Followers

Wednesday, October 31, 2012

உபதேசம் பயன் தரும்


* குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எதாவது கருத்து வேறுபாடு
தென்பட்டால்  பித்னா நோக்கிலோ , அதன் கருத்தை தேடியோ  கருத்து
முரண்பாடான வற்றைப் பின்பற்றுவதாக உனது கொள்கை இருக்கக்
கூடாது..
உண்மையில் அதன் கருத்தை அல்லாஹ்வை அன்றி யாரும் அறியமாட்டாகள். அறிவில் நன்கு தரிபாடான, அனைத்தும் அல்லாஹ்விட
-மிருந்து வந்தவை, நாம் அப்படியே நம்பிக்கை கொண்டோம். என்று 
சொள்ளக்கூடியவர்களில் இருந்து கொள்.
கருத்து வேறுபாடுகள் பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
"உனக்கு சந்தேகமான ஒன்றை சந்தேகம் இல்லாததன் பக்கம் விட்டு விடு".
(ஆதாரம். நஸாஈ).

"யார் சந்தேகமானவைகளைத் தவிர்ந்து கொண்டாரோ அவர் தனது 
மார்க்கத்திற்கும், மானத்துக்கும் பாதுகாப்பெடுத்துக்கொண்டார். யார்
சந்தேகமான விடையங்களில் ஆகிவிடுகிறாரோ அவர் ஹராத்தில்
ுழைந்து விட்டார்" . (ஆதாரம் . புகாரி, முஸ்லிம்).

"பாவம் என்பது உனது உள்ளத்தில்  ஊசலாடி மனிதர் அதை அறியக்கூடாது
ன  நீர் விரும்பியதாகும்". (ஆதாரம். முஸ்லிம்).

"உனது உள்ளத்திடம் மார்க்கத்தீர்ப்புக் கேள்!. (அவ்வாறு மூன்று விடுத்தம்
கூறிய நபிஸல்அவர்கள்) நன்மை என்பது உனது உள்ளம் அது பற்றி
ஆறுதல் அடையக்கூடியது. பாவம் என்பது உனது உள்ளத்தில் ஊசலாடி
அதைச் செய்வது பற்றி நீர் ஈரெண்ணம் கொண்டதாகும். மனிதர்கள்
தீர்ப்பு வழங்கிய போதிலும் உனது உள்ளத்தில் தீர்ப்புக்கேள்!".
(ஆதாரம். அஹ்மத்  

* மனோ இச்சையைப் பின்பற்றுவதை உனக்கு எச்சரிக்கிறேன்.
 அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் எச்சரித்துள்ளான்.
       
"முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்". (4:135)

”வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீ்ங்கள் பின்பற்றாதீர்கள். அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன் தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்”" என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (5:77)


நாம் வாழும் இப்பூவுலகம் இயல்பாகச் சுற்றிக்கொண்டிருக்க, தன்னுடைய படைப்பில் சுயமாக எந்தப் பங்கும் இல்லாத மனிதன், இறைவன் தந்த உடல் உறுப்புகளைக் கொண்டு இயந்திரமாய் உழைக்கிறான். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதாது என்று கருதும் அளவுக்கு நேரப் பற்றாக்குறை. வானமும், பூமியும், அண்ட கோளங்களும், கடலும், வின்மீன்களும் தனது இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க, 6-வது அறிவு கொடுக்கப்பட்ட மனிதனோ பொருளாதாரத்தில் பேராசைக் கொண்டு, தன் வாழ்வாதாரத்தை பெருக்கத்தான் பேயாய் உழைக்கிறான். நான் எனும் அகந்தையில் சிக்கி நான் பணக்காரனாக வேண்டும், நான் ஆடம்பர உடைகள் அணிய வேண்டும், நான் அடுக்கு மாடிகள் கட்டி உல்லாச வாகனங்களில் வலம் வரவேண்டும் என்று ஓடி ஆடி பணத்தைத் தேடுகிறான். அது எவ்வகையில் சம்பாதித்தாலும் சரியே!

மற்ற மனிதரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் தம்மைவிட பணக்காரர் என்று இருமாப்புக் கொண்டு பேராசையில் இன்னும் ஓடுகிறான். பணம், பணம் என்று நடைபிணமாய் அலைகிறான். மறுமையை மறந்து இம்மையை நேசிக்கிறான்! பணத்தை யாசிக்கிறான்.

