Followers

Monday, November 12, 2012

அனுராதபுரம் மாவட்டம் ஒரு கண்ணோட்டம்

 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அனுராதபுரம் மாவட்டம் ஒரு கண்ணோட்டம்
......................................................................................................................
அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய பகுதிலுள்ள
ஒரு நகரமாகும். தற் காலத்தில் இது நாட்டின் வட மத்
-திய மாகாணத்தின் தலை நகராக உள்ளது.எனினும்
கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய
இலங்கையின் தலை நகரமாகப் பெயரும்,புகழும் பெற்று
விளங்கியது.இந்த நகரம் சிங்களவரின் வரலாற்று நூலான
"மகா வம்சத்தின்படி" வடகிழக்கு இந்தியாவிலிருந்த "லாட"
தேசத்திலிருந்து அவனுடைய துர் நடத்தை காரணமாக
700 நன்பர்களுடன் சேர்த்து துரத்தி விடப்பட்ட விஜயன்
என்ற இளவரசன் இலங்கை வந்த போது அவனுடன்
வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட
குடியேற்றமாகும்.ஆரம்பத்தில் அனுராதகிராமம் என
அழைக்கப்பட்டது. கி.மு. 437--கி.மு.367 வரையிலான
காலப்பகுதியில் இலங்கையை ஆண்ட பண்டுகபயன்
என்ற அரசன் அனுராதகிராமத்தை அனுராதபுரமாக
மாற்றி அவனது தலை நகராக்கினான்.
இதன் பின்னர் 10 ஆம் நூற்றாண்டளவில் தென்னிந்திய
படையெடுப்புகள் காரணமாக தலை நகர் பொலன்னறுவை
-க்கு மாற்றப்படும் வரை ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேலாக நாட்டின் தலை நகராக இருந்து வந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

அனுராதபுரம் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்க

-ளில் ஒன்றாகும்.
 
*து வட மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது.
*
அனுராதபுரம் நகரம் இதன் தலை நகராகும்.
*
7 பாராளுமன்றத்தொகுதிகளையும்
    694 கிராம சேவகர் பிரிவுகளையும்
    22 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
******************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.