Followers

Friday, November 2, 2012

செயல்கள் மூன்று வகைப்படும்.

  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

அவன் பெயர் கொண்டு .......வணக்க வழிபாடுகள் அவைகளுக்குள்
இருக்கும் செயல்கள் என்ற தலைப்பில் இக்கட்டுரையை உங்கள்
மத்தியில் தரிசனம் செய்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

செயல்கள் மூன்று வகைப்படும்.

1- பாவங்கள்.

பாவத்தைச் செய்யும் போது நாம் வைக்கும்  நல்ல நிய்யத் அதை
நன்மையாக மாறிவிடாது . அதைச் செய்யும் போது கெட்ட 
நோக்கங்களும் சேர்ந்து விடுமாயின்  குற்றம் பல மடங்குகளாகும்.
உதாரணமாக. கொலை, ஒருத்தர் வாழ்க்கையை கெடுப்பது

 இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், நான் கேட்டதற்கு,''நல்ல ஒழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது உன்னுடைய மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு ஸம்ஆன்(ரலி) நூல்: முஸ்லிம்

“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான். அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை. சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை. குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.” (அல்குர்ஆன் 69:33-37).

2- அனுமதிக்கப்பட்டவை.

இவை ஒவ்வொன்றும் நல்ல நிய்யத் ஒன்றின் மூலமோ அல்லது
பலதின் மூலமோ அவை  வணக்கங்களாக மாற முடியும்.
உதாரணமாக. பாதையில் செல்லும் போது மனிதனுக்கு இடையூரு
தரும் பொருட்கள் இருப்பின் அதை நல்லண்ணத்தோடு அகற்றுவது.

(நபியே!) நீர் கேட்பீராக "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்; "அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்" இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம். (7:32)

3- வணக்கங்கள்.

இவை அங்கீகரிக்கப்படுவதற்கும் நன்மைகள் பல மடங்காக
வழங்கப்படுவதற்கும் நிய்யத்துடன் இணைந்திருப்பது கட்டாயமாகும்.
அவற்றை முஹஸ்தூதிக்காகச் செய்தால் அது பாவமாகவும் சிறிய
இணையாகவும் மாறிவிடும். சில நேரங்களில் பெரிய இணைக்கே
அவனைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

"அவன் இரவைப் பகலில் நுழைவிக்கிறான். இன்னும் பகலை  இரவில்
வுழைவிக்கிறான்.மேலும் அவன் சூரியனையும்,சந்திரனையும்
வசப்படுத்தினான். அவை ஒவ்வொன்ரும் குறிப்பிட்ட தவனை வரை
ஒடிக்கொண்டிருகிகும்.அல்லாஹ் தான் உங்களது இரட்சகன் 
அதிகாரம் அவனுக்கே உரியது. அவனையன்றி நீங்கள் அழைப்போர்
(படைப்பதற்கு) அணுவளவும் ஆற்றல் பெற மாட்டார்கள்." (35:13)

இறைவன் மனிதர்களை இப்பூமியில் படைத்தான். பரிபாலிக்கிறான். மனிதர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறான். மேலும் மனிதனின் செயல்களைக் கண்காணிக்கிறான். இறுதியில் மனிதர்களின் செயல்களுக்குத் தகுந்த கூலியும் தண்டனையும் வழங்குவான். 

இஸ்லாத்தில் கொள்கை, கோட்பாடு, வணக்கம், வழிபாடு, கடமை, கட்டுப்பாடு, அன்றாட வாழ்க்கை நெறிகள் என எடுத்துக் கொண்டால் எதிலுமே தனித்தன்மையோடு விளங்கி வருவதைப் பார்க்கிறோம். 
இஸ்லாம் குறிப்பிட்டமொழியினருக்கோ,பகுதியினருக்கோ,குலத்தின ருக்கோ அல்லது நிறத்தினருக்கோ உரிய மார்க்கம் அன்று. அது மனித குலம் அனைத்துக்கும் சொந்தமான முழமையான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும்.

இஸ்லாம் மனித நேயத்தையும் சகோதர வாஞ்சையையும், ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம சமத்துவததையும் போதிக்கிறது. 
பிறப்பால் உயர்தவர், தாழ்ந்தவர் என்றோ., உயர்குலத்தவர், கீழ்குலத்தவர் என்றோ, ஆண்டான் அடிமை என்றோ, ஏழை பணக்காரன் என்றோ ஏற்றத்தாழ்வின்றி மனித குலத்தவர் அனைவரும் ஒரு தாய்வயிற்றில் பிறந்த மக்களாகவே கருதுகிறது. ‘
முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்’ என்ற உயர்ந்த நெறியைப் போதிக்கிறது. 
இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை. 

புரோகிதருக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை.

கற்களையும்,படைப்பினங்களையும்,இறந்தவர்களையும் வணங்கும் அறியாமை இஸ்லாத்தில் இல்லை.

காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம் இல்லை. 

கடவுள் ஆசியை வழங்கும் போலித்தனம் இல்லை.

மூடப்பழக்கங்களும், கற்பனைக் கதைகளும் அங்கு இல்லை.

இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் எவரும் தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது. 

குனிவது, பணிவது, சாஷ்டாங்கமாக விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை. நடைமுறைப்படுத்த எளிதானவை. கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் வேதத்தில் ஒரு புள்ளி கூட மாற்றம் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. 

இஸ்லாம், மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சிறப்பாக வழிகாட்டுகிறது. மனிதனை தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும், நேர்மையுடனும் வாழச் செய்கிறது. எனவே ‘தூய இஸ்லாத்தின் உயர் போதனைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான .
அனுராதபுரம்
SRI LANKA
__________________________________****************________________________________