நஷ்டவாளர்கள்..
குர்ஆன் கூறும் வசனம்..
இவர்கள் அல்லாஹ்வின் உடன் படிக்கையை உறுதிப்படுத்திய
பின்னரும் அதை முறித்து, இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ்
கட்டளை இட்ட (இரத்தபந்தத்) தை துண்டித்து, பூமியில் குழப்பம்
விளைவிக்கின்றனர். இவர்களே நஷ்டவாளர்கள்.
(அல்குர்ஆன். 2:27)
இதன் பின்னரும் நீங்கள் புறக்கணித்தீர்கள். அல்லாஹ்வின் அருளும்,
அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் நீங்கள்
நஷ்டவாளர்களாக ஆகியிருப்பீர்கள்.
(அல்குர்ஆன். 2:64)
எவர்களுக்கு நாம் வேதத்தை வழங்கி அவர்கள் அதை முறைப்படி ஓதி
வருகின்றனரோ, அவர்கள் தாம் அதை நம்பிக்கை கொள்கின்றார்கள்.
யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாம் நஷ்டவாளர்கள்.
(அல்குர்ஆன். 2:121)
யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகிறானோ அது
அவனிடமிருந்து அங்கீகரிக்கப்பட மாட்டாது. அவன் மறுமையில்
நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்.
(அல்குர்ஆன். 3:85)
நம்பிக்கை கொண்டோரே நிராகரித்தோருக்கு நீங்கள் கட்டுப்பட்டால்
உங்களை நீங்கள் வந்த வழியை (உங்கள் மார்க்கத்தை விட்டும்)
திருப்பி விடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டவாளர்களாக
மாறிவிடுவீர்கள்.
(அல்குர்ஆன். 3:149)
நிச்சயமாக நான் (ஷைத்தான்) அவர்களை வழிகெடுப்பேன் .போலியான
எண்ணங்களை அவர்களுக்கு உண்டுபண்ணுவேன். இன்னும் நான்
அவர்களுக்கு ஏவுவேன். அப்போது அவர்கள் (தெய்வங்களுக்காக
விடப்பட்ட) கால்நடைகளின் காதுகளை நறுக்கி விடுவர். மேலும்
அவர்களுக்கு நான் ஏவுவேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வின்
படை(ப்பின் அமை)ப்பை நிச்சயமாக மாற்றி விடுவர். (என்றும்
கூறினான்.) யார் அல்லாஹ்வை அன்றி ஷைத்தானைப்
பாதுகாவளனாக எடுத்துக்கொள்கின்றானோ அவன்
நிச்சயமாக தெளிவாகவே நஷ்டத்தை அடைந்து விட்டான்.
(அல்குர்ஆன். 4:119)
இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன
வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு
உள்ளது.மேலும் உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்
பட்டுள்ளது. நம்பிக்கையாளர்களிலுள்ள கற்பொழுக்கமுள்ள
பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்
பட்டோரில் உள்ள கற்பொழுக்கமுள்ள பெண்களையும் (நீங்கள்)
கற்பொழுக்கம் பேணி விபச்சாரத்தில் ஈடுபடாமலும்,
வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ளாமலும் அவர்களுக்
குரிய மணக்கொடைகளை அவர்களுக்குக் கொடுத்து
(மணம் முடித்துக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்
பட்டுள்ளது.) எவர் நம்பிக்கை கொள்வதற்குப்பதிலாக
நிராகரிக்கிறாரோ அவரது செயல் நிச்சயமாக
அழிந்து விடும். இன்னும் அவர் மறுமையில்
நஷ்டவாளர்களில் உள்ளவராவார்.
(அல்குர்ஆன். 5:5)
எனது சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான
இப்பூமியில் நுழையுங்கள். நீங்கள் புறமுதுகிட்டு ஓடாதீர்கள்.
அவ்வாறெனில், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்.
(என்று மூஸா கூறினார்.)
