Followers

Thursday, November 1, 2012

தடுக்கப்பட்ட சில விடையங்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

தடுக்கப்பட்ட சில விடையங்கள்.

அடுத்தவர்களை நோக்கமாகக் கொண்டு நல்லமல்கள் செய்வது.

வல்ல அல்லாஹ் கூறுகின்றான் . நான் இணைவைக்கப்படுவதை
விட்டும் மிகவும் தேவையற்றவன். எவரேனும் ஒரு நல்லமலைச்
செய்து அதில் என்னுடன் வேறொருவரை இணைத்துக்கொண்டால்
அவனது இணைவைத்தலுடன் அவனை நான் விட்டு விடுவேன்.

உள்ளரங்கம் கெட்டு வெளிரங்கம் சீராயிருத்தல்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நான் சில கூட்டத்தினரை அறிவேன்.
அவர்கள் நாளை மறுமையில் திஹாமாவில் காணப்படும் வென்நிற
மலைகளைப் போன்ற நன்மைகளுடன் வருவார்கள்.அல்லாஹ் 
அவற்றைப் பரத்தப்பட்ட புழுதியைப் போன்றதாக ஆக்கி விடுவான்.
அப்போது ஸப்வான்(ரலி)அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின்
தூதரே! அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனக் கூறி  அவர்களை 
எங்களுக்குத் தெரிவித்து விடுவீர்களாக!. இல்லையெனில் நாங்கள்
அறியாமலே அவர்களில் நின்றும் ஆகிவிடுவோம். அப்பொழுது 
நபியவர்கள் கூறினார்கள். அவர்கள் உங்கள் சகோதரர்கள்.உங்களைப்
போன்றவர்கள். நீங்கள் இரவில் நின்று வணங்குவதைப் போன்று
நின்று வணங்குவார்கள். ஆனால் அவர்கள் தனிமையில் தடுக்கப்பட்ட
-வற்றைச் செய்ய சந்தர்ப்பம் அமைந்தால் அவற்றைச் செய்து 
விடுவார்கள்.

பெருமை.

யாருடைய உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்கிறதோ
அவர் சுவர்க்கம் நுழைய மாட்டார். பெருமை என்பது  உண்மையை 
மறைப்பதும், மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதுமாகும்.

ஆடைகளை கரண்டைக்குக் கீழால் அணிதல்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆடைகளைத் தொங்க விடுவது
வேட்டி போன்ற வற்றிலும், மேலாடை என்பவற்றிலும் இருக்கிறது.
யார்  பெருமைக்காக இவற்றில் ஒன்றை  தொங்க அணிகிறாரோ
அவரை அல்லாஹ் மறுமையில்  பார்க்கமாட்டான்.

பொறாமை.

பொறாமை கொள்வதை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன். நெருப்பு
விரகை எரிப்பதைப் போன்று பொறாமை  நன்மைகளை அழித்துவிடும்.

வட்டி.

வட்டி சாப்பிடுபவனையும், அதைச் சாப்பிடக்கொடுப்பவனையும்
நபியவர்கள் சபித்துள்ளர்கள்.ஒருவன்  தெரிந்து கொண்டே வட்டியினால்
கிடைத்த ஒரு வெள்ளிக் காசை அதனளவு சாப்பிடுவது 36 தடவை
விபச்சாரம் செய்வதை விடவும் கொடியதாகும்.

மது அருந்துதல்.

வழமையாக மது அருந்துபவனும், சூனியத்தை செய்பவனும், குடும்ப
உறவை பிரித்து நடப்பவனும் சுவனம் நுழைய மாட்டான். யார் மது
பாணம் அருந்துகின்றானோ அவனது எந்தத் தொழுகையும் 40 நாட்களுக்கு அங்கிகரிக்கப்பட மாட்டாது.

பொய்.

மக்களை சிரிக்கவைப்பதற்காகப் பொய் பேசக் கூடியவனுக்குக் கேடு
உண்டாவதாக என மூன்று தடவைகள் நபியவர்கள் கூறினார்கள்.
அப்படி என்றால்  சிரிப்பு அல்லாமல் மனிதன் நிஜமாக சொல்லும்
பொய்களுக்கு எவ்வளவு பெரிய பாவம் என்தை நாம் விளங்க 
வேண்டும்.

