Followers

Tuesday, November 27, 2012

வேண்டாமா...? என்றால் அர்த்தம் என்ன????

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.....

வேண்டாமா...? என்றால் அர்த்தம் என்ன????

அன்பின் இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளே..
மனதைத் தொட்டு.... அழுவதற்கு கத்தியால் கையை வெட்டவேண்டியதில்லை..
ஒருவர் கையால் அடி வாங்கி அழ வேண்டியதில்லை..

ஆரம்மபாக அல்லாஹ் அல்குர்ஆனில் கேட்குகின்றான்..பாருங்கள்.


அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?" (அல்குர்ஆன் 47:24)
இம்மைக்காகச் சிந்திக்கின்ற மனிதன் மறுமைக்காகச் சிந்திக்க வேண்டாமா? இந்தக் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? இறைக்கட்டளைகளை ஆராய்ந்து ஏற்றுச் செயல்பட வேண்டாமா? என்று அல்லாஹ் கூறுகின்றான்:

பண்பாடற்ற ஒருசமூகத்தை பண்பற்ற ஒரு சமூகமாகவும், ஒழுக்கயீனமற்ற ஒரு சமூகத்தை ஒழுக்க சீலமுள்ள ஒரு சமூகமாகவும், அநீதி, அநியாயத்திற்கு கொடி தூக்கிய சமூகத்தை நீதி, நியாயத்திற்கு கொடி தூக்கும் சமூகமாகவும் மாற்றியமைத்ததுடன் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தை மனித நேயமிக்க ஒரு சமூகமாக, வரட்டு கௌரவங்கள் ஆட்கொண்டிருந்ந ஒரு சமூகத்தை தன்மானமுள்ள ஒரு சமூகமாகவும் மாற்றியமைத்தது இந்த அல்குர்ஆன்.


இன்னும் ஒர் இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான் பாருங்கள்..


"எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்" (அல்குர்ஆன் 20:124).

அல்லாஹ்வுடைய போதனைகள், அல்குர்ஆனில் கூறப்பட்ட வாழ்க்கைகள், அலங்கரிக்க வேண்டிய பகுதிகள்,அரவணைக்க வேண்டிய அடிப்படைகள், அயராத நற்சிந்தனைகள்..இவற்றையெல்லாம் யார்? யார்? புறக்கணிக்கின்றார்களோ அவர்களுக்கு இந்த உலகில் நெருக்கடியான வாழ்க்கையை அல்லாஹ் சித்தப்படுத்தி வைக்கின்றான்.....ஏன் இன்றைக்கு காலையாகிவிட்டால் மாலைப் பொழுதை அடையும் வரை எத்தனை வடிவத்தில் அவரவர் குரல்களைக் கேட்கின்றோம்.
1000 ம் ரூபாய் காசியை கையில் வைத்தவர் ஒரு நிமிடத்துக்குள் அவற்றை வீண் விரயம் பொறுத்தமற்ற முறையில் சிலவு செய்து விட்டு புகைத்தல், மதுபானம்,சினிமா டியட்டர், லஞ்சம், வட்டி , என்று இன்னோரன்ன விடையங்களுக்கு சிலவு செய்து விட்டு அடுத்த நிமிடம் வீட்டுக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட நெருக்கடிகள் வருவதற்குக் காரணம் என்ன? மேலே சொன்ன குர்ஆனின் போதனையை அவர்கள் தன் மனதில் அமைத்துக்கொள்ள வில்லை.

இப்படிப்பட்டவர்களிடத்தில் அல்லாஹ் கேட்கின்றான் குர்ஆனில்..


''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம் எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:32)''
இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகின்றோம்.?
அழகான வடிவத்தில் அல்லாஹ் மனிதனுக்கு கண்ணைக் கொத்தான்.!!!
இரு கைகளையும் முறையாகக் கொடுத்தான்.!!!
நலவோ நஷ்டமோ போகவேண்டிய இடத்துக்கு போ.! என்று இரு கால்களைக் கொடுத்தான்.!!!
நலவோ, நஷ்டமோ செவி தாழ்த்திக்கொள்.! என்று இரு செவிப்புலன் களைக் கொடுத்தான்.!!!
நலவோ,நஷ்டமோ சிந்தித்து உணர்ந்து கொள்.!!! உனக்கும்,மிருகத்துக்குமுள்ள வேறு பாடு பகுத்தறிவு மனிதா...... இப்படித்தான் என்று உணர்ந்து கொள்ள பகுத்தறிவைக் கொடுத்தான்.!!!
மனிதனுக்காக எத்தனையோ சலுகைகளைக் கொடுத்தும் இருக்கின்றான்.!!!
வசதியும்,சக்தியும் இருந்தால் மட்டும் ஹஜ் செய்.!!!
பிரயாணம் செய்தால் தொழுகையை சுருக்கிக்கொள்.!!!
12 மாதமும் அல்ல... அதில் 1 மாதம் நோன்பு நோற்றுக்கொள்.!!!
ஜந்து நேரமும் முறையாகத் தொழுது என்னிடம் கேள்.!!!
பெரியவரைக் கண்டால் மரியாதை செய்.! சிறியவரைக் கண்டால் அன்பு காட்டு.!!!
உன் சகோதரனுடைய முகத்தைப் பார்த்து சிரிப்பதும் தர்மம் , பாசத்தைக் காட்டிக் கொள்.!!!

இப்படி எத்தனையோ அருமையான சலுகைகளையும் அல்லாஹ் மனிதனுக்கு ஏற்பாடு செய்தும் இருக்கின்றான் .. யாரெல்லாம் இதற்கு மாற்றமாக உலகத்தில் வாழுகின்றார்களோ, வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றார்களோ. அவர்களுக்கு இவ்வுலகில் நெருக்கடியான வாழ்க்கையை கொடுப்போம் என்று அல்லாஹ் கூறிவிட்டான் அது மாத்திரமல்ல..மறுமையில் அவனை..அல்லாஹ் கூறுகின்றான்.
""""அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்" ( 20:124).
மேலே சொல்லப்பட்ட மாதிரி குருடனாக எழுப்புவோம் என்றும் அல்லாஹ் கூறி இருக்கின்ரான்.
எனவே அல்லாஹ் குர்ஆனில் வேண்டாமா? வேண்டாமா? என்று கேட்டதை நாம்....
சிந்திக்கின்றோம்..
செயல்படுன்கிறோம்..
உணர்கின்றோம்..
குர்ஆனை ஓதுகின்றோம்..
தர்மம் செய்கின்றோம்..
மறுமையை பயப்படுகின்றோம்..
பொறுமை கொள்கின்றோம்..
ஹராத்தை வெறுக்கின்றோம்..
உள்ளச்சம் கொள்கின்றோம்..
பெற்றாரை மனிக்கின்றோம்..
பார்வைகளைத் தாழ்த்துகின்றோம்..

என்று நாம் பதில் சொல்கின்றோமா????

இதுதான் நாம் சிந்திக் வேண்டிய ஒரு கட்டாய கட்டமைப்பாகும்.