அல்லாஹ் தன் திருமறையில்

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை(அல்லாஹ்வை விட்டும்) பராமுகமாக்கிவிட்டது. நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை(102:1,2)


* தனி மனிதனுக்கோ, கருத்துக்கோ பிடிவாதம் பிடிப்பதை எச்சரிக்கிறேன்.
மூதாதையர்கள்  வாழ்ந்துள்ள நிலை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு
தடையாக இருக்கலாம். உண்மை என்பது ஒரு முஃமீன் தவறிய பொருள.
அதை எங்கு கண்டாலும் அவனே அதை எடுப்பதற்குத் தகுதியானவன்.
அல்லாஹ் கூறுகினான்.
"அல்லாஹ் இறக்கி வைத்ததன் பாலும், இத்தூதரின் பாலும் வாருங்கள்
என அவர்களுக்குக் கூறப்பட்டால் எங்களது மூதாதையர்களை  எதில்
ங்கள் கண்டோமோ   அதுவே எங்களுக்கப்போதுமானது  எனக்
கூறுகின்றனர். அவர்களது மூதாதையர்கள் எதையும் அறியாதவர்களாகவும்,
நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப்பின்பற்றுவார்கள்.)"   (5:104)

* காபிர்களுக்கு ஒப்பாகுவதை உனக்கு எச்சரிக்கிறேன்.
அன்னியவர்கள் அதாவது காபிர்கள் எப்படி ஆடை அணிகின்றாரக்ள், எப்படி
திருமணம் செய்கின்றார்கள், எப்படி முடி வளக்கின்றார்கள் வெட்டுகின்றார்கள்  எப்படி மக்களோடு பழகுகின்றார்கள் என்று இன்னும்
எத்தனையோ விஷயங்கள் அதுவே அனைத்துக் குழப்பங்களுக்கும்
அடிப்படைக் காரணம் . நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். "யாராவது இன்னொரு சமூகத்தினரைப் பின்பற்றினால் அவன் அவர்களைச் 
சேர்ந்தவனாகும்". (நூல். அபூ தாவூத்.)   

* அல்லாஹ் அல்லாதவற்றின் மீது நம்பிக்கை கொள்வதை உனக்கு
எச்சரிக்கிறேன்.
படைத்தவன் அல்லாஹ் , பரிபாலிப்பவன் அல்லாஹ் ஆக்கின்றவன் அல்லாஹ், அழிக்கின்றவன் அல்லாஹ்   இவைகள் அல்லாமல் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட பொருட்கள் மீது நம்பிக்கை வைப்பது
வழிகேடு  இந்த வழி கேட்டின் முடிவு நரகம். அல்லாஹ் கூறுகின்றான்.           
       
  நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)


* அல்லாஹ்வைப் பற்றி தப்பெண்ம் கொள்வதை உனக்கு எச்சரிக்கிறேன்.
படைத்த அல்லாஹ்வை பற்றி தப்பெண்ணம் கொல்வது மிகப் பெரும்
பாவமாகும் அப்பாவத்துக்கு தண்டணை கொடுப்பவனும் அல்லாஹ் தான்
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.  ஹதீஸூல் குத்ஸியில் அல்லாஹ்
கூறுவதாக.  "எனது அடியான் என்னைப் பற்றி எண்ணும் இடத்தில் நான் 
இருக்கிறேன்". (நூல் புகாரி,முஸ்லிம்)

* சூனியக்காரர்களை, சஸ்திரக்காரர்களை நம்புவதை உனக்கு எச்சரிக்கிறன்.
அவர்கள் தங்களுக்கு மறைவான  விடையங்கள் பற்றி அறுவு இருப்பதாகக்
கருதுகின்றனர். தட்டுகளில் ராசிகளை வெளிப்படுத்துகின்றனர். ஒருவருடைய
பாக்கியம், துற்பாக்கியம்  பற்றி அறிகின்றனர். அவைகளை நம்புவது  இணை
வைப்பாகும் அவைகள் வழிகேடைகும் ஒவ்வொரு வழிகேடும் நரகத்துக்கு
கொண்டு சேர்க்கும்.  மறைவானவற்றை அல்லாஹவை அன்றி வேறு
யாரும் அறிய மாட்டார்கள்.

*  அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளில் பொடி போக்குச் செய்வதை
உனக்கு எச்சரிக்கிறேன்.
மனிதனுக்கு அல்லாஹ் வங்கியிருக்கும் அருட்கொடைகள், இவைகளை
மனிதன் பரிமாறிவிட்டு அவனுக்கு நன்றி செலுத்தாமல் இருக்கின்றான்
மனிதன். அவனுக்கு கடமையாக்கப்பட்டதை புரக்கணித்து வாழ்கின்ரான் 
மனிதன்.  அல்லாஹ் மனிதனுக்கு செல்வத்தைக் கொடுத்தால்  அதை
ஹராமான முறையில் செலவு செய்கின்றான் மனிதன். 
னவே இவைகளை விட்டும் மனித நீ தவிர்ந்து கொள் உனக்கு சுவனம் 
நிச்சயிக்கப்பட்டால் அது அல்லாஹ்வின் நாட்டம் உலக வாழ்க்கையில்
நீ  திருந்தி வாழ்
நீ  திருத்தி வாழ்
நீ திருந்த வாழ்
அல்லாஹ் உனக்குப் போதுமானவன் .

