Followers

Thursday, October 11, 2012

நேசம் ......


 


*****************************************

 *****************************************


அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ..


நேசம் ......
எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவ
ை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது 'என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் (ரலி) அறிவித்தார் (ஸஹீஹுல் புகாரி:.. 16)

இம்மூன்று பண்புகளும் ஈமானியப் பண்புகளில் மிக உயர்ந்தவையாகும் அவற்றைப் பூரணப்படுத்துபவர் ஈமானின் இனிமையையும் சுவையையும் பெற்றுக் கொள்வார்.
உணவும் பானமும் நாவினால் சுவைக்கப் படுவது போன்று உள்ளத்தினால் சுவைக்கத் தக்க இனிமை ஈமானுக்கு உண்டு. உடலுக்கு உணவைப் போன்று ஈமான் உள்ளத்திற்கு உணவாக உள்ளது. உடல்ஆரோக்கியமாக இருந்தாலே அது உணவின் சுவையை அனுபவிக்கும். நோயுடன் சுவையை அனுபவிக்க முடியாது.
மட்டுமின்றி சில வேளைகளில் அது உடலுக்கு கேடுவிளைவிக்கக் கூடியதாகவும் மாறலாம். அவ்வாறு தான் உள்ளமும். அது நோய்களிலிருந்து ஆரோக்கியமாக இருக்கும் போதே ஈமானின் சுவையை அனுபவிக்கும். வழிகெட்ட மனோ இச்சை, ஹராமாக்கப்பட்ட ஆசைகள் போன்ற நோய்களிலிருந்து அது ஆரோக்கியமாக இருக்கும்
போது ஈமானின் சுவையை நுகரும். எப்போது உள்ளம் நோய்வாய்ப்படுகிறதோ அந்த சந்தர்ப்பங்களில் அதனால் ஈமானின் சுவையை நுகர முடியாது.

மாறாக அழிவையே அது சந்திக்கும் எனவேதான் ஒருவன் மூமினாக இருக்கக் கூடிய நிலையில் விபச்சாரம் செய்ய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில் அவனுடைய ஈமான் பூரணமானால் ஈமானின் சுவையை அவன் அனுபவிப்பான் அப்போது ஹராமிலிருந்து அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வான்.

அல்லாஹ்வுக்காக நேசிப்பது என்பது ஈமானின் அடிப்படைகளில் உள்ளதும் அதன் படித்தரங்களில் உயர்ந்ததுமாகும். நபி (ஸல்) அவர்களிடம் ஈமானில் மிகவும் சிறந்தது எது என வினவப்பட்டபோது, நீ அல்லாஹ்வுக்காக நேசிப்பதும் அவனுக்காக கோபிப்பதும் அல்லாஹ்வுடைய நினைவில் உனது நாவை ஈடுபடுத்துவதுமாகும் என்று கூறியதாக முஆத் இப்னு அனஸ் அல் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மேலும் ஓர் அடியான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக கோபிக்காத வரையில் அவன் ஈமானின் தெளிவான நிலையை அடைய மாட்டான். யார் அல்லாஹ்வுக்காக நேசித்து அல்லாஹ்வுக்காக பகைக்கின்றானோ அவன் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவனாக மாறுகிறான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர்:
அம்ர் இப்னு ஜமூஹ் (ரலி), நூல்: அஹமத்

ஈமானின் மிக உறுதியான நிலை அல்லாஹ்வுக்காக நேசித்து அல்லாஹ்வுக்காகக் கோபிப்பது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அமல்களில் சிறந்தது அல்லாஹ்வுக்காக நேசிப்பது, அல்லாஹ்வுக்காக கோபிப்பது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.
யார் அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காக பகைத்து மேலும் அவனுக்காக கொடுக்கிறாரோ அவர் ஈமானைப் பூரணப்படுத்தியவராவார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி) நூல்:. அஹ்மத்

இந்தப் பண்பு முந்தைய பண்பைத் தொடர்ந்து வரக்காரணம் என்னவெனில் யார் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏனைய அனைத்தையும் விட அதிகமாக நேசிக்கிறாரோ அவரது அனைத்து நேசரும் அல்லாஹ்வுக்காகவே அமைந்துவிடும். இதனால் அவரது கோபம், நேசம், பகையை அனைத்துமே அல்லாஹ்வுக்காக அமைந்துவிடும்.

எனவே அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன் ..


அஹமட் யஹ்யா ...
ஹொரோவபதான ..
அனுராதபுரம்
இலங்கை
*************


No comments:

Post a Comment