Followers

Sunday, December 9, 2012

காலத்தின் தேவையும்,பெற்றோர்களின் அவசியமும் குழந்தை வளர்ப்பு...

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.

காலத்தின் தேவையும்,பெற்றோர்களின் அவசியமும் குழந்தை வளர்ப்பு...

இறைவன் நமக்கு அளித்த செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் 'குழந்தைகள்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக புதுமணத் தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத்தான்.

சிலருக்கு இறைவனின் கருணையால் குழந்தைப் பேறும் கிடைத்துவிடுகின்றது. ஆனால் கிடைத்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குகிறார்களா?

குழந்தை வளர்ப்பு என்பது அந்தக் குழந்தையை பாலூட்டி, சீராட்டி, நடை பயிலும் காலம்வரை கண்காணிப்பது மட்டுமல்ல. உண்மையிலேயே பால்குடிப் பருவம் முதல் நடை பயின்று பள்ளிப் பருவம் வரை அன்போடு வளர்ந்த எத்தனையோ குழந்தைகள் பெரியோர்கள் ஆனதும் ஒழுங்கீனத்தில் ஊற்றுக்கண்களாக நடப்பு சமுதாயத்தில் கெட்ட முன்மாதிரியாக உருவெடுப்பதைக் காணமுடிகின்றது. இன்னும் சிலர், பெற்றோர்களோ பெருமிதம் கொள்ளும் அளவிற்கு நன்நடைத்தைகளும், தொழுகை போன்ற வணக்கங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்க்கின்றோம்.

அவர்களது பழக்க வழக்கங்கள் பொழுது போக்குகள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். நன்பர்கள் நன்மையின் பக்கம் செல்பவர்களாகவும் தீமையை வெறுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எத்தனையோ நன்பர்களின் நட்பு அவர்களை தீமையின் பக்கம் சென்று வழி தவறிவிடுகிறார்கள். இதனை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்கள் அலட்சியத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

பெற்றோர்கள் அவசியம் ஏற்படும்பொழுது அந்தப் பிள்ளைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்கானித்து அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின் ரகசியத்தையும் . இன்று உலக அளவில் பார்க்கிறோம்.
பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்த பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நன்மை செய்தவர்களாகவும், இவ்வாறு பொருப்பை உணராமல் அந்த கடமையைப் பாழாக்கியவர்களின் பிள்ளைகள் சமுதாயத்திற்கு கேடாக அமைந்து இவ்வுலகிலும் மறு உலகிலும் துன்பமே அடைவார்கள்.


“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:28)

பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து பிள்ளைகளை வளர்ப்பதில் தங்கள் கடமைகளை பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினால் அந்தப் பிள்ளைகள் ஒரு போதும் அவர்களுக்கு எதிரியாக மாட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
(அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி)

இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.

பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (பார்க்க புகாரி 1385)
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

இறைத் தூதர்களின் இந்த வழி காட்டுதல்களின் அடிப்படையில் நடந்தவர்களில் ஒருவர் தான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள். நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கவாதி என்று முன்னறிவிப்புச் செய்யப் பட்டவர்கள். தம் குழந்தையை இஸ்லாமிய முறைப்படி வளர்ப்பதில் முக்கியத்துவமும் அதிக அக்கறையும் எடுத்துள்ளார்கள் என்பதற்கு நாம் முதலில் எடுத்துக் காட்டிய ஹதீஸ் சான்றாக உள்ளது.

"என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்)". (அல்குர்ஆன் 31:16-19)

லுக்மான் அலைஅவர்கள் தன் மகனுக்கு அறிவுறை செய்தார்கள் இது அல்குர்ஆனில் பொதிந்திருக்கும் வாசகம் இதை குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் எல்லாக் கட்டுறைகளிலும் காணலாம் ,காரணம் இந்த லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்குப் போதித்த போதனை உலகம் அழியும் வரை இந்த உலகில் வாழ்கின்ற எல்லாக் குழந்தைகளுக்கும்,பெற்றோர்களுக்கும் ஒரு முக்கிய பாடம் என்பதை யாரும் மறந்து விடவேண்டாம்.

முரணான காரியங்களில் ஈடுபடும் பிள்ளைகளை மார்க்க சிந்தனையின் பக்கம் நாம் திருப்ப வேண்டும்.மறுமை நாள் ஏற்படும் போது நாம் எவ்வளவு தான் பாசம் வைத்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. மறுமை நாளில் ஒவ்வொருவரும் தம் நிலையைத் தான் பார்ப்பார்களே தவிர அடுத்தவர்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பிள்ளையாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் சரியே!
அல்லாஹ் அல்குர்ஆனில் இதையும் கூறுகின்றான்.

"பயங்கர சத்தம் வந்து விட்டால்" ,"அந்நாளில் மனிதன் தன் சகோதரனையும்", "தன் தாயையும்", "தன் தந்தையையும்","தன் மனைவியையும்","தன் பிள்ளைகலையும் விட்டு விரண்டோதுவான்."
(80:33,34,35,36)

குழந்தை விஷையத்தில் பெற்றோர்களே . . கவனமாக இருங்கள் ஈமானைப் பரிபூரணமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்,
இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.
 
குழந்தைகளுக்கு அறிவுறை செய்யுங்கள்.

அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.

இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.
உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.
அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.
தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய பிராத்தனைகளைக் கற்றுக் கொடுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் கொடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.

பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;
நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.


நம்மில் எத்தனை பேர் நம்முடைய குழந்தைகளை குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதக் கூடியவர்களாக உருவாக்கி இருக்கிறோம்? இறைவன் திருமறையில், ‘இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்’ என்று ஒரே சூராவில் சூரத்துல் கமர் என்ற ஒரே சூராவில் திரும்ப திரும்ப நான்கு முறை கூறுகின்றான். ( 54:17) (54:22) (54:32) (54:40)
எனவே குர்ஆனைக் கற்றுக்கொடுங்கள், குர்ஆனை மனனம் செய்யும் பாக்கியத்தை அடைவதற்காக முயற்சியும் செய்யுங்கள்,

நாம் சொர்க்கம் செல்வதற்கு, நம்முடைய நல்ல அமல்கள் மறுமை நாளில் நமக்கு உதவிசெய்யும். நம்முடைய நற்செயல்களைத் தவிர மற்றவர்களுடைய நற்செயல்களின் மூலமாகவும் சொர்க்கம் செல்ல முடியும்! அதற்கான வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.


