Followers

Monday, October 22, 2012

நயவஞ்சகனின் பண்புகள்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி
வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே . னித சமூகத்தில் காணப்படும்
நயவஞ்சகம் என்ற தலைப்பில் இக்கட்டுரையை எழுதுகின்றேன்
இவைகளுக்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே  முதல் நன்றியைக்
கூறிக்கொண்டு அவன் பெயர் துடங்கியவனாக ஆரம்பிக்கின்றேன்.   

அகிலங்களின் இரட்சகன் அல்லாஹவுக்கே எல்லாப் புகழும் 
அல்ஹம்துலில்லாஹ்.

நயவஞ்சகனின் பண்புகள்.



அல்லாஹ் மனிதனுக்கு பல வழிகளில்  அவன் நினையாத புறத்திலிருந்து
எண்ணிலடங்காத அருட் கொடைகளை வங்கிக்கொண்டுக்கிறான்.  இதில்
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோர்  மிகவும் அரிது. நான் நல்லவனாக
இருக்கவேண்டும்,தனக்கு மட்டும் எல்லாம் கிடைக்க வேண்டும், தான் மட்டும்
நிம்மதி,சந்தோசம் அடைய வேண்டும் மற்றவர்கள் என்ன கேடுகெட்டாலும்
பரவாயில்லை என்று மனிதனின் உள்ளத்தில் ஷைத்தானுடை. ஊசலாட்டங்
-கலை மூட்டைகலாகக் கட்டி வைத்திருக்கும் மனித சமூகம் அல்லாஹ்வின்
அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்துவது அரிது என்றால் மிகையாகாது.

இந்த வரிசையிலேதான்  மனிதன் பல கோணங்களில் ,பல திக்குகளில்
மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் .இஸ்லாம் காட்டிய வாழ்க்கை ,அது
நமக்கு சொன்ன பாடங்கள்  அதற்கும் மேலாக நபியவர்கள் வாழ்ந்து காட்டிய
வாழ்க்கை அவர்கள் வாழ்ந்த வாழ்கைகலோடு ஒப்பிடும் போது மனிதன்
எந்த அளவுக்கு மோசம் என்ற பெயரை அவன் வைத்திருக்கிறான் என்றால்
நபியவர்களின் வாழ்க்கையை சற்று சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் நாம்.
 மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பல. கோபம் தாபம், பாசம் பரிவு, ஆசை பொறாமை, பெருமை பொறுமை, காமம் கஞ்சம், குரோதம் குறும்பு, என பல பண்புகளை தன்னகத்தே கொண்ட மனிதனுக்குள் நரகத்துக்கு இழுத்துச் செல்லும் மற்றொரு பண்பும் சேர்ந்தே இருக்கிறது. உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத் தெரியாமல் மறைத்து, தம்மைச் சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புக்கு நயவஞ்சகம் என்று சொல்வார்கள்.

இனிமையாகப் பழகி தீங்கு விளைவிப்பதையும்,பழகிக்கெடுக்கும்
சூழ்ச்சிகளையும் செய்வபரை நயவஞ்சகன் என்று கூறுகின்றோம்.
இந்தத் தீய செயல்களைப் புரிகின்றவர்களை அரபி மொழியில் "முனாஃபிக்"
என்றும் சொல்கின்றோம். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப்
போல் நடித்துக்கொண்டு உள்ளரங்கத்தில்  மறுப்பாளர்களாக வாழ்பவர்கள்
தான்  நயவஞ்சகர்களே!.

உள்ளத்தில் பல சாக்கடைகளை மறைத்துக்கொண்டு வெளியே  நல்லவர்கள்,
பண்புள்ளவர்கள் என்று காட்டுவதே இந்த நயவஞ்சகர்கள் இவர்கள்
கூறுகின்றாக்ள்  நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான்.
என்று கூறுவார்கள் இதைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது...

"அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோம். என்று
கூறுவோரும் மனிதர்களில் உல்ளனர். (ஆனால்) அவர்கள் நம்பிக்கை
கொண்டோர் அல்ல".
"அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்டோரையும்,ஏமாற்று
வதற்காக நினைக்கின்றனர். (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே
ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் (அதனை) உணர்ந்து கொள்ள
மாட்டார்கள்."    (2:8, 9)

உலகத்தில் மனித சமூகத்தின் நன்மதிப்பையும்,அவர்களின் 
நம்பிக்கைகளையும் கெடுத்து சீர் குலைத்து விடக்கூடிய இவர்களின்
குணங்கள் மூன்று.
1- பேசினால் பொய் பேசுவான். 2- வாக்களித்தால் மாறு செய்வான்
3- நம்பினால் மோசடி செய்வான்.  

