Followers

Wednesday, October 24, 2012

வாழ்க்கையின் தத்துவம்.

  

வாழ்க்கையின் தத்துவம்.
 அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு...


வாழ்க்கை என்ற  வர்ணனைக்கு அர்த்தங்கள் பலதாக இருக்கும்
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு எல்லோரும் கொடுக்கும் முக்கித்துவமே
இவ்வுலகம் என்றுதான். இந்த வாழ்க்கைக்கு பொதுவாக இரண்டு 
தத்துவங்களை குறிப்பிடலாம்.

1 வாழ்க்கை என்ற உண்மை நிலை
2 இந்த வாழ்க்கைக்குள் இச்சை கலந்த நிலை
  
இந்த இரண்டு வாழ்க்கைக்குள் நிறைய வேறுபாடுகளும், தத்துவங்களும்
பொதிந்திருப்பதை இன்ஷா அல்லாஹ் நாம் உணரலாம்.
வாழ்க்கை என்று சொல்லும் போது வெறுமனே  அது ஒரு பக்கம் மாத்திரம் யோசிக்க வேண்டிய நிலையல்ல, அதற்கு முன்,பின்
யோசனைகள் புரிந்துணர்வுகள் காணப்படுகின்றது.

இந்த வாழ்க்கையை அமைத்த அல்லாஹ் அந்த வாழ்க்கையை 
எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்
என்ற  தத்தவங்களையும்  அதற்குள் அடங்கியிருக்கும் உண்மை
நிலைகளையும்... எச்சித்துப்புவது முதல் ஆட்சிப்பீடம் வரை  கணக்கிட்டு
காட்டிருக்கின்றான்

அல்லாஹ் சொன்ன பிரகாரம் அவனது றஸூல் காட்டிய பிரகாரம்
அமைத்துக்கொள்வது  தான் வாழ்க்கை என்ற உண்மை நிலைக்க
வரைவிக்கம்.. 
இந்த வாழ்க்கை உலகத்தில் மேலோங்க வேண்டுமானால்,அது
சுபீட்சமாக அமைய வேண்டுமானால் இந்த வாழ்க்கைக்குள் பல
தியாகங்களை தன்னகத்தே செய்ய வேண்டும். உன்னதமான
வாழ்க்கை என்பது மறுமையுடைய வாழ்க்கை இந்த வாழ்க்கையை
தான் நபியவர்களும், சஹாபாக்களும் வாழ்ந்து காட்டினார்கள்
வாழவும் சொன்னார்கள் இதுதான் உண்மை நிலை வாழ்க்கை
என்றதையும் காண்பித்தார்கள் அவர்களுக்கும் மனைவி மக்கள்,
சொத்து சுகங்கள், ஆட்சி அதிகாரங்கள்  எல்லாம் இருந்தது 
ஆனால் அல்லாஹ் ஏவிய பிரகாரம் வாழ்க்கையை அமைத்தார்கள்
அதன் மூலம் அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக்கொண்டான்.

 நிச்சயமாக ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிபவர்களுக்கு ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கங்கள் அவர்களின் தங்கு மிடமாகும். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். அதிலிருந்து மாறுவதை விரும்பமாட்டார்கள்.                                                                 (அல்குர்ஆன்:18:107-108)

 நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள் மீது (அவர்களின் மரண வேளையில்) மலக்குமார்கள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் உள்ளது என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறுவார்கள். 
                                                                                                                     (அல்குர்ஆன் : 41:30)
இதிலிருந்து விளங்குவது என்னவென்றால் நல்லறங்கள் புரிய வேண்டும்.
அந்த நல்லறங்கள். உண்மை நிலை வாழ்க்கையில் மட்டும் தான்
பெற்றுக்கொள்ள முடியும். 
இதன் மூலம் உயர்ந்த சுவர்க்கத்தை அடைய முடியும். உறுதியான
ஈமான் நிலைத்திருப்பதும் நல் வாழ்க்கை வாழக்கூடிய மனிதனிடம்
தான் இவர்கள் மரணிக்கும் வேளையில் கூட மலக்குமார்கள் இறங்கி
அம்மனிதரைப்பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம் கவலையும்
அடைய வேண்டாம் இந்த உலகில் அந்த மனிதன் நல் வாழ்க்கை
வாழ்ந்ததன் காரணமாக  அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனம்
உண்டு என்ற நற் செய்தியை மலக்குமார்கள் கூறுவார்கள்.

இந்த வாழ்க்கையை தான் நபியவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.


 அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : முஸ்லிம் 3496)

வாழ்க்கையை  அடிப்படையாக்கொண்டே சுவனத்தை அடைய முடியும்.
இதற்கு மாற்றமாக நாம் எப்படித்தான் கோட்டை கட்டினாலும்,அது
நிலைத்து நிற்பதில்லை என்ற உண்மைகள் மட்டும் புரிகின்றது.
சற்று நமது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவைகள்
கேள்விக்குறிகளே..
 மனித சமுதாயம் முழுமைக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்று மார்தட்டிக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், விதிமுறைகள் கட்டுப்பாடுகள் நியதிகள் எதையும் அறியாமல், அறிவதற்கு எவ்வித முயற்சியும் மேற்க்கொள்ளாமல், இஸ்லாத்திற்கு முற்ற முரணான மூட நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்கள் வெறுக்கத்தக்க அனாச்சாரங்களையும் நன்மை, புண்ணியம் என்று நடைமுறைப்படுத்திக் கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் தங்களுக்கு தான் இஸ்லாம் சொந்தம் என்றும் உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர் தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! சிந்தியுங்கள்! 
மனிதர்கள்-மனிதர்களுக்காக உருவாக்கிய விதிமுறைகள் மீறப்படும் போது சொற்ப அவகாசம் கொடுக்கப்படுகிறது! பின் மீறியவர் தண்டிக்கப்படுகிறார்! இது மனித நியதி! ஆனால், அல்லாஹ் அருளிய கொள்கை வாழ்க்கை நெறி! ஏற்றுக் கொண்டவர்களால் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும் அதற்காக இம்மையில் எவ்வித தண்டனையும் இல்லை. இது அல்லாஹ்வின் பேரருள். இப்போது எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ் மனித சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பேரருள் புரிந்து கொண்டிருக்கின்றான் என்பதை உணர முடியும்.

 உலக வாழ்க்கை (வெறும்) வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. பயபக்தியுடையவர்களுக்குநிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன்.  6:32)

எனவே  உண்மை நிலையான வாழ்க்கை தான் மறுமை வாழ்க்கை
அது நிரந்தரமானது  அந்த வாழ்க்கைக்காக  இந்த உலகில் தியாகங்கள்
செய்து மனோ இச்சைகளைக் கட்டுப்படுதி வாழ்வது நமது கடமை.

2.இந்த வாழ்க்கைக்குள் இச்சை கலந்த நிலை.

உலகம் என்பது  மனிதனைப் பாதாளத்தில் தள்ளி விடும்  இந்த நிமிடம்
இந்த உலகம் மனிதனுக்கு ஒரு ஆசையைக் காட்டும் அந்த ஆசைக்கு
மனிதன் அடிமையாகி அவனது உடலில் எங்கெல்லாம் இரத்தம் 
ஓடுகின்றதோ அங்கெல்லாம் அந்த ஆசைகள் வளம் வருகின்றது.
இதை மனிதன் உணர்வதில்லை . காலங்கள் கடக்கலாம் ,நேரங்கள்
மாறலாம் அப்போது மனிதன் சொல்லும் வார்த்தைகள் நான் அதை 
நம்பினேன் சாதிக்க வில்லை அவனை நம்பினேன் கிடைக்க வில்லை 
என்று மனிதன் இன்றைக்கு  இச்சைகள் நிறைந்த வாழ்க்கையை
அடிப்படையாக கொண்டு தாயின் வயிற்றில் ஒரு குழந்தை உருவாகி
அந்தக்குழந்தை கூட இவ்வுலகில் பிறந்து தந்தையின் அடிப்படை
நோக்கங்களை அறிந்து அதன் வழியில் மாற்றங்களை செய்து 
வாழ்கின்ற வாழ்க்கையையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
நல்லறங்கள் செய்யும் உள்ளம் அனாச்சாரங்களுக்கு அடிமையாகி,
இலச்சிய முஸ்லிமின் பெயர்களை கெடுத்து தான் தோன்டித்தனமாக
வாழ்வது மிகவும் கவலைக்குரிய விடையம்.

 இறைநெறியை மீறியோர்க்கு தண்டனை! மறுமையில் இது அல்லாஹ் வின் நியதி. இறை நெறியைக் கடைப்பிடித்து மனித சமுதாயம் முழுமைக்கும் அதை எத்திவைக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட பரம்பரை-பெயர்தாங்கி முஸ்லிம்களே! அதை நீங்களே மீறிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும். 
 இஸ்லாமிய நெறியை மீறிக்கொண்டே இஸ்லாமிய நெறிக்கு உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரைப் பெயர்தாங்கி முஸ்லிம்களே! இம்மையில் நீங்கள் ஏதேனும் காரணம் கூறி அதை மறைத்து விடலாம். அல்லது விதண்ட வாதம் செய்து மழுப்பி விடலாம். நாளை-மறுமை நாள்! அல்லாஹ்வின் முன்னிலை! எந்த சாக்கு போக்குகள் சொல்லியும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இதை நம்மில் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்து இஸ்லாம் காட்டிய கொள்கை, கோட்பாடுகள், நெறிகள், நடைமுறைகளை அறிந்து ஒழுகி உண்மை முஸ்லிம்களாய் மாற ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.

 'பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.'' - (அல்குர்ஆன் 28: 83)

எனவே ஆணவம் இல்லாத , அனாச்சாரம் இல்லாத  உன்னதமான
வாழ்க்கையை வாழ்ந்து உண்மை நிலை வாழ்க்கையை முறையாக
நாம் வாழ்ந்து நமது பிச்சலங்களுக்கும் வாழ்ந்து காட்டி  இச்சைகலுக்கு
அடிமையாகாமல் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு
நாமும் வாழ்வோமாக ஆமீன். 


அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
===============================*************==============================