Followers

Thursday, October 11, 2012

மறுமை நாளின் அடையாளங்கள் ...


 மறுமை நாளின் அடையாளங்கள் ...

அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ..
அன்பின் சகோதர சகோதரிகளே .... புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.



 
மறுமை நாளின் அடையாளங்கள் ...
உலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமேயன்றி வேறில்லை. இறையச்சமுடையோருக்கு மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் அதை சிந்திக்க வேண்டாமா? ... (அல்குர்ஆன் 6:32)

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும் ஒரு (வானவர்) அனைவரையும் அழைத்து, 'சொர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்போதும் வாழ்வீர்கள். ஒரு போதும் மரணிக்க மாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு போதும் நோயாளியாக ஆக மாட்டீர்கள், மேலும் நீங்கள் இங்கு இளமையிலே இருப்பீர்கள். ஒரு போதும் முதுமையடையமாட்டீர்கள். மேலும் நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிப்பீர்கள். ஒரு போதும் கஷ்டப்பட மாட்டீர்கள் 'என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்கள்:. அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி) நூல் - முஸ்லிம்



! சிலை வணக்கம் செய்வர் முஸ்லிம்கள்
எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை - அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார்: ஸவ்பான் (ரலி) நூல்: திர்மிதீ, அபூ தாவூத்.

அறியாமை பெருகும்
'மறுமை நாளுக்கு முன் ஒரு காலகட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும். கல்வி அகற்றப்படும். 'ஹர்ஜ்' பெருகிவிடும். ஹர்ஜ் என்பது கொலையாகும் 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), அபூ மூஸா (ரலி) நூல் - புகாரீ 7063
! விபச்சாரம், குடி அதிகரிக்கும்

'கல்வி உயர்த்தப்படுவதும், அறியாமை மேலோங்குவதும், விபச்சாரம் பெருகுவதும், மதுபானம் அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஓர் ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மறுமை நாளின் அடையாளங்களாகும் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு பாலிக் (ரலி) நூல் - புகாரீ, முஸ்லிம், அஹ்மத், நஸயீ.
கொலை 'அதிகரித்தல்!

'மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும் 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் - புகாரீ 7066).
காலம் சுருங்கும்!

காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் அஹ்மத். (மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7061.


குழப்பங்கள் மலியும்

விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாக) உட்கார்ந்திருப்பவன், (அதற்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன், நடப்பவனை விடவும், அதற்காக நடப்பவன் - அவற்றில், ஈடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். எவர் இதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவரை அவை அழிக்க முயலும். அப்போது ஒருவர் ஒரு புகலிடத்தையோ, பாதுகாப்பிடத்தையோ பெற்றால், அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7081.

தனிமையே விருப்பமாகும்
மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களில் இருந்து தமது மார்க்க (விசுவா) த்தைக் காப்பாற்ற அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத் துளிகள் விழும் (கணவாய், பள்ளத்தாக்கு) பகுதிகளுக்கும் சென்று வாழ்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்:. அபுஸயீத் அல் குத்ரி (ரலி), நூல் - புஹாரி 6495

வாழும் ஆசை அற்றுப் போய் விடும்

ஒரு மனிதர், மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை) க் கடந்து செல்லும் போது, அந்தோ நான் அவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்க வேண்டாமா? என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7115.
தகுதியற்றவனிடம் ஆட்சி இருக்கும்

நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார் (ஆட்சியும் அதிகராமும் என) பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 6496.

மோசமான ஆட்சியாளர்கள் வருவர்.

ஹஜ்ஜாஜ் ஆளுநர் மூலம் நாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றி நாங்கள் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் முறையிட்டோம். அப்பேது, அவர்கள் நீங்கள் பொறுமையாக இருங்கள். உங்களிடம் உள்ள இந்த காலத்திற்குப்பின், இதனையும் விட மிக மோசமான காலம் வராமல் இருக்காது. இது உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை தொடரும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் அறிவிப்பளர்:. சுபைர் இப்னு அதீ (ரஹ்) நூல் - புஹாரி - 7068 எனது உயிரை தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, உங்கள் இமாமை நீங்கள் கொன்று, சண்டை செய்து கொண்டு உங்களின் உலகத்தை உங்களில் கெட்டவர் ஆட்சி செய்யும்வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி) நூல் - இப்னுமாஜா.


