Followers

Thursday, November 1, 2012

இதயம் சார்ந்த அமல்கள்

  
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளஹி பவரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் பெயர் கொண்டு....

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். "நிச்சயமாக அல்லாஹ் உங்கள் 
உருவங்களேயோ , செல்வங்களையோ பார்க்கமாட்டான் மாறாக
உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்."
(நூல். முஸ்லிம்)

எனவே இதயம் என்பது அறிதல், ஆராய்தல், சிந்தித்தல் என்பவற்றின்
இடமாகக் காணப்படுகின்றது.  இதனால்தான் மனிதர்கள் அல்லாஹ்
-விடத்தில் உள்ளத்தில் இருக்கும் ஈமான்.  உறுதி, தூய்மையான
எண்ணம் போன்றவற்றின் மூலமாகவே வித்தியாசப்படுகின்றார்கள்.
ஹஸன் அல் பஸரி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அபூபக்கர்(ரலி)
அவர்கள் ஏனைய சஹாபாக்களை அவர்களின் அமல்கள் மூலம்
முந்தவில்லை. அவருடைய உள்ளத்தில் தரிபட்டிருந்த ஈமானின் 
மூலமாகவே அவர்களை முந்தினார்கள்.

இதயம் சார்ந்த அமல்கள் உறுப்புகள் சார்ந்த அமல்களை விட
பல விதங்களில் வித்தியாசப்படுகின்றன.

1-  இதயத்தைச் சார்ந்த அமல்கள் சீர் குலையும் போது உறுப்புகள் சார்ந்த
அமல்கள் சீர் குலைந்து விடுகின்றன.
(உதாரணம்க. முஹஸ்தூதி.)

2-  இதயம் சார்ந்த அமல்களே அடிப்படையானவை. உள்ளத்தில் எந்த
நாட்டமுமின்றி  உறுப்புகளால் வெளிப்படும்  வார்த்தைக்கு , செயலுக்கு
நன்மை வழங்கப்பட மாட்டாது.
(உதாரணமாக. சமூகத்துக்கு மக்கள் பார்வாக்கு செய்யும் உதவி.)

3-  அவை மறுமையில் உயர் பதவிகளைப் பெறுவதற்கு காரணமாக
அமைகின்றன.
(உதாரணமாக. உலகப்பற்றின்றிருத்தல்)

4-  உறுப்புகள் சார்ந்த அமல்களை விட இவை மிகக் கஷ்டமானவை.
இன்னும் முன்கதிரி(ரஹ்)அவர்கள் குறிப்பிட்டார்கள். நான் 40 வருடங்கள்
கஷ்டப்பட்டதன் பின்பே என் இதயம் சீராகியது.
(உதாரணமாக. பொடுபோக்காய் இருந்து மனம் திருந்தியமை.)

5-  அவை சிறந்த நன்மைகளை உடையவை.
(உதாரணமாக. அல்லாஹ்வின் பேரில் அன்பு கொள்ளல்.)

6-  அவை மகத்தான கூலியைப் பெற்றுத்தரக்கூடியது. அபூ தர்தா(ரலி)
அவர்கள் கூறினார்கள். ஒரு மணித்தியாலம் சிந்திப்பது ஒரு இரவு
நின்றுவணங்குவதைவிடச் சிறந்தது.
(உதாரணமாக. உள்ளத்தில் கவலையின் பிறப்பிடம் உதிப்பது.)

7-  அவை உறுப்புகளையும் தூண்டிவிடக் கூடியவை.
(உதாரணமாக. ஒரே சிந்தனை)

8-  அவை உறுப்புகளின் அமல்களின் கூலியை அதிகப்படுத்துகின்றன,
அல்லது குறைத்து விடுகின்றன.அல்லது  அழித்து விடுகின்றன.
(உதாரணமாக. தொழுகையில் உள்ளச்சம்.)

9-  அவை உறுப்புகளின் அமல்களுக்குப் பகரமாக அமைகின்றன.
(உதாரணமாக. செல்வம் இல்லாத சந்தர்ப்பத்தில் ஸகாத் கொடுப்பதற்கு
 நீய்யத் வைத்தல்.)
  
10-  அவற்றின் கூலிக்கு எல்லையில்லை.
(உதாரணமாக. பொறுமை.)

11-  அவற்றின் கூலி உறுப்புகள் தடைப்படும் போதும் அல்லது அவை
செயல்பட முடியாத போதும் தொடரும்.
(உதாரணமாக.நோயுடைய காலம்.)

12-  அவை உறுப்புகள் அமல் செய்வதற்கு முன்னாலும் செய்யும் போதும்
இருந்து கொண்டிருக்கும்.
(உதாரணமாக. அல்லாஹ்வின் பயம்.)

 மேலே கூறப்பட்ட அவை அவை  என்ற வார்த்தைகள் இதயத்தைக் குறிக்கும்.

 அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


No comments:

Post a Comment