உலகெல்லாம் இன்று வர்ணிக்கப்படும் .. அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக வீறு கொண்டெழும் ஆயுத மற்றும் அற வழிப் போராட்டங்களுக்கும் அப்பாற்பட்டு நின்றும் இங்கே இனிதாய் புரிந்து கொள்ள.. நல்வாழ்வைப் பெற்றுக்கொள்ள இன்னும் பல அத்தியாயங்கள் நம் அகக் கண்களுக்குள் அகப்படாமலே தப்பிக்கொண்டிருக்கிறது.. அவற்றைப் பிடிக்க வேண்டாமா?.. பிடிப்பதென்றால் முதலில் எம் ஞானக் கண்களையும் திறக்க வேண்டாமா?…


ஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான்.
இந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலைக்குப் போவதையும், மிருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் , கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.

மனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.


அதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.


உதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது! அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது! எத்தனை ஆரோக்கியமான அறைகள்! முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை! இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள்! மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும்.

.ஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
____________________________******************_________________________________
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
 

Monday, November 26, 2012

நற்குணமும்,தீயகுணமும்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.

நற் குணங்கள்
***********


**தூய்மை
___________________________


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

** எளிமை
__________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) (நூல்கள்:அபுதாவூத், )

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் )

** நிதானம்
__________________________

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)


** நாவடக்கம்
__________________________


இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)


** அன்பாக பேசுதல்
___________________________

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)
** உண்மை பேசுதல்
____________________________

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)
விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

** பிறருக்கு உதவி புரிதல்
___________________________

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், )


** மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்
____________________________


மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) (நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்)

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)


** நன்றி செலுத்துதல்
____________________________

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி)


** உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்.
___________________________

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். (நூல்: புஹாரி,முஸ்லிம்)


** தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)
__________________________

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

** தவ்பா (மன்னிப்பு கோருதல்)
___________________________

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)
** வெட்கப்படுதல்
___________________________

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர
்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)

 

தீய குணங்கள்
************


** கோபம்
___________________________

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

** தற்பெருமை
___________________________


(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

** பிறர் துன்பத்தை கண்டு மகிழ்தல். 
____________________________

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).
** பொய்
___________________________


எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)
சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)
** கெட்டவற்றை பேசுதல்
____________________________

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)
** வேஷம் போடுதல்.
____________________________

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

** கொடுமை
____________________________


அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

** வரம்பை மீறிய புகழ்ச்சி –
_____________________________
 
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்)
** வாக்குறுதி மீறல்
______________________________

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)
நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
** சண்டை
______________________________
_
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)
** குறை கூறல்
______________________________
__
குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

** பொறாமை
______________________________
___
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, )
** பாரபட்சம் காட்டுதல்
______________________________
____

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)
** கெட்ட பார்வை
______________________________
____

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)


செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)


** பரிகாசம்
______________________________
____
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
*******************************************************************************
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA
__________________________________________________________________________________
 

ஸலாம் சொல்வதின் சிறப்பு...

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.


ஸலாம் சொல்வதின் சிறப்பு...

அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே அனுப்பப்பட்டார்கள். நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும், பண்பாட்டையும், உயரிய ஒழுக் விழுமியங்களையுமே உலகிற்கு போதித்தார்கள். அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவைகளை முதிலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள். அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுமாறு தூதருக்கு பணிக்கின்றான்:

(நபியே! இன்னும்) ‘மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்.’ என்றும் கூறுவீராக. ‘அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்’ (என்றும் நீர் கூறுவீராக). (39: 11,12).
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: ஸலாம் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).
பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.
நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.


உங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)

உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன? உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் அழிந்து விடும்.

எனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக! என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக! இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.


'ஸலாம்' கூறுவதன் மூலம் சகோதரத்துவம், அன்பு, பாசம், நேசம் ஏற்படுகிறது.
இறைநம்பிக்கையும் அன்பும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.இறைபக்தி மற்றும் இறைநம்பிக்கையுடன் செயல்படுவோர் தீமைகளைத் தவிர்ப்பர். நன்மை செய்வோருக்கு சுவனம் கிடைப்பது உறுதி இறைநம்பிக்கை கொண்டோரே! ஸலாத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள்! சகோதரப் பிணைப்பிற்கு அது ஒன்றே வழி!

''அல்லாஹ்விடம் மக்களிலேயே மிசச்சிறந்த நபர் முதலில் ஸலாம் கூறுபவராவார்''என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஸலாம் கூறுவதை மரியாதைக் குறைவாக கருதுவோரும் உண்டு; நமது அந்தஸ்திற்கு இவருக்குப் போய் ஸலாம் கூறுவதா? என்ற அகந்தை எண்ணத்துடன் தலை நிமிர்ந்து செல்வோரும் உண்டு; இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அடுத்தவரது நல்வாழ்விற்காக செய்யும் பிரார்த்தனையே ஸலாம் ஆகும். அதைச் சொல்வதற்குக் கூட கஞ்சத்தனம் செய்வோர் மனித நலனை எவ்விதம் காப்பர்? அதனால் தான் நபியவர்கள் தாங்களாகவே முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். இந்த நபி மொழியை செயல்படுத்துவதற்காக அப்துல்லாஹிப்னு உமர் என்ற நபித்தோழர் கடைவீதிக்குச் சென்று, ஏழை, எளியோர், வியாபாரிகள் மற்றும் வருவோர், போவோர் அனைவருக்கும் ஸலாம் கூறும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். முதல் மனிதர் ஆதமின் முதல் வார்த்தையே ஸலாம் தான்! ஒருவரையொருவர் வெறுத்து பிரிந்து வாழ்வோர் ஸலாம் கூறுவதன் மூலமாக ஒன்று சேர்வதற்கான அருமையான வழிமுறையை அண்ணல் நபியவர்கள் காட்டியுள்ளார்கள்.


'திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்


ஒரு மனிதன் தான் அறியாமலிருக்கும் ஒருவருக்கு 'ஸலாம்' கூறுவது அறிமுகத்தையும், சகோதர உணர்வையும் ஏற்படுத்துகிறது. அறிந்தோருக்கு ஸலாம் கூறுவது ஏற்கனவேயுள்ள தொடர்பையும் பாசத்தையும் வலுப்படுத்தி அகந்தை மற்றும் பெருமையை அகற்றுகிறது. உணவளிப்பது உடலுக்கு வலிமைåட்டுகிறது என்றால், 'ஸலாம்' கூறுவது மனநிம்மதிக்கும், அமைதி வாழ்விற்கும் வழிகோலுகிறது.
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூற்கள் : திர்மிதீ, இப்னுமாஜா 3242, அஹ்மத், ஹாகிம்)


அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள்.
(அறிவிப்பவர் : ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, நூற்கள் : இப்னுஹிப்பான், ஹாகிம்)



ஸூப்ஹானல்லாஹ் ஸலாம் சொல்வது எவ்வளவு பெரிய அருட் கொடை என்பதை மேலே சொன்ன நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது. எனவே நமக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பவும் அந்த ஸலாத்தை தூய்மையான எண்ணத்துடன் சொல்லவும் அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
**********************************************************************************
 

Saturday, November 24, 2012

இஸ்லாத்தில் உறுதியாக இருப்பது.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.

இஸ்லாத்தில் உறுதியாக இருப்பது.

வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்புவதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவார் என்பதை உறுதியாக நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
"அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்
அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!"
அல்குர்ஆன் 4:36
ஜின்னையும் ,மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் 51:56

இணை கற்பித்தல் கூடாது
அகில உலகையும் படைத்து காத்து பராமரிக்கும் ஒரே ஒரு இறைவன் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது.அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை.எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.