_______________________________________________________________________________
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்,
SRI LANKA
**********************************************************************************
 
           .      

தொழுகையின் அவசியம்.


தொழுகையின் அவசியம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வபரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
இறைவனுடைய வாழ் வெடுத்து நெடு நிலத்தைக் காற்பதற்கு
மறைவிடத்தை நிறையழித்த இறைவனுக்கே எல்லாப் புகழும்
அல்ஹம்துலில்லாஹ்.
சாந்தியும்,சமாதானமும், சத்தியத் தூதர் சன்மார்க்கப் போதகர்
உலகத்தின் அருட் கொடை நபிஸல்அவர்கள் மீதும்,அவர்களின்
குடும்த்தினர்,தோழர்கள் மீதும், மற்றும் உண்டான முஸ்லீம்கள்
மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன்.

இஸ்லாத்தின் ஜம்பெரும் கடமை தொழுகை. இத்தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல் இதன் மூலம் தான் ஒரு மனிதன்
நிம்தியையும் ,சந்தோஷத்தையும் அடைய முடியும்.
இதை அல்குர்ஆன் அல் ஹதீஸ் வழியை இக் கட்டுரையை
சரிசிக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

1- தொழுகை மானக்கேடான வற்றைத் தடுக்கும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது..
"(நபியே!) இவ்வேதத்தில் உமக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதை
நீர் ஓதிக் காட்டுவீராக!. மேலும் தொழுகையை நிலை நாட்டுவீராக!
நிச்சயமாக தொழுகை மானக் கேடானதையும்,வெறுக்கத்தக்கதையும்
விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைவு கூறுவது மிக பெரிதாகும்.
நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான்."     (29:45)

 இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் தொழுகை மானக்கேடான,
வெறுக்கத்தக்க செயல்களை விட்டும் நிச்சயமாகத் தடுக்கும். இத்
தொழுகை பருவ வயதை அடைந்தது முதல் மௌத்து வரைக்கும்
முஸ்லிமான ஒவ்வொரு ஆண்கள்,பெண்கள் மீதும் கடமையாகும்.
தொழுகை இல்லாதவன் முஸ்லிமாக இருக்க முடியாது .காபிருக்கும்
முஸ்லிமுக்கும் உள்ள வேறுபாடு தொழுகைதான்.

 உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஆம்! முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னத ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும். 
திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள்.
 நபி (ஸல்) அவர்களின் கட்டளை 'என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' என கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் – மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்.

2- தொழுகையைப் பேணி நடத்தல்.

உரிய நேரத்தில் இத்தொழுகையை நிறை வேற்றுவதும், தூய்மை
பேணப்படுவதும்,தொழுகையை முறையாக ருகூஃ, சுஜூத்களை போணுவதும் ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது..
"தொழுகையை நிலை நாட்டி, ஸக்காத்தையும் கொடுத்து,ருகூஃ
செய்வோருடன் நீங்களும் ருகூஃ செய்யுங்கள்."   (2:43)

"தொழுகையை நிலைநாட்டி,ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.
நீங்கள் உங்களுக்காக முற்படுத்தும் நன்மை எதுவாயினும் அதனை
அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ்
நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்."  (2:110)

உங்களில் எவருடைய தொழுகையும் சரியான (முறையில் தொழுகின்ற ) தொளுகையாகாது . அவர் தமது முதுகை ரூஹூகளிலும்,சுஜுதுகளிலும் முறையாக வைக்காதவரை .
சஜ்தாக்களை முறையாக செய்யுங்கள் உங்களில் எவரும் தம் முழங்கைகளை (பூமியில்) ஊன்ற வேண்டாம். நாய் ( முன்காலை ) விரித்து உட்காருவது போல (சஜ்தவில் ) கைகளை தலைக்கு முன்பாக வைகாதிர்கள்.
காக்கை கொத்துவது போன்று கொத்தி சஜ்தா செய்வதையும் கீரிகிளித்து தின்னும் விலங்குகளை போல முழங்கையை ( சஜ்தாவில் ) ஊன்றுவதையும். ஒருவர் பள்ளியில் தனக்காக ஒரு இடத்தை தொழும் இடமாக ஆக்கி கொள்வதையும் திரு நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள் .
நிச்சயமாக மனிதன் தொழுகையை சுருக்கினாலும் அதன் உறுப்புகளை முழுமையாக நன்று செய்யவும் பெரிய அத்தியாயங்களை ஓதுவதை குறைத்து சிறியதொரு அத்தியாயங்களை ஓதி மற்றவர்களை முழுமையாக (பேணுங்கள்) செய்யுங்கள். 
நூல் : புஹாரி ,முஸ்லிம்

3- தொழுகையை வீணாக்கியோரின் நிலை.

