Followers

Saturday, October 20, 2012

அல்குர்ஆனில் கூறப்பட்ட நல்லவர்கள்.

  
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே ..அல்ஹம்துலில்லாஹ்.

அல்குர்ஆனில் கூறப்பட்ட நல்லவர்கள்.

1- அபூபக்கர் (ரலி).

இவர்களின் பெயர் அல்குர்ஆனில் கூறப்படாவிட்டாலும் நபி(ஸல்) அவர்கள்
மக்காவை விட்டு காபிர்களால் வெளியேற்றப்பட்டு மதீனாவுக்குச் செல்லும்
வழியில் ஒரு குகையில் தங்கி இருந்தார்கள் என்ற செய்தி. அல்குர்ஆனில்.
(நமது தூதராகிய) இவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டாலும்,நிராகரித்தோர்
அவரை இருவரில் ஒருவராக (மக்காவை விட்டும்) வெளியேற்றிய போதும்
அவ்விருவரும் குகையில் இருந்த நேரத்தில்,அவர் தன் தோழரிடம் நீர் 
கவலைப்படாதீர், நிச்சயமாக அல்லாஹ் நம்முடந் இருக்கிறான். என்று
கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவி செய்தேயுள்ளான். அப்போது
அவர் மீது அல்லாஹ் தனது அமைதியை இறக்கி, நீங்கள் காணத படைகள்
மூலம் அவரைப் பலப்படுத்தி,நிராகரித்தோரின்  வார்த்தையைத் தாழ்ததாக
ஆக்கினான்.அல்லாஹ்வின் வார்த்தைதான் மிக உயர்வானதாகும். அல்லாஹ்
யாவற்றையும் மிகைத்தவன்,ஞானமிக்கவன்.    (9:40)   வசனத்தில் 
கூறப்படுகின்றது. இவ்வசனத்தில் அவ்விருவரும் குகையில் இருந்த 
நேரத்தில் அவர் தன் தோழரிடம், நீர் கவலைப்படாதீர் அல்லாஹ் நம்முடன்
இருக்கிறான். என்று வரும் செய்தியில் தோழர் என்பது அபூபக்கர் (ரலி)
அவர்கள் தான் என ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும், வரலாறுகளிலும்
வந்துள்ளன.

2- ஸைத் (ரலி).

இவர்களின் பெயர் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் நபி(ஸல்)
அவர்களின் வளர்ப்பு மகனாவார்.ஜாஹிலிய்யாக்கால வழக்கத்தில் வளர்ப்பு
மகன் சொந்த மகனாக கருதப்பட்டு வந்த நடைமுறை இஸ்லாத்தில்
தடைசெய்யப்பட்டதுடன் வளர்ப்பு மகன் விவாகரத்துச் செய்த மனைவியை
வளர்ப்புத் தந்தை திருமணம் முடித்துக்கொள்ளலாம் என இஸ்லாம்
சட்டமியற்றியுள்ளது.இதனடிப்படையிலேயே ஸைத்(ரலி) அவர்கள்
விவாகரத்துச் செய்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை நபிஸல்
அவர்களுக்கு அல்லாஹ்  திருமணம் செய்து வைத்ததாக.
எவர் மீது அல்லாஹ் அருள் புரிந்து,நீரும் அவருக்கு பேருபகாரம் புரிந்தீரோ,
அவரிடம் நீர் உமது  மனைவியை உம்மிடமே வைத்துக்கொள். மேலும்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள். என நீர் கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக!.)
அல்லாஹ் வெளியாக்க இருந்ததை  உமது மனதிற்குள் நீர் மறைத்து 
மனிதர்களுக்கு நீர் அஞ்சுகிறீர். அல்லாஹ்வை நீர் அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன். எனவே 'ஸைத்'  அவளிடம்  தனது தேவையை முடித்துக்
கொண்ட போது, உமக்கு  நாம் அவளைத் திருமணம் செய்து வைத்தோம்.
வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களது மனைவியிடம் தேவையை முடித்து
(விவாகரத்துச் செய்து) கொண்டால் அவர்களை (மணந்து கொள்வதில்)
நம்பிக்கை கொண்டவர்(களான வளர்ப்புத் தந்தையர்)களுக்கு  சங்கடம்
இருக்கக்கூடாது என்பதற்காக (நாம் இதைச் செய்தோம்.) அல்லாஹ்வின்
கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும்.   (33:37)  அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

3- லுக்மான்.