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நயவஞ்சகனின் அடையாளங்கள்
மூன்றாகும்.   அவன் பேசினால் பொய் பேசுவான் , வாக்களித்தால்
அதற்கு மாறு செய்வான், அவர்களிடம் நம்பி ஒப்படைத்தால் அதற்கு
மோசடி செய்வான்.        
அறிவிப்பவர். அபூஹூரைரா(ரலி)  நூல். (புகாரி. 34)

1- பேசினால் பொய் பேசுவான்.


இந்த மனிதன்  மக்களுக்கு மத்தியில் நம்பிக்கையாக நடப்பான், இனிமையாக
பேசுவான் ,யாராலும் சாதிக்கமுடியாத விஷையங்களை இவன் சாதிப்பான்
இதை மக்கள் நம்பும் படி பல விடையங்களை செய்வான் இதனால் மக்கள்
இவரை நம்பி விடுவார்கள். உலக அமைப்பில் மனிதனுக்கு பல சட்டங்கள்
இருப்பது வக்கம்  அவன் ஆணாக இருந்தாலும் சரி  பெண்மாக இருந்தாலும்
சரி   சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பது உலக மக்களுக்கும்
பொதுவான விடையம் இந்த இடத்தில் மனிதனுக்கு நீதி, நேர்மை அவசியம்
இவர் இந்த இடத்திலிருந்து தப்பிக்கவேண்டும் என்று எண்ணி அந்த உண்மையைப் பொய்யக்கி  வெளியில் நாளு பேர் மத்தியில் அந்த ஒரு 
பொய்யை ஒன்பதாக்கி பேசுகின்ற பொய்யர்களையும் நாம் காணுகின்றோம்.

இதனால் எத்தனை ஏழைக்குடும்பங்கள் பாதாலத்தில் தள்ளப்பட்டு, பெண்களின் வாழ்க்கை ஒரு? கேள்விக்குறியாகி ,குடும்பங்கள் நடுத்தெருவில்
ஆநாதைகளாகி  நன் மனைவி ,மக்களிடம் உள்ள பாசங்கள் உலகில் விலை
பேசப்பட்டு, நாள் தோரும் பேசும் பேச்சுக்கள் பொய்யாக மாறி ஒரு கேவல
நிலைக்கு தள்ளப்படும் இந்த பொய்யர்களை நயவஞ்சகர்கள் என்று
நபியவர்கள் கூறிய நபிமொழியிலுருந்து விளங்கலாம்.

 ''உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசுபவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் உள்ளதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான். இவன் கடுமையான வாதத்திறமை உள்ளவன்.'' ( 2:204)

 இஸ்லாத்தை ஏற்றதாக கூறிக்கொள்ளும் இவர்களில் சிலர் திருக்குர்ஆனை படிக்கவும் மாட்டார்கள். அதன் கட்டளைகளை ஏற்று அதன்படி செயல்படவும் மாட்டார்கள். பெயரளவில் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர், அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்(பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் "கசப்பானது' அல்லது "அருவருப்பானது. அதன் வாடையும் வெறுப்பானது. 
(அறிவிப்பவர் : அபூமூசா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5059)

 உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார்.(இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

2- வாக்களித்தால் மாறு செய்வான்.

அல்லாஹ் மனிதனுக்கு பகுத்தறிவை வழபங்கியிருக்கிறான்.அதன் மூலம்
நல்லவைகளையும்,கெட்டவைகளையும் பிரித்து அறியக்கூடிய ஆற்றலை
வழங்கியும் இருக்கிறான். இதனால்  ஒரு மனிதன் இன்னும் ஒரு மனிதனுக்கு
சகோதரன். நாவினால் பல விஷையங்களை பேசலாம், காரணம் நாவுக்கு
எலும்பு கிடையாது அந்த நாவு பல பக்கமும் சுற்றி சுழலுகின்றது. இதன்பின்
விளைவுகள்,   அதைத்தொடர்நது வரும் பிரச்சனைகள் ஏறாலம்.
தீமைகள் நிகழ்வகற்கு முதல் காரணம் நாவும் அதன் மூலம் வெளியாகும்
வார்த்தைகள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வகையில் 
ஒரு மனிதன்  சொல்லுகின்றான் இன்று அல்ல நாளை கட்டாயம் 
செய்கிறேன், அல்லது வருகிறேன், அல்லது நான் பாரத்துக்கொள்கிறேன்,
அல்லது தருகிறேன், என்ற வாரத்தைகள் மிகவும் இஸ்லாத்தில் கவனிக்கப்
பட வேண்டியவை  இவைகளுக்கு வாக்குறுதியளித்தல் என்றும்
சொல்லப்படும் . 
உதாரணமாக நமது அன்றாட வாழ்க்கையிலும் சரி,
பிறந்தது முதல் மரணிக்கும் வரையிலும் சரி  நாம் செய்கின்ற, செயல்
படுகின்ற ஒவ்வொரு விஷையங்களையும் உதாரணங்களுடன் ஒப்பிடும்
போது வாக்களித்து அதற்கு மாறு செய்வது மிகப் பெரிய  பாவமாகும்.
நாளைய தினம் ஒரு அப்படி இப்படியான  முக்கியமாக தான் கலந்து 
கொள்ள வேண்டிய அழைப்புக்கு மாற்றம் செய்வதும் நயவஞ்சகளின்
குணம் என்பதை நன்றாக உணர்நது கொள்ள வேண்டும் ,வாக்குக்கு மாறு
செய்யாமல் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்தும் போக வேண்டிய
அழைப்புகளுக்கு சமூகம் கொடுத்தும், பட்ட கடனுக்கு உரிய நேரத்தில்
அதை திருப்பிக்கொடுத்தும் அல்லது கொடுக்க முடிய வில்லை என்றால் 
முன் கூட்டியே உரியவரிடம் ஆலோசனை பெற்றும்  முறையாக நடந்து
கொள்வது தான் உம்மை முஃமினின் பண்பாகும் இதற்கு மாற்றமாக 
யாரெல்லாம் நடக்கின்றாரக்ளோ அவர்களே வாக்கு மாறு செய்யும்
நயவஞ்சகர்கள் என்பது நமது புலனுக்கு எட்டுகின்றது,
இது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது..

"விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்" (5:1)

அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் உடன் படிக்கைகளை அல்லாஹ்வுக்கும்,
அவன் தூதருக்கும் பொருத்தமான முறையில்  நிறை வேற்ற வேண்டும்.

3 - நம்பினால் மோசடி செய்வான்.
 
மனிதன் அவனது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சவால்களுக்கும்,
ிரச்சனைகளுக்கும் மனிதனின் நாவுகளால் தகாத ஏச்சுக்கலுக்கும்,
பேச்சுக்களுக்கும் ஆலாகின்றான்    சில சமயங்களில் இவன் ஒரு நம்பிக்கைத்
துரோகி என்றும் இவனை நம்பியதால் எனக்கும் என் குடும்பங்கலுக்கும்
இப்படி ஆகிவிட்டதே என்று கூக்குரல் விடும் மனித சமூகம் இன்று
உலகலாவிய ரீதியில் அதிகமான அளவுக்கு இருக்கின்றார்கள் என்றால்
இந்த நயவஞ்சகர்கள் மூலம் தான் என்றால் இதுவும் மிகையாகாது.
உதாரணமாக   

1-மனிதனுக்கு அல்லாஹ் திருமணத்தை ஆகுமாக்கி
இருக்கின்றான் இந்த திருமணத்தில் நம்பிக்கை, நாணம் மதிக்கப்பட வேண்டும். இது இன்று செய்து நாளைய தினம்  முடித்துக்கொள்ளும் 
விஷையம் அல்ல...மாறாக இந்த இடத்திலும் நம்பிக்கை பேணப்பட வேண்டும்.

2-மனிதனுக்கு மனிதன் பொருளால், உடலால் உதவி செய்வது அவன் 
மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் உள்ளது.
இந்த நிலையில்  ஒரு மனிதன் தன்கோதர மனிதனிடம் ஒரு உதவியை
நாடி வந்தால்  அவர் வந்த நேரத்தில் அந்த உதவியை செய்ய முடியவில்லை
என்றாலும் இன்ஷா அல்லாஹ் நாளை தருகிறேன் அல்லது செய்கிறேன்.
என்று வாக்களித்தால் அந்த நம்பிக்கையில் உதவி கேட்டு வந்தவர் திரும்பிச்
சென்றால் நாளை என்ற வார்த்தையை உபயோகித்த மனிதன் அந்த 
விஷைத்தில்  கவணமாக இருக்க வேண்டும்.

3- இந்த நம்பிக்கை மூலம்  மனிதன் பல நஷ்டங்கையும் அனாகத்
தேடிக்கொள்கின்றான்  மனிதன்  தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள்
இந்திரியமாகவும், நாற்பது நாட்கள் இரத்தமாகவும், நாற்பது நாட்கள்
சதைத்துண்டாகவும் இருந்து இவ்வுலகை வந்தடைகின்றான்.
தற்குப் பின்னால் அவன் இவ்வுலகை உற்றுப்பார்க்கின்றான்.ஆனால் 
அவனுக்கு விளங்காது  கண்ணிருக்கும்  ஆனால் இதுதான் என்று பார்க்க
முடியாது .   கை இருக்கும் எதையும் செய்ய முடியாது,..   கால் இருக்கும் 
எங்கும் நடக்க முடியாது.   செவிப்புலன் இருக்கும் எதையும் கேட்க முடியாது.
பின்னால் அவனது  கால எல்லை கழியும் போது இது இப்படித்தான் அது
அப்படித்தான் என்ற உணர்வு வரும் போது அல்லாஹ் ஒருன்  அவன் 
தான் என் இரட்சகன் என்ற  நம்பிக்கை  வரும் போது காலப்போக்கில் அந்த
நம்பிக்கைக்கு மோசம் செய்யும் விஷையங்களையும் ஒரு மனிதன் இந்த
இடத்தில் சிந்திக்க வேண்டும்.