 தொழுகையை வீணக்கியோர் நிலை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில்
கூறும்போது..
"குற்றவாளிகளிடம்  உங்களை ("ஸகர்" எனும்) நரகில் நுழைவித்தது எது?  எனக் கேட்பார்கள்."
"அதற்கவர்கள் நாம் தொழுகையாளிகளில் இருக்க வில்லை", "மேலும்
"ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்க வில்லை, எனக்
கூறுவார்கள்."
"இன்னும் நாம் (வீணானவற்றில்) மூழ்கியிருந்தோருடன் மூழ்கி
இருந்தோம்".    (74: 41, 42, 43, 44,45)

தொழுகையைத் தொழாமல் வீணான காரியங்களில் ஈடு பட்டோரிடம்
சுவர்க வாசிகள் கேட்பார்கள் உங்களை ஸபர் எனும் நரகில் நுழைய
வைத்தது எது என்று கேட்பார்கள் அதற்கு இவர்கள் சொல்வார்கள்
நாங்கள் தொழவில்லை ,ஏழைகளைக் கவனிக்க வில்லை இதன் 
காரணமாக நாங்கள் நரகில் நுழைந்தோம் என்று  கூறுவர்கள் என்றால்
எவ்வளவு பெரிய வேக்கமான நிலை என்பதை மனிதர்கள் சிந்திக்க
வேண்டும்.
உலகில் மனிதன் பணம் பதவி, சொத்து சுகம், என்று அநாச்சாரங்களில்
மூழ்கி உலகத்துக்கு மனிதன் எந்த நோக்கத்துக்காக படைக்கப்பட்டான்
என்பதை மறந்து அவனுக்கு கடமைகள் இருப்பதை வெறுத்து  இஸ்லாம்
இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லியும் கூட  நான் எப்படியும்
வாழ்வேன் என்று வாழ்ந்தவர்களின்  நிலைதான் ஸகர் எனும் நரகில்
நுழையக்கூடியவர்கள். அல்லாஹ் இந்த நரகை விட்டும் நம்மைப் 
பாதுகாப்பானாக.

4- கஸ்ருத் தொழுகை.

நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுவதைக் கஸ்ரு என்று கூறுகிறோம். நான்கு ரக்அத் தொழுகைகளான லுஹ்ரு, அஸ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுவதற்குப் பயணிகள் சலுகை வழங்கப்பட்டுள்ளனர்.

ஜம்உ,கஸ்ரு (இணைத்து ,  சுருக்கித் தொழுதல்)

பயணத்தில் இருப்போருக்கான ஜம்உ+கஸ்ருச் சலுகையின் கீழ் ஃபஜ்ருத் தொழுகை வராது. பயணிகளுக்கான லுஹ்ருடைய தொழுகை நேரம் தொடங்கியதிலிருந்து சூரியன் மறைவதற்கு முன்வரை லுஹ்ருக் கஸ்ரான 2 ரக்அத்களையும் அஸ்ருக் கஸ்ரான 2 ரக்அத்களையும் இணைத்து வசதிப்பட்ட ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுது கொள்ளலாம். மக்ரிபுடைய 3 ரக்அத்களுக்குக் கஸ்ரு இல்லை. எனவே, மக்ரிபுடைய 3 ரக்அத்களை இஷாவின் கஸ்ரான இரண்டு ரக்அத்களோடு இணைத்து இரவின் வசதிப்பட்ட ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுது கொள்ளலாம்.

