Followers

Thursday, October 11, 2012

நான்கு இமாம்களின் எச்சரிக்கை...

நான்கு இமாம்களின் 
எச்சரிக்கை...
******************************************************

1 – இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) கூறுகிறார்கள்:
                                                                               


ஹதீஸ் சஹீஹாக (அதாரப்பூர்வமாக)
கிடைக்கும் போது அதை பின்பற்றுவதே
எனது வழியாகும்.

(ஆதாரம்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன்,
பாகம் 1, பக்கம் 63, ரஸமுல் முப்தீ
பாகம் 1, பக்கம் 4, ஈகாழுல் ஹிமம்
பக்கம் 62 )

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம்
முடிவு செய்தோம் என்பதை அறியாமல்
எனது சொல்லை நடைமுறைப்படுத்துவது
எவருக்கும் ஹலால்அன்று.

(ஆதாரம்: அல்இன்திகா பக்கம்
145, ஹாஷியா இப்னுல் ஆபிதீன்,
பாகம் 6, பக்கம் 293, ரஸமுல் முப்தீ
பாகம் பக்கம் 29, 32 )

என்னுடைய ஆதாரத்தை அறியாதவன்,
என் சொல்லைக் கொண்டு ஃபத்வா
கொடுப்பது ஹராமாகும்.

(ஆதாரம்: மீஸான் ஷஃரானி பாகம் 1
பக்கம் 55 )

நாங்கள் இன்று ஒரு சொல்லைச்
சொல்லி விட்டு, நாளை அதைத்
திரும்பப் பெற்றுக் கொள்கின்ற
மனிதர்கள்தாம்.

(ஆதாரம்: மீஸான்
ஷஃரானி பாகம் 1 பக்கம் 55 )

அபூ யூசுபே! என்னிடமிருந்து கேட்டவற்றை
எல்லாம் எழுதி வைத்துவிடாதே, ஏனெனில்
இன்று ஒரு அபிப்பிராயத்தைக்
கொண்டு (ஒரு தீர்ப்பை அளிப்பேன்)
நாளை அதை விட்டுவிடுவேன், நாளை
ஒரு அபிப்பிராயம் கொண்டு (தீர்ப்பு அளிப்பேன்)
நாளை மறுநாள் அதை (தீர்ப்பு அளித்ததை)
விட்டு விடுவேன்.

(ஆதாரம்: இமாம்இப்னுல் மூயினுடைய
‘தாரிக்‘ பாகம்,பக்கம் 77 )

அல்லாஹ்வுடைய நெறி காட்டும் நூலுக்கும்
நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான
ஒன்றை நான் சொன்னால், என் சொல்லைவிட்டு
விடுங்கள்.

(ஆதாரம்:ஈகாழுல் ஹிமம் பக்கம் 50 )

 
2 – இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:


1.நான் (சில நேரங்களில்) சரியாகவும்,
(சில நேரங்களில்) தவறாகவும்
முடிவெடுக்கக் கூடிய சராசரி மனிதன்தான்.
எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்,
குர்ஆனுக்கும், நபி வழிக்கும்
பொருத்தமானவற்றை எடுத்துக்
கொள்ளுங்கள், குர்ஆனுக்கும்,
நபி வழிக்கும் பொருத்தமில்லாதவற்றை
விட்டு விடுங்கள்.

(ஆதாரம்: ஜாமிவு இப்னி அப்தில்பர்-
பாகம் 2 பக்கம் 42, உஸூனுல்
அஹ்காம்-பாகம் 6 பக்கம் 149,
ஈகாழுல் ஹிமம்-பக்கம் 62 )

2.நபி (ஸல்) அவர்களின் சொல்லைத்
தவிர வேறு எவரது சொற்களிலும்,
எடுக்கத்தக்கவையும் உண்டு,
விடப்படக்கூடியவையும் உண்டு.
நபி (ஸல்) அவர்களின் சொல்
மட்டுமே முற்றாக பின்பற்றப் பட
வேண்டியவை.