போர் மூளும்

மயிர்களால் ஆன செருப்புகளை அணிந்துள்ள ஒரு சமுதாயத்தவருடன் நீங்கள் போர் செய்யாத வரை மறுமை நாள் வராது. உறுதியான கேடயம் போன்ற முக அமைப்புள்ள ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் செய்யாத வரை மறுமை நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி, திர்மிதி, முஸ்லிம். ஒரே வார்த்தையை முன் வைக்கின்ற இரு குழுவினர் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:. அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 3608


. ஆண்களின் எண்ணிக்கை குறையும்

கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது (அதிகமாக) அருந்தப்படுவதும், விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நி h வாகியாக இருப்பான் என்ற அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து, பெண்கள் (எண்ணிக்கை) அதிகமாவதும் மறுமை நாளின் அடையாளமாகும். இவை ஏற்படாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் - புஹாரி 6808.
தாய்க்கு எஜமானியாக மகள் இருப்பாள்

(மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண். தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர் (ரலி) முஸ்லிம் நூலில் உள்ள நீணட ஹதீஸல் ஒரு பகுதி)
. சாதாரண மனிதன் உயர் நிலையை அடைவான்

'ஆடுகள் மேய்க்கும் ஏழைகள், நிர்வாணமாகத் திரிவோர், செருப்பணியாதவர்கள் மிக உயர்ந்த மாளிகைகளை எழுப்புவதும், மறுமை நாளின் அடையாளங்களாகும' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) நிர்வாணமாகத் திரிவோர், மக்களின் தலைவர்களாக ஆவதும், மறுமைநாளின் அடையாளங்களாகும் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) (முஸ்லிம்).


அற்பனுக்குப் பிறந்த அற்பன் இவ்வுலகிலேயே பாக்கியசாலியாக ஆகாதவரை மறுமைநாள் ஏற்படாது 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹுபைதா இப்னு யமான் (ரலி) நூல் - திர்மிதீ, அஹ்மத்.


செல்வம் பெருகும்.

இப்பூமி தனது ஈரல் துண்டை தங்கம், வெள்ளியை தூண்களைப் போல் வாந்தியெடுக்கும் (வெளிப்படுத்தும்) ஒரு திருடன் வந்து 'இதற்காகத் தான் என் கை வெட்டப்பட்டது' என்பான். கொலைக்காரன் வந்து, 'இதற்காத்தான் நான் கொலை செய்தேன்' என்பான். உறவுகளைப் பிரிந்து வாழ்பவன் வந்து, 'இதற்காகத்தான் என் உறவுவினர்களைப் பகைத்தேன்' என்பான் (இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என) அவர்களை அழைத்தாலும் அவற்றில் எதனையும் எடுக்க மாட்டார்கள் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதீ. நீங்கள் தர்மம் செய்யுங்கள். மக்களிடையே ஒரு காலம் வரும். தன் தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு செல்வான், ஆனால் அதை வாங்குவோர் எவரும் இருக்கமாட்டார்கள் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி) நூல் - புகாரீ 7120.


கஞ்சனத்தனம் ஏற்படும்

'(மறுமைநாள் நெருங்கும் போது) காலம் சுருங்கும் செயல்கள் குறையும், மக்களின் உள்ளங்களில் கஞ்சத்தனம் உருவாகும் குழப்பமே தோன்றும், கொலை பெருகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 7061.
கட்டிடம் கட்டுவதில் போட்டி உருவாகும்

'மேலும், மக்கள் கட்டிடங்களை (போட்டி போட்டுக் கொண்டு) உயரமாக கட்டாதவரை மறுமை நாள் வராது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) (புகாரி) இவனின் வீட்டைப் பார்த்து, தன் வீட்டையும் அழகாக அமைத்திட அவன் முயல்வான். உடனே இவன் சமீபத்தில் கட்டிய வீட்டையே இடித்து மீண்டும் கட்ட முயல்வான். இப்படி போட்டி போட்டு கட்டிடங்களை அழகாக அமைக்க முயல்வதும்;, உயராமான கட்டிடங்களை கட்ட முனைவதும் இப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவும் மறுமை நாளின் அடையாளம் என்று நபி (ஸல்) கூறிக் காட்டுகிறார்கள்.