(அல்குர்ஆன். 5:21)
அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை
செய்தவர்களும், அல்லாஹ் தமக்கு (உண்ண அனுமதி) வழங்கியதை
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி, தடுத்துக் கொண்டோரும் நிச்சயமாக
நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள்
அவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
(அல்குர்ஆன். 6:140)
யாருடைய (நன்மையின்) நிறைகள் குறைந்து விடுகிறதோ, அவர்கள் தாம்
நமது வசனங்களுடன் அநியாயமாக நடந்து கொண்ட காரணத்தினால்
தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டோராவர்.
(அல்குர்ஆன். 7:9)
அவ்விருவரும் (ஆதமும், தன் மனைவியும்.) எங்கள் இரட்சகனே
நாங்கள் எங்களுக்கே அநியாயம் செய்து கொண்டோம். நீ எங்களை
மன்னித்து எமக்கு அருள் புரியவில்லையாயின் நிச்ஜயமாக நாம்
நஷ்டவாளர்களில் உள்ளவராவோம், என்று அவ்விருவரும்
(பிராத்தித்துக்) கூறினர்.
(அல்குர்ஆன். 7:23)
அல்லாஹ்வின் சூழ்ச்சியை அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா.?
நஷ்டவாளர்களான கூட்டத்தைத் தவிர வேறு எவரும்
அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன். 7:99)
யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றானோ, அவரே நேர்வழி
பெற்றவர். எவர்களை அவன் வழி கேட்டில் விட்டு விடுகின்றானோ
அவர்களே நஷ்டவாளர்கள்.
(அல்குர்ஆன். 7:178)
நிச்சயமாக நிராகரித்தோர் அல்லாஹ்வின் பாதையை விட்டும்
(பிறரைத்) தடுப்பதற்காகத் தமது செல்வங்களை செலவளிக்கின்றனர்.
மேலும் அவற்றைச் செலவளிப்பார்கள். பின்னர் அது அவர்களுக்கே
கைசேதமாக அமையும். பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.
இன்னும் நிராகரித்தோர் நரகத்தின் பக்கம் ஒன்று
திரட்டப்படுவார்கள்.
(அல்குர்ஆன். 8: 36)
அல்லாஹ் நல்லவரிலிருந்து கெட்டவனைப் பிரிப்பதற்காகவும்.
கெட்டவனை ஒருவனுடன் மற்றவனை ஆக்கி அவர்கள் அனைவரையும்
குவித்து நரகத்தில் போட்டு விடுவதற்காகவும் (ஒன்று திரட்டுவான்)
அவர்கள் தாம் நஷ்டவாளர்கள்.
(அல்குர்ஆன். 8:37)
அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தோரில் நீர் ஆகி விட
வேண்டாம். அவ்வாறாயின் நீர் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவீர்.
(அல்குர்ஆன். 10 :95)
நஷ்டவாளர்கள் பற்றி அல் குர்ஆன் வசனங்கள்
பேசுகின்றது.........
(11: 20, 22, 47)-- (16: 108, 109)--(17:82)-- (18:103, 104)
(22:11)--(23:103)--(27:4, 5)--(35:39)--(39:15, 63, 65)--(40:85)
(41:23, 25)--58:19,63,69)
மூன்று
பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்
மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம்
தரும் வேதனை தான் உண்டு என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். இதையே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறைகள் கூறினார்கள். நான்
(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர்.
அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அதற்கு தமது ஆடையை
(கணுக்காளுக்கு) கீழே இறக்கிக்கட்டியவர். (செய்த உபகாரத்தை)
சொல்லிக்காட்டுபவர். பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள்
நூல் : (முஸ்லிம் : 171)
குர்ஆனைப்
படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு
மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு
எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி
பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள்.
இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம்.
