Followers

Wednesday, November 7, 2012

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!
* ஒரு முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை முதலிடம் வகிக்கின்றது.

* ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு அஞ்சி, கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் ஜெயம் பெறுகிறான்.


* ‘யார் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியத்தை விரும்புகின் றாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பதை கடமையாக்கிக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸ்)


* அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியும், அஞ்சி வாழும் ஒரு மனிதன் உலக ஆசைகளுக்கு விலைபோக மாட்டான்.


* அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதன் மூலம் ஒரு மனிதன் பாவமான, வெறுக்கத்தக்க காரியங்களில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொள்கிறான்.


* அல்லாஹ்வை அஞ்சி வாழும் ஒரு மனிதன் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கூறியவற்றில் தனக்கு இயலுமான அனைத்து விடயங்களையும் தனது வாழ்வில் எடுத்து நடப்பான்.


* அல்லாஹ்வை அஞ்சி வாழும் ஒரு மனிதன் தனது செயற்பாடுகளை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நோக்கோடு செய்வான்.


அல்லாஹுத்தஆலாவுக்கு கட்டுப்பட்டு நடப்பது


* நேரம் தவறாது கடமையான, ஸ¤ன்னத்தான தொழுகைகளை தொழுதல்.


* நோன்புகளை நோற்றல்


* ஸகாத்தை வழங்குதல்


* ஹஜ் செய்தல்


* நபி (ஸல்) அவர்களை தனது உயிரினும் மேலாக விரும்பு தல்.


* அல்லாஹ்வின் படைப்புகளுக்கு உதவி செய்தல்.


* அயலவர்களோடு நல்ல முறையில் நடத்தல்.


* குடும்ப உறவுகளைப் பேணல்.


* வாழ்வின் எந்த நிலையிலும் அல்லாஹ்வின் வழிகாட்டல்களைப் பின்பற்றல்


அல்லாஹ்வை கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள்


* அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவோம்.


* சத்தியத்திற்காக வாழும் துணிச்சலைப் பெறுவோம்.


* தீமைகளை களைவதில் உறுதியாக இருப்போம்.


* நன்மைகளை செய்வதில் ஆர்வம் காட்டுவோம்.


* இன்பங்களிலும், துன்பங்களிலும் பொறுமை காப்போம்.


* மன அமைதி கிடைக்கும்.


* பிறர் மீது தப்பெண்ணம் வைக்க மாட்டோம்.


* எங்களுடைய எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கும்.


* என்ன கஷ்டங்கள் வந்தாலும் அல்லாஹ்விடமே கை ஏந்துவோம்.


யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA 
__________________________________________________________________________________

No comments:

Post a Comment