மற்றவரின் குறைகளைத் துருவி ஆராய்தல்.

ஒரு கூட்டம் விரும்பாத நிலையில் அல்லது அவர்கள் தவிர்க்க விரும்பும்
நிலையில் அவர்களது பேச்சை இரகசியமாக செவிமடுத்தால் மறுமை
நாளில் அவனுடைய காதில்  ஈயம் உருக்கி ஊற்றப்படும்.

உருவம் அமைத்தல்.

 மறுமை நாளில் மனிதர்களில் அதிகம் வேதனை செய்யப்படுபவர்கள்
உருவம் அமைத்தவர்களாகும். நாயும், உருவப் படமும் உள்ள வீட்டில்
மலக்குகள் நுழைய மாட்டார்கள்.

கோள் சொல்லுதல்.

கோள் சொல்லுபவன் சுவனம் நுழைய மாட்டான். கோள் என்பது 
மக்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்துவதற்காக  ஒருவரது
பேச்சை மற்றவரிடம் கூறுவதாகும்.

புறம் பேசுதல்.

புறம் பேசுதல் என்ன என உங்களுக்குத் தெரியுமா? என்று நபியவர்கள்
கேட்ட பொழுது  அல்லாஹ்வும் அவனது தூதருமே  அறிவார்கள் என
சஹாபாக்கள் கூறினார்கள். அப்பொழுது நபியவர்கள்  உனது சகோதரன்
விரும்பாத விதத்தில் அவனைப் பற்றி  அவன் இல்லாத இடத்தில் 
பேசுவதாகும். என்றார்கள். நான் கூறும் விடையம் அவனிடம் இருந்தாலும் அது புறமாகுமா?  எனக் கேட்டபோது நீர் கூறும் விடயம்
அவனிடமிருந்தால் அவனைப் பற்றி நீர்  புறம் பேசியவர் ஆவீர்.
அது அவனிடத்தில் இல்லாவிட்டால்  அவனே மீது அபாண்டம் சுமத்தி
விட்டவர் ஆவீர். எனப் பதிளலித்தார்கள்.

சபித்தல்.

ஒரு முஃமீனை சபிப்பது அவனைக் கொலை செய்வது போன்றாகும்.
காற்றை நீங்கள் சபிக்க வேண்டாம் என கட்டளையிடப்பட்டுள்ளது.
சாபத்துக்கு தகுதி இல்லாத ஒன்றை யாராவது சபித்தால் அச்சாபம்
அவனுக்கே வந்து சேரும்.

இரகசியத்தை வெளிப்படுத்துதல்.

தனது மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டு அவளுடைய
இரகசியத்தை  வெளிப்படுத்தும் ஒரு மனிதன்  மறுமை நாளில் 
அல்லாஹ்விடத்தில் மனிதர்களில் மிகக் கெட்டவனாவான்.

அறிவின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்குதல்.

யாருக்காவது அறிவின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்டால் அதன் பாவம்
அத்தீர்ப்பை வழங்கியவரையே சாரும்.

அல்லாஹ்வுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சு.

நிச்சயமாக ஒரு அடியான்  கவனயீனத்தால்  அல்லாஹ்வுக்கு வெறுப்பை
 ஏற்படுத்தக்கூடிய  வார்த்தையைப் பேசிவிடுவதால் எழுபது வருடங்கள்
விழும் தூர ஆழத்தில் நரகில்  விழுகின்றான்.

சகோதர ,சகோதரிகளே.  தடுக்கப்பட்ட விடயங்கள் என்ற தலைப்பில்
ஒரு சில விடையங்களை மேலே கூறப்பட்டுள்ளது. இன்னும் நிறைய
விடயங்கள் இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த ஆக்கங்களில்
சந்திக்கலாம்  இவைகள் அல்குர்ஆன் அல்ஹதீஸ் அடிப்படையில் விளக்கங்களாக எழுதப்பட்டுள்ளது.
 ========================================================================

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````


No comments:

Post a Comment