Followers

Wednesday, December 5, 2012

பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..அதில் புறிந்தது என்ன.?

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
பெரியவர்களே.! சிறியவர்களே.! சகோதரர்களே.! சகோதரிகளே.!
அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக.!

பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..அதில் புறிந்தது என்ன.?

நாட்கள் என்று சொல்லும் போது அந்த நாட்கள் நம்மைக் கடந்து செல்கின்றது. கடக்க வேண்டிய மனிதன் கடக்கின்றான். கடப்பதற்கும்,நடப்பதற்கும் முடியாத மனிதன் ஓய்வெடுக்கின்றான்.இதை மனிதன் தன்னளவில் செயல் படுத்தும் ஒரு காரியம்.
நேரம் என்று சொல்லும் போது அதை நம்மால் பார்க்கத்தான் முடியும் அதன் மூன்று முள்ளுகளும் ஒன்றை விட்டு ஒன்று மாறுவதனால் நேரம் என்ற ஒன்று இயந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதற்கு ஓய்வு கிடையாது. என் வீட்டில் கடிகாரம் இயங்கவில்லை என்றால் அதை இயற்கும் உயிர் மின்கலம் அதாவது bettary இது ஏதாவது சக்தி இழந்தால் என் வீட்டில் கடிகாரம் இயங்காது.இறைவன் நியதி சூரியன் இயங்குவதனால் நேரம் என்ற சொல் நகர்ந்து செல்கின்றது.

இந்த இரண்டுக்குமிடையில் மனிதன் என்ற பெயர் சூட்டப்பட்டவன் அவனை அல்லாஹ் அல்குர்ஆனில் வர்ணிக்கும் போது இப்படிச் சொல்லுகின்றான்.

"நிச்சயமாக நாம் மனிதனை அழகான அமைப்பில் படைத்தோம்."(95:4)
"பின்னர் தாழ்ந்தவர்களில் மிகத் தாழ்ந்தவனாக அவனை நாம் ஆக்கினோம்"(95:5)

இந்த இரு வசனமும் மனிதனின் இரண்டு தன்மைகளை வெளிக்காட்டி சொல்லுகின்றது 1- அவன் அழகானவன் 2- அவன் தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவன்.
இந்த இரண்டு தன்மைகளைக் கொண்டும் மனிதன் மேலே சொல்லப்பட்ட கடந்து செல்லும் நாட்களையும், பார்க்கத்தான் முடிந்த நேரத்தையும் ஒப்பிட்டால் மனிதன் தினமும் என்ன செய்கிறான்,எதைச் சிந்திக்கின்றான் என்ற கேள்விக்கு பதிலே அல்லாஹ் அல்குர்ஆனில் சொன்ன அழகானவன்,தாழ்ந்தவன் என்றதைப் புறிந்து கொள்ளலாம்.


மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெறும் அருட்கொடைதான் இரண்டு கண்களும் இந்தக் கண்கள் எட்டிய தூரத்தை பார்க்கின்றது. இதே கண்ணால் நன்மைகளை சேமிக்கவும் முடியும்,இதே கண்ணால் ஸூப்ஹானல்லாஹ் அல்லாஹ் தடுத்த தீமைகளையும் சேமிக்கலாம். இதுதான் மேலே சொல்லப்பட்ட தலைப்பு பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..ஆனால் புரிந்தது என்ன. ? இதற்கான பதிலை இது வரைக்கும் எவரும் மட்டிட்டுப் பார்க்கவில்லை என்று சொன்னால் அது இந்த இடத்தில் மிகையாகாது காரணம் அப்படியான பார்வைகள் இன்று நோக்கப்படுகின்றது. மறுமை என்னும் அந்த வாழ்வில் கேள்வி கணக்கு கேட்க்கப்படும் போது அல்லாஹ் மனிதனின் நாவுக்கும் பூட்டு போட்டு விடுவான். பேசமுடியாது ஆனால் மனிதனின் ஒவ்வொரு உருப்புகளும் சாட்சி சொல்லும் கண்,காது,கை,கால்,மறுமஸ்தானம் எல்லா உறுப்புகளும் பதில் சொல்லும். அப்போது நாம் என்ன செய்யப்போகின்றோம். நமது உடம்பின் ஒரு சிறு காயம் ஏற்பட்டால்,வலிஒன்று ஏற்பட்டால் ஏன் நமது கண்கள் கலங்குகின்றது கண்ணீர் வடிக்கிறது, இது மனிதனின் உறுப்புகள் ஓற்றுமையாக இருப்பதை நாம் உணர்கின்றோம். அப்படி ஒற்றுமையாக இருக்கும் நமது உறுப்புகள் நாளை மறுமையில் நமக்கெதிரா அல்லாஹ்விடம் சாட்சி சொல்லும் என்றால் உலகத்தில் நாம் எதைப் பார்க்கின்றோம், பார்த்தவைகளை எப்படிப் புரிகின்றோம். என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா.?

மனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும்,


அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மற்றும் ஏனைய இறை வேதங்களின் மூலம் அங்கீகாரம் பெற்ற ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


மேலும் தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளுக்குமான உயரிய வாழ்வு நெறிகளைக் கற்றுத்தருவதோடு மற்றுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கும் உன்னத மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


பாரபட்சமின்றி எத்தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, எக்குலத்தை சார்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் விதமான நேர்மையான சட்டங்களையும், தீர்வுகளையும் கொண்டு சர்வதேச தன்மையுடன் விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

இறைவன் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து சென்று போன காலங்கள் ஏதோ.......என்றும் இன்ஷா அல்லாஹ் வரப்போகும் அடுத்த நிமிடம் அதை உன்னதமான முறையிலும் கழிக்க வேண்டும்.

"அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்". (அல் குர்ஆன் 3:83)
"இன்னும் இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்." (அல் குர்ஆன் 3:85)
"நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்."(அல் குர்ஆன் 3:19)

இவ்வுலக வாழ்கையின் நோக்கத்தை புரிந்து கொண்டு, உண்மையான இலக்கை நோக்கி பயணிப்போர் அனைவருக்காகவும்,

இறைவனால் வழங்கப் பட்ட புத்திநுட்பத்தை செயல்படுத்தி இறைவனை புரிந்துக் கொண்டோர் அனைவருக்காகவும்,


இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனின் அருளை காண விரும்புவோர் அனைவருக்காகவும்,


இறைவனின் வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன் படி நடக்க விரும்புவோர் அனைவருக்காகவும்,


இறைவன் அருளியுள்ள அருட்கொடைகளைப் புரிந்து கொண்டு அதற்கான நன்றி உணர்வையும், இறை நேசத்தையும் உள்ளத்தில் கொள்வோருக்காகவும்,


படைத்து பரிபாளிக்கும் இறைவனுக்கு தனது செயற்பாடுகள் அனைத்தையும் அர்ப்பணம் செய்ய விரும்புவோர் அனைவருக்காகவும்,

இறைவேதங்கள், இறை தூதர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டோருக்காகவும்,

வாழ்க்கைப் படலத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர் கொண்டு தீர்வுத் திட்டத்தை தேடுவோருக்காகவும்,


நான், நீங்கள் உட்பட ஈருலகிலும் நிம்மதியான வாழ்வையும், இறைவன் சித்தப் படுத்தி வைத்துள்ள பேரின்பங்களையும் அடைய விரும்புவோர் அனைவருக்காகவும்,

நம் செயல்களை தூய வடிவில் அமைத்துக்கொள்வோம்.


"ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (அல்குர்ஆன். 22:34)
"ஆணாயினும், பெண்ணாயினும் இறை நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்." (அல் குர்ஆன் 16:97)

