Followers

Tuesday, November 13, 2012

எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....


எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.

தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (6:98)

நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!

அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (3:6)

தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13:8)


வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!
”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96:5)

நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன்: 16:14)

நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப் படுத்தப்படுவீர்கள். (43:11)
பல முறை தோற்றும் கரையைத் தொட முயன்றிடும் கடலைப் பார்!
நேரம் தவறாமல் விழித்திடும் சூரியனைப் பார்!
எதையும் எதிர்பார்க்காமல் தன் பயணத்தைத் தொடரும் காற்றைப் பார்!
மழை பொழிந்தாலும் மனம் தளராமல் பயணிக்கும் எறும்புகளைப் பார்!
பசித்த போதிலும் பகிர்ந்து உண்ணும் காக்கைகளைப் பார்!
இலைகள் உதிர்ந்த போதிலும் வருந்தாத இலவ மரங்களைப் பார்!
எவ்வளவோ இருக்கின்றனவே?
பறவைகள் பறக்க வேண்டும் என்பதற்காக ஆகாயம்
அசைய வேண்டியதில்லை.
இறக்கைகள் அசைத்தாலே போதுமே!...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~

தோட்டத்துக்குப் பெருமை பூ மலர்வதில் தான் இருக்கிறது!

மேகத்துக்குப் பெருமை மழை பொழிவதில்தான் இருக்கிறது!
சூரியனுக்குப் பெருமை வெயில் அடிப்பதில் தான் இருக்கிறது!
நிலவுக்குப் பெருமை இரவில் பிரகாசிப்பதில் தான் இருக்கிறது!
பூமிக்குப் பெருமை பயிர்கள் விளைச்சலில் தான் இருக்கிறது!
மூளைக்குப் பெருமை குர்ஆனை சிந்தனை செய்வதில் தான் இருக்கிறது!
உனக்குப் பெருமை நான் முஸ்லிம் என்று
கூறி செயல்படுவதில் தான் இருக்கிறது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~

கனவுகளும் நிறங்கள் தான் விழிக்கும் வரையில்!

தோல்விகளும் நிரந்தரம் தான் முயற்சிக்கும் வரையில்!
சோதனைகளும் தலைவலி தான் தன்னம்பிக்கை வளரும் வரையில்!
மயிலுக்கு அதன் தோகை அழகு
மானுக்கு அதன் துள்ளல் அழகு
குயிலுக்கு அதன் குரல் அழகு
கிளிக்கு அதன் கொஞ்சும் பேச்சு அழகு
இளைஞனே..உனக்கு நன்னடத்தையே அழகு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~

உயர்ந்த இலட்சியத்துக்காக கனவு காண் - முயற்சி செய்

ஒரு நாள் வாழ்வில் வெற்றி பெறலாம்
முயற்சி செய்யாமல் விட்டு விடாதே! உன் வாழ்வே கனவாகி விடும்.
ஆயிரம் விளக்குகள் எரிய ஒரு தீக்குச்சி போதும்!
ஆயிரம் பூக்கள் மலர ஒரு விதை போதும்!
மணிக்கணக்கில் செய்யும் உபதேசத்தை விட
ஒரு கண நேரம் செய்யும் உதவியே உயர்வானது!
இறை வணக்கத்திற்காக ஒவ்வொரு தடவையும்
தலை பணியும் போது இறைவனிடமும், மனிதனிடமும் உன் மதிப்பு உயர்கிறது
சிகரத்தின் உச்சியை அடைந்து விட்டேன் என்று இறுமாப்பு கொள்ளாதே!
நீ ஏறியது வெறும் பனிச்சிகரமே! அது காலைக்கதிர் ஒளியாமல் கரைந்து விடும்!
உன் வெற்றிக்கால் தடம் பதிக்கையில் ரேகை தேடாதே!
முயற்சியைத் தேடு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா.ஹொரோவபதான,அனுராதபுரம்,SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
 

No comments:

Post a Comment