Followers

Thursday, October 11, 2012

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல்


அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ..
அன்பின் சகோதர சகோதரிகளே ......
 

 ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல்
 
மனிதர்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும், இதமான உறவுஇல்லாமல் போவதற்கும், புரிதலில் தெளிவற்று தவறான புரிதல்கள் உருவாகுவதற்கும்காரணமாக இருப்பது தேவையற்ற சந்தேகங்களும், அவதூரு பரப்புதலும் தான் என்றால் அதுமிகையில்லை. வாழ்வில் பல சந்தர்ப்பங்கள் நம்முடைய மனதில் அடுத்தவர்களைப் பற்றிய தீய எண்ணங்களை சுமந்து கொள்ளும் அந்த தீய எண்ணங்கள் குரோதமாக மாறி, தான் கொண்ட தவரான எண்ணத்தை அவதூராக பரப்பும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தி விடும்.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, தன்மை முஸ்லிமாக பிரகடனம் செய்து தன் வாழ்வை அழகிய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டவர்கள் தேவையற்ற சந்தேகத்தையும், அதன் மூலம் உருவெடுக்கும் அவதூறு பரப்புதலையும் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.


ஷைத்தான் மனிதனை பாவத்தின் பக்கம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்குக் கையாலும் மிக எளிய முறை தீய எண்ணங்களை உருவாக்குவது என்று புரிந்து கொள்ள முடியும்.


அல்லாஹ் தவிர்ந்து கொள்ளும்படி மிகவும் கண்டித்துக் கூறும் பாவங்களில் மிக முக்கிய பாவமாக இந்த பாவங்கள் அமைந்திருக்கின்றன.


நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

மேற்கண்ட வசனத்தில் பொதுவாக மனிதர்களை அழைத்து இறைவன் பேசாமல் குறிப்பாக நம்பிக்கை கொண்டவர்களை அழைத்துப் பேசுகின்றார். காரணம் இந்தப் பாவத்தைப் பொருத்த வரையில் சர்வ சாதாரணமாக அனைவரும் இதில் ஈடுபடுவார்கள். இறைவனை நம்பி, நரகத்தை பயந்து வாழக்கூடியவர்கள் மாத்திரம் தான் இந்தப் பாவத்தில் இருந்து விளகி வாழ முடியும். அல்லாஹ்வை யாரெல்லாம் பயப்படவில்லையோ அவர்கள் இந்தப் பாவத்தை சாதாரணமாக நினைத்து தினமும் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.
"பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்தும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள் "என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5143.


பிறர் மீது கெட்ட எண்ணன் கொள்வது குறித்து கடுமையாக எச்சரிக்கை விடுத்ததும் அதைப் பற்றி விளக்குகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். பேச்சுக்களில் மிகவும் பொய்யான பேச்சு கெட்ட எண்ணத்தில் உருவாகும் பேச்சுதான் என்று தெளிவாக்குகிறார்கள். கெட்ட எண்ணத்தில் ஆதாரம் இல்லாமல் நாம் பேசும் போது நிறைய பொய்களை சேர்த்து பேச வேண்டிய நிலை உருவாகிவிடுகின்றது. அவர்களைப் பற்றி தேவையில்லாமல் துருவித் துருவி ஆராய வேண்டிய நிலையையும் உருவாக்கி விடுகின்றோம்.


அதனால் தான் துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்க்காதீர்கள் அடுத்தவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களாக இருந்து கொள்ளுங்கள் என்று அழகிய முறையில் உபதேசம் சொல்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.


ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 6.


வாழும் வரை நல்லவர்களாக வாழ்ந்து நாளை மறுமையில் வெற்றி பெற்று சுவர்க்கம் என்ற அழகிய இடத்தை நாம் அடைவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அஹமட் யஹ்யா 
ஹொரோவபதான, அனுராதபுரம் .. இலங்கை
************************************************** ********************************

No comments:

Post a Comment