மூன்று விஷயங்கள் எவரிடம் உள்ளதோ அவர் ஈமானின் சுவையை பெற்றுக் கொண்டார்.

1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏனைய அனைவரைவிடவும் அவருக்கு விருப்பத்திற்குரியவர்களாக இருக்க வேண்டும்.

2.ஒரு மனிதனை அல்லாஹ்வுக்காக நேசிக்க வேண்டும்
3.நெருப்பில் வீசப்படுவதை ஒருவன் எப்படி வெறுப்பானோ அதே போன்று குஃப்ர் (இறை மறுப்புக்கு) திரும்புவதை அவன் வெறுக்கவேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இம்மூன்று பண்புகளும் ஈமானியப் பண்புகளில் மிக உயர்ந்தவையாகும் அவற்றைப் பூரணப்படுத்துபவர் ஈமானின் இனிமையையும் சுவையையும் பெற்றுக் கொள்வார்.

உணவும் பானமும் நாவினால் சுவைக்கப் படுவது போன்று உள்ளத்தினால் சுவைக்கத் தக்க இனிமை ஈமானுக்கு உண்டு. உடலுக்கு உணவைப் போன்று ஈமான் உள்ளத்திற்கு உணவாக உள்ளது. உடல்ஆரோக்கியமாக இருந்தாலே அது உணவின் சுவையை அனுபவிக்கும். நோயுடன் சுவையை அனுபவிக்க முடியாது.


யார் மரணிக்கும் வரை அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, அந்த கட்டுப்பாட்டிலேயே உறுதியாக‌ வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி, 'உனக்கு சுவர்க்கம் உறுதி என்கிற நற்செய்தியை சொல்லுமாறு அல்லாஹ் எங்களை உன்னிடம் அனுப்பியிருக்கின்றான். ஆகவே நீ உன் மறுமை நிலைப் பற்றி பயப்படாதே! உன் குடும்பம் மற்றும் சொத்து சுகங்களைப் பற்றியும் கவலைப்படாதே! நாங்கள் இரு உலகத்திலும் உனக்கு உதவியாளர்களாக இருப்போம்' என அம்மலக்குகள் யாராலும் ஆறுதல் வார்த்தைகள் கூறமுடியாத நேரத்தில் அம்மனிதனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்கள். இதைப் பற்றி அல்லாஹ்தாஆலா தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:


நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் படவேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். "நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். "மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன் தரும் விருந்தாகும்" (இது என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் 41: 30-32)

அல்லாஹ்வுடைய கட்டளைப்படி வாழ்வதென்பது, தன் வாழ்க்கையை குர்ஆனும் ஹதீஸும் போதிக்கின்ற போதனைகளின்படி அமைத்துக் கொள்வதாகும். அந்த போதனைகளின் வழியிலே உறுதியாக நிற்கவேண்டும்.

'நான் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களைத்தவிர வேறு யாரிடமும் கேட்க மாட்டேனே அத்தகைய ஒரு சொல்லை இஸ்லாத்தில் எனக்குக் கூறுவீர்களாக! எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைக் கொண்டு நான் ஈமான் கொண்டேன் எனக் கூறுவீராக! பின்னர் (அதன் மீதே) உறுதியாக நிற்பீராக! எனக் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அபூ அம்ரா ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ்(ரலி);
நூல்: முஸ்லிம்


எப்படிப்பட்ட சோதனைகள் வரும்போதும், காலங்கள் மாறும் போதும், இடங்கள் மாறும் போதும் நம் ஈமானின் நிலையோ இஸ்லாமிய நற் பண்புகளின் நிலையோ மாறக்கூடாது. ஆனால் பெரும்பாலான மக்களின் நிலை இதற்கு மாற்றமாக இருக்கின்றது. காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றவர்களும், செழிப்பானபோது ஒரு நிலையும், சோதனை வரும்போது மற்றொரு நிலைக்கு மாறுபவர்கள்தான் அதிகம்!

அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும் பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால் அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும் மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?

இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும் வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில் டிவி ரேடியோ பத்திரிக்கை இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும். அக்காலத்தில் இஸ்லாத்திருக்காக நமது நபி மார்கள் எவ்வளவு தியகங்களும், எவ்வளவு இன்னலுகளும், பட்டு நமது இஸ்லாத்தை பரப்பினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்வோம். இன்ஷா அல்லாஹ் …,

“யா அல்லாஹ்! உள்ளங்களது நிலைகளை மாற்றியமைப்பவனே! எனது உள்ளத்தினை உனது மார்க்கத்தில் உறுதியாக வைப்பாயாக…!”

இது நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி கேட்டு வந்த பிரார்த்தனை மனிதனது வாழ்வில் எதிர்ப்படும் எத்தனையோ நிலைமைகள் அவனது போக்கையே மாற்றிவிடுகின்றன. ஸஹாபாக்களது வாழ்வில் தான் எத்தனை கஷ்டங்கள் என்றாலும் அவர்களது உள்ளங்கள் இஸ்லாத்தில் நிலை குலையவில்லை…


மிகக் கடுமையான பசியால் வீதிகளில் அடிக்கடி மயக்கமுற்று விழுவது அபூஹுரைரா (றழி) அவர்களின் வாழ்வில் சகஜமான நிகழ்வு.


அபூஹுரைரா (றழி) அவர்களுக்கு மிகக் கடுமையான பசி. பள்ளிவாயலுக்கு வெளியே வந்து நிற்கின்றார்கள். பள்ளியிலிருந்து வெளியே வந்த அபூபக்கர் (றழி)யை சந்திக்கிறார்கள். ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தைக் கேட்கிறார்கள்.


- அபூ ஹுரைராவே! நபியோடு தொடர்ந்தும் தோழமை கொண்டிருக்கும் உங்களுக்குத் தெரியாத விளக்கமா?

(அபூபக்கர் (றழி) அபூஹுரைரா கேட்டதற்கான நோக்கத்தை விளங்கிக் கொள்ளவில்லை)

- இரண்டாவதாக பள்ளியிலிருந்து வெளியே வந்த உமர் (றழி)யிடம் அபூஹுரைரா (றழி) ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தைக் கேட்கிறார்கள்.


- அபூஹுரைராவே! உங்களுக்குத் தெரியாத விளக்கமா எனக்குத் தெரிந்து விடப்போகிறது?

(அபூ ஹுரைராவின் நோக்கத்தினை உமர் (றழி)யும் விளங்கிக் கொள்ளவில்லை)

இதனை தூரத்தில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்கள் கருணை நபி (ஸல்) அவர்கள். அபூபக்கர் (றழி), உமர் (றழி) அவர்களிடம் அபூஹுரைரா குறித்த வசனத்திற்கான விளக்கத்தைக் கேட்டதற்கான காரணம் தனது குரலின் பலவீனத்தைக் கேட்டு தனது பசியினை விளங்கிக் கொள்ளத்தான் எனும் காரணத்தை நபியவர்கள் புரிந்து கொண்டார்கள்.


