Followers

Wednesday, October 17, 2012

பொறுமை அல்குர்ஆன் வசனங்கள்.

  

பொறுமை 
அல்குர்ஆன் வசனங்கள்.
.........................................................................................................


மேலும் பொறுமையைக் கொண்டும்,தொழுகையைக்கொண்டும்
(அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்.நிச்சயமாக இது 
உள்ளச்சமுடையோர்களுக்கன்றி(ஏனையோருக்கு) 
பெரும் பாரமாகவேயிருக்கும்.
                                                                                                            (அல்குர்ஆன்.2:45)


நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும்,தொழுகையைக் 
கொண்டும் உதவி தேடுங்கள்.நிச்சயமாக அல்லாஹ்பொறுமையைளர்களுடன்இருக்கிறான்.
                                                                                                               (அல்குர்ஆன். 2:153)

நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும்,பசியாலும்,செல்வங்கள்,உயிர்கள்,
மற்றும் விளைச்சல்கள்,அகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் 
உங்களைசோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர்
நன்மாராயம் கூறுவீராக!.
                                                                                                               (அல்குர்ஆன். 2:155)

உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அதுஅவர்களை வருந்தச் 
செய்கிறது. உங்களுக்குஏதேனும் துன்பம் நேர்ந்தால் அது குறித்து அவர்கள்
மகிழ்ச்சியடைகின்றனர்.நீங்கள் பொறுமையாகஇருந்து (அல்லாஹ்வை) 
அஞ்சி நடந்தால் அவர்களின்சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கையும்
 விளைவிக்காது.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவை பற்றி
சூழ்ந்தறிபவனாவான்.
                                                                                                                 (அல்குர்ஆன். 3:120)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாகஇருங்கள். 
(எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைப்பிடியுங்கள்.  
இன்னும் உறுதியாகஇருங்கள். நீங்கள்வெற்றிபெறும்
பொருட்டுஅல்லாஹ்வைஅஞ்சிக்கொள்ளுங்கள்.
                                                                                                                    (அல்குர்ஆன்.3:200)

உங்களில் ஒரு பிரிவினர் நான் எதைக் கொண்டு
அனுப்பப்பட்டேனோ அதை நம்பிக்கை கொண்டு
மற்றொரு பிரிவினர்  நம்பிக்கை கொள்ளாவிட்டாலும்  எமக்கிடையே அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். 
அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகச் சிறந்தவனாவான்.(என்றும் கூறினார்.)
                                                                                                                       (அல்குர்ஆன். 7:87)

எங்கள் இரட்சகனின் அத்தாட்சிகள் எங்களிடம்
வந்த போது நாம் அவற்றை நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர , 
நீ எங்களைப் பழி வாங்க வில்லை(என்று பிர் அவ்னிடம் கூறினர்) 
எங்கள் இரட்சகனே!பொறுமையை எங்கள் மீதுசொரிந்து முஸ்லிம்களாகவே எம்மை நீ மரணிக்கச் செய்வாயாக !
(எனப் பிராத்தித்தனர்.)
                                                                                                                         (அல்குர்ஆன். 7:126)

மூஸா தன் சமூகத்தாரிடம், "நீங்கள் அல்லாஹ்விடம்  உதவி தேடுங்கள். இன்னும் பொறுமையாக இருங்கள். நிச்சயமாகபூமி அல்லாஹ்வுக்கே
சொந்தமானது. அவன் தனது அடியார்களில் தான்
நாடுவோருக்கு அதை உரித்தாக்குகிறான். இறுதி முடிவு 
பயபக்தியாளர்களுக்கே" என்று கூறினர்.
                                                                                                                       (அல்குர்ஆன். 7:128)

 பலவீனமானவர்களாகக் கருதப்பட்டுக்கொண்டிருந்த சமூகத்தாரை,
 நாம் அருள் செய்த பூமியின்கிழக்கு, மற்றும் அதன்  மேற்குப்பகுதிகளுக்கு  உரித்துடையோர்களாக்கினோம்.
இஸ்ராஈலின்சந்ததிகள் பொறுமையாக இருந்த காரணத்தால்
அவர்கள் மீது உமது இரட்சகனின் அழகியவாக்குறுதிநிறைவேறிவிட்டது.  
பிர்அவ்னும் அவனதுசமூகமும் உருவாக்கிக்கொண்டிருந்த வற்றையும், உயர்த்திக் கட்டிக்கொண்டிருந்த வற்றையும்தகர்த்தொழித்தோம்.
                                                                                                                        (அல்குர்ஆன். 7:137)

 மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.
 உங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளாதீர்கள். அவ்வாறாயின்
நீங்கள் துணிவிழந்து உங்கள் பலமும் இல்லாமல் போய் விடும்.
 பொறுமையாக இருங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமைளார்களுடன்
இருக்கிறான்.
                                                                                                                         (அல்குர்ஆன். 8:46) 

 நிச்சயமாக உங்களிடம் பலவீனம் இருப்பதைஅல்லாஹ் அறிந்து 
தற்பொழுது  உங்களுக்குஇலகுபடுத்தி விட்டான். எனவே உங்களில்
பொறுமையாளர்களாக நூறு பேர் இருந்தால்அவர்கள் இருநூறு 
பேரை வெற்றி கொள்ளலாம்.மேலும் , உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் 
அவர்களில் இரண்டாயிரம் பேரை வெற்றிகொள்ளலாம். அல்லாஹ் 
பொருமையாளர்களுடன்  இருக்கிறான்.
                                                                                                                         (அல்குர்ஆன். 8:66) 

உமக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைப்பின்பற்றுவீராக! 
இன்னும் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக!  அவனே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவனாவான்.
                                                                                                                       (அல்குர்ஆன். 10:109)

எனினும் எவர்கள் பொறுமையாக இருந்துநல்லறங்கள் 
புரிகிறார்களோ, அவர்களுக்குப்பாவமன்னிப்பும், மகத்தான 
கூலியும் உண்டு.
                                                                                                                        (அல்குர்ஆன். 11:11) 

 (நபியே!)  இவை மறைவான செய்திகளில் உள்ளவையாகும். அவற்றை 
நாமே உமக்கு வஹியாக அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீரோ, 
உமது சமூகமோ அவற்றை அறிந்தவர்களாக இருக்கவில்லை. 
எனவே  நீர் பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக பயபக்தியாளர்களுக்கே இறுதி முடிவு உண்டு.
                                                                                                                        (அல்குர்ஆன். 11:49) 

மேலும் நீர் பொறுமையாக இருப்பீராக!  நிச்சயமாக அல்லாஹ் 
நன்மை செய்வோரின்கூலியை வீணாக்க மாட்டான்.
                                                                                                                       (அல்குர்ஆன். 11:115)  

எவர்கள் தமது இரட்சகனின்  (சங்கையான)முகத்தை நாடிபொறுமையாக 
இருந்து,தொழுகையை நிலைநாட்டி, நாம் அவர்களுக்கு
வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும்,பரகசியமாகவும் செலவு செய்து,தீமையை நன்மையால் தடுக்கின்றார்களோ அவர்களுக்கே  
(சுவனம் என்னும்)  இறுதி வீடு உண்டு.
                                                                                                                       (அல்குர்ஆன்.  13:22) 

 நீங்கள் பொறுமையாக இருந்ததற்காக உங்கள்மீது சாந்தி உண்டாவதாக!  (சுவனம் எனும்) இறுதி வீடு மிகவும் சிறந்ததாகி விட்டது. 
(என்று கூறுவர்)
                                                                                                                        (அல்குர்ஆன். 13:24) 

அவர்கள் பொறுமையாக இருந்து தமதுஇரட்சகன் மீது முழுமையாக 
நம்பிக்கையும்வைப்பார்கள்.
                                                                                                                      (அல்குர்ஆன். 16: 42) 

உங்களிடம் உள்ளவை முடிந்து விடக்கூடியவையே , அல்லாஹ்விடம்
 உள்ளவையோ நிலையானவையாகும்.மேலும் பொறுமையுடன் 
இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக 
அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.
                                                                                                                       (அல்குர்ஆன். 16:96) 

எவர்கள்  சோதனைக்குள்ளாக்கப்பட்டபின் ஹிஜ்ரத் செய்து, பின்னர்
அறப்போரும் புரிந்து, பொறுமையாகவும் இருந்தார்களோ அவர்களுக்கு
நிச்சயமாக உமது இரட்சகன் இருக்கிறான். இதன் பின்னரும் நிச்சயமாக 
உமது இரட்சகன் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.
                                                                                                                        (அல்குர்ஆன்.16:110)

நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கே 
தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் 
பொறுமையாளகளுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும்.
                                                                                                                       (அல்குர்ஆன்.16:126)

(நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக!  உமது பொறுமை 
அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை. அவர்களுக்காக நீர் கவலை
கொள்ள வேண்டாம். அவர்கள் சூழ்ச்சி செய்வதன் காரணமாக நீர் (மன)
நெருக்கடிக்குள்ளாக வேண்டாம்.
                                                                                                                       (அல்குர்ஆன்.16: 127)