ஒருமுஸ்லிம் எப்போதும் பொய் பேசாது உண்மையே பேச வேண்டும்.
ஒரு முஸ்லிம் வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. அவன் நம்பிக்கை நாணயத்துடன் நடக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் மற்றவர்களைப் பற்றி புறம் பேசவோ, மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவி ஆராயவோ, மானப்பங்கப் படுத்தவோ கூடாது.
ஒரு முஸ்லிம் தைரியமுள்ளவனாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது.
ஒரு முஸ்லிம் உண்மையை ஆதரிக்கும் விடயத்தில் நிலையானவனாகவும், உண்மையை எடுத்துக் கூறுவதில் தைரியமுள்ளவனாகவும் இருப்பான்.
அடுத்தவர் தன்னை எதிர்த்த போதும் ஒரு முஸ்லிம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையை சட்ட விரோதமாக மீறவும் கூடாது. அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவன் வலிமை உள்ளவனாகவும் தன்மானத்தை எவரிடமும் இழக்காதவனாகவும் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் தன செயற்பாடுகளை இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும்.
ஒரு முஸ்லிம் கர்வமற்றவனாகவும், கருணையுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
அவன் நன்மை புரிவதோடு அடுத்தவரையும் நன்மை புரியத்தூண்ட வேண்டும். அவன் தீமை புரிவதை தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவரையும் அதிலிருந்து தடுக்க வேண்டும்.


மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். (நூல் திர்மிதி)

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும். ( நூல்: திர்மிதி)


அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இது இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதி). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(அல்குர்ஆன். 4:79)"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (51)
மனிதன் எதையெல்லாம் பார்க்கின்றானோ அந்தப்பார்வை நன்மையானதாக அமைய வேண்டும் ஈமானின் கிளைகளில் கடேசி நிலைதான் மனிதனுக்கு இடையூரு தரும் பொருளை அகற்றுவது. இந்த நிலை கூட மனிதன் தன்னிடத்தில் சர்வசாதாரணமாக தன்நிலையை அமைத்துக்கொண்டு வாழ்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காம­ருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

எனவே அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள எத்தனையோ அருட்கொடைகளை நாம் புசிக்கின்றோம், அந்த அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவர்களாகவும் ,அவனின் கடமைகளை முறையாக நிறை வேற்றும் நன்மக்கலாகவும் அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக.ஆமீன்.
_________________________________________________________________________________
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
 

நரகில் உள்ள வேதனைகள்...

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.
ஒற்றுமை என்றொரு கயிறு ஒற்றையாய்ப் பிடிப்பது தவறு
கற்றவர் கல்லாதோர் முயன்று மற்றவர் இணைந்தால் உயர்வு

மார்க்கத்தில் ஆய்வு கொள் அறிவு பெற்று இறைவனைத் தேடு!
நாம் உரிய காலத்தில் உரியவைகளை இறைக் கட்டளைப்படியும், நபிகளாரின் சொல் - செயல்படியும் ஆற்றி மறுவுலக நல் வாழ்வினைப் பெறுவோம்.

நரகில் உள்ள வேதனைகள்...
******************************
****************************
நரக நெருப்பையும் - அதன் வேதனையையும் பற்றி கடினமாக எச்சரிக்கை செய்கின்றது. நரகத்தின் அகோரமும், அதன் தீப்பிழம்புகளும் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணங்கள் சிறிய அளவில் பூமியி்ன் சிற்சில பகுதிகளில் அவ்வப்போது தெரியத்தான் செய்கின்றன. நல்லுணர்வு பெறும் உள்ளங்களுக்கு இந்த அடையாளங்கள் மகத்தானதாகும்.
மனிதன் என்ன செய்ய வேண்டும்?
1. ஒருவனுடைய நம்பிக்கையை பொறுத்தே அவனுடைய செயல்கள் தொடர்சியாய் அமைகின்றது.
2. அவன் நம்பிக்கையை மேம்படுத்தினால் அதனால் அவன் மேம்படுகிறான்.
3. அவன் தவறான நம்பிக்கை அவனை வழிக்கேட்டில் விட்டுவிடுகின்றது.
4. எனவே நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை அவனை இம்மையிலும்,மறுமையிலும் நன்மையை நோக்கி நடைபோட செய்யும்.
5. இந்த உலகின் நியதி என்னவென்றால் விடாமுயற்சி வெற்றியை தரும் என்பது ஆகும், தீயை தொட்டால் சுடும் என்பதுபோல்.