பயணத்தில் ஜம்உச் செய்து தொழுகின்ற முறை

இரு தொழுகைகளை இணைத்து, சுருக்கித் தொழுகின்ற பயணி/கள் உரிய வகையில் நிய்யத் செய்து கொண்டு, பாங்கும் இகாமத்தும் கூறி, முதல் தொழுகையை நிறைவு செய்து ஸலாம் கொடுத்தவுடன் இன்னோர் இகாமத் கூறி அடுத்த தொழுகையைத் தொழுது நிறைவு செய்யவேண்டும். இரு தொழுகைக்கும் இடையில், வழக்கமாக மொழியக்கூடிய தஸ்பீஹுகளோ வேண்டுகின்ற பிரார்த்தனைகளோ இல்லை; கடமையான தொழுகைகளுக்கு வழக்கமாகத் தொழும் முன்-பின் சுன்னத் தொழுகைகள் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) அரஃபாவுக்குப் புறப்பட்டார்கள். (அங்கு) நமிரா அருகில் அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். அங்கு இறங்கி, சூரியன் நடுவானிலிருந்து மேற்கு நோக்கிச் சாயும்வரை தங்கினார்கள். (பின்னர்) கஸ்வா எனும் (தம்) ஒட்டகத்தை ஆயத்த நிலையில் வைக்குமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி, அவர்களுக்கு வாகனம் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்டு, 'பத்னுல்வாதி' எனும் பள்ளத்தாக்கு வந்தபோது (அங்கு இறங்கி) மக்களுக்கு உரையாற்றினார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் (லுஹ்ருத் தொழுகை நேரத்தில்) தொழுகை அழைப்பு விடுத்து, இகாமத் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரைத் தொழவைத்தார்கள். அதன் பின்னர் பிலால் (ரலி) இகாமத் சொல்ல நபி (ஸல்) அவர்கள் அஸரைத் தொழவைத்தார்கள் அவ்விரண்டு தொழுகைக்கிடையே வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை. அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (முஸ்லிம் அறிவிப்பில் இடம்பெற்ற நீண்ட ஹதீஸின் சுருக்கம். நூல்கள்: முஸ்லிம் 2334, நஸயீ 649). 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவை அடைவதற்காகப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரு பாங்கும் இரு இகாமத்துகளும் கூறி மக்ரிப், இஷாவையும் (சேர்த்துத்) தொழவைத்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை. அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (ஹதீஸின் ஒருபகுதி. நூல்கள்: முஸ்லிம் 2334, நஸயீ 650).

"நீங்கள் பூமியில் பயணிக்கும் போது நிராகரித்தோர்  உங்களைத்
தாக்குவார்கள் என அஞ்சினால் தொழுகையை நீங்கள் சுருக்கிக்
கொள்வதில் உங்கள் மீது குற்றம் இல்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள்
உங்களுக்குப் பகிரங்க விரோதிகளாகவே இருக்கின்றனர்." (4:101)

5- இரவுத் தொழுகை.

இந்த‌ இரவுத்தொழுகையான‌து, நமக்கு விதிக்கப்பட்ட கடமையான தொழுகைகளுக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும் விளங்குகிறது.

ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம்

ஒரு முறை நபி(ஸல்)அவர்கள் நடுநிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்துவிடவே (மறுநாள்) அவர்களைவிட அதிகமானோர் கூடிவிட்டார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி (மக்களும்) தொழுதார்கள். காலையில்(முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது.
நான்காம் நாள் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று நபி(ஸல்)அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். (இரவுத்தொழுகைக்கு வரவில்லை.) சுப்ஹு தொழுகை தொழவைத்து முடித்தவுடன் (எப்போதும் சொற்பொழிவுக்குமுன் ஓதக்கூடிய) "தஷஹ்ஹுது, அம்மா பஃது" ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறையவில்லை, எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அவற்றை நீங்கள் தொழ இயலாது போய்விடுவீர்களோ என்று பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்துவிட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது. 
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி

"இரவில்  சிறிது நேரம் தவிர (தொழுகைக்காக) எழிந்து நிற்பீராக!"  (73:2)
"அதில் அரைப் பகுதி அல்லது அதை விட சிறிதளவு குறைத்துக்
கொள்வீராக!"   (73:3)

6- போர்களத்தில் தொழுகை.

"(உரிய முறையில் தொழ முடியாது என) நீங்கள் அஞ்சினால் 
நடந்தவர்களாகவோ , அல்லது வாகனித்தவர்களாகவோ
(தொழுது கொள்ளுங்கள்.)  நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகி
விட்டால்  நீங்கள் அறியாமல் இருந்தவற்றை அல்லாஹ்
உங்களுக்குக் கற்றுத்தந்ததைப் போன்று அவனை(த் 
தொழுது) நினைவு கூறுங்கள்."  (2:239)  (4:102)

7- ஜூம்ஆ தொழுகை.

இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு,ஆடு, கோழி,முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதை தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார்.ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில் ! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.

'ஓருவர் ஜூம்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடையஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார் கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்:அபூஹீரைரா(ரலி) நூல்: புகாரி 881

"நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் 
தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால் அல்லாஹ்வை
நினைவு கூறுவன்பால் நீங்கள் விரைந்து  செல்லுங்கள்.
இன்னும் வியாபாரத்தையும் விட்டு விடுங்கள். நீங்கள் 
அறிந்தவர்களாக இருந்தால்  இதுவே உங்களுக்குச் 
சிறந்ததாகும்."  (62:9)

8- வுளு.

