Followers

Thursday, October 11, 2012

Facebook ......... தரும் பாடம்.

Facebook ......... தரும் பாடம்.




                                                                                                







அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ..
அன்பின் சகோதர சகோதரிகளே ....



புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

பேஸ்புக் என்னும் ஆடை .....


Facebook
அல்லாஹ்வின் திருப் பெயரால் ...

இன்று இணையத் தளங்களின் பாவனை அதிகரித்து இணையத்தளம் மூலம் பல நல்ல விடயங்கள் பரிமாறப் படுகிறது. பல சகோதரர்கள் இணையத்தளம் மூலம் கல்வி, இஸ்லாம், அறிவியல் என்று பல விடயங்களை மக்களுக்கு வழங்குகின்றனர். இதற்கென பல இணையத்தளங்கள் இருப்பது சந்தோஷமான விடயமாகும். இணையத்தளங்கள் நல்ல விடயங்களை போதித்தாலும் அதில் பயனடைபவர்கள் மிகச்சிலர் என்பது கவலைக்குரிய விடயமாகும். அதிலே எமது முஸ்லிம்கள் இணையத் தளங்களில் அதிகம் உலா வருகிறார்கள். முக்கியமாக facebook போன்ற சமூக வலை தளங்களில் முஸ்லிம் இளம் சமூகத்தினர் அதிகம் காலத்தை கழிக்கிறார்கள். அவர்கள் சரியான முறையில் இணையத்தளங்களை உபயோகிக்கிறார்களா என்று சற்று ஆராய்வது காலத்தின் தேவை. எனவே எமது முஸ்லிம் சமூகத்தினரின் facebook பாவனை எப்படி இருக்கிறது என்றும் அதன் விளைவு, அதற்கான தீர்வு என்ன என்பதை சற்று நோக்குவோம்.

எமது முஸ்லிமான ஆண்கள், பெண்கள் தவறான காதல் தொடர்பு, அசிங்கமான chating இன்னும் இது போன்ற சமூகச் சீரழிவை உருவாக்கும் காரியங்களுக்காக facebook ஐ உபயோகிக்கிறார்கள.

பொதுவாக ஆண்கள் பெண்கள் கலப்பில் இஸ்லாம் வரையறை செய்துள்ளது. அவற்றை பேணுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இவர்கள் அரட்டை மூலம் இணைவதால் ஷைத்தானின் தூண்டுதலால் பல கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே ஆண்கள், பெண்கள் அரட்டை செய்வதை தவிர்ப்பது கட்டாயக் கடமையாகும்.

ஏனெனில் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் ஒதுன்குவதட்கு சந்தர்ப்பம் அளிக்கப் படும் நபர்களில் ஒரு பெண் தவறான தொடர்ப்புக்கு அழைக்கும் போது அல்லாஹ்வுக்காக அதை நிராகரிக்கும் நபரும் அடங்குவார். facebook உபயோகிக்கும் ஆண், பெண் இருபாலாரும் கவனிக்க வேண்டிய விடயமாகும். அதே போல் மார்க்க விடயங்களுக்காக தூய இஸ்லாத்தை சொல்லும் நோக்கில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம் .

இன்னும் சிலர் பொய்யான அடையாள க்களை உருவாக்கி ஆண், பெண் போல் ஏமாற்று மோசடி செய்கிறார்கள்.

ஒரு முஸ்லிமிடம் இருக்கக் கூடாத பண்புகளில் ஏமாற்று மோசடியும் ஒன்று. முஸ்லிம் என்று பெயர் வைத்துக்கொண்டு இது போன்ற செயல்களில் ஈடு பட்டால் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். இது நயவஞ்சகனின் பண்பாகும். இதற்கு பதிலாக ஒரு இஸ்லாமிய ஐடி யை உருவாக்கி அழைப்புப் பனி செய்யலாம்

இன்னும் சில சகோதர, சகோதரிகள் சினிமா, ஆடல் பாடல், ஆபாசமான போடோக்கள், ஆபாசமான படங்கள், சினிமா நடிகைகளின் அரை நிர்வாண படங்கள், போடோக்கள் ஆகியவற்றை பரப்பும் தளமாக facebook ஐ அமைத்துள்ளார்கள்.

பேஸ்புக் போன்ற இணையத்தளங்கள சிறுவர்கள், உலமாக்கள், அறிவு ஜீவிகள், இளம் சமூகத்தினர் என்று பலரும் உலாவரும் இடமாகும். இவ்விடத்திலே நீங்கள் இது போன்ற காட்சிகளை இட்டால் அதை பார்வையிட்டு பாவத்தை செய்யும் ஒவ்வொருவருடைய பாவத்தின் பங்கும் உங்களைச் சேரும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

'' யார் ஒருவர் ஒரு தீய விடயத்தை நடைமுறைப் படுத்தி அதன் மூலம் மற்றவர்கள் அதை எடுத்து நடந்தால் அந்த பாவத்தின் பங்கு அவர்களையும் சாரும்'' என்று. எனவே நபியை நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் சினிமா நடிக, நடிகைகளின் போடோக்கள், ஆபாச காட்சிகள், ஆடல் பாடல்களை முற்றாக தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அவர்கள் முஸ்லிம்கள். இல்லாவிட்டால் பெயரளவு'' லேபல்'' முஸ்லிம்கள்.

'உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!'

ஒரு முஸ்லிம் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி (ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.

ஒருவரை நேசிப்பதாக இருந்தால் அவர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். அபோது தான் அவர் மீது அன்பு இருப்பதாக அர்த்தம். ஒரு உதாரணத்துக்கு மனைவி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டுஇஅவள் விருப்பப்படி நடந்தால் என் கணவர் என் மீது அன்பாக இருக்கிறார்; என்னை மிகவும் நேசிக்கிறார்; என்று சொல்லுவாள். பெற்றோர்களும் அவ்வாறுதான் அவர்களுடைய சொல்லை கேட்டு அவர்கள் விருப்பப்படி நடந்தால் 'என் மகன் என் மீது அன்பாக இருக்கிறான்' என்று சொல்லுவர்கள்இ யாராக இருந்தாலும் சரிஇ ஒருவரை நேசிப்பதாக இருந்தால்இ அந்த நேசிப்பு உண்மைதான் என்றால் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும். அப்போது தான் அவர் மீது உண்மையான பாசம் இருப்பதாக அர்த்தம்.

எனவே சகோதர, சகோதரிகளே facebook இல் இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்காமல் இஸ்லாத்தை வாழ வைப்போம்.





அஹமட் யஹ்யா .... ஹொரோவபதான .. அனுராதபுரம்.
இலங்கை ...

No comments:

Post a Comment