"லுக்மானுல் ஹகீம்" என்று கூறப்படும் இவர் ஞானமிக்க நல்லடியார் ஆவார்.
அல்குர்ஆனில்..31 வது அத்தியாயம் இவரது பெயரில் அழைக்கப்படுகிறது.
இதில் அவர் தனது மகனுக்குச் செய்த நற்போதனைகள் இடம்பெற்றுள்ளன.
அவைகள்...
'அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்துவீராக!. எனக்கூறி , நிச்சயமாக நாம்
லுக்மானுக்கு ஞானத்தைக்கொடுத்தோம். யார் நன்றி செலுத்துகிறாரோ
அவர் தனக்குத் தானே நன்றி செலுத்துகின்றார். எவன் நிராகரிக்கிறானோ
நிச்சயமாக அல்லாஹ்  யாதொரு தேவையற்றவனும்,புகழுக்குரியவனும்
ஆவான்'.       (31:12)  

'லுக்மான் தனது மகனுக்கு உபதேசம் செய்தபோது. என்னருமை மகனே!
அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே  நிச்சயமாக இமைவைத்தல்  மிகப்
பெரும் அநியாயமாகும். எனக் கூறினார்'.      ( 31:13)

'என்னருமை மகனே! நிச்சயமாக (நன்மையோ, தீமையோ) அது கடுகின்
வித்தளவு இருந்து,அது ஒரு பாறைக்குள்ளேயே, வானங்களிலோ,
அல்லது பூமியிலோ, இருந்தாலும் அதனையும் அல்லாஹ் கொண்டு
வருவான். நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவன், நன்கறிந்தவன்'. (31:16) 
இச்செய்தி லுக்மான் (அலை) அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் 
செய்தார்கள்.  

4- துல் கர்னைன்.

இது உலகப்பேரரசர் ஒருவரின் பெயராகும். இவர் நல்லாட்சி நடத்தி வந்தார்.
யஃஜூஜ்,மஃஜூஜ் என்ற குழப்பக்கார கூட்டத்தாரின் தொல்லையிலிருந்து
மக்களைப் பாதுகாப்பதற்காக அவ்வரசர்  இரு மலைகலுக்கிடையில் வாழ்ந்து
வந்த அக்கூட்டத்தினரை பாரிய இரும்புப் பாளங்களைக் கொண்ட தடுப்புச்
சுவரின் மூலம் அடைத்து வைத்தார். எனினும் மறுமை நாள் நெருங்கும் போது
அத்தடுப்புச் சுவர் உடைக்கப்பட்டு அவர்கள் வெளியில் வந்து குழப்பம்
புரிவார்கள். என நபிஸல் அவர்கள் கூறினார்கள்.  (நூல். புகாரி, முஸ்லிம்) 
இது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில்...
"துல்கர்னைன்" பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அவர் பற்றிய
செய்தியை நான் உங்களுக்கு கூறுவேன் என( நபியே) நீர் கூறுவீராக!.  (18:83)   

'நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில்( ஆட்சி புரிவதற்கு) வசதியை 
ஏற்படுத்திக்கொடுத்தோம். இன்னும் நாம் அவருக்கு ஒவ்வொரு
பொருளிலிருந்தும் (பயனடையும்) வழியையும் வழங்கினோம்'.   (18:84)   

'சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது,கருப்பு நிற சேற்று
அது மறைவதைக் கண்டார். இன்னும் அங்கே ஒரு கூட்டத்தையும்
கண்டார். அப்போது "துல் கர்னைனே! (அவர்களை) நீர் தண்டிக்கலாம்
அல்லது நல்லமுறையில் அவர்களுடன் நீர் நடந்து கொள்ளலாம்
என்று நாம் கூறினோம்'.   (18:86) 

5- அஸ்ஹபுல் கஹ்ப்.

குகைவாசிகள் என்பது இதன் பொருள். அல்லாஹ்வை நம்பிக்கை
கொண்ட ஒரு இளைஞர் குகையினரே இவர்கள். தாம் கொண்ட கொள்கையை
காப்பதற்காக அநியாயக்கார அரசனின் பிடியிலிருந்து அவர்கள் தப்பி,ஒரு
குகையில் ஒதுங்கினார்கள். இவர்களுடன் இவர்களது நாயும் குகையில்
தங்கியது. சுமார் 300 ஆண்டுகள் அளவில் அவர்கள் அதில் தூங்கி பின்னர்
விழித்து பின்னர் அனைவரும் மரணித்தனர் என்று சிலரும் 309 ஆண்டுகள்
இவ்வாறு அவர்கள் இருந்தனர்.என்று வேறு சிலரும் கூறுகின்றனர்.

ஆனால் அவர்கள் தங்கிய கால அளவை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும்போது..
"அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கியிருந்தனர்.
என்று சிலரும், மற்றும் சிலர் மேலும் ஒன்பது ஆண்டுகளை அதிகரித்தும்"
(கூறினர்.)  (18:25)   

அவர்கள் தங்கி இருந்தது பற்றி அல்லாஹ்வே மிக அறிந்தவன், வானங்கள்
மற்றும் பூமியின் மறைவானவை அவனுக்கே உரியது என்று நபியே  நீர்
கூறுவீராக  அவனது பார்வையும்,கேள்வி ஞானமும் எவ்வளவோ உயர்ந்தவை. அவனையன்றி  அவர்களுக்கு எந்த ஓர் உதவியாளனும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் எவரையும் கூட்டுச் சேர்க்கவும் மாட்டான்.(18:26)
 எனும் வசனங்களில் கூறப்பட்டுள்ளன.

