Followers

Sunday, October 21, 2012

அல்குர்ஆனில் கூறப்பட்ட 25 நபிமார்கள்


அல்குர்ஆனில் கூறப்பட்ட 25 நபிமார்கள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

1- ஆதம்   (அலை)

"இன்னும் அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும்
கற்றுக்கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு
எடுத்துக்காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின்
இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்று
கூறினான்."     (2:31)

"ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!
என (அல்லாஹ்) கூறினான் அவர் அவற்றின் பெயர்களை
அவர்களுக்கு அறிவித்த போது நிச்சயமாக வானங்களிலும்,
ூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் நன்கறிந்தவன்
என்றும், நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும்  மறைத்துக்
கொண்டிருப்பவற்றையும் நான் நன்கறிந்தவன் என்றும்
உங்களுக்குக் கூறவில்லையா என (அல்லாஹ்) கேட்டான்."  (2:33)

2- நூஹ் (அலை)
"நிச்சயமாக நாம் நூஹை அவரது சமூகத்திற்கு(த் தூதராக)
அனுப்பினோம். "நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக
எச்சரிக்கை செய்பவன். (என்றார்.)" (11:25)

3-  இத்ரீஸ் (அலை)
"(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நீர் நினைவு
கூறுவீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராகவும்,
நபியாகவும் இருந்தார்."   (19:56)

4-இப்ராஹீம் (அலை)
"இதற்கு முன்னரே  இப்ராஹீமுக்கு அவருக்குரிய நேர்வழியை
நிச்சயமாக நாம் வழங்கிவிட்டோம். இன்னும் அவர் பற்றி நாம்
நன்கறிந்தவர்களாக இருந்தோம்."   (21:51)

5- இஸ்மாயீல் (அலை)
"(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நீர் நினைவு
கூறுவீராக  நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக
இருந்தார். மேலும் அவர் ரஸூலாகவும்,நபியாகவும் இருந்தார்". (19:54)

6- இஸ்ஹாக் (அலை)
"மேலும் நாம் இஸ்ஹாக்கை நல்லவர்களில் உள்ள நபியாக அவருக்க
நன்மாராயம் கூறினோம்".   (37:112)

7- யஃகூப் (அலை)
"யஃகூப் தன் தந்தையிடம் என் தந்தையே  நிச்சயமாக நான் பதினொரு
நட்சத்திரங்களையும்,சூரியனையும்,சந்திரனையும் (கனவில்) கண்டேன்.
அவை எனக்கு சுஜூது செய்யக் கண்டேன் என்று கூறியதை 
(எண்ண்ப்பார்ப்பீராக)."    (12:4)

8- யூஸூப் (அலை)
"நாம் ஒரு கூட்டமாக இருந்தும் யூஸூப்பும் அவரது சகோதரரும் எம்மை
விட எமது தந்தைக்கு மிக நேசத்திற்குரியவர்களாக இருக்கின்றனர்.
நிச்சயமாக எமது தந்தை தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார்.என
(யூஸூபின் சகோதரர்கள்) கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக!)". (12:8)

9- லூத் (அலை)
"லூத்தின் சமூகத்தாரும் தூதர்கலைப் பொய்ப்பித்தனர்".
"அவர்களது சகோதரர் லூத் அவர்களிடம் நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி
நடக்க வேண்டா?  எனக் கேட்டதை (நீர் எண்ணிப்பார்ப்பீராக!).  (26:160, 161)

10- ஹூத் (அலை)
"ஆது கூட்டத்தினர் தூதர்களைப் பொய்ப்பித்தனர்".
"அவர்களது சகோதரர் ஹூத் அவர்களிடம் நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி
நடக்க வேண்டாம? எனக் கேட்டதை (நீர் எண்ணிப்பார்ப்பீராக!)". (26:123, 124)

11- ஸாலிஹ் (அலை)
"ஸமூது கூட்டத்தினர் தூதர்களைப் பொய்ப்பித்தனர்."
"அவர்களது சகோதரர் ஸாலிஹ் அவர்களிடம் நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி
நடக்க வேண்டாமா? எனக் கேட்டதை (நீர் எண்ணிப்பார்ப்பீராக!)." (26:141, 142)

12- ஷூஜப் (அலை)
"தோப்புவாசிகள் தூதர்களைப் பொய்ப்பித்தனர்".
"நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடக்க வேண்டாம? என அவர்களிடம்
ஷூஜப் கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக!)".   (26:176, 177)

13- மூஸா (அலை)
"மூஸாவுக்குப் பாலூட்டுவீராக! அவர் குறித்து நீர் அஞ்சினால் அவரைக்
கடலில் போட்டுவிடுவீராக!  நீர் அஞ்சவும் வேண்டாம், துக்கப்படவும்
வேண்டாம். நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் திருபபிக் கொண்டு
வந்து அவரை (நம்) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம். என அவரின்
தாயாருக்கு நாம் அறிவித்தோம்".   (28:7)

