Followers

Wednesday, October 31, 2012

உபதேசம் பயன் தரும்


* குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எதாவது கருத்து வேறுபாடு
தென்பட்டால்  பித்னா நோக்கிலோ , அதன் கருத்தை தேடியோ  கருத்து
முரண்பாடான வற்றைப் பின்பற்றுவதாக உனது கொள்கை இருக்கக்
கூடாது..
உண்மையில் அதன் கருத்தை அல்லாஹ்வை அன்றி யாரும் அறியமாட்டாகள். அறிவில் நன்கு தரிபாடான, அனைத்தும் அல்லாஹ்விட
-மிருந்து வந்தவை, நாம் அப்படியே நம்பிக்கை கொண்டோம். என்று 
சொள்ளக்கூடியவர்களில் இருந்து கொள்.
கருத்து வேறுபாடுகள் பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
"உனக்கு சந்தேகமான ஒன்றை சந்தேகம் இல்லாததன் பக்கம் விட்டு விடு".
(ஆதாரம். நஸாஈ).

"யார் சந்தேகமானவைகளைத் தவிர்ந்து கொண்டாரோ அவர் தனது 
மார்க்கத்திற்கும், மானத்துக்கும் பாதுகாப்பெடுத்துக்கொண்டார். யார்
சந்தேகமான விடையங்களில் ஆகிவிடுகிறாரோ அவர் ஹராத்தில்
ுழைந்து விட்டார்" . (ஆதாரம் . புகாரி, முஸ்லிம்).

"பாவம் என்பது உனது உள்ளத்தில்  ஊசலாடி மனிதர் அதை அறியக்கூடாது
ன  நீர் விரும்பியதாகும்". (ஆதாரம். முஸ்லிம்).

"உனது உள்ளத்திடம் மார்க்கத்தீர்ப்புக் கேள்!. (அவ்வாறு மூன்று விடுத்தம்
கூறிய நபிஸல்அவர்கள்) நன்மை என்பது உனது உள்ளம் அது பற்றி
ஆறுதல் அடையக்கூடியது. பாவம் என்பது உனது உள்ளத்தில் ஊசலாடி
அதைச் செய்வது பற்றி நீர் ஈரெண்ணம் கொண்டதாகும். மனிதர்கள்
தீர்ப்பு வழங்கிய போதிலும் உனது உள்ளத்தில் தீர்ப்புக்கேள்!".
(ஆதாரம். அஹ்மத்  

* மனோ இச்சையைப் பின்பற்றுவதை உனக்கு எச்சரிக்கிறேன்.
 அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் எச்சரித்துள்ளான்.
       
"முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்". (4:135)

”வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீ்ங்கள் பின்பற்றாதீர்கள். அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன் தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்”" என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (5:77)


நாம் வாழும் இப்பூவுலகம் இயல்பாகச் சுற்றிக்கொண்டிருக்க, தன்னுடைய படைப்பில் சுயமாக எந்தப் பங்கும் இல்லாத மனிதன், இறைவன் தந்த உடல் உறுப்புகளைக் கொண்டு இயந்திரமாய் உழைக்கிறான். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதாது என்று கருதும் அளவுக்கு நேரப் பற்றாக்குறை. வானமும், பூமியும், அண்ட கோளங்களும், கடலும், வின்மீன்களும் தனது இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க, 6-வது அறிவு கொடுக்கப்பட்ட மனிதனோ பொருளாதாரத்தில் பேராசைக் கொண்டு, தன் வாழ்வாதாரத்தை பெருக்கத்தான் பேயாய் உழைக்கிறான். நான் எனும் அகந்தையில் சிக்கி நான் பணக்காரனாக வேண்டும், நான் ஆடம்பர உடைகள் அணிய வேண்டும், நான் அடுக்கு மாடிகள் கட்டி உல்லாச வாகனங்களில் வலம் வரவேண்டும் என்று ஓடி ஆடி பணத்தைத் தேடுகிறான். அது எவ்வகையில் சம்பாதித்தாலும் சரியே!

மற்ற மனிதரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் தம்மைவிட பணக்காரர் என்று இருமாப்புக் கொண்டு பேராசையில் இன்னும் ஓடுகிறான். பணம், பணம் என்று நடைபிணமாய் அலைகிறான். மறுமையை மறந்து இம்மையை நேசிக்கிறான்! பணத்தை யாசிக்கிறான்.