‘மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் அருமையான போதனை! நாம் நம்முடைய குழந்தைகளை மார்க்க போதனைகளுடன் வளர்த்து இருந்தால், நாம் இறந்தபிறகு, நமக்காக நம் குழந்தைகள் கேட்கக்கூடிய துஆக்கள் மூலம், மறுமை நாள்வரை நமக்கு நன்மைகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாத ஒன்று நிச்சயமாக நன்மைகள் வந்து கொண்டே இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே காலத்தின் தேவை நம் பிள்ளைகளை நல்வழிக்குக் கொண்டு வருவது ,நன்நடத்தைகளைப் பழக்குவது, தீமைகளை விட்டும் தடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
இன்ஷா அல்லாஹ் நல்லதொரு திட்டத்தை, வாழ்கை என்ற புதிய பாடத்தை நம் பிள்ளைகளுக்கு கற்றும்,கற்பித்துக் கொடுக்கும் நல்ல பெற்றோர்களாக மாறுவதற்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக .ஆமீன்.
******************************
*******************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
*****************~~~~~~~~~~
~~~~~~~***************
 

இஸ்லாம் என் உயிர்



இதயத்தாலும், உணர்வுகளாலும் பிணைந்திருக்க வேண்டிய சகோதரத்துவம்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.

இதையும் நல்மனதோடு படியுங்கள்...

சகோதரத்துவம் என்பது வெறும் சித்தாந்தமாக பேசப்பட வேண்டிய கொள்கையல்ல.
அது இதயத்தாலும், உணர்வுகளாலும் பிணைந்திருக்க வேண்டிய உறவாகும்.
ஆனால் இன்றைக்கு இந்த உறவு முறை பெரும்பாலானவர்களிடத்தில் எப்படி இருக்கிறதென்றால் திருமணம் போன்ற சந்தோஷமான நேரங்களில் கூடி மகிழ்ந்து விட்டு செல்வதும்,
மரணம் நிகழ்நது விட்டால் அவ்விடத்துக்கு வந்து சோகமாக இருந்து விட்டுப் போவதுமாகத்தான் இன்றைய சகோதரத்துவம் இருக்கிறது.
அடுத்த வினாடி......அடுத்த நாள்....அடுத்த வாரம்.....அடுத்த மாதம்....
எங்கே நம் சமூக உறவுகள்,சகோதரத்துவங்கள் எங்கே ....சிந்திப்போம்,செயல்படுத்துவோ
ம்,சகோதரர்களாக,,,,,,

“எ
ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு சகோதரத்துவமாகத்தான் இருக்க முடியும் எனக் கருதும் இஸ்லாம் அவ்வுணர்வின்றி வாழ்வதனை பெரும்பாவமாகவும், ஈமான் கொள்வதற்கு தடையான அம்சமாகவும், குறிப்பிடுகின்றது. இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது...என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” (முஸ்லிம்)

எனவே, ஒருமுஸ்லிம் அடுத்த முஸ்லிமை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக பரஸ்பரம், அன்பு கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையின் சுவையை அடைவதற்கான மூன்று பண்புகளில் ஒன்றாக அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்புவதனையும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

இன்றைக்கு சகோதரத்துவ உறவை ஆழ்மனதில் உற்று நோக்கும் போது கவலைக்கிடமாக இருப்பதை நாம் எல்லோரும் உணர முடியும்.
சகோதரத்துவத்தை எவ்வாறு பேண வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாம் நமக்கு ஒரு பாடதிட்டத்தையே வழங்குகிறது. முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த விஷயங்களை கடைபிடித்தால் சகோதரத்துவம் மேலோங்கும், சகோதரத்துவம் பாதிப்படையாமல் இருக்க எந்த விடயத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மிக விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இஸ்லாம் உருவாக்க விரும்பும் சகோதரத்துவத்தின் உயரிய நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால்…
ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும்.

”எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 61:4)

ஆம், ஈயத்தால் வார்த்து உருவாக்கப்பட்ட சுவர் எப்படி உறுதியானதாக இருக்குமோ, எவ்வளவு பிணைப்பாக, வலிமையாக இருக்குமோ, அதைப்போன்று முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அந்த சுவரினுள் ஓட்டையோ, விரிசலோ விழாதவாறு பார்த்துக்கொள்வது ஈமான் கொண்ட ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.

சகோதரத்துவத்தை பேணுவதற்கும், உறவுமுறைகளை அனுசரித்து செல்வதற்கும் நமக்கு தேவையான குணம் பெருந்தன்மையும், மன்னிக்கும் பழக்கமும். மனிதர்கள் ஒரு சமூகமாக வாழும்போது சில கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் ஏற்படுவது இயல்பு. ஒரு வீட்டில் வசிக்கின்ற உடன்பிறந்த சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு கருத்து நிலவுவதில்லை. ஒரு சமூகம் எனும்போது கருத்து வேறுபாடுகள் இயல்புதான். ஆனால் அந்த கருத்து வேறுபாடுகள் சமூகத்தில் பிரிவினைகளையும், ஒற்றுமையை குலைப்பதாகவும் அமைந்து விடக் கூடாது. ஒற்றுமையின்மையும், பிரிவினையும் முஸ்லிம் சமூகத்தின் பலத்தை வீழ்த்திவிடும்.

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 8:46 )

எனவே சகோதரத்துவம் பேணப்படவேண்டும்.
உருக்கமான ,நிறைவான பாசம் பேணப்பட வேண்டும்.
பணம் பதில் சொல்லாது. சகோதரத்துவம் பதில் சொல்லும்.
உலகில் சகோதரத்துவத்தைத் தேடவேண்டும்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்.
மனிதனின் மானத்தை விலைக்கு வாங்குவது முறையற்றது.
சமூகத்தோடு சேரவில்லை என்றால் அவன் பிணம்.
தனக்கு விரும்புவதையே தன்னுடைய பிற முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும். அதனுடைய உயரிய நிலை எதுவென்றால், தனக்கு தேவையிருப்பினும், தன்னுடைய முஸ்லிம் சகோதரனுடைய தேவைக்காக முன்னுரிமை தருவது ஆகும்.

சகோதரத்துவம்- பரஸ்பரப் புரிந்துணர்வு- வன்முறைகள் இல்லாத அமைதியான வாழ்க்கை ஆகியவற்றையே இஸ்லாம் ஊக்குவிக்கின் றது. கூட்டுறவையும் சகிப்புத் தன்மையையும் அது போதிக்கின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகள் இன்றைய உலகில் காணப்படும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதற்கு வழிகாட்டுவதுடன் உன்னதமான மானிடப் பெறுமானங்களையும் ஊக்குவிக்கின்றது.