யாரும் யாருக்கும் மோசடி செய்ய முடியாது . இப்படியான மோசமான
ன்மை யாரிடம் இருக்குமோ அவரும் நயவஞ்சகர் என்பதை நன்றாக 
உணர முடியும்.

யாரெல்லாம் மோசடி செய்கின்றார்களோ அவர்களின் அந்த செயல் 
நாளை மறுமையில் காட்டப்படும் .
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது..
  
"எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்" (அல்-குர்ஆன் 3:161)

ஒரு மனிதன் நண்பனாக இருப்பதற்கும் நம்பிக்கை அவசியம்,
அவனுக்குமரணம் என்ற பாணம் இருக்கிறது என்ற நம்பிக்கை அவசியம்.  
நம்பிக்கைஎன்ற வாரத்தைகள் வாயலவில் இருப்பதை விட நமது 
உள்ளத்தில் அது ஆலமாகப் பதிய வேண்டும் 
 அல்லாஹ்வுடைய அன்பு, பாசம் நமக்கு வேண்டும் என்றால் அவனின் திருப் பொருத்தம்  நமக்கு வேண்டும் என்றால்  இந்த நம்பிக்கைக்கு மோசடி செய்யும் 
விஷையங்களுக்கு நாம் பயந்து  கொள்ள வேண்டும். 
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது..
  
"நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (அல்-குர்ஆன் 8:58)


   
மோசடிக்காரர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான் .என்பது இதிலிருந்து
நாம் விளங்கலாம். ஒரு மனிதன் எப்படித்தான் வாழ்ந்தாலும் அதற்குரிய
பிரதி பலனை நிச்சயம் கண்டு கொள்வான் அவன் இரகசியமாகச் செய்யும்
ன்மைகள், பாவங்கள்  பரகசியமாகச் செய்யும் நன்மைகள், பாவங்கவள்
 எதுவாக இருந்தாலும் நாளைய தினம் அவன் கண்டு கொள்வான்
இது பற்றி அல்லாஹ் கூறும் போது...

"எனவே எவர் அணுவளவேனும் நன்மை செய்தாலும் அவர் அதனையும்
ண்டு கொள்வார்".
"எவன் அணுவளவேனும் தீமை செய்தாலும் அவன் அதனைக் கண்டு
ண்டு கொள்வான்."  (99:7, 8)

"நிச்சயமாக நாம் நெருங்கி வரும் வேதனையை உங்களுக்கு எச்சரித்து
விட்டோம். மனிதன் தன்னிரு கைகளும் முற்படுத்தியதைக் காணும்
நாளில் , நிராகரிப்பாளனோ  என் கைசேதமே!  நான் மண்ணாக இருந்திருக்க
கூடாதா?  எனக் கூறுவான்."     (78:40)

அன்பின் சகோதர சகோதரிகளே  இவ்வுலக வழ்க்கை வெரும் 
பொய்யானது  வீணும் விளையாட்டுமானது நிச்சயமா வாழ்க்கை
மறுமையில் இருக்கின்றது.  இவ்வுலகில் நாம் அதிகமான காலம்
வாழ்ந்து விட்டோம்.  இதோ!  வாழப்போகும் காலம் ஒரு வினாடி,
ஒரு நிமிடம்,ஒரு நாள்,ஒரு மாதம்,ஒரு வருடம் என போகலாம்
எப்படி இருந்தாலும் நமக்கு உறுதியாக்கப்பட்ட மௌத்து நிச்சயம்
இந்த கால வரையறைக்குள் நமக்குள் இருக்கும் போட்டி,பொறாமை
நயவஞ்சகத்தன்மை இவைகளை விட்டும் அல்லாஹவுக்குப் 
பொருத்தமான மக்களாக நாம் வாழ்வதற்கு அல்லாஹ் எனக்கும்
உங்களுக்கும் நல்லருள் புரிவானாக . ஆமீன் ஆமீன் ஆமீன் 
யாரப்பல் ஆலமீன்.

__________________________________________________________________________________
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
**********************************************************************************
__________________________________________________________________________________

தொகுப்பு..
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான
அனுராதபுரம்.
SRI LANKA
**********************************************************************************