அபூ ஹுரைரா (றழி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு வீடு அழைத்துச் சென்றார்கள் நபி (ஸல்) அவர்கள். ஒரு பாத்திரத்தில் ‘பால்’ இருந்தது. அபூ ஹுரைரா (றழி) குடிப்பதற்கு அவசரப்பட்டார்கள். அவ்வளவு பசி அவர்களுக்கு. ஆனால் நபியவர்கள் திண்ணைத் தோழர்கள் அனைவரையும் அழைத்து வரும் படி அபூஹுரைராவிடம் கூறினார்கள். அபூஹுரைரா (றழி)க்கு மிகப் பெரும் சங்கடம். கொஞ்சப் பால் திண்ணைத் தோழர்கள் அனைவருக்குமா? அனைவரையும் அழைத்து வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் வயிறு நிரம்பக் குடித்தார்கள். நபி (ஸல்) : இப்போது நானும் நீரும் தான் இருக்கிறோம், அப்படித்தானே!


- ஆம். யா ரஸூலல்லாஹ்…


- அபூ ஹுரைராவே! நீங்கள் குடியுங்கள்.

(அபூஹுரைரர் நானும் குடித்தேன்)

- நீங்கள் குடியுங்கள் (அபூஹுரைரா : நானும் குடித்தேன்)


நீங்கள் குடியுங்கள் என்று அபூஹுரைராவுக்கு நபியவர்கள் கூறிக்கொண்டே இருந்தார்கள்.


- அபூ ஹுரைரா : உங்களுக்கு சத்தியத்தைக் கொடுத்தனுப்பியவன் மீது சத்தியமாக இதற்கு மேல் என்னால் குடிக்க முடியாது.


பிறகு எஞ்சியதை நபியவர்கள் குடித்தார்கள்.


இச்சம்பத்திலிருந்து விளங்க வேண்டிய சில உண்மைகள். இஸ்லாத்திற்காக தியாகம் செய்வதும், வரும் கஷ்ட நஷ்டங்களில் பொருமையாக இருப்பதும் , உள்ளத்தை இஸ்லாத்திற்காக உறுதியாக வைப்பதையும் இச்சம்பவம் நமக்கு பெரியதொரு பாடத்தைப்புகட்டுகின்றது. அல்ஹம்துலில்லாஹ் ..அன்றைய சஹாபாக்கள் இஸ்லாத்தில் எவ்வளவு தியாகங்கள் ,இஸ்லத்தை எவ்வாறு பற்றிப்பிடித்தார்கள் இதே படிப்பினைகள் நபியுடைய சமுதாயம் நாம் நாமும் இப்படியான தியாகங்களை, செய்யவேண்டும். மார்க்கத்துக்காக போராடவேண்டும். இஸ்லாம் ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திலும் ஆலாமாகப்பதிய வேண்டும்.
அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் ஒரு வார்த்தையானாலும் சரியே முறையாக சொல்வோமாக .
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.
*****************************************************
 

Friday, November 23, 2012

ஈமானின் கிளைகள்..


 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஈமானின் கடமைகள் என்ற தலைப்பில் ஒரு சில விளக்கங்களை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.


ஈமானின் கிளைகள்..

சொற்களும்,செயல்களும் சரியான கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டால்தான் அவை சரியானது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பது மார்க்க ஆதாரங்களான குர்ஆன் , ஹதீஸிலிருந்து அறியப்பட்ட விடையமாகும். கொள்கை ஆதாரமற்றதாக இருக்குமானால் அதன் மூலம் உருவாகக்கூடிய சொற்களும்,செயல்களும் தவறானதாக, வீணானதாக ஆகிவிடும்.
அல்லாஹ் கூறுகின்றான். "மேலும் எவன் ஈமானை நிராகரித்து விடுகிறானோ அவனின் நற்செயல் அழிந்து விடும். அவன் மறுமையில் நஷ்டமடைந்தவர்களில் இருப்பான்". (5:5)

"உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது இதுதான்.நீர் இணைகற்பித்தால் உமது நல்லறங்கள் அழிந்து விடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்." (39:65)
உண்மையில் சரியான கொள்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும்,வேதங்களையும், மறுமை நாளையும், நன்மை,தீமைகள் யாவும் அவன் விதித்த விதிப்படியே நடைபெறுகின்றன என்பதையும் நம்புவதில் மட்டுமே அடங்கியிருக்கிறது என்பதை இறைவேதமும், இறைத்தூதரின் வழிகாட்டுதலும் திட்டவட்டமாக அறிவித்து விட்டன. இந்த ஆறு விஷயங்கள் தான் சரியான அடிப்படைக் கொள்கையாகும். இவற்றைக்கொண்டு தான் கண்ணியமிக்க அல்லாஹ்வின் வேதம் இறங்கியது. இவற்றைக்கொண்டுதான் அவனது தூதர் நபி(ஸல்)அவர்கள் அனுப்பப்பட்டார்கள். இவற்றுக்கு ஈமானின் கடமைகள் என்றும் கூறப்படும்.
 

1- அல்லாஹ்வை நம்புவது.

அல்லாஹ்வை நம்புவது என்றால்? அல்லாஹ்தான் வணக்கத்திர்குத்தகுதியான உண்மையான இறைவன் என நம்புவது.
ஏனேனில் அவன்தான் அடியார்களைப்படைத்தான், உலகத்தைப்படைத்தான் படைக்கப்பட்ட அனைத்துப்படைப்புக்கும் உபகாரம் செய்பவன், அவைகளுக்கு வாழ்வாதாரம் வழங்குபவன், அவைகளின் இரகசியங்களையும்,பரகசியங்களையும் அறிபவன், அவைகளில் கட்டுப்பட்டு நடப்பவை நடப்பவர்களுக்கு நற்கூலி வழங்கவும், மாறு செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கவும் சக்தியுள்ளவன். இந்த வணக்கத்திற்காகத்தான் அல்லாஹ் மனிதர்களையும், ஜின்களையும் படைத்தான். இந்த வணக்கத்தைச் செய்யுமாறே அவர்களை ஏவவும் செய்தான்.
அல்லாஹ் கூறுகின்றான்."ஜின்களையும்,மனிதர்களையும் என்னை வணங்குவதர்காவே தவிர நான் படைக்கவில்லை நான் அவர்களிடமிருந்து எந்தப்பபொருளையும் விரும்பவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்று நான் நாடவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவன், ஆற்றலுடையவன், உறுதியானவன்."(51:56-58)

இந்த உண்மையை விளங்கி இதன்பால் மக்களை அழைப்பதற்காகவும், இதற்கு மாறுசெய்பவர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும்தான் அல்லாஹ் தூதர்களை அனுப்பிவைத்தான். அல்லாஹ் கூறுகின்றான்.