எனவே- முஹம்மத் நபி (ஸல்) அவர் களின் போதனைகளின் ஒளியில் சகிப்புத் தன்மை- புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த புதியதோர் சமூகத்தை இந்த  உலகில் நாம் கட்டியெழுப்ப முடியும். இன்ஷா அல்லாஹ் எல்லோரும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள்.சென்ற காலம் முடிந்து விட்டது,தன்னறிந்த தவறுகள்,தன்னறியாத தவறுகள் நிகழ்ந்திருக்கலாம், இனி வர இருக்கும் அடுத்த வினாடியே நமது புதிய நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 
******************************************************

அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

Saturday, December 8, 2012

லஞ்சம்.... இது கேடு கெட்ட செயல்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.

நம்மளவிலும்,நம் சமூகத்தின் வரிசையிலும் திண்டாடிக்கொண்டிருக்கும் லஞ்சம் என்ற தலைப்பை இங்கே தரிசனம் செய்கின்றேன்.
இந்த லஞ்சம் என்ற பதம் இன்று சமூகத்துக்கு மத்தியில் ஏதோ ஓழிக்கமுடியாத , தன்னளவில் இருந்து அகற்றமுடியாத ஒரு கேடு கெட்ட நிலையை இன்று உலகளாவிய ரீதியில் கண்டு வருகின்றோம்.
அது தன் கை மூலம் கொடுக்கும் லஞ்சம், தன் நாவின் மூலம் வாக்குக் கொடுக்கும் லஞ்சம், தன் செயல்ரூபத்தில் நிர்னைத்துக் காட்டும் லஞ்சம் என்று இன்னும் பல பெயர்களின் மூலம் அந்த வார்த்தையைப் பாவிக்கலாம்.

"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி( ஸல்) அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள்.
அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர்.
நபி(ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள்.
மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?" என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள்.
"இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022.

மேலே சொல்லப்பட்ட நபிமொழியை ஆழமாக சிந்தித்தால் ஒரு மனிதன் தன் தேவைகளை எப்படிச் செய்யவேண்டும், என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளலாம்.
அல்லாஹ் கூறுகின்றான். "மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறானமுறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதனுடைய பொருட்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்".(2:188)

இவ்வசனம் உணர்த்தும் உண்மை என்னவென்றால். இன்றைக்கு வீட்டை விட்டுப் பாதைக்கு சென்றால் வீடு திரும்பி வருமுன் லஞ்சம்,!
முறையிட போலிஸ் நிலையம் சென்றால் அங்கும் லஞ்சம்,!
கிராம உத்தியோகத்தரிடம் சென்றால் அங்கும் லஞ்சம்,!
பாடசாலைக்கு பிள்ளைகளின் தேவைக்கு பெற்றால் சென்றால் அங்கும் லஞ்சம்,!
திருமணம் முடிக்க பெண்ணோ,ஆணோ பார்க்கவேண்டும் என்றால் அதில் செல்லும் புரோக்கருக்கு லஞ்சம்,!
ஏழைகள், பணக்காரர்களிடம் தன் தேவையை சொல்வதற்குச் சென்றால் அங்கு லஞ்சம்,!
எல்லாம் முடிவில் இதற்கு தீர்வு கான அரசியலை நாடினால், நீதி கேற்பதற்கு நீதவானை நாடினல் அங்கும் லஞ்சம்.!


இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம்.
பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன.
பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன.
இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும். ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது. லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவில்ல எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை.
அல்லது தாமதப்படுத்தப்படுகிறது.
லஞ்சத்தின் காரணமாக தொழில் நிறுவனர்களில் விற்க, வாங்க பொறுப்பேற்றுள்ள பிரதிநிதிகளின் பைகளில் பொருளாதாரம் நுழைந்து விடுகிறது.
இதுபோன்ற தீயவிளைவுகளின் காரணங்களினால் தான் நபி(ஸல்)அவர்கள் இத்தவறுக்கு உடன்படும் இரு தரப்பினருக்கும் பாதகமாக பிரார்த்தித்தார்கள்.


(ஒரு விவகாரத்தில்) தீர்ப்புப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:அஹ்மத்.

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.
சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் அமைதி என்ற நம் மார்க்கம் நமக்கு பல எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.

மெத்தப் படித்து மேதைகள் ஆவார்
சொத்தைச் சேர்த்து சோடையும் போவார்
அர்த்தம் நூறு வாழ்க்கைக் குரைப்பர்
பொத்திப் பொத்தி பிள்ளையை வளர்த்து
பொறுத்துப் பொறுத்து பிழைகளை மறைத்து
மொத்த வாழ்வும் விழலுக் கிரைப்பர் நம்மவர்கள்.

மிச்சமுள்ள வாழ்வில் இன்னும்
மீந்திருக்கும் நாளும் கொஞ்சம்
மின்னலென ஞானம் வரப்பெற்றால்
அச்சமில்லா வாழ்வுந் தோன்றும்
ஆன்மீகத் தெளிவுந் தோன்றும்
உண்மையொளி உணரக் கூடும்.


இதுக்கு ஒப்ப மனித வாழ்க்கையையும் ,அதே வாழ்க்கைக்கும் நடமாடும் கேடு கெட்ட லஞ்ச ஊழல்களையும் ,நமக்குப் பின்னால் வர இருக்கும்,வளர இருக்கும் நம் குழந்தைச் செல்வங்களின் எதிர் கால நிலையையும் சற்று நிதானமாக சிந்திக்கக் கடமைப் பட்டவர்கள் முஸ்லிம் சமுதாயம்.

இந்த சமுதாயத்தில் குடிமகனும் கூட தெளிவாக, லஞ்சம் தந்தால் தப்பிவிடலாம் என்று, எண்ணும் நிலையுள்ளது. ஊழல் நிறைந்த பிரதிநிதிகள் கொண்ட சமுதாயத்தை, எதிர்கால தூண்களான மாணவர்களால் மட்டுமே மாற்ற முடியும்.

ஊழல் எதிர்ப்பு என்பது சாதாரண பணியல்ல, அபாயகரமான பணி. ஊழல் எதிர்ப்பு ஓர் புள்ளியாக துவங்கி, எதிர்காலத்தில் பெரிய புரட்சியாகவும், வெற்றியாகவும் மாறும். படித்தவர்கள் ஊழலுக்கு எதிராக சிந்தித்து மாற்றம் ஏற்படுத்த விரும்பினால்,தேசத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் வரும்.
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள் பற்றி அல்குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் அத்தகைய தீமைகள் சர்வ சாதாரணமாக மலிந்து கிடப்பதை காணலாம். இன்று பெரும்பாலான மனிதர்கள் சிறிது வசதி வந்தவுடனேயே கர்வத்துடனும் மார்க்கத்தின் செயல்பாடுகளில் அலட்சியத்துடனும் தங்களை ஏதோ வானத்தில் இருந்து குதித்ததுபோல் காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் ஏதோ ஆயிரம் வருடங்கள் இந்த உலகத்தில் வாழப் போவது போலவும்தங்களிடம் இருக்கும் இந்த செல்வம் நிலையாக இருக்கும் என்றும் ஒருவித மயக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சிந்தனை உடைய முஸ்லிம்கள் தாங்கள் நிலையை மாற்றி நிலையில்லாத இந்த உலக வாழ்கையை விட நிலையான மறுமை வாழ்கையே சிறந்தது என்பதை தங்களுடைய மனதில் நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாத்தின் போதனைகளை மற்றவர்களிடம் பரப்ப தங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் தவறிழைக்கக்கூடியவர்களே! அந்தத் தவறிலிருந்து மனிதர்களைத் திருத்தவேண்டுமென்ற நோக்கில், பல்வேறு சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டாலும் தவறுகள் குறைந்தபாடில்லை. நாகரீகம் வளர வளர தவறும் பல்வேறு பரிமாணங்களில் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய தீமையிலிருந்து இரண்டு விஷயங்களால் மட்டுமே மனிதனை தீமைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

