Followers

Thursday, October 11, 2012

உபதேசம் .....


 




உபதேசம் ......

எவையெல்லாம் போதும் என்று கேட்டால், "இவைகளே போதும் 'என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

* எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன்.

* எவர் ஒருவர்
வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது.

* எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு மரணம் போதுமானதாகும்.

* எவர் பணத்தைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு போதுமென்ற மனம் போதுமானது.



* உழைப்பினால் சோர்ந்த நிலையில் மாலை நேரத்தைச் சந்திப்பவன் அந்த மாலை நேரத்தை அல்லாஹ் அவனை மன்னித்த மாலை நேரமாக சந்திக்கின்றான்.

* பகுத்தறிவையே அல்லாஹ் முதலில் படைத்தான். பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வை நெருங்குவதற்கு அது துணை புரியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு தூண் உண்டு. ஈமான் கொண்டவருக்குரிய தூண் அவர்களுடைய பகுத்தறிவேயாகும்.

* பாலில் தண்ணீர் கலந்து வியாபாரம் செய்பவனிடம் பாலை விட்டும் தண்ணீரை பிரித்து எடு என்று மறுமையில் அவனுக்கு சொல்லப்படும்.

* அநியாயமான வாதங்களுக்கு துணையிருப்பவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவார்.

* உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

* எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

* உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள்.

* அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

* மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

* நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

* அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

* கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

* வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

* எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

* வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

* முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது 
என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.



அஹமட் யஹ்யா ..
ஹொரோவபதான
அனுராதபுரம்
இலங்கை
***********************************                                                  

No comments:

Post a Comment