நபி என்று கூறுவோர் வருவர்
'இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு, அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அந்த இரு குழுக்கள் முன் வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களாக தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவரும் தன்னை 'நபி' என்று வாதாடுவான் 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ | ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 3609.
பூகம்பம் அதிகரிக்கும்

கல்வி அகற்றப்படும், பூகம்பங்கள் அதிகரிக்கும், காலம் சுருங்கும், குழப்பங்கள் தோன்றும், கொலை அதிகரிக்கும், செல்வம் கொழிக்கும் அதுவரை மறுமை நிகழாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரீ.
தவறான தொழிலும் நல்லது என ஆகும்

'ஒரு காலம் வரும், அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதை பொருட்படுத்த மாட்டார்கள் 'என்று நபி (ஸல்) கூறினார்கள் - அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ. பள்ளிவாசல்கள் பெருமைக்காக அமையும்


மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் வகையில் பள்ளிவாசலைக் கட்டுவர். இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிப்பாளர் - அனஸ் (ரலி) நூல் - நஸயீ.


இறை நம்பிக்கை (ஈமானில்) தடுமாற்றம்

'கியாமத் நாளின் ஆரம்பத்தில் (தோன்றுவதற்கு முன்) இரவின் இருள் போல் குழப்பங்கள் ஏற்படும். காலையில் மூஃமினாக இருந்தவன், மாலையில் காபிராகி விடுவான். சிலர் தங்களின் மார்க்கத்தை இவ்வுலகப் பொருட்களுக்காக விற்பார்கள் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் - திர்மிதீ, அஹ்மத். காலையில் மூஃமினாக இருந்தவன் மாலையில் காபிராகி விடுவான். மாலையில் மூஃமினாக இருந்தவன், காலையில் காபிராகி விடுவான் என்பதை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் விளக்கும் போது, 'பிறரது உயிர், உடமை, மரியாதை ஆகியவற்றைப் பேணுபவனாக காலையில் இருந்தவன், மாலையில் அவற்றைப் பறிக்கக் கூடியவனாக ஆவான். அதுபோல் மாலையில் பிறரது உயிர், உடமை, கண்ணியம் ஆகியவற்றைப் பேணியவன், காலையில் அவற்றைப் பறிப்பவனாக இருப்பான் 'என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹிஷாம் - நூல்: திர்மிதீ.


முஸ்லிமாக இருக்கமாட்டான்
'தவ்ஸ்' இனப் பெண்களின் புட்டங்கள், 'துல்கலஸா கடவுள் சிலைகயைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் 'தவ்ஸ்' இன மக்கள் வழிபட்டு வந்த நிலையாகும் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 7116). அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் இந்த 'தவ்ஸ்' குலத்தைச் சேர்ந்தவர்களே. இக்குலத்தார் இஸ்லாத்தைக் கைவிட்டு இறைமறுப்புக்குத் திரும்பிவிடுவர். ஒழிக்கப்பட்ட 'துல்கலஸா' சிலை வழிபாடு மீண்டும் தலைதூக்கும். அக்குலப் பெண்கள் போட்டியிட்டுக் கொண்டு நெரிசலில் அந்தச் சிலையைச் சுற்றிச் சுற்றி வருவர். நிலைமை இவ்வளவு தூரம் மோசமாகும் அளவுக்கு மார்க்கம் ஆதரவற்றுப் போய்விடும். அதன் பின்னரே உலக அழிவுநாள் வரும். (ஃபத்ஹுல் பாரீ).


'இப்பூமியில்' அல்லாஹ், அல்லாஹ் என்று கூறக்கூடியவர் இல்லாமல் போகும் வரை மறுமை நாள் வராது 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்.


புகை மூட்டம்
வானம் தெளிவான புகைகளை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும் .. (அல் குர்ஆன் 44:10-11).
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம், இது ஒரு (இறை விசுவாசியை) ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். (இறை மறுப்பாளரை) பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி, மூன்றாவது தஜ்ஜால் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:. அபூ மாலிக் (ரலி) நூல் - தப்ரானி . புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா நபி (அலை இறங்கி வருவது, யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வருவது கிழக்கே ஒன்று, மேற்கே ஒன்று, அரபு தீபப்பகுதியில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் (பூகம்பங்கள்) நிகழ்வது இவற்றில் இறுதியாக யமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டி ஒன்றிணைக்குதல் ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை மறுமை நாள் வராது 'என்று நபி (ஸல்) கூறினார்கள் அறிவிப்பாளர்:... ஹுதைபா (ரலி) நூல் - முஸ்லிம்


சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப் பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமாயின், அவற்றுக்கும் முன் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டிருந்தால் தவிர, எவருக்கும் அவரது ஈமான் (இறை நம்பிக்கை) பயனளிக்காது 'என்று நபி (ஸல்) கூறினார்கள் அறிவிப்பாளர்:.. அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் - முஸ்லிம், இப்னுமாஜா சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப் பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமாயின், அவற்றுக்கும் முன் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டிருந்தால் தவிர, எவருக்கும் அவரது ஈமான் (இறை நம்பிக்கை) பயனளிக்காது 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் - முஸ்லிம், இப்னுமாஜா. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப் பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமாயின், அவற்றுக்கும் முன் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டிருந்தால் தவிர, எவருக்கும் அவரது ஈமான் (இறை நம்பிக்கை) பயனளிக்காது 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் - முஸ்லிம், இப்னுமாஜா.


'சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அந்த நாள் வராது. அவ்வாறு உதிப்பதை மக்கள் காணும் போது ஈமான் கொள்வார்கள். ஆனால் அது எவருக்கும் ஈமான் பயனளிக்காத நேரமாகும் 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா.


உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம், இது ஒரு (இறை விசுவாசியை) ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். (இறை மறுப்பாளரை) பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி, மூன்றாவது தஜ்ஜால் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ மாலிக் (ரலி) நூல் - தப்ரானி.


அதிசயப் பிராணி

அவர்களுக்கு எதிரான தீர்ப்பு உறுதியாகும் போது இப்பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் அவர்களுக்காக வெளிப்டுத்துவோம். அப்பிராணி அவர்களுடன் பேசும். (இதற்குக் காரணம்) மக்கள் நம் வசனங்களை நம்பாமல் இருந்தது தான் (அல் குர்ஆன் 527:82).
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப்பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைக் தொடர்ந்து அடுத்ததும் தோன்றி விடும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் - முஸ்லிம்.
மேற்கில் சூரியன் உதிப்பது
'சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமை நாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆனால் அதற்கும் முன்பே நம்பிக்கை கொள்ளாமல் இருந்தோருக்கு அப்போது கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 6506.
தஜ்ஜாலின் வருகை
'நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத். 'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) நூல் - முஸ்லிம்.


ஈஸா நபியின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும் ... (அல்குர்ஆன் - 43:61).
'எனது உயிரை தன் நான் யில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார், சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார், ஜிஸ்யா வரியை நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவருமே இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

இன்னும் மர்யமின் மகனும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை. அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இதுபற்றிய சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) அறிவு அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னலவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமைமிக்கவன். மிக ஞானமுடையவன் ஆவான் -. (அல்குர்ஆன்: 4:157,158)

கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம்,

மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் என மூன்று பூகம்பங்கள் - நில நடுக்கம் ஏற்படும் அதை நீங்கள் காணும் வரை மறுமை நாள் நிகழாது 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹுதைபா (ரலி) நூல் - முஸ்லிம்.

பெரும் நெருப்பு

'யமனிலிருந்து நெருப்புத் தோன்றி மக்களை அவர்களின் மஹ்ஷரின் பால் விரட்டிச்செல்லும். அது நிகழும் வரை மறுமை நாள் நிகழாது 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹு ஐஹெச் பா (ரலி) நூல் - முஸ்லிம். அவர்களில் மீதாமான (மூன்றாம் பிரிவி) னர்களை (பூமியில் ஏற்படும் பெரும்) தீ நெருப்பு ஒன்று திரட்டும். அவர்கள் மதியம் ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அவர்கள் அடையும் போதும், மாலை நேரத்தை அவர்கள் அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்கின் போதும்) அந்த நெருப்பு அவர்களுடனேயே இருக்கும் 'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 6522.


ஹிஜாஸ் பகுதியலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, ஷாம் நாட்டின் புஸ்ரா (ஹவ்ரா) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் நிகழாது 'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:. அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 7118


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக ........
 
 
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான, அநுராதபுரம், இலங்கை.
*************************************************  

No comments:

Post a Comment