1. இறை அச்சம்
2. வெட்கம்

இறைவனுக்கு அஞ்சக்கூடிய ஒருவன், மக்கள் மத்தியில் இருந்தபோதும் தனிமையில் இருக்கும்போதும் தவறு செய்ய அஞ்சுவான். ஏனெனில், மனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் அகிலமனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கும் இறைவன் நாம் செய்யும் தவறை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். நாளை நியாயத்தீர்ப்பு நாளில்  ஆதம்[அலை] அவர்கள் முதல், உலகம் அழியும் காலத்தில் இறுதியாக பிறந்த மனிதன்வரை அனைவரையும் ஒன்றுதிரட்டும் அந்த மஹ்ஸர் மைதானத்தில், நம்முடைய தீமைகளை வெளிச்சம்போட்டு காட்டுவான் என்ற அச்சம் இருந்தால் ஒரு மனிதன் தவறு செய்வதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வான்.
இறை அச்சம் பலவீனமாக இருக்கும் ஒருவனிடத்தில் வெட்கஉணர்வு இருந்தால், அவனும் தவறு செய்ய யோசிப்பான். ஏனெனில், நாம் தவறு செய்யும் போது யாராவது பார்த்துவிட்டால் மானம் போகுமே என்ற அவனுடைய வெட்கம் அவனை அந்தத் தவறிலிருந்து தற்காத்து காப்பாற்றும்.

எனவே அல்லாஹ் நம்மை இறையச்சமுள்ளவர்கலாக மாற்றுவானாக.!
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
**********************************~~~~~~~~~~~~~~~~~~~**************************** 

Thursday, December 6, 2012

சின்னச் சின்ன செயல் ஏறாளமான நன்மைகல்

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமம் போற்றி துவங்குகின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்...

மனிதனுக்கு அல்லாஹ் சிரமத்தை நாடவில்லை, மனிதன் தன் செயலால்,சிந்தனையால் தனக்குள்ளே பல சிரமங்களை அவ்வப்போது ஏற்படுத்திக்கொள்கின்றான், சின்னச் சின்ன அமலாக இருந்தாலும் அவைகளை தூய்மையாகச் செய்யும் போது ஏறாளமான நன்மைகளை அவன் அடைகின்றான் சுருக்கமாகச் சொன்னால் தன் சகோதரனைப் பாரத்து புன்னகைப்பதும் தர்மம் என்று நபியவர்கள் கூறினார்கள்.
இது போன்று ஏறாளமான நன்மைகளை தருவது நமது செயல் இதன் அடிப்படையில் மனிதன் செய்யவேண்டிய,நன்மைகளைத் தேடவேண்டிய நபிகளாரின் போதனைகளை இங்கே குறிப்பிடுகின்றேன்.நல்லுணர்வு பெருவோர் நிறைவான நன்மைகளைப் பெற்று பிற மக்களுக்கும் செய்யுமாறு கட்டளை பிறப்பிக்கவே இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன் இன்ஷா அல்லாஹ் ..அல்லாஹவுக்கே எல்லாப் புகழும்.

முஃமின் மற்றொரு முஃமினுக்கு
உடல்


"ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும், இரக்கம்
காட்டுவதிலும் இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ
காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால்அதனுடன் மற்ற உறுப்புகளும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக் கின்றன. அத்துடன் (உடல்முழுவதும்) காய்ச்சல் கண்டு விடுகின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 6011


கட்டிடம்

"ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடக்க வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),
நூல் : புகாரி 481


இறந்த வீடு
இறை நினைவில்லாத வீடு


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429

 நபியின் உதாரணம்
கட்டிடத்தின் இறுதி செங்கல்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 3535


கஞ்சனும்,வள்ளனும்

"கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1443, 1444, 5797


ஐவேளைத் தொழுகையின் உதாரணம்

'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்' என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071

அன்பளிப்பை திரும்பப் கேட்பவன்
தன் வாந்தியை தின்னும் நாய் போன்றவன்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப்போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (2589)


வளைந்த எலும்பை மேலும் வளைக்காதே!

பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3331, 5184, 5186


முஃமினே ஏமாறாதே!

இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6133


குர்ஆன் ஒதுபவரின் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று!வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப்போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டுகுர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன்வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின்நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும்கிடையாது.
அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 5020


ஸஜ்தாவில் நாயைப் போல் விரிக்காதே!

'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 822, முஸ்லிம் 850


நல்ல நண்பன், கெட்ட நண்பன்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்தி ருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையா வது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்!
அறிவிப்பவர் : அபூமூசா (ரலி)
நூல் : புகாரி (2101)


மெளனம் சம்மதமே!

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137


நயவஞ்சகனின் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
முஸ்லிம் (5369)


தொழுகையில் ஒட்டகத்தைப் போல் அமராதே!

'உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1079

முஃமினுக்கு உலகம் சிறைச்சாலை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5663


அல்லாஹ்வை எப்படி பார்ப்போம்
 
"அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?'' என்று நாங்கள்கேட்டோம். அதற்கு அவர்கள், "(மேக மூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும்சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?'' என்று கேட்டார்கள்.நாங்கள், "இல்லை'' என்று பதிலளித்தோம். "இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப்போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்''
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7439


சொர்கத்திற்கான அழைப்பை ஏற்றவரின் உதாரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர்’இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்’ என்றார். அதற்கு மற்றொருவர் ‘கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம் விழித்திருக்கிறது’என்று கூறினார். பின்னர் அவர்கள் ‘உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்’ என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’ என்றார். மற்றொருவர் ‘கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது’ என்றார். பின்னர் அவர்கள் ‘இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லை’ என்று கூறினர்.
பின்னர் அவர்கள் ‘இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்’ என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’ என்று சொல்ல மற்றொருவர் ‘கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது’என்றார். அதைத் தொடர்ந்து ‘அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்’ என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 7281

பாவமன்னிப்பு கேட்கும்போது இறைவனின் மகிழ்ச்சிக்கான உதாரணம்

ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான், யாருமற்ற வெட்ட வெளியில் அவனது ஒட்டகம் அவனை விட்டு ஓடவிடுகின்றது. அவனது உணவுப் பொருட்களும் குடிப்பதற்கான தண்ணீரும் அந்த ஒட்டகத்தின் மீது தான் இருந்தன. இனிமேல் தன் ஒட்டகம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நம்பிக்கையிழந்து ஒரு மரத்தடியில் வந்து படுத்து விடுகிறான். இந்த நிலையில் திடீரென அவனது ஒட்டகம் அவன் கண் முன்னே நிற்கக் காண்கிறான். அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இறைவா! நீ எனது அடிமை, நான் உனது எஜமான்'' என்று மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன சொல்கிறோம் என்பது கூடப் புரியாமல் கூறி விடுகிறான். இந்த மனிதன் அடையும் மகிழ்ச்சியை விட ஒரு அடியான் பாவ மன்னிப்புக் கேட்கும் போது அல்லாஹ் பெரு மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4932


நபிகள் நாயகத்தின் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் என்னை நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பியுள்ளதற்கு உதாரணம், நிலத்தில் விழுந்த பெருமழையின் நிலையைப் போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும் முளைக்கச் செய்யும் நல்ல நிலங்களாகும்.
வேறுசில தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதை இறைவன் மக்க ளுக்குப் பயன்படச் செய்தான். அதிலிருந்து மக்களும் அருந்தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர்; (பயிரிட்டுக் கால்நடைகளை) மேய்க்கவும் செய்தனர்.
அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை.
இதுதான், இறைமார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நல் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கின்ற வனுக்கும் உதாரணமாகும்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 4587


பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் உதாரணம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்''
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1358, 1359, 1385,


அல்லாஹ்வை நினைவு கூர்வது

இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7563

ஸலாம் கூறுதல்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ”இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

தீங்கு தரும் பொருளை அகற்றுவது

”ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 2472

தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 246

நல்ல வார்த்தைகளைப் பேசுதல்

நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

பேரீச்சம் பழத்தின் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை விட்டுத் தப்பிக்க நினையுங்கள். இல்லையென்றால் நல்ல வார்த்தையின் மூலம் (நரகத்தை விட்டுத் தப்பியுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், ”உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்” என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) நூல்: அபூதாவூத் 1534

பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்

உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 4760

கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்

”ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ”எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ”ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 2363, 6009

சின்னச் சின்னச் செயல்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளன. அவற்றை நாம் செய்து நன்மை செய்யும் நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
 

மனிதனைப் பரிகாசம்,ஏளனம் செய்தல்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ...ஒரு மனிதன் எந்தளவுக்கும் இன்னும் ஒரு மனிதனைப் பரிகாசம்,ஏளனம் செய்தல்  என்ற தலைப்பை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...

மனிதன் மண்ணினால் படைக்கப்பட்டு ,அந்த மண் தரையின் மேல் அவனுக்கு வாழ வதிவிடம் கொடுத்து, கொஞ்சக்காலம் அந்த மண் தரையின் மேல் வாழ்ந்து  ,மீண்டும் அம் மண்ணறைக்குள் செல்லும் அளவுக்கு அல்லாஹ் மனிதனை மண்ணினால் படைத்தான். இப்படிப் படைக்கப்பட்ட மனிதன். மனிதன் மனிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்,உரிமைகள் இருக்கின்றது..வெறுமனே வயிற்றில் உருவானோம்,பிறந்தோம், வாழ்ந்தோம்,மரணித்தோம் என்று இருக்கக் கூடாது என்றுதான் "வெறுமனே" என்ற பெயர் இருக்காமல் அது நிறைந்ததாக இருக்க வேண்டும்,அதில் பிரயோசனமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் உண்ணத நோக்கம்.