அல்லாஹ் தன் திருமறையில்

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை(அல்லாஹ்வை விட்டும்) பராமுகமாக்கிவிட்டது. நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை(102:1,2)


* தனி மனிதனுக்கோ, கருத்துக்கோ பிடிவாதம் பிடிப்பதை எச்சரிக்கிறேன்.
மூதாதையர்கள்  வாழ்ந்துள்ள நிலை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு
தடையாக இருக்கலாம். உண்மை என்பது ஒரு முஃமீன் தவறிய பொருள.
அதை எங்கு கண்டாலும் அவனே அதை எடுப்பதற்குத் தகுதியானவன்.
அல்லாஹ் கூறுகினான்.
"அல்லாஹ் இறக்கி வைத்ததன் பாலும், இத்தூதரின் பாலும் வாருங்கள்
என அவர்களுக்குக் கூறப்பட்டால் எங்களது மூதாதையர்களை  எதில்
ங்கள் கண்டோமோ   அதுவே எங்களுக்கப்போதுமானது  எனக்
கூறுகின்றனர். அவர்களது மூதாதையர்கள் எதையும் அறியாதவர்களாகவும்,
நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப்பின்பற்றுவார்கள்.)"   (5:104)

* காபிர்களுக்கு ஒப்பாகுவதை உனக்கு எச்சரிக்கிறேன்.
அன்னியவர்கள் அதாவது காபிர்கள் எப்படி ஆடை அணிகின்றாரக்ள், எப்படி
திருமணம் செய்கின்றார்கள், எப்படி முடி வளக்கின்றார்கள் வெட்டுகின்றார்கள்  எப்படி மக்களோடு பழகுகின்றார்கள் என்று இன்னும்
எத்தனையோ விஷயங்கள் அதுவே அனைத்துக் குழப்பங்களுக்கும்
அடிப்படைக் காரணம் . நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். "யாராவது இன்னொரு சமூகத்தினரைப் பின்பற்றினால் அவன் அவர்களைச் 
சேர்ந்தவனாகும்". (நூல். அபூ தாவூத்.)   

* அல்லாஹ் அல்லாதவற்றின் மீது நம்பிக்கை கொள்வதை உனக்கு
எச்சரிக்கிறேன்.
படைத்தவன் அல்லாஹ் , பரிபாலிப்பவன் அல்லாஹ் ஆக்கின்றவன் அல்லாஹ், அழிக்கின்றவன் அல்லாஹ்   இவைகள் அல்லாமல் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட பொருட்கள் மீது நம்பிக்கை வைப்பது
வழிகேடு  இந்த வழி கேட்டின் முடிவு நரகம். அல்லாஹ் கூறுகின்றான்.           
       
  நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)


* அல்லாஹ்வைப் பற்றி தப்பெண்ம் கொள்வதை உனக்கு எச்சரிக்கிறேன்.
படைத்த அல்லாஹ்வை பற்றி தப்பெண்ணம் கொல்வது மிகப் பெரும்
பாவமாகும் அப்பாவத்துக்கு தண்டணை கொடுப்பவனும் அல்லாஹ் தான்
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.  ஹதீஸூல் குத்ஸியில் அல்லாஹ்
கூறுவதாக.  "எனது அடியான் என்னைப் பற்றி எண்ணும் இடத்தில் நான் 
இருக்கிறேன்". (நூல் புகாரி,முஸ்லிம்)

* சூனியக்காரர்களை, சஸ்திரக்காரர்களை நம்புவதை உனக்கு எச்சரிக்கிறன்.
அவர்கள் தங்களுக்கு மறைவான  விடையங்கள் பற்றி அறுவு இருப்பதாகக்
கருதுகின்றனர். தட்டுகளில் ராசிகளை வெளிப்படுத்துகின்றனர். ஒருவருடைய
பாக்கியம், துற்பாக்கியம்  பற்றி அறிகின்றனர். அவைகளை நம்புவது  இணை
வைப்பாகும் அவைகள் வழிகேடைகும் ஒவ்வொரு வழிகேடும் நரகத்துக்கு
கொண்டு சேர்க்கும்.  மறைவானவற்றை அல்லாஹவை அன்றி வேறு
யாரும் அறிய மாட்டார்கள்.

*  அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளில் பொடி போக்குச் செய்வதை
உனக்கு எச்சரிக்கிறேன்.
மனிதனுக்கு அல்லாஹ் வங்கியிருக்கும் அருட்கொடைகள், இவைகளை
மனிதன் பரிமாறிவிட்டு அவனுக்கு நன்றி செலுத்தாமல் இருக்கின்றான்
மனிதன். அவனுக்கு கடமையாக்கப்பட்டதை புரக்கணித்து வாழ்கின்ரான் 
மனிதன்.  அல்லாஹ் மனிதனுக்கு செல்வத்தைக் கொடுத்தால்  அதை
ஹராமான முறையில் செலவு செய்கின்றான் மனிதன். 
னவே இவைகளை விட்டும் மனித நீ தவிர்ந்து கொள் உனக்கு சுவனம் 
நிச்சயிக்கப்பட்டால் அது அல்லாஹ்வின் நாட்டம் உலக வாழ்க்கையில்
நீ  திருந்தி வாழ்
நீ  திருத்தி வாழ்
நீ திருந்த வாழ்
அல்லாஹ் உனக்குப் போதுமானவன் .

_______________________________________________________________________________
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்,
SRI LANKA
**********************************************************************************
 
           .      

No comments:

Post a Comment