காலத்தின்
மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும்
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக்
கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும்
ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள்
நஷ்டத்திலில்லை).(103:1-3)
திருமறையில் உள்ள சூராக்களில்
சிறியவைகளில் ஒன்று மேலே தரப்பட்டுள்ளது. இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் 'இந்த
சூராவைத் தவிர வேறு ஒரு ஆதாரமும் அல்லாஹ்வினால் அவனது படைப்பினங்களுக்கு
இறக்கப்பட வில்லையாயினும் இதுவே போதுமானதாக இருக்கும்' என்று சொல்லும்
அளவிற்கு கருத்துச் செறிவு மிக்கது.
நம்மைப் படைத்து போஷித்து
வரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வாக்குகளே திருக்குர்ஆன் என்பதை நாம்
உளப்பூர்வமாக நம்புகிறோம்; வெளிப்படையாகச் சொல்லுகிறோம்; இத்தகைய
திருமறையில் அல்லாஹ் சத்தியம் செய்து கூற வேண்டியதன் காரணம் என்ன? உண்மையை
எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே அறிவான்.
அல்லாஹ் நம்மை
சிந்திக்கும்படி ஏவுகிறான். மறதியும் பலஹீனமும் நிறைந்த நம்மைத் தட்டி
எழுப்பி விழுப்புணர்ச்சி ஊட்டி செயல்படுவதற்காகவே அல்லாஹ் சத்தியம் செய்து
கூறுகிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. காலத்தின் மீது சத்தியம்
செய்கிறான். சிறிதோ பெரிதோ சாதாரணமோ அசாதாரணமோ நல்லதோ கெட்டதோ
மகிழ்ச்சிகரமோ துக்ககரமோ எத்தகையதாக இருந்தாலும் இந்த உலகில் நிகழ்கின்ற
எண்ணிறைந்த சம்பவங்கள் யாவுமே கால விரயமில்லாமல் நிகழ்வதில்லை. காரண
காரியங்களின் தரமும் பலனும் நோக்கி காலம் கழிவது மாறுபடுவதில்லை. ஒரே
கதியில் கடந்து கோண்டே இருக்கிறது. கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியும்
நம்மை மறுமையின் பக்கம் நெருக்கிக் கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை
நாம் உணரவேண்டும்.
______________________________********************________________________________
அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான,அனுராதபுரம், SRI LANKA.
**********************************************************************************
பேஸ்புக்கும் நாமும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ் ஒருவனுக்கே
எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.
சாந்தியும்,சமாதானமும் சத்தியத்தின் தூதர் சன் மார்க்கத்தின் போதகர்
நபிகளார் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் தோழர்கள் மீதும்
மற்றுமுன்டான முஸ்லிம்கள் மீதும் உண்டாகட்டுமாக. ஆமீன்
அல்லாஹ் இவ்வுலகில் பல் கோடி ஜீவராசிகளைப்படைத்து அதிலும்
சிறந்தவனாக மனிதனைப்படைத்திருக்கிறான். இவ்வுலகில் மனிதனுக்கு
அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை வளங்கி அவனை
அல்லாஹ் கண்ணிப்படுத்தியிருக்கிறான். மனிதன் அவைகளை
மறந்து தான் தோன்றிய பிரகாரம் தமது வாழ்க்கையை
அமைத்துக்கொண்டும், வெளித்தோற்றத்தில் தானும் ஒரு
மனிதன் என்ற போர்வையை போற்றியவனாக வாழ்கிறான்.
இந்த மனித சமூகம் சிந்திப்பதற்காக, செயல் படுவதற்காக
அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி அதிலே 114 அத்தியாயம்
அதில் 6666 வசனங்களையும் அமைத்து மனிதனின்
அத்துனை சவால்களுக்கும் அதிலே கேள்விகள்
அதிலே அதற்கான பதில்கள் எல்லாமே அமைத்தும்
இருக்கிறான் அல்லாஹ்.. அல்ஹம்துலில்லாஹ்.
உலகம் என்ற பெயர் இனிமையானது அதில் வாழ்கின்ற மனிதன்
இனிமையானவன் . காலம் என்பது அது யாராலும் மதிக்கப்பட வேண்டியது
நவீன யுகம் என்று பேனாவை எடுத்தாலும் அதன் பேனா மை
முடியுமாளவு எழுதுகின்றோம். பேசுவதாக இருந்தாலும் பக்கத்தில்
தண்ணீர் வைத்து அதை அருந்தி விட்டும் பேசத்துவங்குகின்றோம்.