அல்லாஹ் கூறுகிறான் : விசுவாசங்கொண்டோரே!நீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (மஸ்ஹுசெய்து)க் கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்)

யார் இவ்வாறு (நபியவர்கள் செய்தது போல்) ஒளு செய்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 

வுளு செய்வதின் சிறப்புகள்

ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் ஒளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தன்னுடைய இரு கால்களையும் கழுவினால் இரு கால்களினால் செய்த பாவங்கள் தண்ணீரோடு அல்லது கடைசித்துளியோடு மன்னிக்கப்பட்டு தூய்மையான மனிதராகி விடுகின்றார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம்

யார் நல்ல முறையில் ஒளு செய்கின்றாரோ அவருடைய நகத்துக்குக்கீழிலிருந்து கூட அவருடைய உடம்பால் செய்த பாவங்கள் வெளியாகிவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம்

ஒளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம்,கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட ) அபூஹுரைரா(ரலி)அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக்கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள். புகாரி , முஸ்லிம்

வுளு செய்யும் முறை

1- நிய்யத்து வைப்பது. அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதல்லாம் எண்ணங்களை வைத்துத்தான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
(நிய்யத்து வைப்பதென்றால் மனதால் ஒளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)

2- ஒளு செய்யு ஆரம்பிப்பதற்குமுன் பிஸ்மி சொல்வது
 யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு ஒளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு மாஜா, திர்;மிதி

3- வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது.
நீங்கள் ஆடை அணிந்தாலும், ஒளு செய்தாலும் வலது புறத்திலிருந்தே ஆரம்பியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், அபூதாவூத், திர்;மிதி

4- இரண்டு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது.
உத்மான் (ரலி) அவர்கள் ஒளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தனது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள்..... என் ஒளுவைப்போலதான் நபி (ஸல்) அவர்கள் ஒளு செய்ய நான் பார்த்தேன் எனவும் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்

5- மிஸ்வாக் செய்து கொள்வது.
என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு ஒளுவின் போதும் மிஸ்வாக் செய்யும்படி நான் கட்டளையிட்டிருப்பேன் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத்,திர்மிதி,அபூதாவூத்

6- வாய்க்கும், மூக்கிற்கும் தண்ணீர் செலுத்துவது.
நபி (ஸல்) அவர்களின் ஒளுவைப்போல் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி)அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, அப்போது ஒளு செய்வதற்காக தண்ணீர் பாத்திரத்தை அழைத்து (ஒளு செய்ய ஆரம்பித்தார்கள்) பின் ஒருமுறை அள்ளி தண்ணீரால் வாயையும் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள், இப்படி மூன்று முறைசெய்தார்கள். புகாரி , முஸ்லிம்

நீ ஒளு செய்தால் வாயை கொப்பளித்துக் கொள் என்பதாக லகீத் இப்ன் ஸுப்ரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத் , பைஹகி
வலது கையினால் மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தி இடது கையினால் சிந்தி விடுவதே நபி வழியாகும்.

அலி (ரலி) அவர்கள் ஒளு செய்வதற்குரிய தண்ணீரை அழைத்து (ஒளு செய்தார்கள்) பின்பு மூக்கிற்கும் தண்ணீh செலுத்தி இடது கையினால் சிந்தி விட்டு இதுதான் நபி(ஸல்) அவர்கள் செய்த ஒளு என்றார்கள். அஹ்மத், நஸாயி

அலி(ரலி) அவர்கள் ஒளு செய்யும் போது நாங்கள் உட்கார்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தோம், வலது கையினால் வாய்க்கும் மூக்கிற்கும்; தண்ணீர் செலுத்தினார்கள், பின்பு இடது கையினால் மூக்கை சிந்திவிட்டார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள், யார் நபி (ஸல்) அவர்கள் செய்த ஒளுவை பார்க்க விரும்புகின்றார்களோ அது இது போன்றுதான் என்று கூறியதாக அப்து கைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். தாரமி

7-முகத்தை கழுவுதல்.
உத்மான்(ரலி) அவர்கள் ஒளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் ஒளு இருந்ததாக கூறினார்கள், புகாரி, முஸ்லிம்

8- தாடியை கோதி கழுவுதல்.
நபி (ஸல்) அவர்கள் தன் தாடியை கோதி கழுவுவார்கள் என்பதாக உத்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். புகாரி, முஸ்லிம்.

