Followers

Thursday, October 11, 2012

நன்றே செய்...




நன்றே செய்...
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். அல்குர்ஆன்: 2.148

நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிருத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான்.

ஒருவர் தொழாதவறாக இருப்பார் தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அதற்கடுத்த நேரத் தொழுகைக்கான அழைப்பொலியை எதிர்பார்த்து பள்ளிக்கு விரைந்திட வேண்டும்.

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.
1- மறதியில் ஆழ்த்தும் வறுமை,
2- அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,
3- உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,
4- சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,
5- விரைந்து வரும் மரணம்,
6- தஜ்ஜாலின் வருகை,
7- இறுதி தீர்ப்பு நாள்,
என்று இதைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
அஹமட் யஹ்யா....
ஹொரோவபதான.அனுராதபுரம்
SRI LANKA
*************************************************************************  

No comments:

Post a Comment