"அல்லாஹ்வையே வணங்குங்கள். "தாகூத்" (தீய சக்தி)களை விட்டு விலகிக்கொள்ளுங்கள் என்று திண்ணமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒருதூதரை அனுப்பிவைத்தோம்."(16:36)


இத்தகைய வணக்க வாழிபாட்டின் எதார்த்த நிலை என்னவென்றால் பிராத்தனை செய்தால், பயப்படுதல், ஆதரவு வைத்தல், தொழுகை,நோன்பு, அறுத்துப்பலியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்கங்களை அச்சத்துடனும் பணிவான முறையில் அதே சமயம் அல்லாஹ்வை பரிபூரணமாக நேசிப்பதுடனும், அவனது கண்ணியத்திற்குப் பணிவதுடனும் அவனுக்கு மட்டுமே செய்வதாகும். திருமறைக்குர்ஆனில் பெரும்பாலான விஷயங்கள் இம்மகத்தான அடிப்படை அம்சத்தைப் பற்றித் தான் இறங்கியிருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான். 
நபியே!)வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக!தெரிந்துகொள்ளுங்கள்!தூய்மையான இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரித்தாகும்"(39:2-3)

"அவனைத்தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக்கூடாதென உம் இறைவன் விதித்துள்ளான்."(17:23)


"வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உருத்தாக்கி அவனிடமே பிராத்தியுங்கள். நிராகரிப்பாளர்கள் இதனை வெறுத்தாலும் சரியே!"(40:14)


அல்லாஹ் தன் அடியார்கள் மீது கடமையாக்கிய அனைத்தையும் நம்புவதும் அல்லாஹ்வை நம்புவதில் அடங்கும். உதாரணமாக இஸ்லாத்தின் ஜந்து அடிப்படைக் கடமைகளான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்றும் சாட்சி சொல்வது, சொல்வது , தொழுகையை நிலைநிறுத்துவது, ஸகாத் கொடுப்பது,ரமழனில் நோன்பு நோற்பது, கண்ணியமிக்க அல்லாஹ்வின் ஆலயத்திற்குச் சென்று வர சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வது ஆகியவற்றையும் இன்னும் தூய்மைமிக்க இம்மார்க்கம் கொண்டுவந்துள்ள ஏனைய கடமைகளையும் நம்புவதாகும். இக்கடமைகளிலேயே மிக முக்கியமானதும் மகத்துவமிக்கதும், "லாஇலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்புவதாகும்.

மேலும் அல்லாஹ்தான் அகிலத்தார்களைப் படைத்து அவர்களின் காரியங்களை தனது அறிவு,ஆற்றளைக்கொண்டு அவன் நாடியது போன்று நிர்வகித்து வருகிறான். அவனே இவ்வுலகத்திற்கும் மறு உலகத்திற்கும் அதிபதி, அகில உலகமனைத்தையும் படைத்துப் பாலிப்பவன்,அவனைத் தவிர வேறு படைப்பாளன் ,அவனைத் தவிர வேறு பரிபாலிப்பவன் எவருமில்லை. அடியார்களைச் சீர் திருத்தவும், இம்மை ,மறுமை வாழ்விற்கு எதில் ஈடேற்றம் இருக்கிறதோ அதன் பால் அவர்களை அழைக்கவும் அவன் தூதர்களை அனுப்பி வைத்தான்.

வேதங்களையும் இறக்கி வைத்தான்.இன்னும் இவை அனைத்திலும் அவனுக்கு இணை துணை ஏதுமில்லை என்று நம்புவதும் அல்லாஹ்வை நம்புவதில் அடங்கும்.
அல்லாஹ் கூறுகின்றான். "அல்லாஹ் அனைத்துப்பொருள்களையும் படைத்தவன் அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்."(39:62)

கண்ணியமிக்க இறை வேதத்திலும் நம்பிக்கைக்குரிய அவனது தூதர் மூலமும் வந்துள்ள இறைவனின் அழகிய பெயர்களையும், உயர்வுமிக்க அவனது பண்புகளையும் மாற்றாமல்,மறுக்காமல், உருவகப்படுத்தாமல்,ஒப்பாக்காமல்
நம்பிக்கை கொல்வதோடு இவை அறிவிக்கின்ற மகத்தான அர்த்தங்களையும் நம்ப வேண்டும். அவ்வர்த்தங்கள் தாம் அல்லாஹ்வின் தன்மையாகும். இத்தன்மைகளிலில் எதையும் அவனது படைப்புகளுக்கு ஒப்பாக்காமல் அவனுக்கே உரித்தான விதத்தில் அவற்றை அவனுக்குக் கொடுப்பது கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான்."அவனைப்போன்று எதுவும் இல்லை அவன்(யாவற்றையும்)செவியேற்பவனும்,பார்ப்பவனும் ஆவான்.(42:11)
 
 
2- மலக்குகளை நம்புவது. 
இவர்களைப் பொதுவாகவும், குறிப்பாகவும் நம்பவேண்டும். எவ்வாறெனில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு மலக்குகளிருக்கிறார்கள், அவன் தன்னை வணங்கும் அர்ஷை சுமக்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டவர்கள்.சுவர்க்கத்தையும்,நரகத்தையும் பாதுகாப்பவர்கள்,அடியார்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் அதிகமான வகையினர் உள்ளனர் என நம்ப வேண்டும்.
மேலும் குறிப்பாக ஜிப்ரீல், மீகாயீல் , நரகத்தின் பாதுகாவளர் மாலிக், சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் இஸ்ராயீல் போன்ற அல்லாஹ்வும் அவன் தூதரும் பெயர் குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றவர்களையும் நம்ப வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்."வானவர்கள் ஒளியாலும் , ஜின்கள் நெருப்பின் ஜூவாலையிலிருந்தும் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(ஏற்கனவே)உங்களுக்குக் கூறப்பட்டு விட்ட ஒன்றிலிருந்து(அதாவது மண்ணிலிருந்து)படைக்கப்பட்டுள்ளனர்." அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள். நூல். (முஸ்லிம்.2996)

 
3- வேதங்களை நம்புவது.

அல்லாஹ் தனது கடமையை விளக்குவதற்காகவும் அதன் பால் மக்களை அழைப்பதற்காவும் தனது நபிமார்கள், ரசூல்மார்களுக்கு வேதங்களை இறக்கியருளினான் எனப் பொதுவாக நம்புவது அவசியமாகும். குறிப்பாக தவ்ராத், இன்ஜீல்,ஜபூர், குர்ஆன் போன்ற அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுச் சொன்ன வேதங்களை நம்ப வேண்டும். திருக்குர்ஆன் தான் இவற்றில் மிகச் சிறந்ததும் இறுதியானதும் ஆகும். இது முந்தைய வேதங்களை விட உயர்வானதும் அவற்றை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் இந்தக்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிவழியையுமே பின்பற்றுவதோடு எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக எடுத்துக்கொள்வது அனைத்து சமுதாயத்தினர் மீதும் கடமையாகும். ஏனெனில் அல்லாஹ் நபி(ஸல்)அவர்களை ஜின், மனித சமுதாயம் அனைத்திற்கும் தூதராக அனுப்பி அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக இந்தக்குர்ஆனையும், அவர்களுக்கு இறக்கியருளினான். இத்திருக்குர்ஆனை அல்லாஹ் இதயங்களிலுள்ளதற்கு நோய் நிவாரணமாகவும், யாவற்றையும் தெள்ளத் தெளிவாக விளக்கக்கூடியதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் ஆக்கினான்.


அல்லாஹ் கூறுகின்றான். "இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதமாகும். எனவே நீங்கல் இதனைப் பின்பற்றுங்கள்;(நம்மை)அஞ்சுங்கள்;அருள் செய்யப்படுவீர்கள்." (6:155)

"இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்கக்கூடியதாகவும்,நேர்வழி
காட்டக்கூடியதாகவும்,அருளாகவும் முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம். (16:89)

 
4- தூதர்களை நம்புவது.