(ஆதாரம்:
இர்ஷாதுஸ்ஸாலிக்-பாகம் 1 பக்கம்
227, ஜாமிவு இப்னி அப்தில்பர்-பாகம்
2 பக்கம் 91, உஸூலுல் அஹ்காம்-
பாகம் 6 பக்கம் 145 )
(இதே வார்த்தையை இப்னு அப்பாஸ்
(ரழி) அவர்கள் கூறியதாக இமாம்
தகியுத்தீன் சுபக்கீ அவர்கள்
தனது ‘ஃபதாவா‘வின் பாகம் 1 பக்கம்
148-ல் குறிப்பிடுகிறார்கள் )


3.”ஒளூ செய்யும்போது கால் விரல்களைக்
கோதிக் கழுவ வேண்டியதில்லை” என்ற
கருத்தை இமாம் மாலிக் அவர்கள்
கொண்டிருந்தார்கள். அப்போது நான்
”கால்களைக் கோதிக் கழுவ வேண்டும்”
என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறி
அவர்களிடம் ஸனதுடன் அறிவித்தேன்,
அதற்கு இமாம் மாலிக் அவர்கள்,
”இது சரியான ஹதீஸ்தான், நான்
இதுவரைக் கேள்விப்பட்டதில்லை”
என்று கூறி விட்டு, அதன் பின்னால்
விரல்களையும் கோதிக் கழுவிவிட
உத்தரவிட்டார்கள் என்று இப்னு வஹ்ப்(ரஹ்)
அவர்கள் குறிப்பிடுகிறார்கள்

(ஆதாரம்:
அல்ஜர்ஹு வத்தஃதீல்
முன்னுரை பக்கம் 31,32 )
 
3 – இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
கூறுகிறார்கள்


1.எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல் (ஸல்)
அவர்களின் வழிமுறைகளில் ஏதேனம் (சில) தவறி
விடத்தான் செய்யும், நான் ஏதேனம் ஒரு சொல்லைச்
சொல்லும் பொது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை
வகுத்துத்தரும்போது. அல்லாஹ்வின்திருத்தூதருடைய
கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால்,ரசூல் (ஸல்) அவர்கள்
கூற்றை ஏற்பதே எனது கொள்கையாகும்

( ஆதாரம்: தாரீகு திமிஷ்க்
(இப்னு அஸாகிர்) பாகம் 3 பக்கம் 15,
ஈகாழுல் ஹிமம் பக்கம் 100 )

2.ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத்
தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும்
விடுவது ஹலால் இல்லை என்று முஸ்லிம்கள்
அனைவரும் ஒருமித்து ஏற்றுள்ளனர்

(ஆதாரம்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 68 )

3.எனது நூலில் நபி (ஸல்) அவர்களின்
சுன்னத்துக்கு மாற்றமானதைக் கண்டால்
ரசூலுடைய சுன்னத்தையே (மக்களிடம்)
சொல்லுங்கள், என் கூற்றை விட்டு விடுங்கள்

(ஆதாரம்:
அல்மஜ்மூவு (நவவீ) பாகம் 1 பக்ககம்
63, இப்னு அஸாகிh 9,10,15,
ஈகாழுல்ஹிமம் பக்கம் 706, அல்
இஹ்திஜாஜ் பகாம் 2 )

4.ஆதரப்பூர்வமான ஹதீஸ் இருக்கும்போது
அதைப் பின்பற்றுவதே எனது வழி

(ஆதாரம்:
அல்மஜ்மூவு (நவவீ) பாகம் 1 பக்கம்
63, மீஸான் ஷஃரானி பாகம் 1 பக்கம்
57, ஈகாழுல் ஹிமம் பக்கம் 107 )
(இதை நான்கு இமாம்களும் கூறியதாக இமாம்
இப்னு ஹஸ்மு அவர்களின்கூற்றை இமாம்
ஷஃரானி பாகம் 1பக்கம் 57-ல் குறிப்பிடுகிறார்கள்)

5.இமாம்அஹ்மது இப்னு ஹன்பலை நோக்கி இமாம்
ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்,
ஹதீஸ்களையும், அதன்அறிவிப்பாளர்களையும் நீங்கள்
நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்
என்றால் உடனே அதை எனக்கு அறிவித்து விடுங்கள்.