எல்லாம் பிரித்தறியக்கூடிய ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியிருக்கின்றான். இதன் அடிப்படையில் நரகத்தின் வேதனைகள் அதன் கொடூர தன்மைகள் மனிதன் செய்த பாவங்களுக்கு ஏற்ப தண்டனைகள் நரகத்தில் வழங்கப்படும். பாவம் செய்யும் மனிதனுக்கு அல்லாஹ் சந்தர்ப்பங்களை அள்ளி வழங்கியிருக்கின்றான், ஆனால் மனிதன் அவைகளைப் பொருட் படுத்தாது ஏனோ என்ற கேள்வியை மூட்டையாகக் கட்டி வைத்துள்ளான். இந்த அடிப்படையில் நரகத்தின் வேதனை என்ற தலைப்புகளை கீழே உற்று நோக்களாம்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
“மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” ஆதாரம் : திர்மிதி.

“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)” (குர்ஆன் 40:46)
எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு "எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (குர்ஆன் 32:20)

நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது. அதில் அவன் மரிக்கவும் மாட்டான். வாழவும் மாட்டான். (குர்ஆன் 20:74)


நெருப்பு:
                                                                   
~~~~~~~

மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (குர்ஆன் 2:24)

(ஓரிரைக் கொள்கையில் நம்பிக்கையற்று வாழும்) அவர்களுக்கு நரகத்தில் விரிப்புகளும், அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.(குர்ஆன் 7:41


'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர். அபூ ஹுரைரா(ரலி)
(நூல்: புகாரி . 3265)


விலங்கிடப்படுதல்:                             
                       
 ~~~~~~~~~~~~~~~~
அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.
(குர்ஆன் 40:71,72)

நெருப்பால் ஆன ஆடை:            

 ~~~~~~~~~~~~~~~~~~~

(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.
(குர்ஆன் 22:19,20)


கொதி நீர் தலையில் ஊற்றப்படுதல்: 

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

‘அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டு வாருங்கள்!’ பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!(என வானவர்களிடம் கூறப்படும்.)
(குர்ஆன் 44:47,48)

(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.

(குர்ஆன் 22:19,20)


வெப்பம்:                                   
     
 ~~~~~~~

அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.
(குர்ஆன் 56:42-44)

அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். ‘கோடையில் புறப்படாதீர்கள்!’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது’ என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
(குர்ஆன் 9:81)

அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.

(குர்ஆன் 78:24,25)


குளிர்ச்சி கிடையாது:  
         
 
வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
(குர்ஆன் 78:21-24)

சூடு போடப்படும்:
~~~~~~~~~~~~~~

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!’ (என்று கூறப்படும்)
(குர்ஆன் 9:35)


உள்ளத்தை தாக்கும் நெருப்பு:


ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
(குர்ஆன் 104:5-9)

புரட்டிப் போடப்படுவார்கள்:

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள்.
(குர்ஆன் 33:66)

மேலும் கீழும் வேதனை:

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் ‘நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!’ என்று (இறைவன்) கூறுவான்.
(குர்ஆன் 29:55)


கருகும் தோல்கள்:
     
 நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறுதோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
(குர்ஆன் 4:56)

அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமாக இருப்பார்கள்.

(குர்ஆன் 23:104)


சம்மட்டி அடி:
                

அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.
(குர்ஆன் 22:21)


கூச்சலும் அலறலும்:
    

கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.
(குர்ஆன் 11:106)


 வேதனை குறையாது:     
அவர்களை விட்டும் (தண்டணை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்.
(குர்ஆன் 43:75)


குறைந்த பட்ச தண்டணை:


“ஒருவருக்கு நெருப்பாலான இரு காலணிகள் அணிவிக்கப்பட்டு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)
(நூல் : முஸ்லிம் 311)


சொர்க்கம் செல்வதற்கும் நரகத்தில் இருந்து விடுதலை அடைவதற்கும் இந்த உலக வாழ்க்கை ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது. ஏனெனில் இறை நிராகரிப்பாளராக ஒருவர் மரணித்து விட்டால் மறுபடியும் இந்த உலகத்துக்கு வந்து நம்பிக்கையாளராக மாறுவதற்கு சந்தர்ப்பம் கண்டிப்பாக கிடைகாது. மறுமை நாளில் இறை நிராகரிப்பாளர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று திருமறையில் இறைவன் குறிப்பிடுகிறான்.

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், ‘எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம் நாங்கள் முஃமின்களாக இருப்போம்’ எனக் கூறுவதைக் காண்பீர். (அல்-குர்ஆன் 6:27)

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!”

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.

**********************************************************************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~