Followers

Thursday, October 11, 2012

தனிமை ...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ...
*****************************************




*****************************************
 

தனிமை ...  
ஒரு நாட்டின் சக்தியும் உறுதியும் அந்நாட்டின் எழுச்சி மிக்க இளைய தலைமுறையாகும். அநீதிகளுக்கெதிராய்த் துடித்தெழும் இரத்ததின் மறுபெயர்தான் இளமை.
இனிமையும் கனவுகளும் கொண்ட இளமைப்பருவம் வாழ்க்கைப் புத்தகத்தின் வித்தியாசமான ஒரு பக்கம். எதிர்காலத்தை எழுதும் பேனாக்கள்தான் இளைஞர்கள் என்று கூறினால் மிகையாகாது.

"உன்னை ஐந்து நிகழ்வுகள் அடையுமுன் ஐந்து அருட்கொடைகளை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்!
1. மரணம் வருமுன் வாழ்க்கை
2. நோய் வருமுன் உடல் ஆரோக்கியம்
3. வேலைப்பளு வருமுன் ஓய்வு
4. முதுமை வருமுன் இளமை
5. வறுமை வருமுன் செல்வ நிலை
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


உலக வரலாற்றில் உணர்ச்சிகளின் இருப்பிடமான இளையதலைமுறையின் பங்களிப்பு இன்றி எந்தவொரு சமூக மாற்றமோ, எழுச்சியோ, ஆயுதப்புரட்சியோ ஏற்பட்டதில்லை. நெறிப்படுத்தப்பட வேண்டிய ஒரு சக்திப்பிரவாகம் இளமையாகும்.
சிறு குழந்தையாகவும் இல்லாது வளர்ந்து முழுமையடைந்த மனிதனாகவும் இல்லாது துப்பவும் முடியாது மெல்லவும் முடியாது தவிக்கும் இளமைப் பருவம் சிக்கல்களினதும் பிரச்சினைகளினதும் முகவரியாகிப்போகும் நிலமை அதிசயப் படத்தக்கதல்ல.
இளைஞர்கள் இன்று எதிர் நோக்கும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று தொடர்பூடகங்களாகும். உலகத்தையே உள்ளங்கைக்குள் சுருட்டி வைக்கும் ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சி ஆக்கத்தை விட அழிவுக்கே துணைபோயுள்ள அவலத்தை நினைக்கும்போது நெஞ்சு சுடுகிறது.

அஹமட் யஹ்யா ...
ஹொரோவபதான,
அனுராதபுரம்
இலங்கை
**************


No comments:

Post a Comment