இதன் அடிப்படையில் மனிதன் மனிதனுக்கு பராகாசம் ,ஏளனம் செய்தால் இது எந்த அளவுக்கு மனிதனின் மோசமான செயல்  என்பன போன்ற சிறு குறிப்பை இன்ஷா அல்லாஹ் கீழே நோக்களாம். அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நல்லருள் புரிவானாக.


ஆரம்பமாக.... நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்......
‘நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள்! ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள்! எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
( புகாரி 7288, முஸ்லிம் 1337,

நபியவர்களின் சொல், செயல், அங்கிகாரம். இந்த அடிப்படையில் நபியவர்கள் தடுத்தவைகளை விட்டும் விளக வேண்டும், நபியவர்கள் ஏவியதை முடிந்த அளவு கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு இடையில் ஹராம்,ஹலால் பிரித்தறிவிக்கப் பட்டும் அதற்குள் வேள்வி கேற்பதை வீண் விவாதம் செய்வதை நபியவர்கள் தடுத்தார்கள் இதனால் தான் அன்றைய சமூகம் அழிவுக்கு உள்ளானார்கள் என்பதை மேலே நபிமொழி நன்றாக உணர்த்துகின்றது.

"எவர்கள் அறியாமை காரணமாகப் பாவம் செய்து,பின்பு விரைவாகவே மன்னிப்பும் தேடுகிறார்களோ அவர்களுக்கே அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. இவர்களுக்கே அல்லாஹ் மன்னிப்பு வழங்குகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும்,ஞானமிக்கவனாக
வும் இருக்கின்றான்."(4:17)

மனிதன் தவறு செய்யக் கூடியவன் அவன் தவறுக்கும் ,மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அறியாமையின் காரணமாக பாவம் செய்து பின்னர் அவன் மனம் வருந்தி அல்லாஹ்விடம் இறைஞ்சும் போது கருணையாளன்,இரக்கமுள்ளவன் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.


"எவர் தீய செயலைச் செய்து , அல்லது தனக்குத் தானே அநியாயம் செய்து,பின்பு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறாரோ அவர் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் கண்டுகொல்வார்."(4:110)

மனிதன் இன்றைக்கு கண்மூடித் தனமாக மக்களின் பார்வைக்கும், இரகசியமாகவும்,பரகசியமாகவும், பாவத்தில் மூழ்கி இருக்கின்றான். தீய செயல்களை செய்தவனாக, தனக்கும் பிறருக்கும் அநியாயம் செய்தவனாக இருக்கின்றான். எனவே இப்படியான மனிதனை அல்லாஹ் மன்னிக்கின்றான். அவன் பாவ மன்னிப்புக் கேற்கும் போது மாத்திரம். இது அல்லாமல் அவனுக்கு இணை வைப்பதை அல்லாஹ் மன்னிக்வே மாட்டான்.

"நிராகரித்தோருக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது. (அதனால்) அவர்கள் நம்பிக்கை கொண்டோரை பரிகசிக்கின்றனர். (அல்லாஹ்வை) அஞ்சி நடப்போர்தாம் மறுமை நாளில் அவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். மேலும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றி வழங்குவான்."(2:212)

இவ்வுலக வாழ்க்கை ஒரு அற்பமான ஒன்று இந்த உலகம் நிரந்தரமற்றது மறுமையோ முடிவே இல்லாத வாழ்க்கை என்பது அல்லாஹ்வின் போதனை .இதை மனிதன் அல்லாஹ்வை மறந்தவன் .இவ்வுலக வாழ்க்கையை கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்கின்ற மனிதன் பிற மனிதனை ஏளனம் செய்கின்றான், தரங்குறைவாகப் பார்க்கின்றான். இவ்வுலக வாழ்க்கை நிராகரிப்பாளர்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது, முஃமின்களுக்கு ஒரு கட்டுப்பட்டை அமைத்துள்ளது இஸ்லாம் .
ஒரு முஃமினுக்கும், காபிருக்கும் இவ்வுலகம் எப்படி என்பதை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5663


"நிச்சயமாக (நபியே!) உமக்கு முன்னுள்ள பல தூதர்கள் பரிகசிக்கப்பட்டனர். அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ, அது அவர்களில் பரிகசித்தோரைச் சூழ்ந்து கொண்டது." (6:10)

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக"உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது" என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்)


நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின் குடும்பத்தையே சமூகப் பரிகாசம் செய்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது என்று கட்டுப்பாடு விதித்தனர். மண்ணை வாரி இறைத்தது ஒரு கூட்டம். பைத்தியம் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூட்டம். அவர்கள் நடந்து செல்லும் பாதையில் முள்ளை பரப்பி வைத்து விட்டு மறைந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தது இன்னொருமொரு கூட்டம். இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் எறிந்து, கடுமொழி கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம். அவர்களுக்கு ஏற்ப்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம். இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்"எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்" (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரழி) நூல்: மூஅத்தா)

"நம்பிக்கையாளர்களில்,தர்மங்களைத் தாராளத் தன்மையுடன் வழங்குவோரையும் தங்கள் உழைப்பைத் தவிர வேறு எதையும்(தர்மம் செய்யப்)பெற்றுக்கொள்ளாதோரையும் குறை கூறி, ஏளனம் செய்தோரை அல்லாஹ்வும் ஏளனம் செய்கின்றான். இன்னும் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு."(9:79)

"நம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத்தினர் மற்றொரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்யவேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும் பட்டப் பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்டபின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்." (49:11)

இஸ்லாம் மனித வாழ்வின் எல்லாத்துறைகளிலும் வழி காட்டும் ஒருமார்க்கமாக விளங்குவதால், சமூகத்தில் ஒருவருக்கொருவர் எவ்வாறு பழகிக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றது. அவற்றுள் ஒருவரை யொருவர் கேலி பண்ணி கோபமூட்டும் பழக்கத்தை முற்றும் கண்டிக்கின்றது.

