Followers

Thursday, October 11, 2012

நன்மையும், தீமையும் ஏவுவதன் அவசியம்



السلام عليكم ؤرحمة الله وبركاته

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
********************************************************************************
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
_______________________________________________________________________








நன்மையும், தீமையும் ஏவுவதன் அவசியம்

அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ..
அன்பின் சகோதர சகோதரிகளே ....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

இஸ்லாம் காட்டும் வாழ்க்கை முறையும். நன்மையை ஏவித்த தீமையைத் தடுப்பதில் எமது பங்களிப்பும், அவசியமும் ..

இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கையின் வடிவமாக தான் மக்களுக்குள்
புகுத்தப்பட்டது. ஒரு முழுமையான வாழ்வை வாழ்வதற்கான நெறிமுறைகள். ஒழுக்க முறைகளோடு நிறைவாக வந்திட்ட ஒரு அழகான மர்ர்க்கமே இஸ்லாம். இதற்கேல்லாம் ஒரு அச்சாணியாக குர்ஆன் என்னும் வேத நூலையும். முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மூலம் வாழும் வழியையும் அழகாகச் சொன்ன, ஒரு உன்னத மார்க்கம் இஸ்லாம். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல என்பதையும், அல்லாஹ் வகுத்திட்ட வரையறை, நெறி முறைகளில், வாழ்வதே அல்லாஹ் விரும்பும் உண்மையான வாழ்க்கை என்பதையும் சொன்ன சத்திய மார்க்கம் இஸ்லாம் .. மட்டுமல்லாமல், இந்த அழகான வாழ்க்கையை ஒரு சமுதாய அமைப்பில் ஒவ்வொரு மனிதனும் எப்படியாக எதிர்க்கொள்ள வேண்டும், என்பதையும் தெட்டத் தெளிவாக விளக்கியே கூறியிருக்கிறது ..

இஸ்லாமிய சமுதாய அமைப்பு என்பது, தன்னை தான்தோன்றித்தனமாக அடையாளப்படுதவில்லை. மாறாக மனிதனை சிந்தனா சக்தி உள்ளவனாகவும், அடுத்தவர் பற்றிய கவலை உடையோனாகவும் அடையாளப் படுத்த முனைகிறது. அதாவது நன்மையின் பக்கம் மனிதனை இழுப்பவனாகவும் தீமைகள் அவை எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் எதிர்த்துப் போராடும் படி மக்களை தட்டி எழுப்புவனாக இருக்க வேண்டும் என்றும், தீமைகளை எதிர்த்து நிற்பதில் தன்னிடமிருக்கும் சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி இவற்றின் மூலம் சமுதாயத்தில் வலுவானதொரு ஒழுக்கச் சூழலை உருவாக்குவதும் ஒவ்வொரு மனிதனிதும் மிக பெரிய கடமையாக இருக்கிறது என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறது ... எனவே மனிதன் உலகத்திற்கு பாரிய பொறுப்புக்களொடு வந்திருக்கிறான் .. இந்த பொறுப்பக்களிலிருந்து விடுபட நினைக்கும் எந்த மனிதனும். அல்லாஹ்வின் பார்வையில் நல்ல மனிதனாக இனங்காணப்படடாட்டான். அவன் வெறும் சுயநலம் மிக்கவனாகவும், அல்லாஹ்வின் திருப்தியைப பெறாதவனாகவுமே கணிக்கப்படுவான் ..

"உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும். அவர்களேதாம் வெற்றி பெற்றோர் ". (3:104)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக ........

தொகுப்பு .........

அஹமட் யஹ்யா
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA
************************************


  



No comments:

Post a Comment