Followers

Monday, October 29, 2012

அல்குர்ஆனின் உபதேசம்

  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..அன்பின் சகோதர சகோதரிகளே.... 
புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

அமானிதம் பற்றி அல்குர்ஆன்.

"நீங்கள் பயணத்தில் இருக்கும் போது  எழுதுபவரைப் பெற்றுக்
கொள்ளவில்லையானால்   (கடன் பத்திரத்துக்குப் பகரமாக) ஒரு
அடமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கலில் சிலர் சிலரை
 நம்பினால் ந்தநம்பப்பட்டவர் தனது அமானிதத்தை நிறைவேற்ற்.ட்டும்.
தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அவர் அஞ்சிக்கொள்ளட்டும்.
சாட்சியத்தை மறைக்காதீர்கள். யார் அதை ணறைக்கிறாரோ 
நிச்சயமாக அவரது உள்ளம்  குற்றம் புரிந்துள்ளது. அல்லாஹ் 
நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான்." (2:283)

"அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைத்து விடுமாறும்,
மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் நீதமாகத் தீர்ப்பு
அழிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளை
-யிட்டிருக்கிறான்.நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குச் செய்யும்
உபதேசம் மிகச் சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கு 
செவியுறுபவனும்,பார்ப்பவனுமாக இருக்கிறான்." (4:58)

"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும்,இத்தூதருக்கும்
மோசடி செய்யாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே உங்களிடமுள்ள
அமானிதங்களுக்கும் மோசடி செய்யாதீர்கள்." (8:27)

"மேலும் அவர்கள் தமது அமானிதங்களையும், தமது வாக்குறுதிகளையும்
பேணுவார்கள்." (23:8)

"நிச்சயமாக நாம் வானங்கள்,பூமி,மலைகள் ஆகியவற்றிடம் இந்த
அமானிதத்தை எடுத்துக்காட்டினோம். அதைச் சுமப்பதர்கு அவை மறுத்து,
அது பற்றிப் பயந்தன.மனிதனோ அதைச் சுமந்து கொண்டான். நிச்சயமாக
அவன் பெரும் அநியாயக்காரனாகவும், அறிவீனனாகவும் இருக்கின்றான்." (33:72)

இவைகள் அமானிதம் பற்றிய அல்குர்ஆனின் வசனங்கள்.
இவ்வசனங்களில்  உலக மாந்தர்கள் அனைவருக்கும்
முக்கியமானதொரு படிப்பினைகளும், செயல்படுத்தும்
தத்துவங்களும் பொதிந்து காணப்படுகின்றது.

அளவு, நிறுவை பற்றி அல்குர்ஆன்.

"அநாதையின் சொத்தை அவன் பருவமடையும் வரை நல்லவிதமாகவே
அன்றி நெருங்காதீர்கள். இன்னும் அளவு,நீறுவையை நீதியான முறையில் முழுமையாக நிறைவேற்றுங்கள்.எந்த ஆத்மாவையும்
அதன் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்தமாட்டோம்.  நெருங்கிய
உறவினர்களாக இருந்த போதிலும் , நீங்கள் பேசும்போது நீதியாகவே
நடந்துகொள்ளுங்கள். இன்னும் அல்லாஹ்வின் உடன்படிக்கையை
நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு இதைக்
கொண்டு அல்லாஹ் உங்களுக்கு ஏவுகின்றான்." (6:152)

"மத்யன் வாசிகளுக்கு அவர்களது சகோதரர் ஸூஜபை(த் தூதராக
அனுப்பினோம்).அவர் எனது சமூகத்தினரே! அல்லாஹ்வையே நீங்கள்
வணங்குங்கள். அவனையன்றி (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன்  உங்களுக்கு (வேறு யாரும்) இல்லை. உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான சான்று நிச்சயமாக உங்களிடம்
வந்து விட்டது. எனவே அளவையையும்,நிறுவையையும் முழுமையாக
நிறைவேற்றுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பொருட்களைக்
குறைத்து விடாதீர்கள். பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில்
குழப்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கையைளர்களாக
இருந்தால் இதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். " (7:85)

"நீங்கள் அளந்தால்  அளவையை முழுமையாக நிறைவேற்றுங்கள்.
சரியான அளவையைக்கொண்டு நிறுங்கள். இதுவே மிகச் சிறந்ததும்
அழகான முடிவுமாகும்." (17:35)

"இன்னும் அவனே வானத்தை உயர்த்தினான் மேலும் , நீங்கள்
நிறுவையில் வரம்பு மீறாதிருப்பதற்காக தராசையும் ஏற்படுத்தினான்."
                                                                                                                  (55:7,8)
"இன்னும் நீங்கள் நிறுவையை நீதியாக நிலைநாட்டுங்கள்.இன்னும்
நிறுவையில் குறைவு செய்துவிடாதீர்கள்."     (55:9)

"அளவை, நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்."
"அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக
வாங்குவார்கள்."
"எனினும் இவர்கள் அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்
போது குறைத்து விடுகின்றனர்."   (83: 1, 2, 3)

இவைகள் அளவு,நிறுவைகள் பற்றி பேசும் அல்குர்ஆன் வசங்கலாகும்.
  இவ்வசனங்கள் அனைத்திரும் மனிதனுக்கு இம்மை மறுமையின்
வாழ்க்கைத் திட்டத்தைப் படித்துத்தருகின்றது. எனவே அளவை, 
நிறுவையில் எந்த அளவுக்கு மனிதன் கஞ்சனாக இருக்கிறான் அவனுக்கு
மறுமையில் என்ன தண்டனை என்பதையும் உணர்த்துகின்றது.
இன்ஷா அல்லாஹ் நீதமான முறையில் அமானிதங்களைப் பாதுகாத்தும்,
நீதமான முறையில் அளவை , மற்றும் நிறுவையிலும்  நீதமாக இருப்பதற்கு
அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.
========================================================================

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
___________________________************************_______________________________