நபி (ஸல்)அவர்கள் ஒளு செய்தால் கையால் தண்ணீரை அள்ளி எடுத்து தன் தாடியை கோதி கழுகுவார்கள், என் இறைவன் எனக்கு இப்படித்தான் ஏவினான் என்பதாகவும் கூறினார்கள்.அபூதாவூத், ஹாகிம்,

9- இரு கைகளையும் முழங்கைவரை கழுகுவுதல்.
உத்மான்(ரலி) அவர்கள் ஒளு செய்வதற்காக தண்ணீரை கொண்டு வரச்செய்து தன் இரு கைகளையும் மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் ஒளு இருந்ததாக கூறினார்கள், புகாரி, முஸ்லிம்

10- விரல்களை கோதி கழுகுவுதல்.
நீ ஒளு செய்தால் உன் இரு கால் கைகளின் விரல்களை குடைந்து கழுவிக்கொள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள். அஹ்மத், திர்மிதி,இப்னு மாஜா

நபி(ஸல்) அவர்கள் ஒளு செய்தால் தன் இரு கால்களின் விரல்களை தன் (கையின்)விரல்களைக் கொண்டு குடைந்து கழுகுவார்கள். இப்னு மாஜா, அபூதாவூத்

11- மூன்று தடவை உறுப்புக்களை கழுகுவுதல்(தலையையும், காதையும் ஒரு தடவைதான் மஸ்ஹு செய்ய வேண்டும்)

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒளுவைப்பற்றி கேட்டார் அதற்கு நபியவர்கள் மூன்று முறை (கழுவ வேன்டும்)என்றார்கள், அதை விட அதிகமாக யார் செய்கின்றாரோ அவர் வரம்புமீறியவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், முஸ்லிம்

நபியவர்கள் ஒரு தடைவ மேலும் இரண்டு தடவையும்; வுளு செய்திருக்கின்றார்கள், ஆனால் மூன்று தடவையே பெரும்பாலும் செய்திருக்கின்றார்கள்.

12- ஒளு செய்யும் உறுப்புக்களை நன்றாக தேய்த்துக் கழுவுதல்.
உறுப்புக்களை தேய்த்து வுளு செய்து விட்டு இப்படித்தான் தேய்த்து ஒளு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், இப்னு ஹிப்பான்

13- தலையையும், காதையும் மஸ்ஹு செய்வது(தடவுவது)
நபி (ஸல்) அவர்கள் தன் இரு கையினாலும் தன் தலையை மஸ்ஹு செய்தார்கள், (அதாவது )தலையின் ஆரம்ப பகுதியிலிருந்து ஆரம்பித்து தன் பிடதி வரைக்கும் இரு கையையும் கொன்டு சென்று மீண்டும் ஆரம்பி;த்த இடத்துக்கே அவ்விரு கையையும் மீட்டினார்கள்.புகாரி,முஸ்லிம்

தலையை மஸ்ஹும் செய்யும் விஷயத்தில் பலர்கள் தவறிளைக்கின்றார்கள், அதாவது தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்துவிடுவது, இது நபி வழியல்ல, நபியவர்கள் அப்படி செய்யவும் இல்லை, சில தடவை நபியவர்கள் தலைப்பா அணிந்திருக்கும் போது முன்நெற்றி முடியில் மஸ்ஹு செய்துவிட்டு தலைப்பாவிலும் மஸ்ஹு செய்தார்கள், தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்வதற்கு இது ஆதாரமாக முடியாது, காரணம் நபியவர்கள் தலையில் தலைப்பா அணிந்திருந்த காரணத்தினால் தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்து விட்டு பின்பு தலைப்பாவிற்கு மேலால் மஸ்ஹு செய்தார்கள், தலையில் தலைப்பா இல்லாமல் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்வது நபிவழியல்ல. ஆனால் தலைப்பா அணியாத சாதாரண நிலையில் நபி (ஸல்) அவர்கள் தலை முடி அனைத்தையும் மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.

14- இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்வது, காதை மஸ்ஹு செய்வதும் ஒரு தடவைதான். (ஆழ்காட்டி விரலினால் காதின் உழ் பகுதியையும், பெருவிரலினால் வெளிப்பகுதியையும் தடவுவது)

நபி (ஸல்) அவர்கள் தன் தலையையும், இரு காதின் உள் பகுதியையும், வெளிப்பகுதியையும் மஸ்ஹு செய்தார்கள்.

மற்றொரு அறிவிப்பில் : தலையையும், இரு காதையும் ஒரு தடவை மஸ்ஹு செய்தார்கள்.அபூதாவூத்

15- இரண்டு கால்களையும் கரண்டைக்கால் வரை கழுவுதல்.

