Followers

Thursday, November 1, 2012

பெண்களுக்கான சட்டம்


ஒரு பெண் வீட்டிலுருந்து வெளியாகும் போது பின்வரும் நிபந்தனைகள்
பூரணமாகக் காணப்படும் அங்கியால் தனது உடலை மறைப்பது
கடமையாகும்..

1- முழு உடம்பையும்  மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
2- அவ்வாடை  கவர்ச்சியானதாக இருக்கக்கூடாது.
3- உடம்பை மறைக்காத அளவு மெல்லியதாக  இருக்கக்கூடாது.
4- இறுக்கமானதாக இல்லாமல்  விசாலமானதாக இருக்க வேண்டும்.
5- மனம் பூசப்படாததாக  இருக்க வேண்டும்.
6- ஆண்ககளின்  ஆடைக்கு ஒப்பானதாக இருக்கக்கூடாது.
7- மாற்று மத பெண்களின் ஆடைக்கு ஒத்ததாதக இருக்கக்கூடாது.
8- பிரபல்யத்தை ஏற்படுத்தும் ஆடையாக இருக்கக்கூடாது.


மற்றவர்களுடன்  ஒரு பெண் பேணவேண்டிய அவ்ரத் 
மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் மூன்று வகை.

1- கணவனின் முன்னிலையில்.   கணவன் அவளுடைய  உடம்பில்
    எந்தப் பகுதியையும் பார்ப்பதற்கு அனுமதி உண்டு.
2- பெண்களுக்கும், மஹ்ரமான ஆண்களுக்கும் முன்னிலையில்.
    இவர்களுக்கு  முன் முகம், முன் கை முன் கால்  போன்ற சாதாரன
    நிலையில் தெரியும்  பகுதிகளை வெளிப்படுத்தலாம்.
3- அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில்.  இவர்களுக்கு  முன் பெண்
பார்ப்பது ,மருத்துவத்தேவை என்பவற்றுக்கன்றி  முழு உடம்பையும்
மறைப்பது கடமையாகும். ஏனெனில் பெண்களின் பித்னா அவர்களுடைய
முகத்தில் தான் இருக்கிறது.

இத்தா மேற்கொள்ளும் பெண்கள் பல பிரிவினராகும்.

1- கர்ப்பிணிப் பெண்.  
    இப்பெண் தலாக் அல்லது கணவனின் மரணம்  என்பவற்றிற்காக
    பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா அனுஷ்டிக்க வேண்டும்.
2- கணவன் மரணமான பெண்.
    இப்பெண் 4 மாதங்களும் 10 நாட்களும் இத்தா அனுஷ்டிக்க வேண்டும்.
3- தலாக் சொல்லப்பட்ட மாதவிடாய் ஏற்படக்கூடிய சதாரண பெண்.
    இவள் மூன்று மாதவிடாய் ஏற்படும் காலம் இத்தா இருக்க வேண்டும்.
    தலாக் சொன்னதிலிருந்து மூன்ராவது மாதவிடாய் சுற்றிலிருந்து
    துப்பரவானதுடன் இத்தா முடிவடைந்து விடும்.
4- மாதவிடாய் ஏற்படாத பெண்.
    இவளின் இத்தாவுடைய காலம்  மூன்று மாதங்களாகும்.
    இத்தாவின் காலத்தில் மீட்டெடுக்க முடியுமான விதத்தில்  தலாக்
    சொல்லப்பட்ட ஒரு பெண் தனது இத்தாக் காலத்தில் கணவனுடனேயே
    தொடர்ந்து இருப்பது கடமையாகும்.  இத்தா முடியும் வரை கணவன்
    அவளை நினைத்த விதத்தில் பார்ப்பதும், அவளுடன் தனித்திருப்பதும்
    கூடுமானதாகும். 

மாதவிடாய் (ஹைளு) 

ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமிருந்து இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தையே இது குறிக்கின்றது. மாதவிடாயானது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடலாம்.
 'இன்னும் மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள், நீர் கூறும்'அது தூய்மையற்ற நிலை ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களைவிட்டும் விலகி இருங்கள் மேலும், அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்' (2:222)

இஸ்திஹாளா.  

இது மாதவிடாயிலிருந்து வித்தியாசமாகும். இஸ்திஹாளா என்பது ஒரு பெண்ணுக்கு தொடராக வெளிவரும் இரத்தம். இந்நிலையில் அவள் மீது தொழுகை, நோன்பு, கடமையாகும் என்பதனை அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீஸின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

'எனக்கு (மாதவிடாய் காலங்களில்) நிற்காது இரத்தம் வெளிவருகின்றது. ஆதனால் நான் சுத்தமாக இல்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என பாத்திமா பின்த் அபீ ஹுபைஸ் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' அது ஓர் இரத்த நாலத்தலிருந்து வருவதாகும். நீர் வழமையாக மாதவிடாய்உண்டாகும் நாட்களுக்கு மட்டும் தொழுகையை விட்டுவிடும் பின்னர் குளித்துவிட்டு தொழுகையை மேற்கொள்ளும்' என்றார்கள் (புகாரி)

உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள், ''இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டு விடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்ளவேண்டும்'' என்று கூறினார்கள். (நூற்கள்: அபூதாவூத், இப்னுமாஜா) 

எனவே உதிரப்போக்குடையவள் வழமையாக மாதவிடாய் காலத்தை தவிர்ந்த ஏனைய காலங்களில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்ளவேண்டும்

 நிஃபாஸ் 

பிரசவத்திற்கு பின்னோ அல்லது பிரசவத்திற்கு சற்று முன்னோ வெளியாகும் இரத்தத்தையே நிஃபாஸ் என்பர். பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கும் மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான்.

 கடமையான குளிப்பு

மாதவிடாய் உண்டான ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமானதும் குளிப்பது கட்டாயக் கடமையாகும்.

மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்' என்று கூறினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எவ்வாறு குளிப்பது?

மர்மஸ்தலத்தை கழுவவேண்டும் பின்னர் தொழுகைக்கு உழூச் செய்வது போன்று செய்துவிட்டு கால்களை கழுவ முன் குளித்துவிட்டு சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவவேண்டும். 

'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உழூச் செய்வது போன்று உழூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது'' என மைமூனா(ரலி) அறிவித்தார். (புகாரி 249)

கடமையான குளிப்பு குளிக்கும் போது தலையையும் உடலையும் நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும். கஸ்தூரி எமக்கு கிடைப்பது அறிதாகவுள்ளதால் வாசனையுள்ள சோப் பயன்படுத்திக்கொள்ளலாம் 

'உங்களில் ஒவ்வொருவரும் ஸித்ர் மரத்தின் (இலைகள் கலந்த) நீரைப் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் நீரை ஊற்றி மயிரின் வேரை சென்றடையும் வரை நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் (நீரை) ஊற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு கஸ்தூரி கலந்த பருத்தித் துன்டொன்றை எடுத்து அதன் மீது சுத்தம் செய்து கொள்ள வேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்இ அப்போது 'அதைக் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது? என்று வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ் என்று அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். இரத்த அடையாளங்கள் நீங்கும் வரை சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்'(ஸஹீஹ் முஸ்லிம்)

 மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடை

மாதவிடாய் இரத்தம் பட்டை இடத்தை நீரால் கழுவிவிட்டு அதையே அணிந்து கொள்ளலாம். அதிலே தொழுதும் கொள்ளலாம்.

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கüல் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெüத்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுதுகொள்ளலாம்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)  நூல் : புகாரீ (307) 

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக்கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்)ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக்கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்யமாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக்கொள்வார்கள். என்னிடமிருந்து ஏதேனும் அவர்கள் மீது பட்டுவிடுமானால் அவ்வாறே செய்துவிட்டு அந்த ஆடையுடனே தொழுதுகொள்வார்கள். 
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : தாரமீ (995)

 தொடர் உதிரப்போக்கு

சில பெண்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் பல நாட்கள் தொடர்ந்து இரத்தம் வந்துகொண்டிருக்கும். இது ஒரு நோய். ஆனால் இதை சிலர் மாதவிடாய் என கணித்து தொழமாமல் இருந்துவிடுகின்றனர்.
வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகை நோன்பு உடலுறவு போன்ற விஷயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகும் இரத்தம் தொடர்ந்து வருமானால் அப்போது குளித்துவிட்டு மாதாவிடாய் ஏற்படாத பெண் எவ்வாறு நடந்துகொள்வாளோ அதுபோன்று தொடர் உதிரப்போக்கு ஏற்படுபவர்கள் நடந்துகொள்ள வேண்டும். இவர்கள் தொழுகையையும் நோன்பையும் விடுவதற்கு அனுமதியில்லை. 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப்போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது இந்த நோய் வருவதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்துகொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்து விட்டுத் துணியால் இறுகக் கட்டிக் கொண்டு அவள் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)  நூல் : நஸயீ (351)

 நிர்வாணமாக குளிக்கக்கூடாது

ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் நிர்வாணமாக குளிக்கக்கூடாது. அவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள். 
 அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)நூல் : அபூதாவுத் (3501)

இவைகளை கட்டாயம் ஒவ்வொரு பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய
முக்கியமான விடையங்கள் இவைகளில் கவணக் குறைவு ஏற்படுமானால்
நாம் வாழும் வழ்க்கை அல்லாஹ்வுக்கு பொருத்தமற்றதாக மாறிவிடம்.
இன்ஷா அல்லாஹ் இவைகளைப் படித்து தன் வாழ்க்கையில் கடைப்
பிடித்து நம் உற்றார் உறவினர்களுக்கும் கற்றுக்கொடுத்து ஸலிஹான
பெண்களாக நாமும் மாறுவதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் 
நல்லருள் புரிவானாக ஆமீன். 
**********************************************************************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

No comments:

Post a Comment