6- தாலூத்.

மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர்  பனூ இஸ்ராஈல்களை  ஆட்சி
செய்வதற்காக தாலூத் என்ற மன்னரை அல்லாஹ் ஏற்பாடு செய்தான்.
இந்த மன்னரின் தலைமையில்  சென்ற நல்லடியார்களான குறைந்த
எண்ணிக்கையை உடைய படை மூலம், ஜலூத் எனும் கொடியவன் அதிக
எம்ணிக்கை கொண்ட படை தோற்கடிக்கப்பட்டது. இந்தப் போரில்
தாவூத் (அலை) அவர்கள் மூலம் ஜாலூத் எனும் கொடியவன் கொல்லப்பட்டான்.அறியும் உடல் வலிமை மிக்க தாலூத் ஒரு சிறந்த 
அரசராவார்.
'மூஸாவுக்குப்பின் தங்கள் நபியிடம்  அல்லாஹ்வின் பாதையில் நாங்கள்
போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள். எனக் கேட்ட பனூ இஸ்ராஈல்
-களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர்  உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது  இருந்து விடுவீர்களோ?  எனக் 
கேட்க நாம் எமது  இல்லங்களையும்,குழந்தைகளையும் விட்டு வெளியேற்ற
-ப்பட்டிருக்கும் போது,அல்லாஹ்வின் பாதையில் போராடாமல் இருக்க 
எமக்கு என்ன நேர்ந்தது? எனக் கூறினர். ஆனால் அவர்கள் மீது போர்  விதியாக்
-கப்பட்ட போது அவர்களில் சொற்பமானவர்களைத் தவிர (ஏனையோர்)
புறக்கணித்தனர். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்".(2: 246)   

"எனவே அல்லாஹவின் உதவியினால் இவர்கள் அவர்களைத் தோற்கடித்
-தனர்.  தாவூத், ஜாலுத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும்,
 ஞானத்தையும் வழங்கி , தான் நாடுபவற்றிலிருந்து அவருக்குக் கற்றும் 
கொடுத்தான். அல்லாஹ் மனிதர்களில் சிலரைச் சிலர் மூலம் தடுக்காது 
இருந்தால் இந்தப்பூமி  சீர் கெட்டிருக்கும். எனினும் அல்லாஹ் அகிலத்தார்
மூது அருள் பாலிப்பவனாவான்:.  (2:251)   

7- மன்னிக்கப்பட்ட மூவர்.

தபூக் போரின் போது  பயணச் சிரமம்,எதிரிகளின் பலம்,விவசாய அறுவடை
காலம்,கொடிய வெப்பம் போன்ற காரணங்களால் பலரும் போருக்குச் செல்லாது தங்கி விட்டனர். இவர்களில் முனாபிக்குகள் போலிக் காரணங்களையும்  மற்றும் சிலர் உண்மைகளையும் கூறித் தப்பித்துக்
கொண்டனர். எனினும் எவ்வித நியாயமான காரணங்களுமில்லாது பொடு
போக்குக் காரணமாக போருக்குச் செல்லாத மூவர் உண்மையை உரைத்து,
அதனால் அல்லாஹ்வின் தீர்ப்பு வரும் வரை அவர்கள் ஒதுக்கி வைக்கப்
பட்டனர். பின்னர் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டதாக அருள் மறை
வசனங்கள் இறங்கியது.
'இன்னும் (அல்லாஹவின் தீர்ப்புக்காகத்) தாமதப்படுத்தப்பட்ட மூவரையும்
(அவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அது அவர்களுக்கு
நெருக்கடியாகி,அவர்களுக்கு எதிராக அவர்களது உள்ளங்களும் நெருக்கடியாகி விட்டன.அல்லாஹ்விடமிருந்து (தப்புவதற்கு ) அவனிடமேயன்றி புகலிடமில்லை என்பதை அவர்கள் உறுதியாக 
அறிந்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் வருவதற்காக அவன் அவர்களை
மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பளிப்பவன்.
நிகரற்ற அன்புடையவன்'. (9:118)   

மன்னிக்ப்பட்ட மூவரும் யார்..?
1- கஃப் இபுனு மாலிக் (ரலி)
2- ஹிலால் இப்னு உமையா (ரலி)
3- மிராரா இப்னு ரபீஃ (ரலி)  
ஆகியோர் . 

எனவே அல்குர்ஆனில் நல்லவர்கள் என்று கூறப்பட்டவர்களை
மேலே சொல்லப்பட்டிருப்பதை உணர்ந்தோம். இன்ஷா அல்லாஹ்
தொடரும்....
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்..

தொகுப்பு...
அஹமட் யஹ்யா
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
______________________________**************______________________________________
  
 

No comments:

Post a Comment