தூதர்களைப் பொதுவாகவும் குறிப்பாகவும் நம்புவது அவசியமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்குச் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறவும் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும் சத்தியத்தின் பால் அவர்களை அழைப்பதற்காகவும் தூதர்களை அனுப்பிவைத்தான். யார் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நற்பாக்கியம் பெற்று வெற்றி பெற்று விட்டார். யார் அவர்களுக்கு மாறுசெய்கின்றாரோ அவர் ஏமாற்றமும் கைசேதமும் அடைந்து தோல்வி அடைந்து விட்டார். இறைத்தூதர்களில் நம்முடைய நபி(ஸல்)அவர்கள் தாம் இறுதியானவரும் மிகச் சிறந்தவருமாவார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான். "திண்ணமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திர்கும் அல்லாஹ்வை வணங்குங்கள் அவன் அல்லாதவர்களை வணங்குவதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என(போதிக்குமாறு)ஒரு தூதரை அனுப்பி வைத்தோம்." (16:36)

"முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.மாறாக அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார்." (33:40)


தூதர்களில் அல்லாஹ்வும் அவன் தூதரும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லியிருகிகின்றவர்களை நாம் குறிப்பாக நம்ப வேண்டும். உதாரணமாக நூஹ், ஹூத், ஸாலிஹ்,இப்றாஹிம்(அலை) மற்றும் பலரையும் நம்ப வேண்டும்.
5- இறுதி நாளை நம்புவது.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவித்துள்ள மரணத்திற்குப் பின்னர் நிகழவிருக்கின்ற அனைத்து விஷயங்களையும் நம்பவது இதில் அடங்கும். உதாரணமாக கப்ருடைய மண்ணரையின் சோதனை, அதன் வேதனை , அங்கு கிடைக்கும் இன்பம் , மறுமை நாளில் ஏற்படுகின்ற அமளிகள் , துன்பங்கள் , பாலம் , தராசு , கேள்வி கணக்கு , நற்கூலி , தண்டனை , மக்களுக்கு பட்டோளை கொடுப்பது , அப்போது தமது பட்டோளை வலது கையில் வழங்குவோர் இருப்பார்கள். தம் பட்டோளை இடது கையில் அல்லது தமது முதுகுக்குப்பின்னால் வாங்குவோரும் இருப்பார்கள்.

இன்னும் நமது நபி(ஸல்)அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர்த் தடாகத்தை நம்புவதும், சுவர்க்கம், நரகம், முஃமின்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது, அவர்களிடம்அல்லாஹ் பேசுவதும் ஆகியவற்றையும் மற்றும் குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் வந்துள்ள இது சம்பந்தமான அனைத்தையும் நம்புவதும் இதில் அடங்கும். எனவே இவையனைத்தையும் அல்லாஹ்வும் அவன் தூதரும் விளக்கிய முறைப்படி நம்புவது கடமையாகும்.


6- விதியை நம்புவது.

இதில் நான்கு விஷயங்கள் உள்ளன.

1- நிச்சயமாக அல்லாஹ் இதுவரை நடந்தனையும் இனி நடக்கவிருக்கின்றவற்றையும் அறிந்துள்ளான். இன்னும் தன்னுடைய அடியார்களின் நிலமைகள், அவர்களின் வாழ்வாதாரங்கள், ஆயுட் காலம், அவர்களின் செயல்கள் மற்றும் அவர்களுடைய இதர விஷயங்கள் அனைத்தையும் அவன் அறிந்துள்ளான். இதில் எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல என நம்புவது .
அல்லாஹ் கூறுகின்றான். "நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (9:115)

2- அவன் நிர்ணயித்துள்ள எல்லாவற்றையும் அவன் எழுதி வைத்துள்ளான் என நம்புவது. அல்லாஹ் கூறுகின்றான். "நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் வரைந்துள்ளோம்."(36:12)

3- செயல்படுத்தப்படுகின்ற அவனது நாட்டத்தை நம்பவது. அல்லாஹ் நாடியது நடக்கின்றது, அவன் நாடாதது நடக்காது . அல்லாஹ் கூறுகின்றான். "அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்வான்"(3:40)
உலகிலுள்ள அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே என நம்புவது. அவனையன்றி வேறு படைப்பாளன் யாருமில்லை. அவனைத் தவிர வேறு பரிபாலிப்பன் எவனுமில்லை.
அல்லாஹ் கூறுகின்றான். "அவன் தான் உங்களைப் படைத்துப் பரிபாலிப்பவானாகிய அல்லாஹ்!அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.(அவன்)ஒவ்வொரு பொருளையும் பாடத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்.அவன் அனைத்திற்கும் பொருப்பாளன்." (6:12)

மேலே சொல்லப்பட்டவைகள் ஈமானின் கிளைகள் . ஒரு முஃமின் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நம்பவேண்டிய ஒவ்வொன்றும் சொல்லப்பட்ட சிரு குறிப்பை மேலே சொல்லப்பட்டு இருக்கின்றது.
எனவே நம்மால் முடிந்த அளவு முழுமையாக ஈமானின் பரிபூரண தன்மைகளை விளங்கி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் உறுதியாக இருப்பதற்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
***********************************************************************************

Thursday, November 22, 2012

மனிதன் செய்யும் செயல்களுக்கே கூலி வழங்கப்படும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.

கேட்போம் அல்லாஹ்விடம்..

அல்லாஹ்வின் திருப்பெயர் மொழிந்து அவனைப்புகழ்ந்து

கீழ் இருக்கும் விஷயங்களை பொருமையோடு அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறும் நமது முஸ்லிம்கள் இன்று நாளா பக்கங்களிலும் அவலநிலைகளையும், பிஞ்சு உள்ளங்கள் சித்திரவதைப்படுத்தப்படுதையும் நோக்கமாகக்கொண்டு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோம் நமது நிலமைகளை ஆரம்பத்தில் மாற்றிக்கொள்வோம் என்ற தலைப்பில் இக்கட்டுரையை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன் .அல்ஹம்துலில்லாஹ்....

ஒரு குழந்தை தனது தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதை விடவும் ஒரு அடியான் தன்னைச் சார்நதிருக்க வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான்.

சிறு குழந்தைக்குத் தாய்தான் உலகம் தாய்க்குத்தான் எல்லாமே தெரியுமென்று அக்குழந்தை நம்புகின்றது. ஒரு பொருளை முன்னால் வைத்துக்கொண்டு தாயிடம் கேட்கும் அது என்ன? இது என்ன? ஏன் அது அப்படி? ஏன் இது இப்படி? என்றெல்லாம் தாயிடம் கேட்கும் அக்குழந்தை.
தாய் போகுமிடமெல்லாம் அக்குழந்தையும் சுற்றிச் சுற்றி வரும்.

எதுக்கெடுத்தாலும் உம்மா! உம்மா! என்று சொல்லும் பசியோ, பயமோ, தாகமோ, தாபமோ, மகிழ்ந்தாலும், அழுதாலும் தாயைத்தான் அழைக்கும். குழந்தை முற்றத்தில் வீழ்ந்து விட்டால் அப்படியே அழமால் வரும். தாயைக் கண்டதும் கண்ணீர் மாலை மாலையாய் விழ ஆழுது விடும். காரணம் அக்குழந்தை மற்ற அனைவரை விடவும் தாயை அனைத்தையும் அறிந்தவள் என்று நினைக்கின்றது.


((((இதை அறியாமல் போ, போட, போடி, சனியனே என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார்கள்)))) நஊது பிள்ளாஹ்.
இது போன்று ஒரு அடியான் என்றும் ,எந்நேரமும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். குழந்தை வளர வளர தாயை விட்டும் கொஞ்சம் கொஞ்சமாக தூரமாகும். அதன் அறிவு வளர வளர அவன் அல்லாஹ்வுடன் நெருக்கமாகின்றான். ""அடியார்களில் தன்னை அதிகம் பயப்படுகிரவர்கள் அறிவாளர்கள் தாம்"" என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். இதற்கு ஒரு உறுதியான உதாரணமும்,உவமானமும் நபியவர்கள் சொன்னார்கள் ""செருப்பின் வார் அருந்தாலும் அதையும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்"" . என்று சொன்னார்கள்.