ஒரு பிரயாணத்திலே நபி (ஸல்) அவர்கள் எங்களை பிந்தி விட்டடார்கள், நாங்கள் அஸர் தொழுகையை பிற்ப்படுத்திய நிலையில் எங்களை நபியவர்கள் வந்தடைந்தார்கள், (பின்பு தொழுகைக்காக) நாங்கள் ஒளு செய்து எங்களின் கால்களை தண்ணீரால் தடவினோம், அப்போது கணுக்கால்களுக்கு நரக வேதனைதான் என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபியவர்கள் கூறினார்கள். புகாரி , முஸ்லிம்

கால்களை கழுவும் போது கரண்டைக்காலை தேய்த்துக்கொள்ள வேண்டும், அதே போன்று கால் விரல்களையும் கை விரல்களால் கோதி கழுவ வேண்டும்.

காலுறைக்கு மஸஹ் செய்தல்

ஒருவர் ஒளுச்செய்துவிட்டு காலுறை அணிந்து ஒளு முறிந்துவிட்டால் மீண்டும் ஒளுச்செய்யும் பொழுது காலுறையை கலட்டவேண்டிய அவசியமில்லை மாறாக காலறையின் மேல்பகுதியின் மீது தடவினால் போதுமானதாகும்.

நான் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதைவிட்டுவிடும். கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்தார்கள் என முகீரா(ரலி) அறிவித்தார்.புகாரி 

நாங்கள் பிரயாணத்தில் இருந்தபொழுது கடமையான குளிப்பைத்தவிர மலஜலம், தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல், இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.திர்மிதி,இப்னுமாஜா

_________________________________________________________________________________
 சிந்திக்க சில வரிகள்.
  
சுவர்கத்தின் திரவு கோல் எது என்று கேட்டால்?
உடனே நாம் எல்லோரும் சொல்வோம் தொழுகை என்று...
 எத்தனை பேர் அதை முறையாக கடைப்பிடிக்கிறோம்.

தொழுகையை நேரம் குறிப்பிட்ட கடமையாக 
நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். 

ஒரு பயணம் மேற்க்கொண்டால் கூட நாம் முதலில்
யோசிப்பது மதிய உணவு எங்கே சாப்பிடலாம் 
இரவு உணவு எங்கே சாப்பிடலாம் எங்கு சுவையாக இருக்கும் 
எங்கே நியாயவிலையில் கிடைக்கும் எங்கே சுத்தமாக இருக்கும் 
என்று தானே தவிர லுஹரையும் அசரையும் எங்கு தொழலாம்
மஃக்ரிபும் இஷாவையும் எங்கு தொழலாம் என்று நினைப்பவர்கள் 
எத்தனை பேர்?.
 இது அறியாமையில் செய்யும் தவறு அன்று அறிந்தே செய்யும் தவறு.
 எவனொருவனிடத்தில் தொழுகையில்லையோ அவனிடமிருந்து வேறு எந்த ஒரு அமல்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நபி மொழி மாதக்கணக்கில் நோன்பு வைத்தலும் கோடி கோடியாக தர்மம் செய்தலும்இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுலும் யாதொருப்பயனும் இல்லை அவனிடத்தில் தொழுகையில்லை என்றால்.வீண் அரட்டைக்காகவும் கேளிக்கைகளுக்காகவும் தொழுகயை தள்ளி வைப்பவர்கள் தான் நம்மில் பலர்.

இறைவன் எந்த அளவுக்கு வலியுறுத்தி இருக்கிறானோ அதைவிட சுலபமாகவும் ஆக்கியுள்ளான் .பயணத்தில் இருக்கிறாயா லுஹரையும் அசரையும் சேர்த்து தொழுதுகொள் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுதுகொள்.அப்பொழுது கூட மக்ரிபை தவிர மற்றதை பாதியாக குறைத்துக்கொள்{நான்கு ரக்காத் தொழுகையை எல்லாம் இரண்டாக }
நின்டு தோழமுடியவில்லைய உட்கார்ந்த்து தொழுதுகொள் அதுவும் முடியவில்லையா படுக்கையில் தொழு .மறதியில் உறங்கிவிட்டாய விழித்தவுடன் தொழு.
ஒழு செய்ய தண்ணீர் கிடைக்கவில்லையா அல்லது முடியவில்லையா தயமம் செய்துகொள்.படைத்தவன் தொழுகையை எந்தளவு சுலபமாக்கியுள்ளன் என்பதை நாம் சிந்திக்கவேண்டமா.சுவர்கத்தின் திறவுகோல் எது என்று கேட்டால் நாம் எல்லோரும் சொல்வோம் தொழுகை என்று அந்த உயர்ந்த அந்தஸ்த்தான சுவர்க்கம் கிடைத்த நன்மக்களாக  நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக 
ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமின்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***********~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~