒரு எழுத்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி­), நூல் : திர்மிதீ (2835)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் குர்ஆனை ஓதிவாருங்கள் ஏனெனில் குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும் இரு ஓளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள் ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும் அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள் அதைக் கையாள்வது வளம் சேர்க்கும் அதைக் கை விடுவது இழப்பைத் தரும் இவ்வசத்தியாயத்திற்கு முன் சூனியக்காரன் செய­ழந்துபோவார்கள்.
அறிவிப்பாளர் அபூ உமாமா (ரலி­)
நூல்: முஸ்­ம் 1440 அஹ்மத் 21126, 21136, 21169, 21186

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக..
 
அஹமட் யஹ்யா
ஹொரோவபதான
அனுராதபுரம்.
SRI LANKA
********************************