மேலே சொல்லப்பட்டவை போன்று நாம் எதுவாக இருந்தாலும் நம்மைப்படைத்த இறைவனிடம் எதையும், எப்போதும் கேட்க வேண்டும் சிறு பிள்ளைக்கு சொல்லப்பட்ட உவமானம் இன்று சுற்றுச் சூழலில் வாழும் நம்மவர்களுக்கு மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு விடையம் தான் சிரு பராயம். அதைத் தாண்டி இருக்கும் நாம் அல்லாஹவிடம் மன்றாட வேண்டும். இன்றைக்கு பலஸ்தீன மக்கள் அவர்கள் நம் சகோதரரகள். அவர்களுக்கு ஒரு வலி ஏற்பட்டால் அது நமக்கும் வலிக்க வேண்டும் .


நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
"ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).

நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!

இன்றைக்கு உலக நாடுகளில் நாளா பக்கங்களிலும் முஸ்லீம்கள் சீரழிக்கப்படுகின்றார்கள், படு கொலை செய்யப்பட்டு அல்லாஹ்வடைய நாட்டப்படி அவர்கள் சஹீதாக்கப்படுகின்றார்கள். நிச்சயம் அவர்கள் சுவர்க வாலிப்ர்களும் கண்ணிகளுமே தவிர வேறு இல்லை அல்லாஹ் போதுமானவன். இவர்களின் இக்கொடூரமான சீர் கேட்டு முறைகளை அழித்தொழிக்க நாம் செய்ய வேண்டியாது நாம் முதலில் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக மாற வேண்டும் ஜந்து வேளை தொழுகைகளில் அழுது புலம்பி பலஸ்தீன மக்களுக்காக அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும் சுன்னத்தான, தொழுகைகள் தஹஜ்ஜூத் போன்ற தொழுகைகளை இன்ஷா அல்லாஹ் நாம் தொழுது வர வேண்டும். முஸ்லீம்களுக்காகவும், நமது குடும்பங்களுக்காகவும் அல்லாஹவிடம் கண்ணீர் விட்டு மன்றாட வேண்டும். அல்லாஹ் இறக்கமுள்ளவன், கருணையுள்ளவன்.. நாம் தினமும் தலைப்புச்செய்திகள் கேட்பது, பத்திரிகைகள் பார்ப்பது அடுத்தவர் சொல்லக் கேட்பது இவைகள் நாம் செய்யும் சாதனைகள் இல்லை. அவர்களுக்கு ஒரு வலி ஏற்பட்டால் நமது கண்கள் கண்ணீர் வடிக்க வேண்டும். அவைகள் அப்படி ஆக வேண்டும் என்றால் நாம் இன்றையில் இருந்து நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். கோபங்கள், குரோதங்கள், விரோதங்கள், கசப்புகள், அசப்புகள், பொறாமைகள் , பெருமைகள் இப்படியான தன்மைகளை விட்டும் ஒரு தாய் மக்களைப்போன்று நாம் நம்மை முதலில் திருத்திக்கொண்டு அல்லாஹவுக்கு நெருக்கமானவர்களாக இறுக்காமான உறுதிகளாக இருப்பதோடு நபியவர்கள் நோற்று வந்த சுன்னத்தான நோன்புகள் கிழமைகளில் நோற்ற நோன்புள் இவைகள் இந்த பலஸ்தீன மக்களுக்காக அவர்களின் விமோசனத்திற்காக நாம் நோற்று அவர்களின் நிம்மதி சந்தோஷங்களுக்காக அல்லாஹவிடம் மன்றாடுவோம்.


நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85

யா அல்லாஹ் எங்களை உனக்கு நன்றி செலுத்தும் மக்களாக மாற்றுவாயாக.!

யா அல்லாஹ் எங்களை தொழுகையாளிகலாக மாற்றுவாயாக.!


யா அல்லாஹ் கஷ்டங்களை அனுபவிக்கும் முஸ்லீம்களுக்கு விமோசனத்தைக் கொடுப்பாயாக.!


யா அல்லாஹ் காபிர்களையும், யூரகளையும் உனது கரத்தால் அழித்தொழிப்பாயாக.!


யா அல்லாஹ் நீ வாக்கழித்தது போன்று இஸ்லாத்தை வெற்றிபெறச்செய்வாயாக.!


யா அல்லாஹ் இஸ்லாம் பரவிய பலஸ்தீனம் மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லீம்கள் கையில் நீயே ஒப்படைப்பாயாக.!


யா அல்லாஹ் எங்களின் வாழ்க்கயில் இருக்கும் வீணான எண்ணங்கள், வீணான பகைகள்,குரோதங்கள் , விரோதங்கள், இவைகளை விட்டும் நன்மக்களாக எம்மை மாற்றுவாயாக.!
 
 என்னருமைச் சகோதரர்களே....
என் அருமைச் சகோதரர்களே..!
இன்று உலக அளவில் மனிதன் தன்னை அறிந்தும் அறியாமலும் பாவக்கரைகளில் மூழ்கி இருக்கின்றான்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதன் அநியாயங்களும் ,அட்டூழியங்களும், அடாவடித்தனங்களும், செய்து அவைகளைப் பொருட் படுத்தாமல் தன் மனோ இச்சைப்படி நடந்து கொள்கின்றான்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதன் இன்றைக்கு கண்ணை மூடினாலும் பாவங்கள் ,கண்ணைத் திறந்தாலும் பாவங்கள். பாவம் ,தீமை என்ற பெயரை எத்துணை பேர்கள் இன்று இலாபகரமாக நாம் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதனின் கைகளால் தீமைகளை விலை கொடுத்தும், கொடுக்காமலும் நாளா பக்கங்களிலும் வாங்கிக்கொண்டு அவைகளை மூட்டை மூட்டைகளாக கட்டி வைத்திருக்கின்றான்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதனுக்காக அல்லாஹ் எத்துணை அருட்கொடைகளை வழங்கி மனிதா! நீ இதனை இப்படித்தான் புசிக்க வேண்டும் என்று சொல்லுயும் ..அவைகளை மனிதன் உதாசீணம் செய்கின்றான்.

என் அருமைச் சகோதர்ரகளே..!
மனிதனுக்காக அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக்கி ஹலால் ,ஹராத்தைப் பிரித்துக்காட்டி அவைகளை முறைப்படி செய்யுங்கள் என்று கட்டளை இட்டும் அவைகளுக்கு செவி சாய்க்காமல் விளையும் பயிர்களைப்போன்று எத்துணை மனித சமூகம் வாழ்கின்றது.

என் அருமைச் சகோதர்ரகே..!
இன்றைக்கு இருட்டில் எத்தனை வாலிப்கள் முதல் வயோதிபர்கள் வரை விபச்சாரத்தில் மயங்குகின்றார்கள். யா அல்லாஹ்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதனாகப்பிறந்தவன் கொடூரமான வட்டித் தொழிலையும்,கொடுப்பது, எடுப்பது , எழுதுவது, சாட்சி சொல்வது, உண்பது ,குடிப்பது என்று வட்டியில் மூழ்கிக்கிடக்கும் சமூகங்கள் தான் எத்துணை.?