இன்றைய உலகில், நல்லோர் தீயோர் என்ற இரு பிரிவினர் இருந்தே வருகின்றனர். தீயோர் என்போர் நல்லோரை இம்சித்தும் – கேலி செய்தும் வஞ்சித்தும் – ஏமாற்றியும் வருவது கவலைக்குரிய விடயமாகும்.

பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர் படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காக ‘ரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சி’ என்று தொலைக் காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள்.

இவ்வாறு பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ அல்லது செயல்களாலோ அல்லது ஏன் நாவால் கூடவோ இருக்கலாம். பிறரைத் துன்புறுத்தி மகிழும் இத்தகைய இழி செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிக கடுமையான தண்டணைகள் காத்திருக்கின்றது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர் (ரலி), ஆதாரம் : புகாரி.

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.


நாம் கோபத்தினால் ஒருவரைப் பற்றி பலவாறாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட கவலைப் படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: -

“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.

மேலே கூறப்பட்ட நபிமொழிகள் மனிதன் இன்னும் ஒரு மனிதனோடு நடந்து கொள்ளும் முறைகளை வரிசைகளாக கூறுகின்றது. ஒரு மனிதனை ஏளனம் செய்வது, குத்திக் காட்டுவது ,புறம் பேசுவது, திட்டுவது பட்டம் சூட்டுவது, இது போன்ற செயல்கள் முஃமினுக்கு ஆகுமானதல்ல என்பதை மேலே சொல்லப்பட்ட குர்ஆன்,ஹதீஸ் அடிப்படைகளை வைத்து உவமானங்கள் மூலம் சொல்லப்பட்ட விடையங்களையும் மனிதனாகிய நானும் நீங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார். ரகசியம் காப்பது ஆண்மையின் அடையாளமாகும். அவரது உறுதிமிக்க நற்குணத்தின் வெளிப்பாடாகும். இது நபி (ஸல்) அவர்களின் தூய நெறியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் புகழுக்குரிய நற்பண்புமாகும்.


உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ள மாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும்
அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமான மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என அல்குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.


(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குத்தான். (28 : 83)

எனவே காலங்கள் கடந்து செல்லும் இச்சந்தர்ப்பத்தில்..
அடுத்து வரும் வினாடியை உணர்ந்தவர்களாக ..
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரன் என்பதை உணர்ந்து...
நாளை மறுமையில் ஒவ்வொன்ருக்கும் பதில் சொல்லவேண்டும்.என்பதைத் தெளிவாக உணர்ந்து..
தன்னை சீர் திருத்தி விட்டு மற்றவர்களை நல்வழிப்படுத்தும் நன் மக்களாக அல்லாஹ் என்க்கும் ,உங்களுக்கும் நல்லருள் புரிவானாக ,ஆமின்..
 
0000000000000000000000000000000000000000000000000000
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.
(((((((((((((((((((((((((((*****************)))))))))))))))))))))))))))) 
 

Wednesday, December 5, 2012

பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..அதில் புறிந்தது என்ன.?

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
பெரியவர்களே.! சிறியவர்களே.! சகோதரர்களே.! சகோதரிகளே.!
அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக.!

பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..அதில் புறிந்தது என்ன.?

நாட்கள் என்று சொல்லும் போது அந்த நாட்கள் நம்மைக் கடந்து செல்கின்றது. கடக்க வேண்டிய மனிதன் கடக்கின்றான். கடப்பதற்கும்,நடப்பதற்கும் முடியாத மனிதன் ஓய்வெடுக்கின்றான்.இதை மனிதன் தன்னளவில் செயல் படுத்தும் ஒரு காரியம்.
நேரம் என்று சொல்லும் போது அதை நம்மால் பார்க்கத்தான் முடியும் அதன் மூன்று முள்ளுகளும் ஒன்றை விட்டு ஒன்று மாறுவதனால் நேரம் என்ற ஒன்று இயந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதற்கு ஓய்வு கிடையாது. என் வீட்டில் கடிகாரம் இயங்கவில்லை என்றால் அதை இயற்கும் உயிர் மின்கலம் அதாவது bettary இது ஏதாவது சக்தி இழந்தால் என் வீட்டில் கடிகாரம் இயங்காது.இறைவன் நியதி சூரியன் இயங்குவதனால் நேரம் என்ற சொல் நகர்ந்து செல்கின்றது.

இந்த இரண்டுக்குமிடையில் மனிதன் என்ற பெயர் சூட்டப்பட்டவன் அவனை அல்லாஹ் அல்குர்ஆனில் வர்ணிக்கும் போது இப்படிச் சொல்லுகின்றான்.

"நிச்சயமாக நாம் மனிதனை அழகான அமைப்பில் படைத்தோம்."(95:4)
"பின்னர் தாழ்ந்தவர்களில் மிகத் தாழ்ந்தவனாக அவனை நாம் ஆக்கினோம்"(95:5)

இந்த இரு வசனமும் மனிதனின் இரண்டு தன்மைகளை வெளிக்காட்டி சொல்லுகின்றது 1- அவன் அழகானவன் 2- அவன் தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவன்.
இந்த இரண்டு தன்மைகளைக் கொண்டும் மனிதன் மேலே சொல்லப்பட்ட கடந்து செல்லும் நாட்களையும், பார்க்கத்தான் முடிந்த நேரத்தையும் ஒப்பிட்டால் மனிதன் தினமும் என்ன செய்கிறான்,எதைச் சிந்திக்கின்றான் என்ற கேள்விக்கு பதிலே அல்லாஹ் அல்குர்ஆனில் சொன்ன அழகானவன்,தாழ்ந்தவன் என்றதைப் புறிந்து கொள்ளலாம்.


மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெறும் அருட்கொடைதான் இரண்டு கண்களும் இந்தக் கண்கள் எட்டிய தூரத்தை பார்க்கின்றது. இதே கண்ணால் நன்மைகளை சேமிக்கவும் முடியும்,இதே கண்ணால் ஸூப்ஹானல்லாஹ் அல்லாஹ் தடுத்த தீமைகளையும் சேமிக்கலாம். இதுதான் மேலே சொல்லப்பட்ட தலைப்பு பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..ஆனால் புரிந்தது என்ன. ? இதற்கான பதிலை இது வரைக்கும் எவரும் மட்டிட்டுப் பார்க்கவில்லை என்று சொன்னால் அது இந்த இடத்தில் மிகையாகாது காரணம் அப்படியான பார்வைகள் இன்று நோக்கப்படுகின்றது. மறுமை என்னும் அந்த வாழ்வில் கேள்வி கணக்கு கேட்க்கப்படும் போது அல்லாஹ் மனிதனின் நாவுக்கும் பூட்டு போட்டு விடுவான். பேசமுடியாது ஆனால் மனிதனின் ஒவ்வொரு உருப்புகளும் சாட்சி சொல்லும் கண்,காது,கை,கால்,மறுமஸ்தானம் எல்லா உறுப்புகளும் பதில் சொல்லும். அப்போது நாம் என்ன செய்யப்போகின்றோம். நமது உடம்பின் ஒரு சிறு காயம் ஏற்பட்டால்,வலிஒன்று ஏற்பட்டால் ஏன் நமது கண்கள் கலங்குகின்றது கண்ணீர் வடிக்கிறது, இது மனிதனின் உறுப்புகள் ஓற்றுமையாக இருப்பதை நாம் உணர்கின்றோம். அப்படி ஒற்றுமையாக இருக்கும் நமது உறுப்புகள் நாளை மறுமையில் நமக்கெதிரா அல்லாஹ்விடம் சாட்சி சொல்லும் என்றால் உலகத்தில் நாம் எதைப் பார்க்கின்றோம், பார்த்தவைகளை எப்படிப் புரிகின்றோம். என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா.?

மனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும்,


அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மற்றும் ஏனைய இறை வேதங்களின் மூலம் அங்கீகாரம் பெற்ற ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


மேலும் தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளுக்குமான உயரிய வாழ்வு நெறிகளைக் கற்றுத்தருவதோடு மற்றுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கும் உன்னத மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


பாரபட்சமின்றி எத்தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, எக்குலத்தை சார்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் விதமான நேர்மையான சட்டங்களையும், தீர்வுகளையும் கொண்டு சர்வதேச தன்மையுடன் விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

இறைவன் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து சென்று போன காலங்கள் ஏதோ.......என்றும் இன்ஷா அல்லாஹ் வரப்போகும் அடுத்த நிமிடம் அதை உன்னதமான முறையிலும் கழிக்க வேண்டும்.

"அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்". (அல் குர்ஆன் 3:83)
"இன்னும் இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்." (அல் குர்ஆன் 3:85)
"நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்."(அல் குர்ஆன் 3:19)

இவ்வுலக வாழ்கையின் நோக்கத்தை புரிந்து கொண்டு, உண்மையான இலக்கை நோக்கி பயணிப்போர் அனைவருக்காகவும்,

இறைவனால் வழங்கப் பட்ட புத்திநுட்பத்தை செயல்படுத்தி இறைவனை புரிந்துக் கொண்டோர் அனைவருக்காகவும்,


இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனின் அருளை காண விரும்புவோர் அனைவருக்காகவும்,


இறைவனின் வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன் படி நடக்க விரும்புவோர் அனைவருக்காகவும்,


இறைவன் அருளியுள்ள அருட்கொடைகளைப் புரிந்து கொண்டு அதற்கான நன்றி உணர்வையும், இறை நேசத்தையும் உள்ளத்தில் கொள்வோருக்காகவும்,


படைத்து பரிபாளிக்கும் இறைவனுக்கு தனது செயற்பாடுகள் அனைத்தையும் அர்ப்பணம் செய்ய விரும்புவோர் அனைவருக்காகவும்,

இறைவேதங்கள், இறை தூதர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டோருக்காகவும்,

வாழ்க்கைப் படலத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர் கொண்டு தீர்வுத் திட்டத்தை தேடுவோருக்காகவும்,


நான், நீங்கள் உட்பட ஈருலகிலும் நிம்மதியான வாழ்வையும், இறைவன் சித்தப் படுத்தி வைத்துள்ள பேரின்பங்களையும் அடைய விரும்புவோர் அனைவருக்காகவும்,

நம் செயல்களை தூய வடிவில் அமைத்துக்கொள்வோம்.


"ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (அல்குர்ஆன். 22:34)
"ஆணாயினும், பெண்ணாயினும் இறை நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்." (அல் குர்ஆன் 16:97)

ஒருமுஸ்லிம் எப்போதும் பொய் பேசாது உண்மையே பேச வேண்டும்.
ஒரு முஸ்லிம் வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. அவன் நம்பிக்கை நாணயத்துடன் நடக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் மற்றவர்களைப் பற்றி புறம் பேசவோ, மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவி ஆராயவோ, மானப்பங்கப் படுத்தவோ கூடாது.
ஒரு முஸ்லிம் தைரியமுள்ளவனாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது.
ஒரு முஸ்லிம் உண்மையை ஆதரிக்கும் விடயத்தில் நிலையானவனாகவும், உண்மையை எடுத்துக் கூறுவதில் தைரியமுள்ளவனாகவும் இருப்பான்.
அடுத்தவர் தன்னை எதிர்த்த போதும் ஒரு முஸ்லிம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையை சட்ட விரோதமாக மீறவும் கூடாது. அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவன் வலிமை உள்ளவனாகவும் தன்மானத்தை எவரிடமும் இழக்காதவனாகவும் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் தன செயற்பாடுகளை இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும்.
ஒரு முஸ்லிம் கர்வமற்றவனாகவும், கருணையுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
அவன் நன்மை புரிவதோடு அடுத்தவரையும் நன்மை புரியத்தூண்ட வேண்டும். அவன் தீமை புரிவதை தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவரையும் அதிலிருந்து தடுக்க வேண்டும்.


மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். (நூல் திர்மிதி)

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும். ( நூல்: திர்மிதி)


அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இது இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதி). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(அல்குர்ஆன். 4:79)"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (51)
மனிதன் எதையெல்லாம் பார்க்கின்றானோ அந்தப்பார்வை நன்மையானதாக அமைய வேண்டும் ஈமானின் கிளைகளில் கடேசி நிலைதான் மனிதனுக்கு இடையூரு தரும் பொருளை அகற்றுவது. இந்த நிலை கூட மனிதன் தன்னிடத்தில் சர்வசாதாரணமாக தன்நிலையை அமைத்துக்கொண்டு வாழ்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காம­ருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

எனவே அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள எத்தனையோ அருட்கொடைகளை நாம் புசிக்கின்றோம், அந்த அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவர்களாகவும் ,அவனின் கடமைகளை முறையாக நிறை வேற்றும் நன்மக்கலாகவும் அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக.ஆமீன்.
_________________________________________________________________________________
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~