ஆனால் கவலைக்குறிய விடையம் நம் வாழ்க்கையில்,செயல்
வடிவில் அந்த விடையங்களைக் கண்பது அரிது.
அல்ஹம்துலில்லாஹ் இன்று இஸ்லாத்தை விளங்கி அதனை தூய வடிவில்
அறிந்து கொள்ள பல சாதனங்கள், பல இணையத்தளங்கள் தம் முன்
உலா வருவதை நாம் காணுகின்றோம். நேரம் பொண்ணானது அதனை
நாம் மண்ணில் போட்டு மிதிக்கின்றோம் என்றால் இவைகளுக்கும்
நாளை மறுமையில் ஒவ்வொரு முஃமீனும் பதில் சொல்லியாக
வேண்டும். அதிலே ஒன்றுதான் நாம் எதையும் செய்யலாம்,
எப்படியும் நடந்து கொள்ளலாம், அதைக்கேட்க நீ யார்
என்று முன்னும், பின்னும் அறிந்து கொள்ளாமல் இது
எனக்கு மட்டும் தானே சொந்தம் என்று சர்வ சாதாரணமாக
நாம் அமைத்துக்கொண்டிருக்கும் பேஸ்புக் ....அல்லாஹ்
நம் அனைவர்களையும் பாதுகாக்க வேண்டும்.
இந்த பேஸ்புக் என்ற தளத்தில் நமக்கு என்று ஒரு கண்ணியம் இருக்க
வேண்டும் அதனைப் பயன் படுத்தும் மனிதனுக்கு ஒரு உண்ணத நோக்கம்
இருக்க வேண்டும். எண்ணங்களுக்கு கூலி கொடுப்பவன் அல்லாஹ்.
"செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: புகாரி
"நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை.
உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்" என நபி(ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: முஸ்லிம்
எனவே நாம் எண்ணுகின்றது தான் நமக்கு மறுமைக்கு பிரயோசனம்.
நம் செயல்கள் தான் நமக்கு வெற்றிக்கு அடித்தளம். இதை உணராமல்
நம் சகோதரர்கள் ஏனோ தானோ என்று முகநூல்களை அமைத்து
எதுவும் செய்யலாம் எப்படியும் வழி நடத்தலாம் என்று அவர்கள்
எண்ணுவதை அவர்கள் போடும் தகவல்களை வைத்து மதிப்பிடலாம்.
இதை நல் வழியில் ஒரே அடிப்படையில் வழி நடத்தும்
சகோதர, சகோதரிகளுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
இன்று நம் பேஸ்புக் அங்கத்தவர்கள் தாங்களின் தொலை பேசி இலக்கங்களை
தாங்கள் சொந்த போட்டோக்களை அவர்கள் வெளிய்ட்டு தாங்கள்
அமைதியாக இருக்கின்றார்கள். குறிப்பாக நம் பெண் சமுதாயம் பாத்திமாக்
-ல் என்ற பெயரில் வந்து இப்படியான விஷையங்களை செய்து
கொண்டிருக்கின்றார்கள். பெண்களுக்கு இவைகள் முறையற்ற
தன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதற்குப்பின்னால் வரும் பிரச்சனைகள்
ஷைத்தானின் வழி நடத்தல்களை இவர்கள் சற்றும் உணர்வதில்லை
ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் அப்படி வாழ்ந்தால் தான்
நாளை மறுமையில் வெற்றி பெற முடியும் என்ற சிந்தநையை
மறந்து அவர்களுக்கு கொடுத்த கண்ணியம்,ஒழுக்க மாண்புகளை
ஒரு சில வினாடிக்குள் குழி தோன்டிபிபுதைத்து.
"கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்கின்றார்களே" என்றால் இதற்கு காரணம் அவர்கள் இத்தளத்தை ஏதோ நேரம் போக
வேண்டும்.சிலரை உற்றுப் பார்க்க வேண்டும், சிலரோடு இப்படிப்பேசினால்
தான்அவர்களை இவர்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று
அரட்டையடிக்கும்நோக்கத்தோடு வருகின்ற நம் சகோதர, சகோதரிகளைப் பார்க்கின்றோம்.
கவனியுங்கள்உங்கள்
எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள்
வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக்
கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே
உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய
எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன!
எனவே பேஸ்புக் என்பது நமக்கு அல்லாஹ் அளித்திருக்கும் ஒரு மிகப்பெரிய
பொக்கிஷம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். அல்ஹம்துலில்லாஹ்
இந்த பேஸ்புக் மூலம் எவ்வளவு நல்ல விஷையங்களை மக்களுக்கு
சொள்ளலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம் நட்பு என்ற ஒன்றை
அல்லாஹ்வுக்காக இணைந்து அல்லாஹ்வுக்காக பிரியலாம், அல்குர்ஆன்.
அல்ஹதீஸ் அடிப்படைகளில் நாமும் வாழ்ந்து பிரரையும் வாழ வைக்கலாம்,
நமக்கு மத்தியில் இஸ்லாம் சொன்ன சகோதரத்துத்தை அமைத்துக்
கொள்ளலாம் , அறியாத விஷையங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் ,
சந்தோகங்கள் இருந்தால் அவைகளைப் பரிமாரி தெரிந்து கொள்ளலாம்,
இஸ்லாத்தின் சட்டங்களையும், அதன் முடிவுகளையும் விளங்கிக்
கொள்ளலாம். இப்படி எத்தனையோ விஷயங்களை பேஸ்புக் மூலம்
நாம் அறிய வேண்டிய விஷையங்கள் இருக்கும் போது......
நம் சகோதர,சகோதரிகள் காட்சி தருகின்ற வடிவங்களைப் பார்த்தால்
கவலையாகத்தான் இருக்கின்றது..இஸ்லாம் நமக்குச்சொல்கின்ற ஒரு
விடையம் யார் அன்னிய மதங்களுக்கு ஒப்பாகின்றாரோ அவர் நம்மைச்
சார்ந்தவர் அல்ல என்று நபியவர்கள் நமக்கு சொல்லியிருக்கும் போது
நடிகைகளின் போடோக்களை முகநூலில் போட்டு அவைகளுக்கு கருத்தும்
வண்ணம் வண்ணமான பேச்சுக்களை நடத்துகின்றார்கள் நமது
முகம்மத்களும், பாத்திமாக்களும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
நல்லதை சொல்ல வேண்டும், நல்லதைச் செய்ய வேண்டும் .நமக்கு
மரணம் என்ற ஒரு பாணம் இருக்கின்றது அதை அருந்த வேண்டும்.
ஒவ்வோர்
ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு
நாளில் தான், உங்க(ள் (செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக்
கொடுக்கப்படும்;. எனவே எவர்( (நரக)நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச்
சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக
வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப
(இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)
நாளை மறுமை என்ற ஒரு இடம் இருக்கின்றது அதை விளங்க வேண்டும்.
இவ்வுலகில் நமக்காக தந்திருக்கும் சட்டங்களை நமக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்.
அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு ஒரு கெடுதியை
அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது... அல்லாஹ்
யாருக்கு ஒரு கெடுதியை கொடுக்கிறானோ அல்லாஹ்வைத் தவிர வேறு
யாராலும் அவருக்கு நன்மையைக்கொடுக்க முடியாது.
நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பேஸ்புக் என்ற தளத்தில்
நமது இஸ்லாம் மதிக்கப்பட வேண்டும் தவறுகள் நிகழ்வது வழக்கம்
அல்லாஹ் மனிதனை தவறுக்கும்,மறதிக்கும் மத்தயில் படைத்திருக்கிறான்.