(ஆதாரம்: ஆதாபுஷ்ஷாஃபியி பக்கம்
94,95, அபூ நயீமின் ஹில்யா பாகம் 9
பக்கம் 106, இப்னுல் ஜவ்ஸியின்
மனாகிபுல் இமாம், அஹ்மத் பக்கம்
499, அல் இன்திகா பக்கம் 75 )

நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம்
வந்துள்ள சட்டங்களுக்கு மாற்றமாக நான் சொன்ன
அத்தனை சட்டங்களிலிருந்தும் நான் வாழும் போதும் விலகிக்
கொண்டேன். எனது மரணத்திற்குப் பின்னும் நான்விலகிவிட்டேன்
(நான் இதற்குப்பொறுப்பேற்க இயலாது)

(ஆதாரம்:
ஹில்யா (அபூ நயீம்) பாகம் 9 பக்கம்,
இஃலாமுல்மூகியீன் பாகம் 2 பக்கம்
363, ஈகாழுல் ஹிமம் பக்கம் 104 )
நான் எதையாவது சொல்லி அது நபி (ஸல்)
அவர்கள் கூற்றுக்கு மாற்றமாக இருப்பின், அது
என் அறிவுக்குறைவு எனப்புரிந்து கொள்ளுங்கள்

(ஆதாரம்:
இப்னு அஸாகிர் 1,10,15, அல்ஆதாப்
(இப்னு அபீஹாதம்) பக்கம் 93,
அபூ நயீம் பாகம் 9 பக்கம் 106 )

நான் சொன்ன சொற்கள் ஆதாரபூர்வமான
நபி மொழிக்கு முரண்படும்போது , நபியின்
ஹதீஸ்தான் ஏற்கத்தக்கது, என்னைப்
பின்பற்றாதீர்கள்

(ஆதாரம்: அல்ஆதாப்
(இப்னு அபிஹாதம்) பக்கம் 93,
அபூ நயீம் பாகம் 9, பக்கம் 106 )

நபி (ஸல்) அவர்கள் வாயிலாக வந்துள்ள
எல்லா ஹதீஸ்களும்தான் என் சொல்லாகும்.
என் மூலம் நீங்கள் அதைச் செவியுறாவிட்டாலும்
சரியே

(ஆதாரம்: அல் ஆதாப்
(இப்னு அபீஹாதம்) பக்கம் 93,94 )
 
4 – இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்.

என்னையோ, மாலிக், ஷாஃபியீ,அவ்ஸாயீ, ஸவ்ரீ (போன்ற
இமாம்களையோ) பின்பற்றாதே,அவர்கள் எதிலிருந்து எடுத்துக்
கொண்டார்களோ அதையே (அந்த குர்ஆன், ஹதீஸிலிருந்து) நீயும்
எடுத்துக்கொள்)

(ஆதாரம்: ஈகாழுல்
ஹிமம் பக்கம் 113 )

அபூ ஹனீஃபா, மாலிக், அவ்ஜாயீ ஆகியோரின்
கருத்துகள் அவர்களின் அபிப்பிராயமே, உண்மையான
ஆதாரம் நபி தோழர்களின் சரியான அறிவிப்பில்தான்
உண்டு

(ஆதாரம்:
ஜாமிவு இப்னி அப்தில்பர் பாகம் 2
பக்கம் 149 )

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை நிராகரிப்பவன் அழிவின்
விளிம்பிலே இருக்கிறான்

(ஆதாரம்:
இப்னுல் ஜவ்ஸி பக்கம் 182, 30-32 )
**************************************************************************************************
அஹமட் யஹ்யா,,
ஹொரோவபதான,அனுராதபுரம்.
SRI LANKA..
*******************************

No comments:

Post a Comment