14- ஹரூன் (அலை)
"(தூர்ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து நாம் அவரை அழைத்தோம்.
இரகசியமாகப் பேசுவதற்காக நாம் அவரை நெருங்கிவரச் செய்தோம்".
"நமது அருளினால் அவருக்கு அவரது சகோதரர் ஹரூனை நபியாக
வழங்கினோம்."     (19:52, 53)

15- தாவூத் (அலை)
"(நபியே!) இவர்கள் கூறுபவைகள் குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக
இன்னும் வலிமை மிக்க எமது அடியார் தாவூத்தை நீர் நினைவு
கூறுவீராக நிச்சயமாக அவர் அதிகம் (மன்னிப்புக்கோரி) மீள்பவராக
இருந்தார்."  (38:17)

16- ஸூலைமான் (அலை)
"தாவூத்துக்கும்,ஸூலைமானுக்கும் நிச்சயமாக நாம் அறிவை வழங்கினோம்.
நம்பிக்கையாளர்களான அவனது அடியார்களில் அதிகமானோரை விட
எம்மை  மேன்மைப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்  என அவ்
விருவரும் கூறினர்."   (27:15)

17- ஜயூப் (அலை)
"எமது அடியார் அய்யூபை (நபியே!) நீர் நினைவு கூறுவீராக! நிச்சயமாக
என்னைச் ஷைத்தான் துன்பத்தாலும், வேதனையாலும் பிடித்துக்
கொண்டான் என்று தன் இரட்சகனை அழைத்துப் பிராத்தித்த போது
உமது காலால் (நிலத்தில்) அடிப்பீராக! (அடிக்கவே நீர் பீரிட்டு ஓடியது)
இதோ குளிர்ந்த குளிக்குமிடமும், குடி பானமுமாகும் 
(எனக் கூறினோம்.)"    (38:41, 42)

18- துல்கிப்லு (அலை)
"இஸ்மாஈலையும், அல்யஸஉவையும், துல்கிப்லையும் (நபியே!) நீர்
நினைவு கூறுவீராக! இவர்கள் அனைவரும் நல்லவர்களில் 
உள்ளவர்கள்."     (38:48)

19- யூனுஸ் (அலை)
"நிச்சயமாக யூனுஸூம் தூதர்களில் உள்ளவர்."        (37:139)

 20- இல்யாஸ் (அலை)
"நிச்சயமாக இல்யாஸூம் தூதர்களில் உள்ளவர்." (37:123)

21- அல்யஸஉ (அலை)
  
"இஸ்மாஈலையும், அல்யஸஉவையும், துல்கிப்லையும் (நபியே!) நீர்
நினைவு கூறுவீராக! இவர்கள் அனைவரும் நல்லவர்களில் 
உள்ளவர்கள்."     (38:48)
         
22- கரிய்யா (அலை)
"(இது) உமது இரட்சகன் தனது அடியாராகிய ஸகரிய்யவுக்குப் புரிந்த
அருளை நினைவு கூர்வதாகும்."    (19:2)

23- யஹ்யா (அலை)
"யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடிப்பீராக  (என்று கூறினோம்)மேலும் சிறு பராயத்திலேயே அவருக்கு ஞானத்தையும் 
வழங்கினோம்."  (19:12)

24- ஈஸா (அலை)
"நிச்சயமாக நான்  அல்லாஹ்வின் அடியானாவேன் அவன்  எனக்கு
வேதத்தை வழங்கி என்னை நபியாகவும் ஆக்கியுள்ளான் என்று
(அக்குழந்தை ஈஸா) கூறியது"   (19:30)

25- முஹம்மத் (ஸல்( அவர்கள்
"முஹம்மத் அல்லாஹவின் தூதராவார். மேலும் அவருடன் இருப்போர்
நிராகரிப்பாளர்கள் மீது கடுமையானவர்களாகவும், தமக்கிடையே
கருணையுடையோராகவும் இருக்கின்றார். அல்லாஹ்வின் பொருத்தத்
-தையும்,அருட்கொடையையும் நாடி ரூகூஃ செய்பவர்களாகவும், சுஜூது
செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்............"  (48:29)

அல்குர்ஆனில் கூறப்பட்ட 25 நபிமாரகளின் பெயர்களை 
மேலே காண்கின்ரோம் அல்லாஹ் நபிமாரகளை அனுப்பி
அவர்களை எப்படி கண்ணியப்படுத்தி இருக்கின்றான்.
என்பதையும் காண்கின்றோம், இன்ஷா அல்லாஹ் தொடரும்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொகுப்பு...
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான
அனுராதபுரம்.
SRI LANKA
========================================================================      
    .    
 
      

No comments:

Post a Comment