Followers

Tuesday, November 27, 2012

வேண்டாமா...? என்றால் அர்த்தம் என்ன????

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.....

வேண்டாமா...? என்றால் அர்த்தம் என்ன????

அன்பின் இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளே..
மனதைத் தொட்டு.... அழுவதற்கு கத்தியால் கையை வெட்டவேண்டியதில்லை..
ஒருவர் கையால் அடி வாங்கி அழ வேண்டியதில்லை..

ஆரம்மபாக அல்லாஹ் அல்குர்ஆனில் கேட்குகின்றான்..பாருங்கள்.


அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?" (அல்குர்ஆன் 47:24)
இம்மைக்காகச் சிந்திக்கின்ற மனிதன் மறுமைக்காகச் சிந்திக்க வேண்டாமா? இந்தக் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? இறைக்கட்டளைகளை ஆராய்ந்து ஏற்றுச் செயல்பட வேண்டாமா? என்று அல்லாஹ் கூறுகின்றான்:

பண்பாடற்ற ஒருசமூகத்தை பண்பற்ற ஒரு சமூகமாகவும், ஒழுக்கயீனமற்ற ஒரு சமூகத்தை ஒழுக்க சீலமுள்ள ஒரு சமூகமாகவும், அநீதி, அநியாயத்திற்கு கொடி தூக்கிய சமூகத்தை நீதி, நியாயத்திற்கு கொடி தூக்கும் சமூகமாகவும் மாற்றியமைத்ததுடன் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தை மனித நேயமிக்க ஒரு சமூகமாக, வரட்டு கௌரவங்கள் ஆட்கொண்டிருந்ந ஒரு சமூகத்தை தன்மானமுள்ள ஒரு சமூகமாகவும் மாற்றியமைத்தது இந்த அல்குர்ஆன்.


இன்னும் ஒர் இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான் பாருங்கள்..


"எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்" (அல்குர்ஆன் 20:124).

அல்லாஹ்வுடைய போதனைகள், அல்குர்ஆனில் கூறப்பட்ட வாழ்க்கைகள், அலங்கரிக்க வேண்டிய பகுதிகள்,அரவணைக்க வேண்டிய அடிப்படைகள், அயராத நற்சிந்தனைகள்..இவற்றையெல்லாம் யார்? யார்? புறக்கணிக்கின்றார்களோ அவர்களுக்கு இந்த உலகில் நெருக்கடியான வாழ்க்கையை அல்லாஹ் சித்தப்படுத்தி வைக்கின்றான்.....ஏன் இன்றைக்கு காலையாகிவிட்டால் மாலைப் பொழுதை அடையும் வரை எத்தனை வடிவத்தில் அவரவர் குரல்களைக் கேட்கின்றோம்.
1000 ம் ரூபாய் காசியை கையில் வைத்தவர் ஒரு நிமிடத்துக்குள் அவற்றை வீண் விரயம் பொறுத்தமற்ற முறையில் சிலவு செய்து விட்டு புகைத்தல், மதுபானம்,சினிமா டியட்டர், லஞ்சம், வட்டி , என்று இன்னோரன்ன விடையங்களுக்கு சிலவு செய்து விட்டு அடுத்த நிமிடம் வீட்டுக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட நெருக்கடிகள் வருவதற்குக் காரணம் என்ன? மேலே சொன்ன குர்ஆனின் போதனையை அவர்கள் தன் மனதில் அமைத்துக்கொள்ள வில்லை.

இப்படிப்பட்டவர்களிடத்தில் அல்லாஹ் கேட்கின்றான் குர்ஆனில்..


''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம் எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:32)''
இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகின்றோம்.?
அழகான வடிவத்தில் அல்லாஹ் மனிதனுக்கு கண்ணைக் கொத்தான்.!!!
இரு கைகளையும் முறையாகக் கொடுத்தான்.!!!
நலவோ நஷ்டமோ போகவேண்டிய இடத்துக்கு போ.! என்று இரு கால்களைக் கொடுத்தான்.!!!
நலவோ, நஷ்டமோ செவி தாழ்த்திக்கொள்.! என்று இரு செவிப்புலன் களைக் கொடுத்தான்.!!!
நலவோ,நஷ்டமோ சிந்தித்து உணர்ந்து கொள்.!!! உனக்கும்,மிருகத்துக்குமுள்ள வேறு பாடு பகுத்தறிவு மனிதா...... இப்படித்தான் என்று உணர்ந்து கொள்ள பகுத்தறிவைக் கொடுத்தான்.!!!
மனிதனுக்காக எத்தனையோ சலுகைகளைக் கொடுத்தும் இருக்கின்றான்.!!!
வசதியும்,சக்தியும் இருந்தால் மட்டும் ஹஜ் செய்.!!!
பிரயாணம் செய்தால் தொழுகையை சுருக்கிக்கொள்.!!!
12 மாதமும் அல்ல... அதில் 1 மாதம் நோன்பு நோற்றுக்கொள்.!!!
ஜந்து நேரமும் முறையாகத் தொழுது என்னிடம் கேள்.!!!
பெரியவரைக் கண்டால் மரியாதை செய்.! சிறியவரைக் கண்டால் அன்பு காட்டு.!!!
உன் சகோதரனுடைய முகத்தைப் பார்த்து சிரிப்பதும் தர்மம் , பாசத்தைக் காட்டிக் கொள்.!!!

இப்படி எத்தனையோ அருமையான சலுகைகளையும் அல்லாஹ் மனிதனுக்கு ஏற்பாடு செய்தும் இருக்கின்றான் .. யாரெல்லாம் இதற்கு மாற்றமாக உலகத்தில் வாழுகின்றார்களோ, வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றார்களோ. அவர்களுக்கு இவ்வுலகில் நெருக்கடியான வாழ்க்கையை கொடுப்போம் என்று அல்லாஹ் கூறிவிட்டான் அது மாத்திரமல்ல..மறுமையில் அவனை..அல்லாஹ் கூறுகின்றான்.
""""அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்" ( 20:124).
மேலே சொல்லப்பட்ட மாதிரி குருடனாக எழுப்புவோம் என்றும் அல்லாஹ் கூறி இருக்கின்ரான்.
எனவே அல்லாஹ் குர்ஆனில் வேண்டாமா? வேண்டாமா? என்று கேட்டதை நாம்....
சிந்திக்கின்றோம்..
செயல்படுன்கிறோம்..
உணர்கின்றோம்..
குர்ஆனை ஓதுகின்றோம்..
தர்மம் செய்கின்றோம்..
மறுமையை பயப்படுகின்றோம்..
பொறுமை கொள்கின்றோம்..
ஹராத்தை வெறுக்கின்றோம்..
உள்ளச்சம் கொள்கின்றோம்..
பெற்றாரை மனிக்கின்றோம்..
பார்வைகளைத் தாழ்த்துகின்றோம்..

என்று நாம் பதில் சொல்கின்றோமா????

இதுதான் நாம் சிந்திக் வேண்டிய ஒரு கட்டாய கட்டமைப்பாகும்.

உலகெல்லாம் இன்று வர்ணிக்கப்படும் .. அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக வீறு கொண்டெழும் ஆயுத மற்றும் அற வழிப் போராட்டங்களுக்கும் அப்பாற்பட்டு நின்றும் இங்கே இனிதாய் புரிந்து கொள்ள.. நல்வாழ்வைப் பெற்றுக்கொள்ள இன்னும் பல அத்தியாயங்கள் நம் அகக் கண்களுக்குள் அகப்படாமலே தப்பிக்கொண்டிருக்கிறது.. அவற்றைப் பிடிக்க வேண்டாமா?.. பிடிப்பதென்றால் முதலில் எம் ஞானக் கண்களையும் திறக்க வேண்டாமா?…


ஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான்.
இந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலைக்குப் போவதையும், மிருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் , கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.

மனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.


அதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.


உதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது! அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது! எத்தனை ஆரோக்கியமான அறைகள்! முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை! இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள்! மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும்.

.ஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
____________________________******************_________________________________
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~