Followers

Thursday, October 11, 2012

அஹமட் யஹ்யா


 அஹமட் யஹ்யா





மனிதனே!
ஒரு காசு தந்தவனையும்,
ஒரு போதும் மறக்காத நீ ..
எண்ணிலா அருள் தந்தவனை
எங்ஙனம் மறக்கின்றாய்.

      
அழுகின்ற பிள்ளையை
அணைக்கின்ற நீ,
அல்லல் படுவோரை
அழிப்பது சரிதானா?

                                                                    
பயிர்ச்செய்கையில்
களையகற்றும் நீ,
நன்மையை ஏவிக் கொண்டே
தீமையைப் புரியலாமா?

                                                                         
தடுக்கி விழுந்தவனைத்
தூக்கி விடும் நீ,
வீழ்ந்த சமூகத்தை
மிதிப்பது சரி தானா?

                                                                       
இறைவன் தந்த வாழ்வை
இயற்கை மறுப்பதில்லை.
இலக்கு இல்லாத வாழ்வை
இறைவன் ஏற்பதில்லை.

                                                                         
முஸ்லிமே!
சொல்லிலும் செயலிலும்
இஸ்லாத்தைக் கலப்போமே.
சமூக உறவிலே,
சகோதரத்துவத்தை வளர்ப்போமே
.
                                                                      
மனித சட்டங்களின் இடத்திலே,
இறை சட்டங்களை வைப்போமே ..
இஸம்களின் ஆட்சியை விட்டு விட்டு
இஸ்லாமிய கிலாபத்தை நட்டுவோமே.

                                                                     
மக்களே!
நீங்; கள் கட்டுப்படும் சட்டங்கள்
இஸ்லாமான பின் பாருங்கள் ..
இருள்கள் நீங்கி, ஒளி பரவியதை ..
தீமைகள் மங்கி, நன்மைகள் ஓங்கியதை ..
குழப்பங்கள் குறைந்து, அமைதி கூடியதை ..
தீய சமூகம் மறைந்து,
தூய சமூகம் உதிப்பதைக் காண்பீர்கள்.

                                                                        
நீரில்லாமல் உயிர் வளருமா?
காற்றில்லாமல் உயிர் வாழுமா?
அழைப்பில்லாமல் சமூகம் மாறுமா? ..
ஆட்சியில்லாமல் இஸ்லாம் பூரணமாகுமா?.

                                                                        
இருள்கள் நீங்க .. ஓளி வேண்டுமே!
இஸம்கள் ஒழிய .. கிலாபத் வேண்டுமே!

                                                                               
வாருங்கள் நண்பர்களே வாருங்கள் ..
வல்லவன் அல்லாஹ்வின் பால்
அழைப்போம் வாருங்கள் ..
வள்ளல் நபியின் வழியில்
அழைப்போம் வாருங்கள் ..

                                                                            
மயிலாடக் கண்டு
மகிழ்வதைப் போல் ..
சமூகத்தைப் பார்த்து
சந்தோஷப்படும் நாளை ..
.
                                                                           
குயில் பாடக் கேட்டு
குதூகளிப்பதைப் போல் ..
தினச் செய்தியால்
சந்தோஷப்படும் நாளை,
************************************** ***

No comments:

Post a Comment