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் மேலானதும், தன் கவனம் அங்குதான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட நமது மனைவி ,மக்கள் விஷையத்தில் எத்துணை சமூகம் அக்கரை காட்டுகின்றார்கல்.

என் அருமைச் சகோதரர்களே..!
முஸ்லீம்களுக்கு அழிவுகளும்,நெருக்கடிகளும், அடிக்கடி வரக்காரணம் என்ன? யாராவது தன் மனதைத் தொட்டுக்கேட்டதுண்டா.

என்னருமைச் சகோதர்ரகளே..!
இத்துணைக்கும் காரணம் நாம் செய்யும் தீமைகள் , இந்தத்தீமைகலால் அல்லாஹ்வுடைய சோதனை உலகில் எந்தப்பரப்பிலும் ஏற்படலாம்,
அது சுனாமியாக இருக்கட்டும், மழையாக இருக்கட்டும்,வெயிலாக இருக்கட்டும் ,புயலாக இருக்கட்டும், மக்களுக்கு மக்களுக்குளே பிரச்சனைகலாக இருக்கட்டும் எதுவானாலும் உலகில் நடை பெருகின்ற தீமைகளே காரணம்.

என் அருமைச் சகோதரர்களே..!
இதைச் சொல்லுகின்ற நானும் தான் என் காதில் கேட்கும் படி சொல்லுகின்றேன். தீமைகளைத் தவிர்ப்போம், தக்வாவைக் கடைப்பிடிப்போம், ஜங்காலத்தொழுகைகளை முறைப்படி தொழுது பிர மக்களையும் நல்வழியில் கொண்டு வருவோம்.

என் அருமைச் சகோதர்ரகளே..!
நேற்று என்பது.. மாஷா அல்லாஹ் முடிந்து விட்டது.
இன்று என்பது.. ஸூப்ஹானல்லாஹ் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
நாளை என்பது.. இன்ஷா அல்லாஹ் வர இருக்கின்றது. இந்த நாளை என்ற பொழுதில் யார் இருப்போம் யார் இருக்க மாட்டோம் என்று என்னாலும்,உங்களாலும் சொல்ல முடியாது, அதனால் நமக்கு தரப்பட்ட கால நேரங்களை நல்லமல்களில் அதிகம் செலவலிப்போம்.
நமது பேச்சுக்கல், நடத்தைகள், எல்லாவற்றையும் பிரயோசனமான முறையில் கொண்டு செல்ல அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக .

என்னருமைச் சகோதரர்களே..!
இன்றைக்கு பலஸ்தீனம் படுகின்ற துண்பங்கள்,துயரங்கள்,கொடுமைகள் யா அல்லாஹ் சொல்லி முடிக்க முடியாத அளவுக்கு அநியாயமாக கொலை செய்யப்படுகின்ற காட்சிகள் நம் எல்லோருடைய கண்களுக்கும் தென்படுகின்றது.
என்னருமைச் சகோதரர்களே..
கொஞ்சம் நாமெல்லாம் கவலைப்படுவோம், தனிமையில் இருந்து பிறந்தது முதல் இன்று வரைக்கும் நான் என்ன் செய்தேன், நாளை என்ன செய்யப்போகின்றேன் என்று ஜிந்திப்போம்.

என்னருமைச் சகோதரர்களே..
இதைச் சொல்லுகின்ற நானும், இதை வாசிக்கின்ற நீங்களும் நேற்று அப்படி அப்படியெல்லாம் இருந்தோம். இந்த நிமிடம் நாமெல்லாம் ஒரு கோட்டின் கீழ் செல்வோம். குர்ஆனை ஓதுகின்றவர்கள் ஓதுங்கள். நோன்பு நோற்பவர்கள் நோற்றுக்கொள்ளுங்கள் நமது பூமி நமக்கு வேண்டும், நம் முஸ்லீம்கள் நிம்மதி அடைய வேண்டும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன் . அல்லாஹ் நம் அனைவருக்கும் "ஹிதாயத்" என்னும் நேர்வழியைக் காட்டுவாநாக ஆமீன்.
 
 பிரிவுகளும்,பிளவுகளும்.
அல்லாஹ்வின் கட்டளைகளோடு இணைதலே இஸ்லாத்தோடு உறுதியாக இருப்பதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுதல் இஸ்லாத்தை விட்டு பிரிவதாகும். இதை உலக அளவில் முஸ்லிம்கள் மிகப் பெரும்பாலோர் சரியாக உணரவில்லை. அதனால் தான் இணைதல், பிரிதல் என்பதன் தவறான பொருள் விளக்கத்தில் உலக முஸ்லிம்கள் விட்டில்களாய் பிரிவிலும், பிளவிலும் சிக்கித் தவிக்கின்றனர்.
பிரிவுகள் பெயரால் மார்க்க மோசடிகள்,
பிரிவுகள் பெயரால் மார்க்க மீறல்கள்
பிரிவுகள் பெயரால் மாபாதகங்கள்
பிரிவுகள் பெயரால் வழிகேடுகள்….
பிரிவுகள் பெயரால் முஸ்லிம்களுக்குள் மோதல்கள், பொருள் இழப்புக்கள், உயிர் சேதங்கள்,
பிரிவுகள் பெயரால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் அளவிட இயலாது சொல்லியும் மாளாது எழுத்திலும் வடிக்க முடியாது. எனினும் பிரிவுகள் துவங்கியதிலிருந்து இன்றளவும் பிரிவின் பிடியிலிருந்து எந்த மனிதனும், குறிப்பாய் எந்த முஸ்லிமும் விடுபட்டதாய் தெரியவில்லை.


பிரிவுகளின் நிரந்தர முற்றுப்புள்ளி இஸ்லாம்.
இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் மானுட ஒற்றுமை.
முஸ்லிம்கள் மட்டுமின்றி மானுடத்தை ஒன்றிணைக்கும் இறையருளிய வாழ்க்கை நெறி, வாழும் நெறியே இஸ்லாம்.
இதை இன்றளவும் முஸ்லிம்கள் சரியாக உணரவும் இல்லை. முஸ்லிம்களுக்கு உணர்த்தப்படவும் இல்லை. பிரிவுகளின் விபரீத விளைவுகளையும், கேடுகளையும் மற்ற மனிதர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மிக்கோரே முஸ்லிம்கள் –

அல்லாஹ்வின் கட்டளைகளோடு உறுதியாக இருப்பதுவே இஸ்லாமிய ஒற்றுமை. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுதல்-இஸ்லாத்தை விட்டுப் பிரிவதாகும்.இதுதான் அல்குர்ஆன் ஒற்றுமைக்குத் தரும் வரைவிலக்கணம். இவ்வரைவிலக்கணத்துக்கு நபியவர்கள் வாழ்வியல் வடிவமானார்கள். நபியவர்களைத் தொடர்ந்த நபி தோழர்களும் இஸ்லாமிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானவர்கள். நபி காலத்தில் நிலவியதே உண்மை இஸ்லாமிய ஒற்றுமை. இதையே நாம் ஆய்வின் பொதுத் தலைப்பாக்கியுள்ளோம். நபிகால இஸ்லாமிய ஒற்றுமை. இஸ்லாமிய ஒற்றுமையியல் என்பதும் இதுதான்.


அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னி டம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின் றான். அல்குர்ஆன்: 42:13.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.