அதனால் எல்லா மனிதனும் தவறு செய்யக்கூடியவன். இக்கட்டுரையை
எழுதுகின்ற நானும் தான் தவறுகள் செய்திருக்கிறேன். பேஸ்புக் என்ற
தளத்துக்கு அறிந்தவர்களும் வருகின்றார்கள் அறியாதவர்களும்
வருகின்றார்கள். பேஸ்புக்கை முழுமையாக யாரும் அறிந்து வருவதில்லை
அத்தளத்தில் கால் எடுத்து வைத்து அவசரத்தின் காரணமாக சில தவறுகள்
நமக்கு மத்தியில் நிகழத்தான் செய்கின்றது அவைகளை முழுமையாக
அறியும் போது அத் தவறுகளை தாமதம் இன்றி திருத்திக்கொள்வது தான்
நமது கடமை எனவே நமது வாழ்க்கையை அல்லாஹவுக்கு அவனது
தூதருக்கும் பொருத்தமான முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்
நன்கறிந்தவன் அவைகளுக்கு தண்டனை கொடுப்பதும் அவன் கையில்.
ஒரு
மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே
அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு
(மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து
நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: திர்மிதீ 2319
அல்லாஹ்வை முழுமையாக அஞ்சிக்கொள்ள வேண்டும் .நாளை மறுமைவாழ்க்கையை அஞ்சிக்கொள்ள வேண்டும். நாம் செய்கின்ற
நன்மை நமக்குமட்டும் தான் நாளை மறுமையில் பயன் தரும்.
யாரும் நமக்கு உதவி செய்ய மாட்டார்கள் அல்லாஹ்வைத் தவிர.
மனிதர்களே!
உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்)
நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு
பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும்
நிறைவேற்றி வைக்க இயலாது நிச்சயமாக அல்லாவின் வாக்குறுதி உண்மையானதாகும்;
ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி
ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி
ஏமாற்றாதிருக்கட்டும்.(31:33)
நமது வாழ்க்கையில் எவ்வளது சொந்தங்கள், உறவுகள் இருக்கின்றது
அவர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் பாணங்களை அருந்தவைக்கலாம்
நாளை மறுமையில் நரக நெருப்பை விட்டும் நம்மைப்பாதுகாத்துக்
கொள்ளவேண்டும்.
“முஃமின்களே!
உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்;
அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ்
அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள்
ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.” (அல்குர்ஆன் 66:06)
எனவே நாம் வாழ்ந்து விட்டோம் அதிகமான காலம்
வாழப்போகிறோம் குறிகிய காலம் அது நிமிடமாகவும் இருக்கலாம்,
வினாடியாகவும் இருக்கலாம் நாற்கலாகவும் இருக்கலாம்.மாதங்கள்,
வருடங்களாகவும் இருக்களாம் அவைகள் அல்லாஹ்வின் நியதிப்பிரகாரம்
நடை பெறும். இந்த சந்தர்ப்பத்தில் நமக்குள் இஸ்லாம் என்ற கோட்பாட்டை
அடிப்படையாக வைத்து பேஸ்புக் என்ர தளத்தில் உண்மை முஃமின்களாக
வளம் வர வேண்டும் நல்ல பல கருத்துக்களுக்கு நாம் தளம் இறங்க
வேண்டும். நமக்கு மத்தியில் சகோதரத்துவம் உண்டாக வேண்டும்,
போட்டி,பொராமை,வஞ்சகம்,துரோகம்,விரோதம்,புறம் பேசுதல்,பொய்
பேசுதல் , நய்யாண்டி செய்தல் போன்ற கேடு கெட்ட செயல்களை விட்டும்
நம்மை நாம் பாது காத்துக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த பேஸ்புக் மூலம் நன்மையை
செய்வதற்கும் தீமையைத் தடுப்பதற்கும் நல்லருள் புரிவானாக
என சொன்னவனாக இக் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.....
............................................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..............................................................
தொகுப்பு...
அஹமட் யஹ்யா...
ஹொரோவபதான.
அனபராதபுரம்.
SRI LANKA.
https://www.facebook.com/ahamedyahya50
____________________________________*************_________________________________