அவனே வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டுக்கும்
இடைப்பட்டவற்றினதும் இரட்சகன். எனவே அவனையே நீர் 
வணங்குவீராக! மேலும் அவனை வணங்குவதில் பொறுமையைக்
கடைப்பிடிப்பீராக! அவனுக்கு நிகராக எவரையேனும் நீர் அறிவீரா!
                                                                                                                        (அல்குர்ஆன். 19:65)

(நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக!
சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது
இரட்சகனின் புகழைக்கொண்டு துதிப்பீராக.! மேலும்  இரவு 
வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் அவனை துதிப்பீராக!  (இதன் 
நன்மைகளால்) நீர் திருப்தியடைவீர்.
                                                                                                                       (அல்குர்ஆன். 20:130)

(நபியே!) உமது குடும்பத்தாருக்கு தொழுகையைக் கொண்டு ஏவி, நீர் அதில் பொறுமையாகவும் இருப்பீராக!  நாம் உம்மிடம் எவ்வித 
 ஆகாரத்தையும்கேட்கவில்லை. மாறாக நாமே உமக்கு
ஆகாரமளிக்கின்றோம். இறுதி  முடிவு பயபக்திக்கே உண்டு.
                                                                                                                     (அல்குர்ஆன். 20:132) 

மேலும் பொறுமை சம்பந்தப்பட்ட குர்ஆன்
வசனங்களைப் பார்த்துக்கொள்ளலாம்
(22:35)-- (23:111) -- (25:75)-- (28:54) -- (29:59)--(30:60)--(31:17)
(33:35)-- (38:17)-- (39:10)-- (40:55, 77)--(41:35)-- (42:43)
(46:35)-- (47:31)--(50:39)--(52:48)--(68:48)--(70:5)--(73:10)
(74:7)--(76:12,24)--(90:17)--(103:3)
____________________________________________________

பொறுமை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பின்வறுமாறு கூறுகிறான்:-
  1. காலத்தின் மீது சத்தியமாக!
  2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்
  3. விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத்தவிர. (அல்குர்ஆன். 103:1,2,3)
ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் அனைவரும் பொறுமையைக் கடைப்படிப்பது அசியமாகும். இஸ்லாம் மார்க்கமும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகின்றது.
விசுவாசம் கொண்டு, நற்கருமங்கள் செய்து உபதேசம் செய்து, பாவங்களைத் தவிர்த்து, நன்மைகள் செய்வதில் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து, பொறுமையைக் கொண்டு உபதேசிப்பவர் நஷ்டத்தில் இல்லை என்பது மேற்கூறிய வசனத்தின் கருத்தாகும். பொறுமை என்பது, பெருந்தன்மை, உயர்ந்த குணம், ஆகியவற்றின் அறிகுறியாகும்.
இழப்புகளுக்கு எதிரான மிகப்பெரிய காப்பீடு பொறுமையாகும். சூழ்நிலையின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க உதவுவது பொறுமையாகும். இதனால் தான் “அஸ்ஸபூர்” என்பது இறைவனின் அழகிய திருநாமங்களுக் ஒன்றாகத் திகழ்கின்றது. ஏனெனில் இறைவன் பாவம் செய்து கொண்டே இருக்கும் தன்னுடைய அடியானை தண்டிப்பதற்குக் கூட காலம் தாழ்த்துகின்றான். அவனது அடியான் தவறு செய்வதில் அதிவேகத்தோடு செயல்பட்டால் கூட அவன் பல ஆண்டுகள் கழித்தே தன்னுடைய தீர்ப்பை வழங்குகின்றான்.
அவன் மனிதர்களுக்கு நீண்டதொரு கால அவகாசத்தை வழங்குகின்றான். அவர்கள் தவறு செய்த உடனேயே அவர்களைப் பிடித்துத் தண்டித்து விடுவதில்லை.
அல்லாஹ்வின் வசனம் பின்வருமாறு:- (“நபியே!) அவர்கள் வேதனையைக் கேட்டு உம்மிடம் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது வேதனை இறக்குவதற்காக (அறிவித்த) அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு ஒரு போதும் மாற்றம் செய்வதில்லை. நிச்சயமாக நீங்கள் கணிக்கிடும் ஆயிரம் வருடங்கள் உமதிறைவனிடத்தில் ஒரு நாளுக்குச் சமமாகும்”. (அல்குர்ஆன் 22:47) தைரியம், வீரம், ஆண்மை ஆகியவற்றின் வரிசையிலே இடம்பெறுகின்றது பொறுமை.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
 
அஹமட் யஹ்யா...
 
ஹொரோவபதான
அனுராதபுரம்
SRI LANKA..
_______________________________*******************________________________________