Followers

Thursday, November 1, 2012

அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலம் ஏற்படும் பிரயோசனங்கள்.


அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலம் ஏற்படும் பிரயோசனங்கள்.

* அல்லாஹ்வின் அன்பையும், அவன் பால் நெருக்கத்தையும்
உண்டுபண்ணும். இன்னும் அவனைப் பற்றிய கண்ணியத்தையும்,
அவன்  என்னைக் கண்காணிக்கின்றான் என்ற  எண்ணத்தையும்
தோற்றுவிக்கும். மனிதன் திருந்தி  அவன் பக்கம் மீள்வதற்கும் ,
அவனை வழிப்பட்டு அமல் புரிவதற்கும் உதவியாய் இருக்கும்.


* கவலைகளை நீக்கி   சந்தோஷத்தையும் உளத்தூய்மையையும்,
தைரியம் போன்ற நற்குணங்களையும் உருவாக்கும்.

* உள்ளத்தில் ஒருவித வெறுமை நிலை உண்டு. அதனை திக்ரின்
மூலம் மாத்திரமே நிரப்ப முடியும்.

* திக்ரின் மூலம் உள்ளத்தில் உள்ள நோய்கள் அகன்று  அது
சுத்தமடைவதுடன்  வேறு எதனாலும் பெற முடியாத ஓர் 
இன்பத்தையும்  உள்ளம் உணர்கின்றது.  மாறாக அல்லாஹ்வின்
ஞாபகத்தை விட்டும் மறந்திருப்பது  உளநோய்க்கான 
அறிகுறியாகும்.

* ஒருவன் ஏதேனும் ஒரு பொருளை விரும்பி விட்டால் அதனை
அதிகம் ஞாபகப்படுத்துதைப் போன்று திக்ரின்  மூலம் அல்லாஹ்வின்
மீதுள்ள அளவு கடந்த அன்பு வெளிப்படுகின்றது. மேலும் திக்ர்  செய்தல்
குறைவாக இருப்பது நயவஞ்சத் தன்மையின் அடையாளமாகும்.

* ஒரு அடியான் செழிப்பான காலத்தில் அல்லாஹ்வை நினைவு
கூர்ந்தால்  அவனுக்குக் கஷ்டம் ஏற்படும் போது அல்லாஹ் அவனை
நினைவு கூறுவான்.

* அல்லாஹ்வின்  வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெருவதற்கான
காரணமாகவும் ஸகீனத் எனும் மன நிம்மதியும், அமைதியான
சூழலும் உருவாவதற்கும் அல்லாஹ்வின் அன்பும், வானவர்களின்
பாவமன்னிப்புத் தேடலும் கிடைப்பதற்கு உதவியாகவும் அது
அமைந்திருக்கின்றது.

* புறம் பேசுதல், கோள் சொல்லல், பொய், வீண் பேச்சு  போன்ற
தடுக்கப்பட்ட காரியங்களில் நாவு ஈடுபடாது  திக்ர் பாதுகாக்கின்றது.

* திக்ர் செய்வது  வணக்க வழிபாடுகளில் மிகச் சிறந்ததும்  நாவுக்கு
மிக  இலேசான அமலுமாகும். மேலும் செய்யப்படும்  திக்ருகளின்
அளவு  சுவர்க்கத்தில் மரங்கள் நட்டப்படுகின்றன.

* திக்ர் உலகத்திலும்,  மண்ணறையிலும்,  மறுமையிலும் அதனைச்
செய்வதற்கு பிரகாசமளிக்கின்றது. இன்னும் அவனுக்கு உள்ளத்தில்
இன்பத்தையும் முகத்தில் அழகையும் கௌரவத்தையும்
ஏற்படுத்துகின்றது.

 * திக்ரின் மூலம் அல்லாஹ்வின் பாவமன்னிப்பும், வானவர்களின்
துஆவும் கிடைக்கின்றது. இன்னும் அல்லாஹ் திக்ர் செய்பவர்களைப்
பற்றி வானவர்களிடம்  பெருமை பாராட்டுகின்றான்.

* அமல் செய்யக்கூடியவர்களில் மிகச் சிறந்தவர்  அல்லாஹ்வை
அதிகம்  திக்ர் செய்பவராகும்.  நோன்பாளிகளில் மிகச் சிறந்தவர்
நோன்பிருக்கும் நிலையில்  அதிகம் திக்ர் செய்பவராகும்.

* திக்ர் கஷ்டங்களை இலகுபடுத்தும். அத்துடன் வசதி வாய்ப்பை
உருவாக்கி உடம்பைப் பலப்படுத்தும்.

 பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்" என்றார்கள். "இதனை விட சிறந்த பயிரை உமக்கு நான் சொல்லித் தரவா?" என்று கேட்க, "சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்" என்றார்கள்.(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா 3797)


குறிப்பு: .  இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
மீனுக்குத் தண்ணீரைப் போன்று உள்ளத்திற்கு திக்ர்
அவசியமாகும். தண்ணீரை விட்டு வெளியானால் 
மீனின் நிலை என்னவாகும்.? 
என்ற வாசகத்தை திக்ர்க்கும் உள்ளத்திற்கும் உதாரணமாக
மீனின் நிலையை சுட்டிக்காட்டினார்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~*********~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment